89.பத்தாயிரத்தைத் தனியாளாகக் கொல்லும் ஒன்றைப் பாருங்கள் - GW - 2

என்னடா இது ஏதோ அடுத்த ரஜினி படத்தோட டயலாக்குன்னு கேக்காதீங்க.இல்லை தீபாவளி படத்தோட சினிமா விமர்சனமான்னும் கேக்காதீங்க. இது போன பதிவோட தொடர்ச்சி தான். போன பதிவுல CFC பத்தி விளக்குவதாக சொல்லி இருந்தேன், இனி தொடருவோம்.
பொதுவாக பச்சையக வாயுக்கள் (Green House Gases - தமிழ்பதம் சரியானு யாராவது சொல்லுங்க)இயற்கையாகவோ அல்லது ஏதாவது செயலின் பின்விளைவாகவோ தான் இருக்கும். ஆனால் CFC மட்டும் மனிதனால் மனிதனின் செளகரியத்திற்காக உருவாக்கப்படுகிறது.CFC ல் மூன்று விதமான வாயுக்கள் சேர்ந்திருக்கின்றன. CL - குளோரின்,F - ப்ளோரின்,C - கார்பன். இதன் விகிதங்கள் மாறுவதை வைத்து அது சில வகைகளாகப் பிரிக்கப் படுகின்றன். R 11, R 22, R12. இவை அனைத்தும் CFC எனப்படும் குளோரோ ப்ளோரோ கார்பன்களைக் கொண்டவை. சாதாரணமாக இவைத் தனியாக இருக்கும் போது அவ்வளவாகப் பாதிப்பை ஏற்படுத்தாதவை. ஆனால் இவை மூன்றும் ஒன்றாகும் போது கிட்டத்தட்ட கும்மி அடிக்க ஒரு மொக்கையான பதிவும், பின்னூட்ட மட்டுறுத்தலும் இல்லாத இடத்தை போல் ஆகி விடும்.
காற்றில் விடப்படும் CFC காற்றில் பிரயாணித்து ஒசோன் படலத்தை அடைகிறது. அங்கு ஓசோன் படலம் சூரியனில் இருந்து வரும் புறஊதாக்கதிர்களை திருப்பி அனுப்பிக்கொண்டு இருக்கின்றன். இனி CFC தனது வேலையை ஆரம்பிக்கும்.
வேதி வினை

CFCl3 + UV Light ==> CFCl2 + Cl
Cl + O3 ==> ClO + O2
ClO + O ==> Cl + O2
இதில் முதலில் புறஊதாக்கதிர்களில் சேரும் CFC, தன்னில் இருந்து ஒரு Cl ஐப் பிரிக்கிறது.
அந்த குளோரின் அணு ஓசோனின் ஒரு அணுவை உடைக்கிறது. இதனால் உருவாகும் Clo பிரிந்த ஒரு ஓசோன் அணுவுடன் சேர்ந்து மீண்டும் Cl வாக மாறுகிறது. இந்த Cl மீண்டும் அடுத்த தாக்குதலுக்கு தயாராகிறது.
Cl + O3 ==> ClO + O2
ClO + O ==> Cl + O2
மீண்டும் தாக்குதல் தொடர்கிறது.......
Cl + O3 ==> ClO + O2
ClO + O ==> Cl + O2
மீண்டும்...ஆயிரக்காண தொடர்ச்சியான தாக்குதல்........ கிட்டத்தட்ட ஒரு CFC பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஓசோன் அணுக்களை சிதைக்கும் தன்மை கொண்டது.

ஒரு CFC அணு ஆயிரக்கணக்கான ஓசோன் அணுக்களைச் சிதைக்கிறது. CFC யின் ஆயுட்காலம் பச்சையக வாயுக்களில் அதிகமாக இருபதால் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.
Photo Sharing and Video Hosting at Photobucket

CFC போலல்லாமல் மற்ற பச்சையக வாயுக்கள் குறைவான பாதிப்பையே ஏற்படுத்துகின்றன. ஓசோன் படலமும் தன்னைத் தானே சீர்படுத்திக் கொள்ளும் ஆற்றல் பெற்றது தான். ஆனால் பச்சையக வாயுக்களின் தாக்குதலின் விகிதமும், ஓசோனின் சீராகும் தன்மையின் விகிதமும் தேவையான அளவு இல்லாததால் பூமியின் பல இடங்களில் ஓசோன் படலம் ஓட்டையாக இருக்கிறது.கிட்டதட்ட கிழிஞ்சு போன ஆடையுடன் இருக்கும் பிச்சைக்காரன் போலத்தான் இந்த உலகம் இருக்கிறது.

Photo Sharing and Video Hosting at Photobucketசிவப்பு கோட்டுக்கு மேலே இருப்பவை உலகில் ஓசோன் படலம் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள்

Photo Sharing and Video Hosting at Photobucket
மற்ற வாயு Vs CFC - வித்தியாசம்

ஓசோன் படலம் சீராக எடுக்கப் பட வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றியும், நமது குறைந்தபட்ச கடமை பற்றியும் அடுத்த பதிவில் பார்ப்போம்.
அதில் அமெரிக்காவின் முகமுடி கிழிக்கப்படும். :))

19 comments:

said...

வித்யா,

தெரிந்து கொள்ளவேண்டிய பயனுள்ள அறிவியல் தகவல்கள் நிறைந்திருக்கின்றன.

சிறப்பாக தெளிவாக எழுதியதற்கு பாராட்டுக்கள் !

said...

சாதாரணமாக இவைத் தனியாக இருக்கும் போது அவ்வளவாகப் பாதிப்பை ஏற்படுத்தாதவை. ஆனால் இவை மூன்றும் ஒன்றாகும் போது கிட்டத்தட்ட கும்மி அடிக்க ஒரு மொக்கையான பதிவும், பின்னூட்ட மட்டுறுத்தலும் இல்லாத இடத்தை போல் ஆகி விடும்.

கரக்ட்ங்கா...எதோ உள்குத்து இருக்கமாதிரி தெரியுது...நிலா, அப்ரா கெட் ரெடி...நம்ம கிட்ட ஆப்பு கேட்டு கேட்டு வாங்க வராங்கப்பா...

இது சீரியஸ்: சூப்பர் பயனுள்ள பதிவு...சங்கம் ரெக்கமண்ட்டட்....

said...

//
இவை மூன்றும் ஒன்றாகும் போது கிட்டத்தட்ட கும்மி அடிக்க ஒரு மொக்கையான பதிவும், பின்னூட்ட மட்டுறுத்தலும் இல்லாத இடத்தை போல் ஆகி விடும்.
//
மிக சிறந்த உதாரணம்

பச்சையக வாயுவா அதுக்கு இங்லீஷ்ல என்ன அதை ப்ராக்கட்ல போட்டிருக்கலாமே ??

said...

///கோவி.கண்ணன் said... வித்யா,
தெரிந்து கொள்ளவேண்டிய பயனுள்ள அறிவியல் தகவல்கள் நிறைந்திருக்கின்றன.சிறப்பாக தெளிவாக எழுதியதற்கு பாராட்டுக்கள் !///
மிக்க நன்றி கோவி கண்ணன் ஐயா!

said...

//Baby Pavan said...சாதாரணமாக இவைத் தனியாக இருக்கும் போது அவ்வளவாகப் பாதிப்பை ஏற்படுத்தாதவை. ஆனால் இவை மூன்றும் ஒன்றாகும் போது கிட்டத்தட்ட கும்மி அடிக்க ஒரு மொக்கையான பதிவும், பின்னூட்ட மட்டுறுத்தலும் இல்லாத இடத்தை போல் ஆகி விடும் கரக்ட்ங்கா...எதோ உள்குத்து இருக்கமாதிரி தெரியுது...நிலா, அப்ரா கெட் ரெடி...நம்ம கிட்ட ஆப்பு கேட்டு கேட்டு வாங்க வராங்கப்பா...இது சீரியஸ்: சூப்பர் பயனுள்ள பதிவு...சங்கம் ரெக்கமண்ட்டட்....//
அதெல்லாம் ஒன்னும் இல்லை. சொன்னா புரிய சுலபமா இருக்குல. நன்றி (ரெகண்டுக்கு. அப்படியே ஒரு MLA சீட் கிடைக்குமானு பாருங்க.

said...

மங்களூர் சிவா said...//
இவை மூன்றும் ஒன்றாகும் போது கிட்டத்தட்ட கும்மி அடிக்க ஒரு மொக்கையான பதிவும், பின்னூட்ட மட்டுறுத்தலும் இல்லாத இடத்தை போல் ஆகி விடும்.
//
மிக சிறந்த உதாரணம்

பச்சையக வாயுவா அதுக்கு இங்லீஷ்ல என்ன அதை ப்ராக்கட்ல போட்டிருக்கலாமே ?///
நன்றிகள் சிவா. போட்டாச்சு.

said...

உங்கள் படைப்புகள் அனைத்தும் மிகவும் அருமை...நான் வலைக்குப் புதுசு..மதுரைக்காரி..தற்போது ரியாத்தில் வசிப்பவள்..

அன்புடன்,
மலர்

said...

ஹேய் - உன்னுடைய சொந்தப் பதிவா இது - இவ்வளவு சீரியஸா - அறிவு பூர்வமா - புரியெலெயே ???

said...

அக்கா அது பசுமை வாயுக்கள் ன்னு எங்கயோ படிச்ச ஞாபகம்.

said...

//பாச மலர் said...
உங்கள் படைப்புகள் அனைத்தும் மிகவும் அருமை...நான் வலைக்குப் புதுசு..மதுரைக்காரி..தற்போது ரியாத்தில் வசிப்பவள்..

அன்புடன்,
மலர்//


மதுரைல இருந்து ஒரு இன்னொரு பாசமலரக்கா வந்திருக்காங்கப்பு. இந்த குட்டிபாப்பா, கலைவாணிக்கா சார்பில் உங்களை வரவேற்கிராள்

said...

//பாச மலர் said...உங்கள் படைப்புகள் அனைத்தும் மிகவும் அருமை...நான் வலைக்குப் புதுசு..மதுரைக்காரி.. தற்போது ரியாத்தில் வசிப்பவள்..
அன்புடன், மலர்//
வாங்க வாங்க! தமிழ்மணத்திற்கு வரவேற்கிறோம்.

said...

// cheena (சீனா) said...ஹேய் - உன்னுடைய சொந்தப் பதிவா இது - இவ்வளவு சீரியஸா - அறிவு பூர்வமா - புரியெலெயே ???//
அப்பாவே நம்பலையா? வாங்க அடுத்து சாட்ல அறிவியல் போட்டி வைப்போம்.

said...

//நிலா said...அக்கா அது பசுமை வாயுக்கள் ன்னு எங்கயோ படிச்ச ஞாபகம்.//
நிலா சொன்னா அப்பீல் ஏது? இனி அப்படியே எழுதுவோம்.

said...

"மதுரைல இருந்து ஒரு இன்னொரு பாசமலரக்கா வந்திருக்காங்கப்பு. இந்த குட்டிபாப்பா, கலைவாணிக்கா சார்பில் உங்களை வரவேற்கிராள்"

"வாங்க வாங்க! தமிழ்மணத்திற்கு வரவேற்கிறோம்"

நிலா, கலைவாணி....நன்றிகள் பல..மலர்

said...

ஒக்காந்து யோசிப்பீங்களோ....!!!
சும்மா சொல்ல கூடாது உண்மையில உங்க பதிவு சூப்பர் .
உங்களே மாதிரி எல்லாரும் அக்கறை எடுத்துக்கிட்டா நாம இந்த பூமியில் நல்லா வாழலாம்.
இன்னும் இது போன்ற பதிவுகளை எதிர்பார்க்கும்-உங்கள் ரங்கா.
(பி.கு) namakkal shibi -in ஒரே சிஷ்யன்.

said...

rangan said...
ஒக்காந்து யோசிப்பீங்களோ....!!!
சும்மா சொல்ல கூடாது உண்மையில உங்க பதிவு சூப்பர் .
உங்களே மாதிரி எல்லாரும் அக்கறை எடுத்துக்கிட்டா நாம இந்த பூமியில் நல்லா வாழலாம்.
இன்னும் இது போன்ற பதிவுகளை எதிர்பார்க்கும்-உங்கள் ரங்கா.
(பி.கு) namakkal shibi -in ஒரே சிஷ்யன்.

விடுங்க விடுங்க...ரொம்ப feel பண்ணறிங்களெ...அக்காகிட்ட சொல்லி ஷ்பெசலா கவனிக்க சொல்றென்...உங்கள் பவன் ...அக்காவின் பல சிஷ்யர்களின் ஒரு குட்டிஸ்

said...

//rangan said...ஒக்காந்து யோசிப்பீங்களோ....!!! (பி.கு) namakkal shibi -in ஒரே சிஷ்யன்.//
வாடகைக்கு வீடு எடுத்து யோசிக்கிறோம்ங்க.(சொந்தமா வீடு இங்க யோசிக்க கூட முடியாது). சரி 'தல' சிபியைக் கேட்டதா சொல்லுங்க.

said...

என்னமோ சொல்ல வர்றீங்க என்பது மட்டும் புரியுது.கூடவே எல்லோரும் ஆஹா,ஓஹோ சொல்லும்போது பதிவு பயனுள்ளது மாதிரிதான் தோணுது.ஆனா எனக்குத்தான் ஒன்றும் புரியல.

said...

தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்.. தொடருங்கள்..
அமெரிக்காதான் உலகிலேயே அதிகமாக பச்சைநிற வாயுக்களை வெளியிடும் நாடு. மேலும் அதற்கான அபராத தொகையைக்கூட அவர்கள் ஒழுங்காக செலுத்துவதில்லை என்று கேள்விப்பட்டேன். உண்மைதானா?..

நான் புதுசு.. இங்க ரேகிங் எல்லாம் கிடையாதுல்ல..