மழலைச்சொல் கேளாதவர் - என். சொக்கன்
பிரசவித்த களைப்பில் மதுமிதாவும், பிறந்த களைப்பில் அவளது குழந்தையும் நன்கு உறங்கிக்கொண்டிருந்தார்கள். சற்றுத் தள்ளி ஒரு சாய்வு நாற்காலியில் தளர்ந்து படுத்திருந்தான் அஷ்வின்.
இன்னும் இரண்டு வாரங்கள் கழித்துப் பிறந்திருக்கவேண்டிய குழந்தை. கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டது. என்றாலும், அதற்கான குறை அடையாளங்கள் ஏதுமின்றி, நன்கு ஆரோக்கியமாகவே பிறந்திருக்கிறது. நிம்மதி.
அஷ்வினுக்கு இன்னும் பதட்டம் தணிந்திருக்கவில்லை. நெஞ்சின் படபடப்பு காதுகளில் பலமாக எதிரொலித்துக்கொண்டிருந்தது.
எந்த விசேஷமும் தட்டுப்படாத சாதாரண நாளாகதான் இது தொடங்கியது. காலை எழுந்து, குளித்து, பிரட்டில் மிளகாய்ப் பொடியைத் தோய்த்துத் தின்றுகொண்டிருக்கும்போது, உள்ளறையிலிருந்து மதுமிதாவின் அலறல் சப்தம் கேட்டது.
அவசரமாக உள்ளே ஓடிச் சென்று பார்த்தபோது, வயிற்றைப் பிடித்துக்கொண்டு படுக்கையில் மல்லாக்கக் கிடந்தாள் அவள். வேதனையும், ஆத்திரமும் கலந்து அவள் கத்துவதைப் பார்க்கையில், சற்றுமுன் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்த பெண்தானா இவள் என்றிருந்தது.
அவளை நெருங்கிக் குனிந்து நெற்றியில் கை வைத்தான் அஷ்வின், 'பதட்டப்படாதே மது, நான் டாக்டருக்கு ·போன் பண்றேன்!'
அவன் சொல்வது அவளுக்குக் கேட்டதோ, இல்லையோ. 'வேண்டாம்', என்பதுபோல் இருபுறமும் தலையசைத்து மறுத்தாள் அவள், பொறுக்கமாட்டாத வலியில் கீழுதட்டைப் பல்லால் கடித்து ரத்தம் வரத்தொடங்கியிருந்தது.
டாக்டர்களின் ஆலோசனைப்படி, பல மாதங்களுக்கு முன்பிருந்தே இதுபோன்ற சூழ்நிலைக்கு அஷ்வினும், மதுமிதாவும் தயார் செய்யப்பட்டிருந்தார்கள். உதவிக்கு யாருமில்லாத நேரத்தில் பிரசவ வலி ஏற்பட்டால், என்னென்ன செய்யவேண்டும், என்னென்ன செய்யக்கூடாது என்றெல்லாம் அட்டவணை தயாரித்துக் கொடுத்திருந்தார்கள். ஆகவே, இப்போது அநாவசியமாகத் தடுமாறாமல், தெளிவாகச் செயல்பட முடிந்தது.
என்றாலும், அந்தக் கணத்தில், அஷ்வினுக்குள் இனம் புரியாத ஒரு அழுத்தம் ஊடுருவியிருந்தது. இரண்டு உயிர்களைக் காப்பாற்றுகிற பொறுப்பு, அவன் ஒருவனின் தலைமேல் சுமத்தப்பட்டிருப்பதை நினைக்கையில் கண்கள் இருண்டு, கால்கள் நில்லாமல் கழன்றுவிடுவதுபோல் உணர்ந்தான்.
மதுமிதாவை ஆசுவாசப்படுத்தி, உடைகளைத் தளர்த்திவிட்டு, எதிரிலிருந்த அலமாரியைத் திறந்தான் அஷ்வின். பிரசவ நேரத்தில் உதவுவதற்கான விசேஷ ரோபோ அதனுள் இருந்தது.
ஆனால், அந்தப் பெட்டியைத் திறந்து ரோபோவை வெளியிலெடுத்துப் பாதி பொருத்துவதற்குள், மீண்டும் மதுமிதாவின் அலறல் கேட்டது. எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு அவளருகே ஓடினான் அஷ்வின். அடுத்த ஒன்றரை நிமிடங்களுக்குள், அவர்களுடைய குழந்தை பிறந்துவிட்டது.
ஆண் குழந்தை. அவர்கள் பயந்ததுபோல் ரொம்ப சிரமமாக இல்லாமல், வலுக்கட்டாயமாக அஷ்வினுக்கு தாதிப்பயிற்சி கொடுத்த மருத்துவர்களின் புண்ணியத்தில், சுகப் பிரசவம்தான்.
டாக்டர்களுக்குமட்டுமின்றி, முன்னேறிவிட்ட மருத்துவத் தொழில்நுட்பத்திற்கும்தான் நன்றி சொல்லவேண்டும். பிரசவம் என்பது மறுபிறப்புக்குச் சமம் என்றெல்லாம் சென்ற பல நூற்றாண்டுகளாக கர்ப்பிணிப் பெண்களை பயமுறுத்திக்கொண்டிருந்த கஷ்டங்கள் யாவும் இப்போது வழக்கொழிந்தாயிற்று. குழந்தைப் பிறப்பின்போது ஏற்படக்கூடிய பெரும்பாலான அபாயங்களுக்கெல்லாம் ஒவ்வொன்றாக மருந்துகளைக் கண்டுபிடித்து, கருவான இரண்டாம் மாதத்திலிருந்து இதற்கென்று விசேஷ ஊசிகள், க்ரீம்கள் என்று ஏதேதோ கொடுத்து, பிரசவத்தின்போது ரத்தப்போக்கைப் பெருமளவு கட்டுப்படுத்தி, வலியைக் குறைத்து, இன்னும் என்னென்னவோ மாயங்கள் செய்துவிட்டார்கள். பெட்டியைத் திறந்து, பொருளை எடுப்பதுபோல், பிரசவம் பார்ப்பதும் லகுவாகிவிட்டது.
என்றாலும், முற்றிலும் புதியதான ஒரு உயிரை உலகிற்குக் கொண்டுவருவதென்றால் சாதாரண விஷயமா ? அப்போதுதான் பிறந்த குழந்தையைச் சுத்தம் செய்து, கையிலெடுத்துப் பார்க்கையில், அந்த சந்தோஷத்தையும் மீறி, அஷ்வினின் உடல்முழுதும் நடுங்கிக்கொண்டிருந்தது.
ஒரு மிகப் பெரிய விஷயத்தைச் செய்துமுடித்துவிட்டதுபோல் பெருமிதம் இருக்கிறது. என்றாலும், அதைச் சரியாகதான் செய்திருக்கிறோமா என்று யாரேனும் உறுதிப்படுத்தினால் பரவாயில்லையே என்று மனம் கிடந்து துடிக்கிறது. எதுவும் தப்பாக நடந்துவிடவில்லையே ? யாரிடம் கேட்பது ? விடாமல் அலறுகிற இந்தக் குட்டியூண்டு பாப்பாவிடமா? அல்லது, களைத்து உறங்கும் மதுமிதாவிடமா?
சிறிது நேரம் பிடிவாதமாக அழுதுகொண்டிருந்த குழந்தை, அப்படியே தூங்கிவிட்டது. மதுமிதா விழித்து எழுந்தபிறகுதான், அதற்கு ஏதேனும் சாப்பிடக் கிடைக்கும்.
அஷ்வினுடைய மோதிர விரலை அழுத்தமாகப் பிடித்துக்கொண்டிருந்தது குழந்தை. அதைப் பிரிக்க மனமில்லாமல், சிறிது நேரம் அப்படியே பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு, குழந்தையை மதுமிதாவுக்கு அருகே படுக்கச்செய்து, ஒரு சிறிய துண்டால் போர்த்திவிட்டான்.
மதுமிதா எப்போது தூங்கினாள் என்றே தெரியவில்லை. பிறந்த குழந்தையைப் பார்த்தாளா என்பதுகூட நிச்சயமில்லை. மேலேறித் தாழ்ந்துகொண்டிருந்த அவளுடைய வயிறு, இன்னும் லேசாகப் புடைத்திருந்ததைப் பார்க்கையில், உள்ளே இன்னொரு குழந்தை இருக்கிறதோ என்று சந்தேகமாக இருந்தது அஷ்வினுக்கு.
ஆனால், பிரசவித்த பெண்ணின் வயிறு, சரேலென்று பழையபடி சுருங்கிவிடாது என்று டாக்டர்கள் சொல்லியிருந்தார்கள். அதற்குச் சில பயிற்சிகள் இருக்கின்றன, எல்லாம் சரியாவதற்குச் சில மாதங்களாவது ஆகும்.
மெதுவாக ஆகட்டும். ஒன்றும் அவசரமில்லை. மதுமிதாவின் தலைமுடியை மெல்லமாகக் கோதி, அவள் நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்தான் அஷ்வின். பக்கத்தில் படுத்திருந்த குழந்தைக்கும் ஒரு ஈர முத்தம். அதன்பின், சாய்வு நாற்காலியில் சரிந்து விழுந்ததுதான் நினைவிருந்தது.
மீண்டும் அவன் எழுந்தபோது, கரகரப்பில்லாத, ஆனால் இயந்திரத்தனம் தெளிவாகத் தெரியும் குரலில் யாரோ வளவளவென்று பேசிக்கொண்டிருந்தார்கள். திடுக்கிட்டுக் கண் விழித்துப் பார்த்தால், தாதிப் பணிக்கென்று வாங்கியிருந்த ரோபோ. அஷ்வின் பாதியைப் பொருத்தியபிறகு, மிச்சத்தைத் தானே பொருத்திக்கொண்டுவிட்டதுபோல.
அஷ்வினின் நாற்காலி எழுப்பிய க்ரீச் ஒலியில் கவனம் கலைந்த ரோபோ, 'குழந்தை பிறந்தாச்சா ?', என்றது நேரடியாக.
அவன் அதற்கு பதில் சொல்லாமல், 'நீ யார்கிட்டே பேசிகிட்டிருந்தே?', என்றான்.
'அது ஒண்ணுமில்லை. சும்மா ஸிஸ்டம் செக்', என்றது ரோபோ, 'குழந்தை பிறந்தாச்சா ?'
'ஆச்சு', என்றான் அஷ்வின் சலிப்பாக.
'என்ன குழந்தை?'
'இப்போ உனக்கு அவசியம் தெரிஞ்சாகணுமா?', அஷ்வினின் குரலில் எரிச்சல் மண்டியிருந்தது, 'ஆணோ, பொண்ணோ. குழந்தை பிறந்தாச்சு. இனிமே உன் சர்வீஸ் தேவையில்லை', என்றபடி மின்சார இணைப்பைத் துண்டித்தான்.
ரோபோவின் கண்கள் லேசாக மங்கின. பிறகு, 'பேட்டரி சக்தி இன்னும் பன்னிரண்டரை நிமிடங்களுக்குச் செல்லும்', என்று அறிவித்தது அது. பின்னர், 'என்ன குழந்தை?', என்றது விடாமல்.
அப்போதும் அஷ்வினிடமிருந்து பதில் வரவில்லை. ஆகவே, அடுத்த கேள்வியாக, 'அரசாங்கத்துக்குச் சொல்லியாச்சா?', என்றது ரோபோ.
ஏதோ எரிச்சலாகச் சொல்லவந்த அஷ்வின், சட்டென்று சுதாரித்துக்கொண்டான். அவசரப்படக்கூடாது. இன்னும் பன்னிரண்டு நிமிடங்களுக்காவது, இந்த ரோபோவிடம் வம்பளத்து, அதன் பேட்டரி சக்தியைக் கரைத்து, பெட்டிக்குள் வைத்துப் பூட்டியாக்வேண்டும். இல்லையென்றால், யோசித்துவைத்த எதையும் செயல்படுத்தமுடியாது.
'அரசாங்கத்துக்குச் சொல்லியாச்சா?', குரலில், ஏற்ற இறக்கங்களில் சிறிதும் மாற்றமின்றி மறுபடி கேட்டது ரோபோ.
'சொல்லணும்', என்றான் அஷ்வின், 'குழந்தை தூங்குது. முழிச்சப்புறம் சொல்லலாம்-னு இருக்கேன்', என்று சொல்லிவிட்டு, சட்டென்று கட்டிலைப் பார்க்கத் திரும்பிக்கொண்டான்.
அவனுடைய பார்வையிலும், பேச்சிலுமிருந்த கள்ளத்தனத்தை அந்த ரோபோ கவனித்ததா தெரியாது. ஆனால், சில நிமிடங்களுக்கு எதுவும் பேசாமல் மௌனித்திருந்தது. பின்னர், 'சீக்கிரம் சொல்லிவிடுவது நல்லது', என்றது.
'ம், சரி', என்றான் அஷ்வின், 'அரை மணி நேரம் கழித்துச் சொன்னால்தான் என்னவாம்?'
'அதெல்லாம் தப்பு', என்றது ரோபோ, 'குழந்தை பிறந்த எட்டரை மணி நேரத்துக்குள் இஞ்ஜக்ஷன் போட்டுவிடவேண்டும் என்று எத்தனை முறை சொல்லியிருக்கிறார்கள் உனக்கு?'
அஷ்வின் கண்களை மூடியபடி சரிந்து படுத்துக்கொண்டான். தலைக்குள் சுழல்சுழலாக வளையங்கள் பிணைந்து, பிரிந்து, பிணைந்து, பிரிந்து அல்லாடின. அவற்றினிடையே, ஒரு கூரான ஊசி முனை தலை நீட்டி, 'எங்கே உன் குழந்தை?', என்று அதட்டியது.
சட்டென்று கண்களை அகலத் திறந்து, மதுமிதாவின் அருகே தூங்கும் குழந்தையைப் பார்த்தான் அஷ்வின். அந்த ரோபோவின் இயந்திரக் குரல் அவனுக்குள் இன்னும் தெளிவாகக் கேட்பது போலிருந்தது, 'குழந்தை பிறந்த எட்டரை மணி நேரத்துக்குள் இஞ்ஜக்ஷன் போட்டுவிடவேண்டும்'
'முடியாது', என்று தனக்குள் உறுதியாகச் சொல்லிக்கொண்டான் அஷ்வின், 'என் குழந்தைக்கு அந்த ஊசி தேவையில்லை!'
அரசாங்கத்தின் கட்டாய ஊசியை ஏமாற்ற என்று பல நாள்களாகவே அவன் யோசித்த விஷயம்தான். இன்னும் மதுமிதாவிடம்கூட சொல்லவில்லை. ஆனால், அதுபற்றி அவனுக்குக் கவலையாக இல்லை. அவளிடம் சொன்னால் நிச்சயமாக சந்தோஷப்படுவாள்.
இந்தக் கருக்காலத்தில்கூட, சோதனைக் குழாய்க்குள் தங்கள் குழந்தையை வளர்த்துக்கொள்கிற அதி சவுகர்யங்களையெல்லாம் நிராகரித்துவிட்டு, இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக்கொள்வது என்று தீர்மானித்திருந்தாள் மதுமிதா. இதற்காக, அவள் தனது கல்லூரி உத்யோகத்தைக்கூட துறந்துவிடவேண்டியிருந்தது.
ஆகவே, இப்போது இந்தச் செயற்கை மருந்துகளையெல்லாம் துரத்தியடித்துவிட்டு, நம் குழந்தையை இயற்கையாகவே வளர்க்கலாம் என்றால், மதுமிதா நிச்சயம் மறுக்கப்போவதில்லை என்று அஷ்வினுக்கு உறுதியாகத் தோன்றியது. அவளுடைய ஒத்துழைப்புமட்டும் இருந்துவிட்டால் போதும், அரசாங்க விதிமுறைகளையெல்லாம் குப்பையில் கொட்டித் தீய்த்துவிடலாம்.
இந்தக் குழந்தை கொஞ்சம் முன்னதாகவே பிறந்துவிட்டது இன்னும் வசதி. அரசாங்கத்திலிருந்து யாரும் விசாரிக்க வரமாட்டார்கள். எப்படியாவது எட்டரை மணி நேரம் கடந்துவிட்டால், அதன்பிறகு அந்த ஊசியின் ஜம்பம் செல்லாது. இப்படி நினைக்கும்போது, அதிலிருக்கும் விதிமீறலின் சந்தோஷம், அஷ்வினுக்கு ரகசியக் கிளர்ச்சி போலிருந்தது. ஆனால், அதற்காகதான் அவன் அந்த ஊசியை ஏமாற்ற விரும்புகிறானா என்றால், இல்லை.
மதுமிதா கருவுற்றிருக்கிறாள் என்று தெரிந்ததுமே, அரசு முதியோர் காப்பகத்திலிருக்கும் அம்மாவைக் கூப்பிட்டுச் சொன்னான் அஷ்வின். பல மைல்களுக்கப்பாலிருந்து கேட்டாலும், அம்மாவின் குரலில் முன்பு எப்போதும் பார்த்திராத சந்தோஷம் தெரிந்தது. மதுமிதாவுக்குச் சில மருத்துவக் குறிப்புகள் சொல்லிவிட்டு, வீட்டின் மேல் அலமாரியிலிருக்கும் ஒரு மெரூன் நிற டைரியைப் பிரித்துப் பார்க்கச் சொன்னாள்.
மதுமிதா பேசிக்கொண்டிருக்கும்போதே அஷ்வின் அந்த டைரியைத் தேடிப் பிடித்துவிட்டான். அதன் முதல் பக்கத்தில் ஒரு போஷாக்கான ஆண் குழந்தை சிரித்துக்கொண்டிருந்தது. அதற்குக்கீழே, 'அஷ்வின்', என்றெழுதியிருந்தது.
அதுவரை அஷ்வின் அந்த ·போட்டோவைப் பார்த்ததே இல்லை. சொல்லப்போனால், புகைப்படத்திலோ, நேரிலோ அவன் ஒரு குழந்தையைப் பார்ப்பது இதுதான் முதல் தடவை. சமீப காலமாக, எந்தக் குழந்தையையும் எட்டரை மணி நேரத்துக்குமேல் குழந்தையாக இருப்பதற்கு உலக அரசாங்கம் அனுமதிப்பதில்லை என்பதால், தன்னுடைய அந்தக் குழந்தைப் படத்தை, ஒரு அதிசயக் காட்சியை எதிர்கொண்டதுபோல வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.
அம்மாவுடன் பேசிவிட்டு வந்த மதுமிதாவும், அந்த புகைப்படத்தைப் பார்த்து திகைத்து நின்றுவிட்டாள், 'நீயாடா இது?', என்று அவனைப்பார்த்து நம்பமாட்டாமல் கேட்டவள், கண்களை அகல விரித்து, அவனையும், ·போட்டோவையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு, தன் வயிற்றில் கை வைத்து, 'நம்ம பையனும் இதேமாதிரி அழகா இருப்பான் இல்ல?', என்றாள் பூரிப்பாக.
அஷ்வின் அந்தக் கேள்விக்கு பதில் சொல்லாமல், அவளை மெல்ல அணைத்துக்கொண்டு மீண்டும் அந்தப் புகைப்படத்தை ஏக்கமாகப் பார்த்தான்.
இப்போதெல்லாம், பிறந்த எட்டரை மணி நேரத்துக்குள் ஒரே ஒரு ஊசி. அடுத்த சில நிமிடங்களில், மந்திர மாயம்போல் அந்தக் குழந்தை இருபது வயது இளைஞனாகவோ, இளைஞியாகவோ வளர்ந்துவிடுகிறது. வெறுமனே உடம்பைமட்டும் பெரிதாக்குகிற அசுர வளர்ச்சியாக இல்லாமல், இத்தனை ஆண்டுகளில் சேரவேண்டிய படிப்பறிவு, பழக்க வழக்கங்கள் எல்லாவற்றையும், ஒற்றை ஊசியில் நுணுக்கி அடக்கிவிட்டார்கள். பிறந்த மறுதினத்திலிருந்து, அந்தக் குழந்தை கல்லூரிக்குச் சென்று, விருப்பமுள்ள துறையில் வல்லுனராகி, ஒரு வயதுக்குள் டாக்டர் பட்டம் பெற்றுவிடுவதெல்லாம் சுலப சாத்தியம்தான்.
இன்னும் கண் திறக்காத குழந்தைகளெல்லாம், இப்படி திடுதிப்பென்று பெரியவர்களாகி நடமாடத்தொடங்கிவிடுவதில், எல்லோருக்குமே லாபம்தானே ? கொஞ்சம்கொஞ்சமாக அவர்களுக்கு உடல் வலுவேற்றி, உடம்பு சரியில்லையென்றால் கவலைப்பட்டு, பேச, எழுதப் படிக்க சொல்லிக்கொடுத்து, பரீட்சைகளில் அவர்கள் நல்ல மார்க் வாங்குவார்களா என்றெல்லாம் கவலைப்பட்டுக்கொண்டிருப்பதைவிட, இப்படி உடனடியாக அவர்களைப் பயனுள்ள குடிமகன்களாக்கிவிடுவதால், நாட்டில் மனித சக்தி அபரிமிதமாகிவிடும், இதன்மூலம் பல புதிய விஷயங்களை சாதிக்கலாம் என்றெல்லாம் கட்டுரைகள் அச்சிட்டு வெளியாகியிருக்கின்றன.
ஆரம்ப காலத்தில் இந்த ஊசிக்கு எதிர்ப்பு இருந்ததோ என்னவோ, ஆனால், கடந்த சில பத்தாண்டுகளாக, எல்லோரும் இந்த முறையைக் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். இதில் தாங்கள் இழப்பது எதுவுமில்லை என்ற ஞானம் எல்லோருக்கும் கவனமாக ஊட்டப்பட்டிருந்தது. ஒன்பதே கால் மாதங்கள் இரட்டை உயிராகக் குழந்தையைச் சுமக்கிற பெண்களைக்கூட, இதுபற்றிய உணர்வுபூர்வமான பற்றுதல்களையெல்லாம் தவிர்க்கவைத்து, தாய்மை என்பது, ஒரு உயிரியல் தேவைமட்டுமே என்று ஏற்றுக்கொள்ளச்செய்துவிட்டார்கள். அதன்பிறகு, இந்த அதீத வளர்ச்சியையும் இயல்பான ஒரு விஷயமாக ஒப்புக்கொண்டு, பெற்றோர், மகனையோ, மகளையோ நண்பர்கள்போல் ஏற்றுக்கொள்ளமுடிந்துவிட்டது.
இந்த குழந்தைப் புகைப்படத்தைப் பார்க்கும்வரை, அஷ்வினுக்கும், மதுமிதாவுக்கும்கூட, அப்படிப்பட்ட எண்ணம்தான் இருந்தது. ஆனால், இந்த அம்மாதான், வேண்டுமென்றோ, அல்லது தன்னையும் அறியாமலோ, அவனுக்குள் ஒரு குறுகுறுப்பைக் கிளப்பிவிட்டாள்.
இத்தனைக்கும் அது ஒரு மங்கலாகிச் சிதைந்துவிட்ட புகைப்படம். அதிலிருப்பது தன்னுடைய குழந்தை உருவம்தானா என்றுகூட அஷ்வினால் நிச்சயமாகச் சொல்லமுடியவில்லை, ஆனால் பளிச்சென்று அகலச் சிரித்துக்கொண்டிருந்த அந்தக் குழந்தை, அவனைக் கொஞ்ச அழைப்பதுபோல் உணர்ந்தான் அவன். வாயேன், வந்து என்னைத் தூக்கிக்கொள்ளேன், ஒரு முத்தம் கொடேன், நான்தான் நீயா? அல்லது, நீதான் நானா? உன் குழந்தை என்னைப்போல இருக்குமா? அல்லது, என் குழந்தை உன்னைப்போல இருக்குமா? உன் குழந்தைக்குப் பட்டு தேகம் உண்டா? குட்டித் தொப்பை? குறுகுறு நடக்கும் கால்கள்? கூழ் அளாவும் சிறுகைகள்? ஒன்றிரண்டு பற்களைமட்டும் லேசாக வெளிக்காட்டியபடி பொக்கை வாயில் சிரிக்குமா உன் குழந்தை? அறியாமையின் உவப்பும், களங்கமற்ற புன்னகையும் பொங்க, அதன் ஒவ்வொரு அசைவையும், விஷமத்தையும் பார்த்து ரசிக்கிற பாக்கியம் உங்களுக்கு உண்டா?
எங்கிருந்து வந்தது என்றே தெரியாமல் அவனுக்குள் ஆற்றாமையாகப் பொங்கிய இந்த நினைப்பெல்லாம் மதுமிதாவுக்கும் இருந்ததா என்று அஷ்வினுக்குத் தெரியவில்லை. ஆனால், இந்தப் புகைப்படத்தைப் பார்த்தபிறகுதான் தங்கள் குழந்தையைத் தாங்கியிருப்பதன் சந்தோஷத்தை முழுமையாக உணர்வதாக அவள் அவனை முத்தமிட்டுச் சொன்னாள்.
அப்போதுதான் அஷ்வின் அந்த முடிவுக்கு வந்திருந்தான் - என் குழந்தைக்கு இந்த ஊசி வேண்டாம் - வெறும் எட்டரை மணி நேரம், அதுவரை இந்தக் குழந்தை பிறந்திருக்கும் விஷயத்தை அரசாங்கத்துக்குச் சொல்லாமல் மறைத்துவிட்டால் போதும். அதன்பிறகு அவர்களுடைய ஊசிகளால் எந்தப் பயனும் இல்லை. மணிக்கணக்காகக் காற்றை உதைத்து சண்டை போட்டு, மழலை பேசி, தரையிலிருப்பதையெல்லாம் எடுத்து வாயில் போட்டுக்கொண்டு, மென் தேகத்துடன் தட்டுத் தடுமாறி நடந்து, கீழே விழுந்து அடிபட்டு, ஆனா, ஆவன்னா எழுதக் கற்று, இயற்கையான குழந்தைப் பருவத்தை அனுபவித்து வளரும் எங்கள் குழந்தை.
மெலிதான கொட்டாவியை அடக்கியபடி வாட்சைப் பார்த்தான் அஷ்வின். மணி ஒன்றரை. குழந்தை பிறந்து நாலு மணி நேரமாவது ஆகியிருக்கும். இப்படியே இன்னும் பாதி நேரத்தை ஓட்டியாகவேண்டும்.
செல்பேசியின்வழியே இணையத்தில் நுழைந்து, விடுப்புக் கோரி அலுவலகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பினான் அஷ்வின். அப்போது, அவனருகே ஸ்தம்பித்து நின்றிருந்த ரோபோ, சட்டென்று உயிர் பெற்று, 'அரசாங்கக் கார் வருகிறது', என்றது.
அந்தக் குரலின் திடீர்மையும், அதிலிருந்த எதிர்பாராத செய்தியும், அஷ்வினை திடுக்கிடவைத்தது. 'அதெல்லாம் ஒன்றுமில்லை', என்றான் சுதாரித்து, 'நான் இன்னும் அவர்களுக்குத் தகவல் அனுப்பவில்லை'
'அதனால் என்ன? நான் அனுப்பிவிட்டேன்', என்றது ரோபோ, 'அவர்கள் வந்துவிட்டார்கள், அதோ, சைரன் சத்தம் கேட்கிறது'
'ஐயோ', என்று அனிச்சையாக அலறிய அஷ்வின், அதே வேகத்தில் எழுந்து, அந்த ரோபோவின் கழுத்தைக் கொத்தித் தூக்கினான், 'துரோகி யந்திரமே, என் அனுமதியில்லாமல் நீ எப்படி அரசாங்கத்துக்குத் தகவல் அனுப்பலாம்?', என்று கத்தியபடி, அதைக் கீழே விசிறியடித்தபோது, அதன் பிளாஸ்டிக் மேல் பாகத்தில் ஆழமான விரிசல் கண்டது.
பாம்புபோல் தரையில் நெளிந்து புரண்ட ரோபோ, ஏதோ முனகலாகப் பேசினாற்போலிருந்தது. பிறகு, அதனிடமிருந்து எந்தச் சலனமும் இல்லை.
இப்போது அஷ்வினுக்கு அந்த சப்தம் தெளிவாகக் கேட்டது. அரசாங்க வாகனம்தான், பக்கத்தில் வந்துவிட்டார்கள்.
அடுத்து என்ன செய்வது என்று புரியாமல், கட்டிலின் அருகே ஓடினான் அஷ்வின். குழந்தையைத் தூக்கிக்கொண்டு எங்காவது ஓடித் தப்பிவிடலாமா? துரத்திக்கொண்டு வருவார்களா? எண்பது திசைகளில் கண்ணுள்ள இந்த அரசாங்கத்தை மீறி எங்குதான் சென்றுவிடமுடியும்? நினைக்க நினைக்க, கண்களில் நீர் பெருகுவதைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
சைரன் ஒலி ரொம்பப் பக்கத்தில் வந்திருந்தபோது, அஷ்வின் ஒரு திடமான முடிவுக்கு வந்திருந்தான். தரையில் மண்டியிட்டு அமர்ந்து, மதுமிதாவை உலுக்கி எழுப்பினான்.
அவள் கண்களைச் சிரமமாகத் திறந்தபோது, அவளுடைய கன்னத்தில் அஷ்வினின் சுவாசச் சூடு, 'மது, சீக்கிரம் எழுந்திருடா, ப்ளீஸ்!'
மதுமிதாவுக்குத் தான் எந்த உலகத்தில் இருக்கிறோம் என்றே புரியவில்லை. பல யுகங்களுக்குமுன் எங்கோ ஒரு வனாந்திரத்தினிடையே தனக்குப் பிரசவ வலி கண்டதுபோல் ஒரு நினைவு, ஆனால் குழந்தை பிறந்ததா என்று அவளால் நிச்சயமாகச் சொல்லமுடியவில்லை.
அவளுடைய தலையைப் பற்றித் தூக்கி, மடியில் வைத்துக்கொண்டான் அஷ்வின். கதறலோடு கலந்து வார்த்தைகள் வெளிவந்தன, 'மது, இதுதான் ஒரே சான்ஸ், நம்ம குழந்தையை நல்லா ஒரு தடவை பார்த்துக்கோ, ப்ளீஸ் !'
அவன் சொல்வது மதுமிதாவுக்குச் சரியாகப் புரியாவிட்டாலும், அஷ்வின் வலுக்கட்டாயமாக அவளுடைய முகத்தைக் குழந்தையின்பக்கம் திருப்பியிருந்ததால், மதுமிதாவால் தங்களின் குழந்தையை மங்கலாகப் பார்க்கமுடிந்தது. அன்றைக்கு ·போட்டோவில் பார்த்ததுபோலவே, கொள்ளை அழகாக இருந்தது குழந்தை.
கடைசி நாள்.
பிறக்கப்போவது அழகான குழந்தையோ, அசிங்கமான குழந்தையோ, எப்படியானாலும் வெறும் எட்டரை மணி நேரம்தானே குழந்தைப் பருவம் என்ற உண்மையின் கசப்பு அவனை உறுத்தியது. அதை இப்போது நினைவுப்படுத்தி, மதுமிதாவின் சந்தோஷத்தையும் கெடுக்க அவன் விரும்பவில்லை.
பிஞ்சுக் குழந்தைகள் வளர்ந்து, பெரியவர்களாவதை அணுவணுவாகப் பார்த்து ரசித்து, ·போட்டோவும், வீடியோவுமாகப் பிடித்துவைத்த காலமெல்லாம், சென்ற தலைமுறையோடு போயிற்று. இதற்காக அநாவசியமாக இருபது வருடங்களை வீணடிப்பதா என்று சிந்தித்த அரசாங்கம், உயிரியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளை அதிவேகமாகத் தூண்டிவிட்டு, குழந்தைகளின் மன, உடல் வளர்ச்சியை விரைவாக்குகிற மருந்துகளைக் கண்டுபிடித்துவிட்டது.
அவர்கள் இருவரின் விழிகளும் கண்ணீரில் நிரம்பியபோது, அறைக் கதவு பலமாகத் தட்டப்பட்டது. என். சொக்கன்
நன்றி : http://www.maraththadi.com
மழலைச்சொல் கேளாதவர் - என். சொக்கன்
Posted by
வித்யா கலைவாணி
at
10
comments
'சாம்பியன்' ஆனந்த் கேள்வி!!
| என்னை எப்படி வரவேற்கப் போகிறது இந்தியா? 'சாம்பியன்' ஆனந்த் கேள்வி!! ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 30, 2007 |
டெல்லி:
2வது முறையாக உலக சாம்பியன் ஆகியுள்ள எனக்கு, 20-20 உலகக் கோப்பையை வென்று திரும்பிய இந்திய கிரிக்கெட் அணிக்கு கொடுத்த அதே அளவிலான வரவேற்பினை இந்தியா கொடுக்குமா என்பதை அறிய ஆவலாக உள்ளேன் என்று 2வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள விஸ்வநாதன் ஆனந்த் கூறியுள்ளார்.
இந்தியாவில் உள்ள அனைத்து ஆங்கில தொலைக்காட்சி சானல்களும் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதையே காட்டிக் கொண்டிருந்தார்கள். இந்திய வீரர்களுக்கு கோடிக்கணக்கில் பரிசுகள் குவிந்தன. குடியரசுத் தலைவர், பிரதமர் என பல தலைவர்களும் இந்திய கிரிக்கெட் அணியைப் பாராட்டினர்.
இந்திய அணி வீரர்கள் மும்பைக்குத் திரும்பியபோது, குடியரசுத் தலைவர் ஒருவருக்குக் கொடுக்கப்படும் ராஜ மரியாதை இந்திய வீரர்களுக்குத் தரப்பட்டது.
மும்பை நகர் முழுவதும் வீரர்களை திறந்த பஸ்சில் ஏற்றி ஊர்வலமாக கூட்டிச் சென்று வாங்கடே விளையாட்டு மைதானத்தில் பாராட்டு விழா நடத்தி பரிசுத் தொகையை ஸ்பாட்டிலேயே கொடுத்து கெளரவித்தனர்.
இந்ததிய கிரிக்கெட் வீரர்களுக்குக் கொடுக்கப்பட்ட இந்த ராஜ உபசாரமும், பரிசுகளும், கொடுக்கப்பட்ட கெளரவமும் மற்ற விளையாட்டுக்காரர்களை கடும் கோபத்திலும், அதிருப்தியிலும் ஆழ்த்தியுள்ளன.
குறிப்பாக ஹாக்கி வீரர்கள் கடும் கோபமடைந்தனர். பாரபட்ச போக்கைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கப் போவதாக கர்நாடகத்தைச் சேர்ந்த ஹாக்கி வீரர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.
இதனால் பயந்து போன கர்நாடக அரசு உடனடியாக ஆசிய கோப்பைப் போட்டியில் வென்றதற்காக கர்நாடகத்தைச் சேர்ந்த நான்கு ஹாக்கி வீரர்களுக்குப் பரிசுத் தொகையை அறிவித்தது. இதையடுத்து ஸ்டேட் வங்கி உள்ளிட்ட சிலரும் பரிசுகளை அறிவித்தனர்.
இந்த நிலையில், உலக செஸ் சாம்பியன் பட்டத்தை 2வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார் விஸ்வநாதன் ஆனந்த். முதல் முறை அவர் சாம்பியன் பட்டம் வென்றபோதே அவருக்கு இந்தியா உரிய முறையில் கெளரவம் தரவில்லை என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் 2வது முறையாக சாம்பியன் ஆகியுள்ளார் ஆனந்த்.
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்குத் தரப்பட்ட அதே அளவிலான கெளரவமும், மரியாதையும், தற்போது ஆனந்துக்குக் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக ஆனந்த்திடமே அதுகுறித்த ஆர்வம் எழுந்துள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்து கேள்விப்பட்டேன். அக்டோபர் மாதம் நான் இந்தியாவுக்கு வரும்போது இதேபோன்ற வரவேற்பு கிடைக்குமா என்பதை அறிய ஆர்வமாக உள்ளேன்.
வரவேற்பு கிடைக்கிறதோ, இல்லையோ, செஸ் உலகைச் சேர்ந்த நண்பர்கள் நிச்சயம் வரவேற்புக்காக காத்திருப்பார்கள். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் மெக்சிகோவில் இந்தப் போட்டியின் முக்கியத்துவம் குறித்து மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர் என்றார் ஆனந்த்.
காஸ்பரோவுக்குப் பின்னர் செஸ் உலகின் அசைக்க முடியாத மன்னராக இருக்கிறார் ஆனந்த். முன்னணி வீரரான ரஷ்யாவின் விலாடிமிர் கிராம்னிக்கால் கூட ஆனந்த் இடத்தை அசைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தனது செஸ் வாழ்க்கையில் 2வது முறையாக 2800 ஈலோ பாயிண்டுகளைத் தொட்டுள்ளார் ஆனந்த். தொடர்ந்து 3வது ஆண்டாக முதலிடத்தில் நீடிக்கிறார்.
7 ஆண்டுகளுக்கு முன்பு முதல் முறையாக உலக சாம்பியன் ஆனார் ஆனந்த். மெக்சிகோவில் தற்போது நடந்து முடிந்துள்ள செஸ் சாம்பியன் போட்டியில், ஒரு ஆட்டத்தில் கூட ஆனந்த் தோற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி பல சாதனைகளுடன் நாடு திரும்பவுள்ள ஆனந்த்தை இந்தியா எப்படி வரவேற்கப் போகிறதோ?
Posted by
வித்யா கலைவாணி
at
0
comments
பெண்ணின் வயிற்றில் வளர்ந்த பாம்பு!
பெண்ணின் வயிற்றில் வளர்ந்த பாம்பு! அமெரிக்காவில் பரபரப்பு!! சனிக்கிழமை, செப்டம்பர் 29, 2007 |
நியூயார்க்:
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 36 வயதுப் பெண்ணின் வயிற்றில் புகுந்த பெரிய பாம்பை டாக்டர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் எடுத்துள்ளனர். அந்தப் பாம்பு உயிருடன் இருந்ததால் டாக்டர்களும், மருத்துவமனை ஊழியர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அங்கு அவரை அனுமதித்த டாக்டர்கள் அவரது ஆடைகளை நீக்கி வயிற்றைப் பார்த்தனர். அப்போது வயிற்றுக்குள் ஏதோ நெளிவது போல இருந்ததைப் பார்த்து அவர்கள் குழம்பினர். மேலும், பாட்ரிசியா தொடர்ந்து கடுமையாக வாந்தியும் எடுத்தபடி இருந்தார். அவரால் உட்காரக் கூட முடியவில்லை.
இதைப் பார்த்து குழம்பிய டாக்டர்கள், எக்ஸ் ரே எடுக்க முடிவு செய்தனர். எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது டாக்டர்களுக்குப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் பாட்ரிசியாவின் வயிற்றில் ஒரு பாம்பு நெளிந்தபடி இருந்ததுதான்.
உடனடியாக அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய முடிவு செய்தனர் டாக்டர்கள். இதையடுத்து பாட்ரிசியாவை அறுவைச் சிகிச்சைக்கு உள்ளாக்கினர். அவரது வயிற்றுக்குள் சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருந்த பாம்பை வெளியே எடுத்தபோது அது உஷ் என்று சீறியபடி வெளியே வந்தது.
இதைப் பார்த்த ஒரு நர்ஸ் மயக்கமடைந்து கீழே விழுந்து விட்டார். டாக்டர்களும் கூட ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டனர்.
அந்தப் பாம்பு சிறிதாக இருந்தபோதே பாட்ரிசியாவின் குடலுக்குள் புகுந்துள்ளது. பாட்ரிசியா சாப்பிட்ட சாப்பாட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து அதுவும் வளர்ந்து வந்துள்ளது.
எப்படி இந்த பாம்பு பாட்ரிசியாவின் வயிற்றுக்குள் புகுந்தது என்பதுதான் டாக்டர்களுக்குக் கொஞ்சம் கூட புரியவில்லை. ஆனால் சில காலத்திற்கு முன்பு பாட்ரிசியா, டூர் சென்றிருந்தபோது அங்கு ஆற்று நீரை அள்ளிக் குடித்துள்ளார்.
அப்போது ஆற்று நீரில் இருந்த பாம்பு முட்டைகள் அவரது வயிற்றுக்குள் போயிருக்கலாம். அந்த பாம்புதான் தற்போது வளர்ந்து பெரிதாகியிருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகப்படுகின்றனர்.
பாட்ரிசியாவின் வயிற்றில் இருந்த பாம்பு 1.83 மீட்டர் நீளம் இருந்தது. வெள்ளை நிறத்தில் இருந்த பாம்பின் உடலில் கருப்புப் பட்டைகள் காணப்பட்டன. வாய் அகலமாக இருந்தது.
ஏதோ திகில் படத்தைப் பார்த்தது போல அந்த மருத்துவமனை டாக்டர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
சமீப காலத்தில் இப்படி ஒருவரது வயிற்றுக்குள் பாம்பு குடியிருந்த சம்பவம் இதுவே உலகில் முதல் முறை என்று கூறப்படுகிறது.
16ம் நூற்றாண்டில் பிரான்ஸைச் சேர்ந்த ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளிக்கு இப்படித்தான் கடும் வயிற்று வலி ஏற்பட்டது. அதைப் பொறுக்க முடியாமல் அவர் வயிற்றைக் கிழித்துக் கொண்டு இறந்தார். பின்னர் அவரை சவப் பெட்டிக்குள் வைத்து புதைத்து விட்டனர். ஆனால் சில நாட்கள் கழித்து அந்த சவப் பெட்டிக்குள்ளிருந்து ஒரு பாம்பு வந்தது.
அவரது வயிற்றில் இருந்த பாம்புதான் அது என்பது பின்னர் தெரிய வந்தது.
இதேபோல, 1642ம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த காத்தரீனா என்ற பெண் 14 ஆண்டுகளாக தொடர்ந்து பல்லிகளைக் கக்கி வந்தார் என்பது அந்தக் காலத்து பயங்கர சம்பவமாகும்.
இந்த நிலையில் பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்து பாம்பு வளர்ந்து வெளியேறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Posted by
வித்யா கலைவாணி
at
3
comments
பிளஸ் 2 வரை பாடநூல்கள் இணைய தளத்தில்
பிளஸ் 2 வரை பாடநூல்கள் இணைய தளத்தில்
ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான பாடநூல்கள் அனைத்தையும் தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் தனது இணைய தளத்தில் நேற்று வெளியிட்டது.பள்ளிப் பாடநூல்களை நியாயமான விலையில் ஒரே மாதிரியாக, உரிய நேரத்தில் மாணவர்களுக்கு வழங்க, கடந்த 1970ம் ஆண்டு தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் நிறுவப்பட்டது.
இதன்மூலம் ஆங்கிலம், தமிழ் மற்றும் சிறுபான்மை மொழி வழிகளில் 502 தலைப்புகளில் பாட நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சுயநிதி பள்ளிகளில் ஒன்று முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக பாடநூல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டில் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில், தமிழை முதல் மொழியாக எடுத்து படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் பாட நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர வெளிச்சந்தையிலும் பாடநூல்கள் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் மாணவர்களின் முன்னேற்றம், ஆசிரியர் நலன் கருதி 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான பாட நூல்களை இணைய தளத்தில் வெளியிட அரசு திட்டமிட்டது. இதற்காக ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டு Ôநிக்Õ நிறுவனத்துடன் இணைந்து பணிகள் நடந்தன. இதையடுத்து 322 தலைப்புகளில் பாடப் பகுதிகள் இணைய தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.
இதில் பொதுப் பாடநூல் தலைப்பு 162 (தமிழ் வழிப் பாடநூல் தலைப்புகள் 90, ஆங்கில வழி பாடநூல் தலைப்புகள் 72) உள்ளன. சிறுபான்மை பாடநூல் தலைப்புகள் 160 உள்ளன.
வகுப்பு வாரியாக பார்த்தால், 1 முதல் 5ம் வகுப்பு வரை 95 தலைப்புகளும், 6 முதல் 8ம் வகுப்பு வரை 73 தலைப்புகளும், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை 154 தலைப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பாடங்களை, விருப்பம்போல் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும். இந்த இணைய தளம் குறித்து அறிய விரும்புவோர் http://www.textbooksonline.tn.nic.in/ என்ற முகவரியில் பார்க்கலாம்.
Posted by
வித்யா கலைவாணி
at
0
comments
முடியாதது என்பது உலகில் கிடையாது
முடியாதது என்பது உலகில் கிடையாது ஆங்கிலத்தில் "நட்த்திங் இஸ் இம்பாசிபள்' என்பார்கள் கீழே இருக்கும் படங்களை பாருங்கள் கண்டிப்பாக நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள்.
முயற்சி திருவினை ஆக்கும் என்றும் சொல்வார்கள்.
எப்போது உன்னால் முடியாது என பிறர் சொல்கிறார்களோ
யோசி
நன்றாக யோசி
எல்லா வழி முறைகளையும் ஆராய்ந்து பார்
முடிவெடு
உன்னில் இருக்கும் எல்லா ச்ச்க்திகளையும் பயன் படுத்து
தளர்ந்து விடாதே
வெற்றி எளிதானதல்ல எட்ட முடியாததல்ல
சந்தோசமா சிவா அண்ணா!
Posted by
வித்யா கலைவாணி
at
1 comments
தங்கைக்கோர் கீதம் - கவிதை
நீ பிறக்கும் முன்
அம்மாவின் வயிற்றில் இருந்த போதே,
நான் உன்னிடம் சண்டை போட ஆரம்பித்து விட்டேன்...
எப்போதாவது அம்மாவின் மடியில்
படுக்க வரும்போது,
பாப்பா வயிற்றில் தூங்குகிறாள் என்று கூறி
நான் படுப்பதை அம்மா தடுப்பாள்...
அம்மாவின் அருகில் அமர்ந்து கொண்டு
உன்னைத் திட்டுவேன்...
நீ பிறந்த பின்பும்,
உனக்குத்தான் நிறைய செல்லம் கொடுப்பாள்..
என் மீது கவனிப்பும், செல்லமும் குறைந்ததால்
விவரமறியா சிறு வயதில்,
உன்மீது எனக்கொரு சிறு பொறாமை...
கொஞ்சம் வளர்ந்த பின்
தின்பண்டங்களுக்காக இருவரும்
சண்டை போட்டுக் கொள்வோம்...
விளையாட்டுச் சாமான்களுக்காக
நாம் சண்டை போட்டுக் கொள்ளாத
நாட்களே இல்லை...
வீட்டில் ஏதாவது பொருளை உடைத்து விட்டு
இருவரும் அடுத்தவரை குறை சொல்வோம்
இருவருக்கும் பொதுவாக அடி கிடைக்கும்...
கான்வென்ட்டில் இருந்து உன்னை
தினமும் மாலையில் அழைத்து வரும்போது
உன்னை மிரட்டிக் கொண்டே வருவேன்...
பள்ளிக் கூடத்தில் சேர்ந்த பின்
சிலேட்டிலிருக்கும் உன் வீட்டுப் பாடத்தை நான் அழிப்பதும்
என் வீட்டுப் பாடத்தை நீ அழிப்பதும் தினமும் நடக்கும்...
நான் பண்ணும் அடங்களை
அம்மாவிடம் தினமும் தவறாது போட்டுக் கொடுப்பாய்,
அம்மா திட்டி விட்டு நகர்ந்ததும்
நான் உன்னை அடிப்பேன்,
தேவைக்கதிகமான சத்தத்துடன் அழுவாய் நீ...
அம்மாவுக்கு தெரியாமல் நான்
தெருவில் விளையாட போகும்போது
என்னை தைரியம் கூறி அனுப்பி விட்டு
சிஐடியாய் அம்மாவுக்கு தெரிவிப்பாய்...
அம்மாவிடம் நான் அடி வாங்குவதை
ஒளிந்து நின்று ரசிப்பாய்...
இரவு உணவாக உப்புமா சாப்பிடும் போது
சிறு பெண்ணென்று, உனக்கு
வெல்லம் அதிகமாகவே கிடைக்கும்...
என் மீது பரிதாபப் பட்டு
சிறுதுண்டொன்றை எனக்கும் கொடுப்பாய்...
தாத்தா வீட்டு ஊஞ்சலில்
யார் அதிக நேரம் ஆடுவது என்று
தினமும் போட்டி நடக்கும், உனக்கும் எனக்கும்...
நான் நகரத்திற்கு படிக்கச் சென்றவுடன்
நான் ஊருக்கு திரும்பும் போதெல்லாம்
அம்மாவுடன், நீயும் வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருப்பாய்..
வா என்று பாசத்துடன் அழைத்து விட்டு
வீட்டினில் நீ நுழைந்தவுடன்
திரும்பவும் ஆரம்பிக்கும், நம்மிருவருக்குமிடையே யுத்தம்...
இருவரும் வளர, வளர
இடைவெளி அதிகமானது...
செல்ல சண்டைகள் குறைந்து போனது...
இருப்பினும் குறையவில்லை பாசம்...
இப்போது உனக்கு திருமணமாகி விட்டது...
முன்புபோல் உன்னோடு சண்டையிட முடியவில்லை...
புதிதாய் கிடைத்த உன் உறவுகளோடு
நீ மகிழ்ச்சியாய் இருப்பது எனக்கும் மகிழ்ச்சியே...
இப்போதும், நீ அத்தானுடன் விடுமுறையில்
நம் வீட்டுக்கு வரும்போது
உன்னுடன் சண்டைபோட காத்துக் கொண்டிருக்கிறேன்...
ஏனெனில் சண்டைகளெல்லாம் சண்டைகளல்ல...
உனக்கும் புரிந்திருக்கும், என் தங்கையே,
உறவுகள் சிற்சிறு செல்லமான
சண்டைகளாலும் பலமடைகின்றன...
நன்றி : http://lazyguy2005.blogspot.com/2006/08/blog-post_11.html
Posted by
வித்யா கலைவாணி
at
0
comments
VAO தேர்வ இட ஒதுக்கீடு
நேற்று 25/09/2007 அன்று தமிழ்நாட்டில் VAO எனப்படும் கிராம நிர்வாக அலுவலர்களைத் தேர்ந்தெடுப்பதற்க்காண தேர்வு
முடிவுகள் வெளியிடப்பட்டது. (போன பதிவு) வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். இதில் சிறப்பு என்னவென்றால் இவர்கள் அனைவரும்
போட்டித் தேர்வு மூலம் வெற்றி பெற்றவர்கள்.
இப்பொழுது விஷயம் என்னவென்றால் 2500 பேர்கள் எவ்வாறு தேர்ந்தெடுப்படுவார்கள் என்பதுதான். ஏனெனில் தமிழ்நாட்டில் 69 சதவீதம் இட ஒதுக்கீடு
உள்ளது. அதன் படி என்றால் இட ஒதுக்கீடு இப்படித்தான் இருக்குமோ.
மொத்த வேலை - 2500 இடங்கள்
தாழ்த்தப்பட்டவர்களுக்கு ----------- 18 சதவீதம் - 450 பேர்கள்
பழங்குடியினருக்கு ------------- 1 சதவீதம் - 25 பேர்கள்
பிற்படுத்தப்பட்டவர்களுக்க - ------- 23 சதவீதம் - 575 பேர்கள்
பிற்படுத்தப்ப்ட்ட முஸ்லிம்களுக்கு - 3.5 சதவீதம் - 87 பேர்கள்
பிற்படுத்தப்ப்ட்ட கிறிஸ்தவர்களுக்கு - 3.5 சதவீதம் - 88 பேர்கள்
மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு - 20 சதவீதம் - 500 பேர்கள்
பொது பிரிவினருக்கு-------------- 31 சதவீதம் - 775 பேர்கள்
-------------------------
100 % 2500 பேர்கள்
-------------------------
சரி தானே சகோதரர்களே!
Posted by
வித்யா கலைவாணி
at
1 comments
அழியும் உயிரினங்கள்
IUCN என்கிற 'உலக இயற்கை மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்புக் கூட்டமைப்பு' அழிந்துகொண்டிருக்கும் உயிரினங்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. நீங்களும் நானும் செய்யும் அட்டுழியங்களால் புல் , பூண்டு, பூச்சிகளென உயிரினங்கள் முற்றிலுமாய் அழிந்துகொண்டிருக்கும் கொடுமையை என்னவென்று சொல்வது?
உயிர்வலி எண்ணிக்கையில்...
16,306 - IUCN கணக்கெடுப்பில் அழிந்துகொண்டிருப்பதாக அறியப்பட்ட உயிரினங்கள்.
7850 - விலங்கினங்கள்.
8456 - பறவையினங்கள், மற்றவை.
12%-52% - பெரிய உயிரினங்களில் அழிந்துகொண்டிருப்பவைகளின் சதவீதம்.
8% - பறவையினங்கள். (8 இல் 1)
22% - பாலூட்டிகள். (4 இல் 1)
31% - நீர் மற்றும் நிலத்தில் வாழ்பவை - Amphibians (3 இல் 1)
43% - ஆமை வகைகள்.
28% - Conifers என்கிற மரங்கள்.
52% - Cycads என்கிற செடிகள்.
பட விளக்கம்: காசிக்குப் போய் பாவத்தை கழுவினார்களோ இல்லையோ கங்கையை அசுத்தப்படுத்தி, அதன் மூலம் கரியால் என்கிற முதலையினத்தையே அழித்து மேலும் பாவம் செய்தனர் எம் மக்கள்!
படம் நன்றி: G. & H. Denzau.
http://balajiulagam.blogspot.com/2007/09/blog-post.html
Posted by
வித்யா கலைவாணி
at
0
comments
அரேபிய அழகிப் போட்டி
Dubai : Miss Bahrain bagged the Miss Arab World 2007 crown in Cairo last night after nearly six hours of contest.
Wafaa Ganahi, a 23-year-old teacher from the Law Faculty of Bahrain University, won the title, while the first runner-up was 25-year-old Miss Egypt Shaimaa Mansour. Miss Lebanon Rula Bahij, 23, was the second runner-up.
Wafaa, Bahrain's first ever contestant in the event, was crowned by Miss Arab World 2006 Claudia Hanna from Iraq.
Asked whether she would continue her teaching career, Wafaa hesitantly nodded in affirmation.
Earlier, Shaimaa, who is a football referee, said she was attending the contest to promote Egypt's tourism and sports.
Seventeen women from 15 countries attended the final competition, one of the major attractions of the second Arab Tourism Festival, which opened in Cairo.
The first Miss Arab World Contest was held in Sharm Al Shaikh last year.
Wafaa Ganahi
Posted by
வித்யா கலைவாணி
at
7
comments
இன்றைக்கு உலக காது கேளாதோர் தினம்.
சகோதரர் உண்மைத் தமிழனின் பதிவு
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
‘அது’ எப்போது, எப்படி ஆரம்பித்தது என்பது எனக்கு இப்போதும் தெரியவில்லை. நானும் மற்றவர்களைப் போல் எப்போதும் சாதாரணமாகத்தான் இருந்து வந்தேன்..
‘சானா, சர்ர்ர்ரு..’ என்று செல்லமாக என்னை அழைப்பவர்களிடம் சட்டென்று திரும்பிப் பார்த்துப் பேசியிருக்கிறேன். எந்த மாறுபாடும், வேறுபாடும் என்னிடம் காணப்படவே இல்லை. ஒரு மதிய நேரம் எனக்கு அந்த உண்மையைக் காட்டும்வரையில்..
அன்றும் வழக்கம்போல் திண்டுக்கல் ஐ.டி.ஐ.யில் டீசல் மெக்கானிக் வகுப்பில் அமர்ந்திருந்தேன். முதல் நாள் இரவு எனது தந்தையுடன் மருத்துவமனையில் தங்கியிருந்ததால் அரைத் தூக்கத்தில் வகுப்பறையில் இருந்தேன்.
வகுப்பு ஆசிரியர் திரு.ராதாகிருஷ்ணன் என்னை உற்று உற்றுப் பார்த்தவர் என்னைப் பார்த்தபடியே ஏதோ சொல்ல. ஒட்டு மொத்த வகுப்பும் என்னையவே திரும்பிப் பார்த்தது. அப்போதும் எனக்கு அவர் சொன்னது காதில் விழவில்லை.
ஆசிரியர் அருகில் வந்து என் கன்னத்தில் விட்ட ஒரு அறைதான் எனது அரைகுறைத் தூக்கத்தை விரட்டியது. "ஒண்ணு தூங்கு.. இல்லாட்டி பாடத்தைக் கவனி.. அரைத் தூக்கத்துல என்னைப் பார்த்து என்னையும் தூங்க வைக்கதடா.." என்றார் ஆசிரியர். அடித்ததைவிடவும் அவர் சொன்ன வார்த்தைகள்தான் எனக்கு நிறைய துக்கத்தைக் கொடுத்தது..
வகுப்பு முடிந்து வெளியில் வந்தவுடன் சக நண்பர்கள் "என்னடா ஸார் அவ்ளோ நேரம் உன்னைப் பத்தியே பேசுறாரு.. அப்படியே இடிச்சப்புளியாட்டம் உக்காந்திருக்கிறே..?" என்றார்கள். அப்போதும் நான் அவர்களிடம் கேட்டேன்.. "அப்படியா.. என்ன சொன்னார்..?" என்றேன்.. ஏதோ வித்தியாசமாக என்னைப் பார்த்தபடியே சென்றார்கள் நண்பர்கள்.
வீடு திரும்பியவுடன் எனது அக்கா வாசலிலேயே காத்திருந்தவர் சத்தம் போடத் துவங்கினார், "ஏண்டா காலைல எத்தனை தடவ கத்துறது.. நீ பாட்டுக்கு கண்டுக்கா போய்க்கிட்டே இருக்க.. சரி.. சரி.. சீக்கிரமா போ.. மாமா ஏதோ ஊருக்குப் போகணுமாம்.. அதுனால உன்னை உடனே ஆஸ்பத்திரிக்கு வரச் சொன்னார்.." என்று விரட்டினார்.
ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டும் என்பதைவிட காலையில் அக்கா கூப்பிட்டது என் காதில் ஏன் விழுகவில்லை என்பதே எனக்குப் பெரிய கேள்வியாக இருந்தது.
மருத்துவமனையில் இரவு நேரத்தில் எனது தந்தை தூக்கம் வராமல் “ஒரு ஊசியைப் போடச் சொல்லுடா.. செத்தாவது போகிறேன்..” என்று கண்ணீர் சொட்டாக வடிய கெஞ்சியபோது அதுகூட எனக்குக் கேட்காமல் போய் பக்கத்து பெட்காரர் அதைக் கேட்டு எனக்கு டிரான்ஸ்லேட் செய்தபோது சத்தியமாக எனக்குத்தான் சாவு வர வேண்டும் போல இருந்தது.
அங்கே இருந்த நர்ஸ் என்னைத் தோளைத் தட்டி இழுத்து "என்னாச்சு உனக்கு? காது கேட்காதா..?" என்று கேட்டபோதுதான் அப்படியரு விஷயமே எனது காதுக்கு வந்தது.
கொஞ்சம் லேசாக கேட்டேன்.. உற்றுக் கேட்டேன்.. ஆம்.. எனது காதில் ஏதோ ஒரு சப்தம் ரீங்காரமாய் ஒலித்துக் கொண்டேயிருந்தது.. 'கிர்ர்ர்' என்ற சப்தம். டேபிள் பேன் ஓடினாலும் ஒரு லேசான சப்தம் எழுமே.. அதே போல்தான்.. எனது இனிய காதுக்கு ஏதோ ஒன்றாகிவிட்டது என்பது எனக்குப் புரிந்தது..
மருத்துவர்களிடம் ஓடினேன்.. தேனினும் இனிய செய்தியை நமது தேனமுத தமிழில் என் செவியில் திணித்தார்கள். “உங்களது செவித்திறன் கேட்பு எலும்பின் சக்தி குறைந்துள்ளது. அதனால் உங்களுக்கு கேட்கும் சக்தியும் குறைந்துள்ளது..” என்று.. இந்தச் செய்தியை கேட்கும் சக்தியே எனக்கில்லை..
அப்போது நான் ஒரு வயதுக்கு வந்த 16 வயது வாலிபன். ‘விக்ரம்’ படத்தை 6 முறை பார்த்துவிட்டு, நானே கமல்ஹாசனைப் போல் மனதிற்குள் எண்ணிக் கொண்டு ஒரு கனவுலக கதாநாயகனாக எனக்குள்ளேயே ஒரு வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருப்பவன். ஒரு காது அவுட் என்று சொல்லி ஒரே நிமிடத்தில் என்னை ஜனகராஜ் இடத்திற்கு கொண்டு வந்தார் அந்த மருத்துவர்.
உதடு துடிக்கிறது. வார்த்தைகள் வெளியில் வரவில்லை. ஏதாவது செய்யக்கூடாதா என்று கண்களில் திரண்டு நின்ற கண்ணீரோடு கேட்கிறேன்.
"இல்லை சரவணன்.. இது பரம்பரை வியாதியாக உங்களைத் தொற்றியிருக்கிறது. உங்களது அம்மாவின் 40-வது வயதில் பிறந்திருக்கிறீர்கள். அப்போது உங்களது அம்மாவுக்கும் உடம்பில் சக்தி குறைந்துள்ளது. அதனால் பிறக்கின்றபோதே இந்த வீக்னஸோடுதான் பிறந்திருக்கிறீர்கள். அதோடு உங்க அம்மாவுக்கும் இப்போது இந்த வியாதி வந்துள்ளது. ஸோ.. வருவதை.. வந்துவிட்டதை ஒன்றும் செய்ய முடியாது.." என்றார் டாக்டர் மோகன்ராவ்..
ஏற்கெனவே அப்பாவுக்கு கேன்சர் என்று ரணகளமாக இருந்த எனது இல்லம், இப்போது எனது காதுகளும் அவுட் என்றவுடன் இன்னும் கொஞ்சம் சோகத்தை அப்பிக் கொண்டுவிட்டது.
அதன் பிறகு தினமும் அனைவரும் எனது பாணியில் கத்தத் துவங்கினார்கள். “கத்திதான் பேச வேண்டும். வேறு வழியில்லை.. நாங்க சமாளிச்சுக்குறோம்..” என்று எனது அக்கா ஆறுதல் பாணியில் சொல்லி என்னைத் தேற்றினார்.
பின்னாளில் இந்த நோய்க்கு பரிகாரம் என்னவெனில் “எலும்பு மாற்று அறுவை சிகிச்சைதான்..” என்றார் சென்னையின் மிகப் பெரிய காது மருத்துவர். “ஆஸ்திரேலியாவிலிருந்து எலும்பை வரவழைப்போம். ஒரு சுமாரா 8 லட்சம் ரூபாய் செலவாகும்..” என்று கூலாகச் சொன்ன டாக்டரிடம் அவருடைய பீஸ¤க்கு ஆகும் பணத்தையே கடன் வாங்கி வந்திருக்கிறேன் என்பதை சொல்ல முடியுமா என்ன..?
“ஊரில் என் தாத்தாவிடம் கேட்டுவிட்டு வருகிறேன் ஸார்..” என்று சொல்லிவிட்டு வந்தவன்தான், இன்னும் அந்த கிளினிக் பக்கமே செல்லவில்லை.
ஒரு மாதம் நான் என் நினைவிலேயே இல்லை.. எனது தந்தையிடம்கூட நான் சொல்லவில்லை. அவரே “தன்னைக் கருணைக் கொலை செய்துவிடு” என்று என்னிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார். அவரிடம் போய் நான் என் சோகத்தைச் சொல்லி என்ன செய்ய என்று விட்டுவிட்டேன்..
எப்படி வந்தது இது?
மருத்துவக் காரணங்கள் ஒரு புறம் இருக்கட்டும். நான் செய்த அரிய செயல்களைப் பாருங்கள்..
கிரிக்கெட் என்றால் எனக்கு அப்போது உயிர். ரேடியோவை தலைமாட்டில் வைத்து கிரிக்கெட் கேட்டுக் கொண்டே இருப்பேன். “ரேடியோவை கொஞ்சம் தள்ளிதான் வையேண்டா...” என்று என் வீட்டினர் கெஞ்சினாலும் ரேடியோ என் காதோரம்தான் இருக்கும்.
ஐடிஐயில் படித்தபோது எனது நண்பன் மோகன்தாஸ் ஒரு சிறிய கையடக்க டேப்ரிக்கார்டரை கொண்டு வந்தான். அதில் கிரிக்கெட் கமெண்ட்ரியை கேட்பதற்காக hear phone-ஐ மாட்டி கடைசி பெஞ்சில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருப்பேன்.
முன் வரிசையில் இருக்கும் நண்பர்கள் என்னிடம் திரும்பி ஸ்கோர் கேட்கும்போது நான் வேண்டுமென்றே பந்தா செய்து ஒரு இரண்டு, மூன்று கெஞ்சல்களுக்குப் பிறகு சைகையில் சொல்வேன்.. ஒரு நாளல்ல.. இரண்டு நாளல்ல.. ஒரு வருடம் தொடர்ந்தது..
ஏற்கெனவே வைட்டமின் சி அல்லது டி எதுவோ ஒன்று குறைபாடுடன் இருந்த நான் இதையும் கேட்க கேட்க.. காதின் உள் எலும்பின் சக்தி தாக்கப்பட்டு வலுவிழக்க ஆரம்பித்து, கடைசியில் முக்கால் செவிடன் என்கிற இன்றைய நிலைமைக்கு கொண்டு வந்து விட்டது..
நண்பர்களை விடுங்கள்.. அவர்கள் பரவாயில்லை.. பக்கத்திலேயே வந்து பேசுவார்கள்.. சமாளித்துக் கொண்டேன். மற்றவர்கள்.. முதலில் அக்கம் பக்கம் பார்த்துப் பேசி எனக்கே வெட்கமாகி பின்பு வெளியாள் யாருடனும் பேசாமல் என்னை நானே குறுக்கிக் கொண்டேன்..
அப்போதுதான் “மருத்துவர் காது கேட்கும் கருவியை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். வேறு வழியில்லை..” என்று சொன்னவுடன் எனது கனவுலகத்தைக் கலைத்துவிட்டு ஒரு பெரும் மனப் போராட்டத்திற்குப் பிறகு காது கேட்கும் கருவியை வாங்கிப் பொருத்திக் கொண்டேன்.
அப்போதும், இப்போதும் சிலர் கத்த முடியாமல் வெறுப்பாக என்னிடமே தங்களது முகத்தைக் காட்டும்போது அப்படியே ஜன்னல் வழியாக கீழே குதித்துவிடலாமா என்ற எண்ணம்தான் எனக்குள் வரும்.. இதற்காகவே எங்கு வேலை பார்த்தாலும் அநாவசியமாக யாரிடமும் சென்று பேசாமல் இருந்துவிடப் பழகிவிட்டேன்.
முதலில் இப்படி ஒரு நோய் இருக்கிறது என்பதைக் கண்டறிய முடிந்திருந்தால் அதற்கான சிகிச்சை முறைகளை சிறிய வயதிலேயே நான் எடுத்திருந்தால் என் காது பிழைத்திருக்கும். அந்த அளவிற்கான அறிவுத்திறன் என் இல்லத்தில் யாருக்கும் இருக்கவில்லை என்பதும் ஒரு குறைதான்..
இப்படியரு குறை இருக்கிறது என்று எனக்குத் தெரிந்திருந்தால் நானும் அதிகமாக ஒலியைக் கேட்காமல் தவிர்த்து எனது காதைக் காப்பாற்றியிருக்கலாம்.
அன்றிலிருந்து வாக்மேனில் பாட்டு கேட்கும் பழக்கத்தைத் தொலைத்தே விட்டேன். இப்போதும் யாராவது “வாக்மேனில் மேட்டரைத் தருகிறேன். கேட்டு டைப் செய்து கொடுங்கள்..” என்று சொன்னால் எவ்வளவு பணம் தருகிறேன் என்றாலும் “முடியாது..” என்று சொல்லிவிடுவேன்.
ஏனெனில் அதிகமான ஒலியை இப்போதும் எனது காதில் கேட்டால் அன்று இரவே என் காதில் இப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரு ரீங்காரமான சப்தம் என்னைத் தூங்கவிடாமல் செய்து தலைவலியை கொண்டு வந்துவிடும்.
இந்தக் காரணத்திற்காகவும் நான் வெளியில் வண்டியோட்டிச் செல்லும்போதுகூட காது கேட்கும் கருவியை மாட்டாமல்தான் சென்று வருகிறேன்.
இந்தத் தலைவலியும், அதன் உடன்பிறப்பான காய்ச்சலும் தொடர்ந்து வந்தால் நான் அடித்துச் சொல்வேன்.. எனது காது கேட்கும் திறன் 2 டெசிபல்கள் குறைந்துள்ளது என்று..
ஒவ்வொரு முறையும் இப்படித்தான் எனது காது கேட்கும் திறனான டெசிபல்கள் குறையும். அதை நான் கவனித்தே வந்திருக்கிறேன்.
இந்த காது கேளாமை நோயும் இப்போது பரவலாக அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அதிகமான சத்தம், இரைச்சலான சப்தம் ஏற்படும் இடங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு முதலில் தொற்றக்கூடியது இந்நோயாகத்தான் இருக்கும்.
ஏனெனில் உடல் ஊனமுற்றவர்களில் இந்த காது கேளாமை வாயிலாக ஊனமுற்றவர்களின் எண்ணிக்கைதான் உலகளவில் முதலிடமாம்.
இப்போது உலகம் முழுவதும் 50 கோடி பேர்கள் இந்த காது கேளாமை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. அதிலும் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் இளைஞர்கள்தான்.
இந்தியாவில் 1000-த்துக்கு 2 அல்லது 3 குழந்தைகள் பிறவியிலேயே காது கேளாமை நோயோடு பிறக்கின்றன என்று பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நோயால் பாதிக்கப்பட்டோரில் 6.3 சதவிகிதம் பேர் இந்தியாவில் இருப்பவர்களாம்.
இன்றைக்கு கக்கூஸில் இருக்கும்போதுகூட செல்போனில் பேசிக் கொண்டே அவசர வாழ்க்கை வாழ்ந்து வரும் இளைஞர்கள் நிறைய பேர், நாளைய முதியவர்களாகும்போது காது கேளாமையால் பாதிக்கப்படுபவர்கள் அதிகம் பேர் இருப்பார்கள் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
அதிகபட்சமான கூம்பு வடிவ ஸ்பீக்கரின் அருகில் நின்று பாட்டு கேட்பது, மேடை கச்சேரிகளின்போது அருகில் சென்று கேட்டு காதைக் கிழித்துக் கொள்வது.. நாடகம் பார்க்கச் சென்று நடிகர், நடிகைகளை அருகில் பார்க்க நினைத்து நம் காதிற்குள் வம்பாக அதிகப்பட்சமான ஒலியை திணித்துக் கொள்வது..
இவை போன்று நம்மால் முடிகின்ற விஷயங்களைத் தவிர்த்தோமானால் என்னைப் போன்ற தவிர்த்திருக்கக்கூடிய சிலரும் பிழைத்துக் கொள்ளலாம்.
நம்முடைய குழந்தைகளுக்கும் இந்த வைட்டமின் குறைபாடுகள் உள்ளனவா என்று இப்போதே செக் செய்து கொண்டு அதற்கேற்ற மருத்துவம் எடுத்துக் கொண்டு வருமுன் காப்பது அனைவரின் குடும்பத்திற்கும் நல்லது.
அனுபவப்பட்டவன் சொல்கிறேன்..
ஏனெனில் அனுபவமே வாழ்க்கை..!
அனுபவமே இறைவன்..!
நன்றி : http://truetamilans.blogspot.com/2007/09/blog-post_24.html
Posted by
வித்யா கலைவாணி
at
2
comments
மீரா ஜாஸ்மின
சமீபத்தில் ஏஷியாநெட் மலையாள தொலைக் காட்சியில் ஒரு படம் பார்த்தேன்.
மீரா ஜாஸ்மின் ஒரு முஸ்லிம் பெண்ணாக நடித்திருந்த படம். மீராவினுடைய கணவர் சவூதியில் (இங்கு) காவ்யா மாதவனுடைய கணவரை கொலை செய்ததால் மரண தண்டனை விதிக்கப் படுகிறார். இஸ்லாமிய சட்டப்படி பாதிக்கப் பட்டவரின் மனைவி இழ்ப்பீடு பெற்றுக் கொண்டோலோ, மன்னித்தாலோ தான் தப்பலாம். இதற்காக காவ்யா மாதவனுடைய குடும்பத்திடம் வருகிறார் மீரா ஜாஸ்மின். அப்பா! என்ன ஒரு அற்புதமான நடிப்பு. இயக்கமும் அபாரம்.
தமிழில் மீரா ஜாஸ்மினை வீணாக்கி விட்டார்கள் என்று நினைக்கிறேன்.
தொடுப்பு கேட்காதீர்கள். இது நானே எழுதியது. நம்புங்கள்.
Posted by
வித்யா கலைவாணி
at
10
comments
கலில் ஜிப்ரான்
கலில் ஜிப்ரான் கவிதை தொகுப்பை யாராவது தமிழ்படுத்தி ப்ளாக்கில் வெளியிடலாமே!
http://leb.net/gibran/
அருமை!
Posted by
வித்யா கலைவாணி
at
0
comments
உறவுறுந் தரணம்...
உறவுறுந் தரணம்...
நீண்ட தூரத்துள் உறங்கும் தேவதைகள்
சாளரத்தின் ஓரத்தில் உதிரும் சூரியக் கதிர்கள்
காலத்துள் அமிழ்ந்த என் உணர்வுக் குருவிக்கு
சமாதி கட்டிப் பார்க்கும் தோழி ஒருத்தி
மரத்தில் உதிரக் காத்திருக்கும் ஆப்பிள்
மௌனித்திருக்கும் என் வதைகளிலொன்று
பறித்தெடுத்த ஆப்பிளில் இறங்கும்
தேவதைக் கனவு கூசும் பற்களில்
குதறும் விற்றமீன்களுக்கு பொழுதொரு வதையாய்
அனைத்து நித்தியங்களும் அமிழ்ந்தழிய
அறத்தின் ஓரத்தில் காமக் கலப்பை தாக்கக்
கண்ணீர் வதையுள் கடுப்படக்கும்
காலத்துள் உதிரும் எதிர்ப் பால் வினையும்
ஒரு வழிப் பாதை இருவருக்கும்
காலத்துள் அறபடக் காத்திருக்கும் ஜீவன்
கைப் பிடி மண்ணுள் இவ்வளவு கண்ணீர் பொழிவா?
இதயம் அதிரும் உயிரது கூத்துள்
குறுகும் பொழுதுகளில் உடைபடும் நாணம்
குவியும் கருப்புக்கு ஒதுங்கும் உறவு
மெய்தர மறுக்கும் கருமை மனது
ஈரஅலை இதயத்திலிருக்க உறங்கும் தாம்பாத்யம்
தொப்புள் கொடியுறவொன்றிணைக்கும் குடும்பம்
குட்டையைக் குழப்பும் கோதாரி மனது
கும்மாளமிடும் காழ்ப்புணர்வு
வதைக்கும் நினைவுகள்
வடுவாய் விரியும் நாவினாற் சுட்ட புண்
எனினும்,
நீண்ட தூரத்துள் உறங்கும் தேவதைகள்
சாளரத்தின் ஒரத்தில் உதிரும் சூரியக் கதிர்கள்
மௌனிக்க முனையும் பாலுறுப்பு
ஓலமிடும் ஒலியின் அதிர்வில்
சுவரில் உரசும் இதழ்கள்
இதயத்தின் அடியில் உலர்ந்த சாம்பல்
நாவிற்கடியுள் நலியும் காதல்
வீசியடிக்கும் குளிர்ந்த காற்றுள்
இதழாள் சுவையும்
நெருங்கி வரும் இரவில்
உடலின் மிடுக்கும் உருவந்தர மறுக்கும்
வலியை மென்று மனது ஒடுங்கும்
துயரத்தின் கொடுவாள்
அறுத்தெறியும் காலத்தின் மரிப்பில்
தொலைவதென்னவோ நீயும் நானுமே
தவித்தென்ன தண்ணியடித்தென்ன
தாழ்வது நமது நலமே!
நேரத்தோடு அறியப்படாத
எனது நிறமாற்றம்
தொலைவதில் வியப்பு என்ன?
நன்றி : http://jananayagam.blogspot.com/2007/09/blog-post_22.html
Posted by
வித்யா கலைவாணி
at
0
comments
காதலின் தவிப்பு
காதலின் தவிப்பு
கும்மிருட்டுப் பாதையில்
தைரியமாய்
எடுத்து வைக்கும்
பாதப் பதிவுகள் போன்றவை
என்
காதல் விண்ணப்பங்கள்.
பாம்புகள்
பதுங்கியிருக்கலாம்.
படுகுழிகள்
பசித்திருக்கலாம்
விலங்குகள்
விழித்திருக்கலாம்
அல்லது
பாதையே இல்லாமல் இருக்கலாம்.
எனினும்
கனவுகளின் வெளிச்சத்தை
மனம்
தூக்கிச் சுமக்கும்
காதல் லாந்தரில்.
நள்ளிரவில்
வைத்தியரைத் தேடி ஓடும்
பிள்ளைத் தாச்சியின் கணவன் போல
தைரியமாய்
ஓடிக்கொண்டிருக்கின்றன
காதலின் விண்ணப்பங்கள்.
பின்னணியில்
ஓர்
தாய்மைத் தாயின் தவிப்பொலியைச்
சுமந்து.
நன்றி : http://xavi.wordpress.com/2007/09/22/love-5/
Posted by
வித்யா கலைவாணி
at
2
comments
ஒரு மாட்டின் அழுகை
என் நள்ளிரவு கனவு பற்றி இன்னும் சொல்ல வேண்டும். அது மழை பெய்த இரவு. இழுத்துப் போர்த்திய போர்வையோடு அம்மா எப்போதோ தூங்கியிருந்தாள். வீட்டின் ஓட்டிலிருந்து ஒழுகும் சொட்டுக்களுக்காக ஒரு சருவ சட்டியை அதன் கீழ் வைத்தேன். அதில் பட்டுத்தெறிக்கும் மழைத்துளியை கண்களை இழுக்கும் தூக்கத்துடன் ரசித்தேன். இத்தனை நாள் இந்த ரசனை எங்க போனது என்று தெரியவில்லை. எப்போதும் வருவது ரசனையாகவும் இருக்க முடியாது. எனனுலகம் நான்கு மாடுகள், எட்டு செம்மறியாடுகள், சுப்பையா தோப்பு, மஞ்சப்புளிச்சேரி குளம் இவற்றிற்குள்ளேயே முங்கி கொண்டிருந்தது. எனக்கும் ரசனைக்குமான விஷயங்கள் தூரமானது. ரசிப்பதையே, 'ஓ இதுதான் ரசனையா' என்று பின்னர் உணர்ந்திருக்கிறேன்.
அப்போதுதான் தொழுவத்தில் அந்த சத்தம் கேட்டது. மாட்டின் அழுகை. அதுவரை மாடுகள் அழுமென்பது தெரியாது. இன்னும் கூட அப்படி நான் கேள்விப்பட்டதில்லை. ஆனால் அன்று நான் காதால் கேட்ட அழுகை. எழுந்து பார்த்த்தபோது விரிந்திருக்கும் கப்பைக் கொம்பு பசுவிடமிருந்து அந்த சத்தம் வந்தது. கணவன், குழந்தையை இழந்து தவிக்கும் ஒரு தாயின் அவலமாக அந்தச சத்தம் கேட்டது. ம்மா என்ற சத்ததின் சோக ஒலி. அதை என் அம்மாவி்ன அழுகையாக நினைத்தேன். அம்மாக்களி்ன் அழுகை சக்தி வாய்ந்தது. அந்தக் கண்ணீ்ரின் அடர்த்தியி்ல் ஒரு கடல் வற்றும். ஒரு கடல் பொங்கும்.
அதன் கண்களிலிருந்து நீர்க்கோடுகள் விரிந்திருந்தது. மழையின் பொருட்டு கொசுவும், குளிரும் சேர்ந்து தாக்கின. என் ஒல்லி உடம்புக்கு இவை இரண்டும் எமன்கள். இருந்து்ம் அந்தப் பசு்வை நான் அருகிலிருந்து பார்த்தேன். சோகத்தின் வலிகள் ஜீரணிக்க முடியாதவை. மாடுகளுக்கும் அப்படித்தான். அருகில் படுத்திருக்கும் மாடுகள் எதையோ இழந்தது போல எழுந்து நின்று, கண்ணீர் பசுவைப் பார்த்துக்கொண்டிருந்தன. மாடுகளின் பாஷை எனக்குப் புரியவில்லை. ஆனால், உணர முடிந்தது. தொடர்ந்து பத்து நிமிடங்கள் அந்த சோக ஒலி ஒலித்துக்கொண்டே இருந்தது.
தாங்க முடியாத குளிரின் பொருட்டும் நான் முக்காடாகப் போட்டு மூடியிருந்த சாரம் நனைந்ததன் பொருட்டும் அந்த சோகத்தை முழுவதுமாகச் சுமந்து வீட்டுக்குள் சென்றேன். எனனுறக்கம் என்னை இழுத்துச் சென்றது. அதனதன் இழுப்புக்கு ஆட்படுவதே மனித பண்பு?
அது நிலவொளி. பரந்து விரிந்த பனங்காடு. கள் கொடுக்கும் பனை மரங்களினடியில் சாராய விற்பனை நடந்து கொண்டிருந்தது. விற்கப்படும் போதைகளுக்கு ஏற்ப பணம். கொஞ்சம் வசதி படைத்தவர்களுக்கு கடனும் உண்டு. இளஞ்சூட்டு சாராயத்துக்கான ஆட்களும், பணமும் வெவ்வேறு. குடிப்பவர்களுக்கான எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஒன்றிரண்டாக இருந்த ஆட்களி்ன் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தலைப்பாகைகளுடன் தலைகள் பெருகுகின்றன. அந்தக் கூட்டத்திலிருந்த ஒருவன் ஆச்சர்யமாகக் கத்துகிறான். அவன் கத்தல் கேட்டு கூட்டம் திரும்புகிறது. ஒரு மாடு்ம் ஆடு்ம் ஏதோ பேசியபடி பணத்தைக்கொடுத்து சாராயம் கேட்கிறது. மாடு பேசுவதைக் கேட்டு அங்கு ஆச்சரியம் கலந்த பயம். போதையேறிய சிலர் கல்லெடுக்கிறார்கள். ஒருவன் பனை மட்டையை ஓங்குகிறான். 'ஏலேய்...' குரல் கேட்டு பனங்காடு அதிர்கிறது. அது மாட்டின் குரல். 'நீ கொத்தனார் மவந்தானலே. கல்லெறிஞ்சனா ஒழுங்கா வீடு போ்ய் சேரமாட்டே. உங்கப்பனுக்கு நீ கொள்ளி வைக்கணுமா? உனககு ஒங்கப்பன் கொள்ளி வைக்கணுமா? ம்ம்ம்..." மாட்டின் அதட்டல் எதிரொலித்து வருகிறது. மட்டையை எடுத்தவன் மலைத்துப் போய் நிற்கிறான். கல்லெடுத்தவன் பயத்தில் பின்னோக்கி நகர்கிறான். இந்த அதிசயத்தை சாரயக்காரன் கலக்கத்தோடு கவனிக்கிறான். மாட்டின் மடியில் பெரிய பை இருக்கிறது. அதிலிருந்து ஒவ்வொரு ரூபாய் நோட்டுகளாக எடுத்து அவனிடம் கொடுக்கிறது. ஞாபகமாக அருகிலிருக்கும் ஆடு, பாக்கிச் சில்லறை கேட்கிறது. கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டம் சிதற, மாடும் ஆடும் அங்கேயே அமர்கின்றன. ஆடு ஊறுகாய் கேட்கிறது. மாடு தனது பையிலிருந்து எடுத்துக் கொடுக்கிறது. உரையாடல் தொடர்கிறது.
'வர வர சரக்கு ரொம்ப கசக்குது'
'நீ நேத்தே சொல்லியிருந்தேனா, காய்ச்சிர இடத்துக்குப்போயி, இளஞ்சூட்டோட நல்ல சரக்கு அடிச்சிருக்கலாம்'
அவசர அவசரமாக குடிக்கும் ஆடு இறுமுகிறது.
'மெதுவா குடி. முந்தா நாள் பல்லிலிச்சான் வந்தான். அவசர அவசரமா குடிச்சுட்டு அங்கயே கக்கி தொலைச்சு கேவலப்படுத்திட்டான்'
'எனக்கு எவ்வளவு குடிச்சாலும் போதை ஏறாது'
இவை குடிககும் அழைகைப் பார்க்க கூட்டம் சுற்றி நின்றது.
மாட்டுக்குப் போதை ஏறுகிறது. எழுந்து நின்று தலையை அங்குமிங்கும் திருப்புகிறது. நேராக சாராயம் விற்பனி்ன் இடத்துக்கு போய் அவன் சாய்ந்திருக்கும் பனை மரத்தில் முட்டுகிறது. சரியும் மரம் வேகமாக அவன் மீது விழுகிறது. அவனுக்கு அடியேது்மில்லை. எழுந்து முதுகை துடைத்துவிட்டு 'ஏனிப்படி பண்றே' என்கிறான் மாட்டை நோக்கி. அது கேட்கிறது.
'நேத்து என் சேக்காளி கால்ல கல்லெறிஞ்சு உடைச்சது நீதானே'
'சேக்காளியா?' அவனுக்கு குலை நடுக்கம். பயத்தி்ல் உளறல்.
'நேத்து வயல்ல பயிறை மேய்ஞ்சுட்டான்னு கல்லால எறிஞ்சு அவன் காலை ஒடைச்சல்ல...இப்ப பாரு...உன்னை...'
அவன் ஓடுகிறான். உயிருக்குப் பயந்து ஓடுகிறான். ஆடு்ம் அவனைத் துரத்துகிறது.
டக்கென்று விழித்துப் பார்த்தால் விடிந்திருந்தது. மழை இல்லை. அம்மாவிடம் மாடு அழுததை சொன்னேன். அவள் ஆச்சர்யமாக கேட்டுவிட்டு சொன்னாள்;
'போ்ன வருஷம் இதே நாள்லதான் அதோட கன்னு பஸ்காரன் அடிச்சுச் செத்துப்போச்சு.
நன்றி : http://aadumaadu.blogspot.com/2007/08/blog-post.html
Posted by
வித்யா கலைவாணி
at
0
comments
மௌன பூகம்பம்-------------
(தாடியையும், சோகத்தையும் சரிவிகிதத்தில் வளர்த்துக் கொண்டு வாழ்பவன் அவன்.)
அவளின் ஞாபகங்களே அவனுக்கு சுவாசம்
பன்னிரண்டு பாலைவன வருஷங்களுக்குப் பிறகு
அவளை அவன் பார்க்க நேருகிறது.
எங்கெனில்..
ஒரு ரயில் நிலையத்தில்.
எப்போதெனில்..
ஒரு நள்ளிரவில்.
எதிரெதிர் திசையில் செல்லும் ரயில்கள் இளைப்பாறிக்
கொள்ளும் அந்த இடைவெளியில்..
ரயில்களின் எதிரெதிர் பெட்டிகளில்
பழைய கண்கள் நான்கு பார்த்துக் கொள்கின்றன.
அப்பொழுது-
மனசில் எத்தனை மௌன பூகம்பம்!)
உன்னைப் பார்த்த
ஒரு நிமிஷத்தில்
இமைகளைக்
காணாமல் போட்டு விட்டன
கண்கள்.
நீதானா?
இல்லை-
வேறொருவன் கண்களால்
நான்
பார்ககிறேனா?
மனசின் பரப்பெங்கும்
பீச்சியடிக்கும் ஒரு
பிரவாகம்.
இதயத்தின்
ஆழத்தில் கிடந்த
உன்முகம்
மிதந்து மிதந்து
மேலே வருகிறது.
ஓ!
வருஷங்கள் எத்தனையோ
வழிந்த பிறகும்..
என்
மார்பு தடவும்
அதே பார்வை..
அதே நீ!
என் பழையவளே!
என்
கனவுகளில் அலையும்
ஒற்றை மேகமே!
உன் நினைவுகளில்
நான்
எத்தனையாவது பரணில்
இருக்கிறேன்?
அறிவாயா? என்
மீசைக்கும்
என்
காதலுக்கும்
ஒரே வயதென்று
அறிவாயா?
உன் பெயரை
மறக்கடிப்பதில்
தூக்க மாத்திரை கூடத்
தோற்றுப் போனதே!
ஓ!
நீ மாறியிருக்கிறாய்.
உன்
புருவ அடர்த்தி
கொஞ்சம்
குறைந்திருக்கிறது.
உன்
சிவப்பில் கொஞ்சம்
சிதைந்திருக்கிறது
உன்
இதழ்களில் மட்டும்
அதே
பழைய பழச்சிவப்பு.
இப்போதும்
நாம்
பேசப்போவதில்லையா?
வார்த்தைகள் இருந்தபோது
பிரிந்து போனவர்கள்
ஊமையான பிறகு
சந்திக்கிறோமா?
உன் நினைவுகள்
உன் கணவனைப் போலவே
உறங்கியிருக்கலாம்.
ஆனால்
என் நினைவுகள்
உன்னைப் போலவே
விழித்திருக்கின்றன.
ஓ!
இந்த
ரயில் வெளிச்சம்
நீ
அழுவதாய் எனக்கு
அடையாளம் சொல்கிறதே!
வேண்டாம்!
விழியில் ஒழுகும்
வெந்நீரால்
மடியில் உறங்கும்
உன்
கிளியின் உறக்கத்தைக்
கெடுத்து விடாதே!
இதோ
விசில் சத்தம் கேட்கிறது
நம்மில் ஒரு வண்டி
நகரப் போகிறது.
போய் வருகிறேன்!
அல்லது
போய்வா!
மீண்டும் சந்திப்போம்!
விதியை விடவும்
நான்
ரயிலை நம்புகிறேன்.
அப்போது
ஒரே ஒரு கேள்விதான்
உன்னை நான் கேட்பேன்!
"நீயும் என்னைக்
காதலித்தாயா?"
நன்றி : http://gkpstar.googlepages.com/vairamuthu.html
Posted by
வித்யா கலைவாணி
at
0
comments
விருப்பப் பட்டியல் - வைரமுத்து
விருப்பப் பட்டியல் - வைரமுத்து
சத்தங்கள் இல்லாத தனிமை கேட்பேன்
சரஞ்சரமாய் வந்துவிழும் வார்த்தை கேட்பேன்
ரத்தத்தில் எப்போதும் வேகம் கேட்பேன்
ரகசியங்கள் இல்லாத வாழ்க்கை கேட்பேன்
சுத்தத்தைக் கொண்டாடும் சூழல் கேட்பேன்
சுடர்விட்டுப் பொலிகின்ற ஞானம் கேட்பேன்
யுத்தங்கள் இல்லாத உலகம் கேட்பேன்
உலகெங்கும் சம்பங்கு மழையைக் கேட்பேன்
கண்ணிரண்டில் முதுமையிலும் பார்வை கேட்பேன்
கடைசிவரை கேட்கின்ற செவிகள் கேட்பேன்
பின்னிரவில் விழிக்காத தூக்கம் கேட்பேன்
பிழையெல்லாம் மன்னிக்கும் பெருமை கேட்பேன்
வெண்ணிலவில் நனைகின்ற சாலை கேட்பேன்
விண்மீனை மறைக்காத வானம் கேட்பேன்
மென்காற்று வீசிவரும் இல்லம் கேட்பேன்
மின்சாரம் போகாத இரவு கேட்பேன்
தன்னலங்கள் தீர்ந்துவிடும் இதயம் கேட்பேன்
தங்கத்தைச் செங்கல்லாய் காணக் கேட்பேன்
விண்வெளியில் உள்ளதெல்லாம் அறியக் கேட்பேன்
விஞ்ஞானம் பொதுவுடைமை ஆகக் கேட்பேன்
மண்ணுலகம் கண்ணீரை ஒழிக்கக் கேட்பேன்
மனிதஇனம் செவ்வாயில் வசிக்கக் கேட்பேன்
பொன்னுலகம் பூமியிலே தோன்றக் கேட்பேன்
போர்க்களத்தில் பூஞ்செடிகள் பூக்கக் கேட்பேன்
கோடையிலும் வற்றாத குளங்கள் கேட்பேன்
குளத்தோடு கமலப்பூக் கூட்டம் கேட்பேன்
மேடையிலே தோற்காத வீரம் கேட்பேன்
மேதைகளை சந்திக்கும் மேன்மை கேட்பேன்
வாடையிலும் நடுங்காத தேகம் கேட்பேன்
வாவென்றால் ஓடிவரும் கவிதை கேட்பேன்
பாடையிலே போகையில்என் பாடல் கேட்டால்
பட்டென்று விழிக்கின்ற ஆற்றல் கேட்பேன்
அதிராத குரல்கொண்ட நண்பர் கேட்பேன்
அளவோடு பேசுகின்ற பெண்கள் கேட்பேன்
உதிராத மலர்கொண்ட சோலை கேட்பேன்
உயிர்சென்று தடவுகின்ற தென்றல் கேட்பேன்
முதிராத சிறுமிகளின் முத்தம் கேட்பேன்
மோகனத்து வீணைகளின் சத்தம் கேட்பேன்
பதினாறு வயதுள்ள உள்ளம் கேட்பேன்
பறவையோடு பேசுமொரு பாஷை கேட்பேன்
முப்பதுநாள் காய்கின்ற நிலவைக் கேட்பேன்
முற்றத்தில் வந்தாடும் முகிலைக் கேட்பேன்
எப்போதும் காதலிக்கும் இதயம் கேட்பேன்
இருக்கும்வரை வழங்கவரும் செல்வம் கேட்பேன்
தப்பேதும் நேராத தமிழைக் கேட்பேன்
தமிழுக்கே ஆடுகின்ற தலைகள் கேட்பேன்
இப்போது போலிருக்கும் இளமை கேட்பேன்
இருந்தாலும் அறிவுக்கு நரைகள் கேட்பேன்
வானளந்த தமிழ்த்தாயின் பாலைக் கேட்பேன்
வைகைநதி புலவர்களின் மூளை கேட்பேன்
தேனளந்த தமிழ்ச்சங்க ஓலை கேட்பேன்
தென்னாழி தின்றதமிழ்த் தாளைக் கேட்பேன்
மானமகன் குட்டுவனின் வில்லைக் கேட்பேன்
மாமன்னன் பாண்டியனின் வேலைக் கேட்பேன்
ஞானமகன் வள்ளுவனின் கோலைக் கேட்பேன்
ராஜராஜன் வைத்திருந்த வாளைக் கேட்பேன்
நன்றி : http://gkpstar.googlepages.com/vairamithu2.html
Posted by
வித்யா கலைவாணி
at
4
comments
இராமனுக்கு பலியாகவா?
கருப்பசாமியும், கருகிய இன்னொரு தமிழனும், இந்துத்துவ வெறிக்கு பலி!கன்னட வெறி இன்னும் அடங்கவில்லை! கருத்துக்கு கருத்து பதிலாகுமே ஒழிய, வன்முறை பதிலாகுமா? அரசியல் தலைகளும், தத்து பித்து என உளறல்.
நிகழ்ந்த வன்முறைக்கு பதில் என்ன, தேசியம் கூறவில்லை! மாநிலமும் உருக்குலைந்த தமிழன் வாழ்க்கையை எண்ணவில்லை! வெறிகொண்டு ஓசூர் சாலையில் ஆயுதங்களுடன் விரட்டி, வழிமறித்து தமிழ் நாட்டு போக்குவரத்துக் கழகத்தின் பேருந்தை தடிகளால் அடித்து நொறுக்கி, கொளுத்தி, தமிழன் உயிரை எடுத்துள்ளது. இராமனுக்கு பலியாகவா?
படித்தவர்களும் பதில் இல்லை! வீடு தாக்கியது மட்டும்தான் வீதிக்கு வந்துள்ளது. நீதியின் கண்களுக்கு இறந்த தமிழர்களின் துயரம் தெரியவில்லை! சமதர்மம் பேசும் நாடு! மதச்சார்பின்மை பேசும் நாடு!
http://muthukannu.blogspot.com/2007/09/blog-post_21.html
Posted by
வித்யா கலைவாணி
at
0
comments
வாழ்வாங்கு வாழ்வது என்றால் என்ன?
வழக்கம்போல் ஞானியார் முன் பலர் அமர்ந்திருந்தனர்.ஞானி,தியானம் கலைந்து அனைவரையும் பார்த்தார்.அந்தக் கூட்டத்திலேயே நன்கு படித்திருந்த ஒருவன் கேட்டான்"சாமி,வாழ்வாங்கு வாழ்வது என்றால் என்ன?அதன் நியதிகள் என்ன?சிறிது விளக்கமாகச் சொல்லுங்கள்"
முக்கியமான கேள்வி.ஞானி யோசித்தார்.அனவருக்கும் புரியும் படியாகச் சொல்ல வேண்டும்."சரியான முறையில் வாழ்வதற்கு சில இலக்கணங்கள் இருக்கின்றன.சிலவற்றைக் கொள்ள வேண்டும்;சிலவற்றைத் தள்ள வேண்டும்.கவனமாகக் கேளுங்கள்."
"கொல்லாமை வேண்டும்.கொல்லாமை என்பது ஒரு உயிரைப் போக்காமல் இருப்பது மட்டும் அல்ல.எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாதிருத்தல்.நம் மனத்தால். சொல்லால், செயலால் பிற உயிர்களை வருத்தாதிருத்தல். நாமாகவே சில சமயம் தீங்கு செய்கிறோம்.பிறரைக் கொண்டு சில நேரம் தீங்கு செய்விக்கிறோம்.பிறர் தீங்கு செய்வதோடு ஒத்து சில நேரம் மகிழ்கிறோம்.இவை எல்லாமே விலக்கப்பட வேண்டும்."
"பொய் சொல்லாதிருக்க வேண்டும்.பொய்யா விளக்கே விளக்கு என்று
வள்ளுவர் சொல்கிறார்.நாம் சொல்கின்ற பொய் நமக்கு மகிழ்ச்சியைத்தரலாம்.ஆனால் அது பிறர்க்குத் தீங்கு செய்யும்."
"திருடக்கூடாது.தன்னுடையது அல்லாத,பிறருக்குச் சொந்தமான பொருள்களைக் கவர நினைப்பதே தவறு. இதற்கு அடிப்படை தகாத ஆசை.அதை நீக்குங்கள்."
"கள்ளுண்ணுதல்,தகாத காமம் இவை விலக்கப் பட வேண்டியவை.ஒருவன் மது அருந்தினால் மதி மயக்கம் ஏற்பட்டு எல்லாத் தவறுகளும் செய்கிறான்.தன் மனையாளைத் தவிர பிற பெண்களை மனத்தாலும் நினைக்ககூடாது.இதையே 'பேராண்மை' என்கிறார் வள்ளுவர்.
"தள்ள வேண்டியவை சொன்னேன்.கொள்ள வேண்டியவை என்ன?-அடக்கத்தோடு இருக்கவேண்டும்.'தான்' என்ற அகந்தையில்லாது இருக்கவேண்டும்.அடக்கம் அமரருள் உய்க்கும்.இதை உணருங்கள்."
"நியாயத்தின் பால் நிற்க வேண்டும்.பகைவர், நண்பர்,உறவினர் எவராயிருப்பினும் நடு நிலைமை தவறாது இருக்க வேண்டும்.சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல்,தராசு போல் இருக்க வேண்டும்.அதுவே சான்றோர்க்கு அழகு ."
"இருப்பதைப் பகிர்ந்துண்ண வேண்டும்.காக்கைகளைப் பாருங்கள்.ஒரு காகம் மற்ற காகங்களையும் அழைப்பதைப் பாருங்கள்.முன்பே ஒரு முறை சொல்லியிருக்கிறேன்"யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி"என்பதை.
"தூய்மையாக இருக்க வேண்டும்.இங்கே தூய்மை என்பது மனத்தூய்மை.உடல் தூய்மை,குளிப்பதால் பெறப்படும்.மனம் தூய்மையாக இருக்க நல்ல எண்ணங்கள் வேண்டும்.பொறாமை ,ஆசை, கோபம்,காமம் ஆகியவை இன்றித் தூய்மையாக இருக்கும் மனத்தில் தான் இறைவன் இருப்பான்."
"இவ்வாறு இருப்பவன் நல்லவன்.அவன் குண நலன்கள் எல்லோராலும் எண்ணிப்போற்றப்படும்."
ஞானி கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்தார்.
"கொல்லான்பொய் கூறான் களவிலான் எண்குணன்
நல்லான் அடக்கமுடையான் நடுச்செய்ய
வல்லான் பகுந்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லான் இயமத் திடையில் நின்றானே."--------(திருமூலர்)
நன்றி : http://shravanan.blogspot.com/2007/09/blog-post_22.html
Posted by
வித்யா கலைவாணி
at
0
comments
இனியும் புகைக்க வேண்டாம் சகோதரி!
இனியும் புகைக்க வேண்டாம் சகோதரி!
புதிய ஆய்வு ஒன்றின் முடிவுகள். அதாவது சிகரெட் நிறுவனங்கள் பெண்களைப் புகைக்கு அடிமைப் படுத்தும் நோக்கில் சிகரெட்டுகளைத் தயாரிக்கின்றனவாம். பெண்கள் விரும்புகின்ற வடிவுடனும், சுவையுடனும், ஆரோக்கியத்திற்கு உகந்தது என்ற தோற்றத்துடனும் இவை தயாரிக்கப் படுகின்றனவாம். இது உலக நலத்தில், முக்கியமாக வளரும் நாட்டுப் பெண்களிடையே பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். இது பற்றிக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.
இதற்கு முந்தைய ஆய்வுகளின்படி சிகரெட்டுக் கம்பெனிகளின் விற்பனை உத்திகள் பெண் விடுதலை, அழகு/கவர்ச்சி, வெற்றியடைதல், மெலிந்திருத்தல் போன்றவற்றைச் சுற்றிப் பின்னப் பட்டிருந்தன. ஆனால், சிகரெட்டின் வடிவமைப்பு ஏன் எப்படி பெண்களைப் புகைப்போராய் ஆக்குகிறது என்பது பற்றி இன்று வரை அறியப் படவில்லை.
1998 Tobacco Master Settlement Agreementன் பின்னர், பொதுமக்களுக்கு வெளியிடப்பட்ட சிகரெட் கம்பெனிகளின் ஆவணத்தை ஆராய்ந்த கேரி முர்ரே கார்ப்பெண்டர் (Carrie Murray Carpenter) என்ற ஹார்வர்டு பொதுநலக் கல்லூரியின் ஆராய்ச்சியாளர் "இது வெறுமனே விற்பனை, விளம்பரம் என்ற கூறுகளையெல்லாம் தாண்டியது", என்கிறார். கடந்த 20 வருடங்களாக இந்தக் கம்பெனிகள் கடும் முயற்சியெடுத்து, பெண்களிடையே புகைப்பதை அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றன. பெண்களையும், இளமங்கையரையும் புகைக்க ஊக்குவிக்கும் காரணிகள் என்னென்ன, அவர்கள் எவ்விதமாகப் புகைக்கிறார்கள், எந்தெந்த வகை சிகரெட்டுகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள் போன்றவற்றை இக்கம்பெனிகள் ஆராய்ந்திருக்கின்றன.
இவ்விதமான தந்திரங்களுடன் தயாரிக்கப் பட்டவை இலேசான சிகரெட்டுகள். இவை சுகாதாரமானவையென்றும், பாதுகாப்பானவையென்றும் பெண்கள் நம்ப வைக்கப்பட்டார்கள்; மேம்பட்ட வாசனை, புகைத்தலின் பின்னான உருசி, குறைந்த அளவு புகை இவற்றின் மூலம் இவ்வகை சிகரெட்டுகளை நல்லவை என்று கருத வைக்கப் பட்டார்கள்; இவ்வகை சிகரெட்டுகள் பெண்களுக்குப் பிடித்தமான வாசனையுடனும், இதமான மென்மையான சுவையுடனும் வந்தன; பெண்களின் உடற்கூறியலின்படி இச்சிகரெட்டுகளை எளிதாக உறிஞ்சும்படியும், உணர்வின்பத்தைத் தூண்டும்படியும், நிகோடின் மற்றும் தார் அளவினை மாற்றியும் வடிவமைத்தார்கள். இதற்கெல்லாம் மேலும் பசியைக் குறைக்கும் பொருட்களைக் கலந்து, புகைப்பதன் மூலம் எடையைக் குறைத்துக் கொள்ளலாம் என்ற கருத்தும் உருவாக்கப் பட்டது. இந்த வகை இலேசான, மெல்லிய, நீண்ட சிகரெட்டுகள் உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்காதவை, மன இறுக்கத்தைப் போக்குபவை, உடலை இளைக்க வைப்பவை போன்ற தோற்றங்கள் உருவாக்கப் பட்டன. இதன் விளைவாக, புகைப்பதற்கு எதிரான முழக்கங்கள் அதிகம் பலனளிக்காமல் போய்விடுகின்றன. புகைக்கும் பெரும்பாலான பெண்களுக்கு இத்தகைய சிகரெட்டுகளில் இருக்கும் நிகோடின், தார் போன்றவற்றின் அளவு தெரிவதில்லை, ஆனால் சிகரெட்டின் தோற்றத்திலிருந்து கேடு குறைவுதான் என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள்.
1970களிலிருந்து இந்த சிகரெட்டுக் கம்பெனிகள் மனோரீதியாகவும், நடத்தை முறைகளாலும் பெண்களின் புகைக்கும் பழக்கங்களை ஆராய்ந்து வந்திருக்கின்றன. ஒரு கம்பெனி சிகரெட்டிலிருந்து இன்னொரு கம்பெனிக்கு மாறுவோர்களைக் குறிவைத்து கம்பெனிகள் தங்கள் வடிவமைப்பை மாற்றியவண்ணம் இருந்தன, முக்கியமாக 1970க்கும் 90க்குமிடையே. இன்றளவும் சிகரெட்டுக் கம்பெனிகள் பெண்களையே குறிவைக்கின்றன, ஆனால் இவர்களது உத்திகள் பலதரப்பட்டவையாகவும், எளிதில் அடையாளம் காணப்பட இயலாதனவாகவும் இருக்கின்றன.
சிகரெட் கம்பெனிகளின் இந்த நடத்தை வளரும் நாடுகளிலிருக்கும் நலத் துறையாளர்களுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்துகின்றன. ஏனென்றால் வளரும் நாடுகளில் ஆண்களின் புகைப் பழக்கம் குறைந்து வரும் அதே நேரத்தில், பெண்கள் புகைப்பது குபுகுபுவென்று ஏறிக்கொண்டே செல்கிறது. அதாவது 2025ம் வருடத்துக்குள் இன்னும் 20% பெண்கள் அதிகமாகப் புகைப்பார்களாம். இன்றைய நிலையில் புகைப்பதால் பெண்களுக்கு வரும் சுகாதாரக் கேடுகளுக்கு இந்தக் கம்பெனிகளின் தந்திரமே காரணமென்றும் இதனால் இன்னும் கேடுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதென்றும் இந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.
புகைக் கட்டுப்பாட்டுக்கு இன்னொரு ஆராய்ச்சியாளர் இந்த அழைப்பை விடுக்கிறார்: "பெண்களைப் புகைக்கு அடிமையாக்கும் வகையில் இந்தக் கம்பெனிகள் சிகரெட்டுகளை வடிவமைக்கின்றன என்று தெரிந்து விட்டது. இனி நாம் இந்த முயற்சிகளைத் தடுக்கவும், புகைப் பழக்கத்தை ஒழிக்கவும் ஆக வேண்டியதைப் பார்க்க வேண்டும். இப்புகைக்கு, வளர்ந்த நாடுகளில் ஏற்கெனவே நம் பெண்டிர் பலரைப் பலி கொடுத்தாயிற்று. இனியேனும் இந்தப் புதிய ஆராய்ச்சியின் முடிவுகளைப் பயன்படுத்தி, வளரும் நாட்டுப் பெண்கள் மடிவதைத் தடுக்க முற்படுவதே நம் தலையாய பணி."
தகவல்: Scienceblog
நன்றி : http://sundaravadivel.blogspot.com/2005/06/blog-post_02.html
Posted by
வித்யா கலைவாணி
at
0
comments
ஏ! நினைவிழந்த தமிழகமே!
உழவு நிழங்கள் எல்லாம்
ஊர்களாகி போனதனால்
உழைப்பவர் யாருமில்லை
உண்பதற்கு சோறுமில்லை
விளை நிலங்கள் பாலாகி
விதைகளெல்லாம் நஞ்சாகி
விவசாயம் செத்ததாலே
விலைவாசி ஏறுதம்மா
வாழ்வுக்கு வழியில்லை
வயிற்றுக்கு உணவில்லை
வருவாயும் போதவில்லை – அது
வரும் வழியும் தெரியவில்லை
கரு முகில் காதலிக்கும்
கனகத்து தருக்களெல்லாம்
கருவினிலே வெட்டுண்டு போனதால்
காரு மழை பெய்யவில்லை
நீரூறும் ஏரி, குளம், ஆறு எல்லாம்
தூர் பட்டுப் போனதாலே
ஏர் உழவு நடக்கவில்லை
எவ்வழியும் கிடைக்கவில்லை
ஏசமான சாதியெல்லாம்
எள்ளி நகைக்குதம்மா
ஏழை சனமிங்கு ஏதுமின்றி
ஏதிலியாய் தவிக்குதம்மா
வாரம் ஒரு புது கட்சி
வீர முழக்கமிட்டு
வரிசையாய் பிறக்குதம்மா
விடுதலை தருவதற்கு
வளரச்சி ஏதுமில்லை
வறுமை தான் ஒழியவில்லை
வன்முறை ஓயவில்லை
வழக்குகள் தீரவில்லை
வீண் சண்டை தான் முளைக்கிறது
விளக்கங்கள் தேனாய் இனிக்கிறது
விடையேதும் கிடைக்கவில்லை
விடியல் தான பிறக்கவில்லை
இருந்த, இல்லாத ராமனுக்கு
இருக்கிறது இரு குழுக்கள்
இவை மறந்தும் மக்களை
நினைப்பதில்லை
பொய்யும் புரட்டும்
பொதுவாழ்வாய் போனதால்
களவும் கையூட்டும்
கைகோர்த்து திரியுதம்மா
மண்ணும் மணலும்
பொன் முட்டை போடுவதால்
பகல் கொள்ளை பங்குக்கு
புதிது புதிதாய் பூக்குதம்மா
புரிந்துணரவு ஒப்பந்தங்கள்
கல்விதனை காசுக்கு
விலை கூவி விற்றுவிட்டு
காண்பதற்கு இலவசமாய்
வண்ணத் தொலைக் காட்சி
தரம் கெட்ட நிகழ்சிகளால்
தமிழ் கொலை செய்திடவே
கணக்கின்றி தோன்றுதம்மா
தினம் ஒரு சின்னத் திரை
ஐயகோ!
அழுகிப்போன அரசியலை
நெறிப்படுத்துவது எந்நாளோ- ஏ
நினைவிழந்த தமிழகமே
நீ என்று நீடு துயில்
நீங்கி எழுவாயோ?
நன்றி : http://noyyal.blogspot.com/2007/09/blog-post_22.html
Posted by
வித்யா கலைவாணி
at
0
comments
குறுந்தொகை ஆராய்ச்சி
காயத்ரி அக்கா அற்புதமான பாடல்கள் கொண்ட குறுந்தொகை ஆராய்ச்சியில் இறங்கியதற்கு நன்றியும், வாழ்த்துக்களும். பல ஆசிரியர்களால் எழுதப்பட்ட குறுந்தொகையில் பல சுவைகளும் கிடைக்கும். நல்ல தொகுப்பு தொடர வாழ்த்துவோம்
குறுந்தொகையை பதிவிறக்கி படியுங்கள்
http://www.tamil.net/projectmadurai/pub/pm0110/kurunto.pdf
Posted by
வித்யா கலைவாணி
at
0
comments
கைதி!
பூட்டு இல்லாத வீட்டில்
ஓர் ஆயுட் கைதியாக
இன்றும் உனக்காக
காத்திருக்கின்றேன் நான்!
என்றாவது…
ஒரு தடவையாவது…
இந்தக் கைதியை
பார்க்க வேண்டும்
என்ற எண்ணம்
உன் மனதில் வருமா…?
நன்றி : http://sathiya.wordpress.com/
Posted by
வித்யா கலைவாணி
at
0
comments
கனவுகள்
கனவுகள் புகுந்து
இதயம் திருடியபோது
நான் விழித்திருக்கவில்லை,
இன்று வெறுமைகள்
விழுங்கித்தவிக்கும்
என் நினைவுகளில்,
உன் நேசம் சொல்கிறது
காதலும் கற்று மற…
கற்றல் உயிர்த்தெழுதல்,
மறத்தல் உயிர் மறித்தல்…..
என்ன செய்யச் சொல்கிறாய்,
எதுவாயினும் இனிமையே,
நீ அருகினில் இருக்கும்வரை…
நன்றி : http://janasara.wordpress.com/2007/09/21/kathalumkatrumara/
Posted by
வித்யா கலைவாணி
at
0
comments
தாய்லாந்து - என்ன அநியாயம்டா இது?
சமீபத்தில் சிவபாலனுடைய ப்ளாகில் பார்த்த வீடியோ
இது தான் விளிம்பு நிலை மனிதர்களோ
கட்டாயம் பார்க்கவேண்டியது
http://www.megavideo.com/?v=I0FUIBP6
நன்றி ; http://sivabalanblog.blogspot.com/
Posted by
வித்யா கலைவாணி
at
0
comments
டிவி பார்க்க வந்த சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர்
டிவி பார்க்க வந்த சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர்
வியாழக்கிழமை, செப்டம்பர் 20, 2007
சென்னை:
வீட்டிற்கு டிவி பார்க்க வந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காமக் கொடூரனை போலீசார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்துள்ள பெருங்குடியைச் சேர்ந்தவர் வாணி (13)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது வீட்டிற்கு அருகில் வசித்து வருபவர் முருகேசன் (30). முருகேசன் வீட்டிற்கு வாணி அடிக்கடி டிவி பார்க்க செல்வாராம்.
டிவி பார்க்க வந்த வாணியின் மீது முருகேசனின் வக்கிர பார்வை விழுந்துள்ளது. இந்நிலையில் கடந்த 9ம் தேதி முருகேசன் வீட்டிற்கு டிவி பார்க்க சென்ற வாணியை பலாத்காரம் செய்துள்ளார் முருகேசன். இதைப்பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது என்று மிரட்டியும் உள்ளார்.
இதனால் பயந்து போன வாணிக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் போனது. பெற்றோர் வாணியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர், அவர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த வாணியின் பெற்றோர் வாணியிடம் விசாரித்தபோது அழுது கொண்டே நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.
இதையடுத்து வாணியின் பெற்றோர் முருகேசன் மீது போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் முருகேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நன்றிங்க
அட சண்டாளப் பாவி!
http://muslimpage.blogspot.com/2007/09/blog-post_92.html
Posted by
வித்யா கலைவாணி
at
0
comments
விதிப்படிதான் நடக்குமா?
எது புண்ணியம்? எது பாவம்?
முற்பிறப்புக்களில் செய்யப்பட்ட இருவினைப்
பயன்கள் செய்தவனையே சென்றடைவதுதான்
விதி. ஆகவே இப்பிறவியில் ஏற்படும் நன்மை,
தீமைகள் எல்லாம் விதிப்படிதான் நடக்கும் -
நாம் வாங்கி வந்த வரத்தின்படிதான் நடக்கும்
என்று முன் அத்தியாயத்தில் எழுதியிருந்தேன்.
அதென்ன இருவினைப் பயன்கள்?
பட்டினத்தடிகள் அதைப் பற்றி நான்கே
வரிகளில் நெற்றியடியாக எழுதி வைத்து
விட்டுப் போயிருக்கிறார்
பாடலைப் படியுங்கள்:
"அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே விழிஅம்பொழுக
மெத்திய மாந்தரும் வீதிமட்டே விம்மிவிம்மியிரு
கைத்தலை மேல்வைத் தழுமைந்தருஞ் சுடுகாடுமட்டே
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே"
இதே பாடலை கவியரசர் கண்ணதாசன்
அவர்கள் எளிமைப் படுத்தி ஒரு திரைப்படப்
பாடலின் ஆரம்ப வரிகளுக்குப் பயன் படுத்தினார்
அது மிகவும் பிரபலமான பாடல். தமிழகம்
எங்கும் ஒலித்த, ஒலித்துக் கொண்டிருக்கின்ற -
உங்களுக்குத் தெரிந்த பாடல்.
பாடல் வரிகளைப் பாருங்கள்:
"வீடு வரை உறவு
வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை
கடைசிவரை யாரோ?"
இந்தப் பாடலை ஒலிப் பதிவுக்கூடத்தில்
பாடுவதற்காக இருந்த பாடகர்
திரு.T.M.செளந்தரராஜன் அவர்கள்
கவிஞரைப் பார்த்துக் கேட்டார்.
"அப்பச்சி, இந்தப் பாடலின் துவக்க வரிகளை
நான் எங்கேயோ கேட்டிருக்கிறேன்.எந்தப்
பாடலின் உந்துதலில் இதை எழுதினீர்கள்?"
கவியரசர் பதில் சொன்னார்.
"அது பட்டினத்தார் பாடல் அய்யா"
"எங்கே முழுப் பாடலையும் சொல்லுங்கள்"
கவியரசர் சொன்னார்
"பட்டினத்தார் பாடலின் கடைசி வரியை
ஏன் விட்டுவிட்டீர்கள்?"
"எதை - பாவ, புண்ணியத்தையா? அதைச்
சொன்னால் நமது மக்களுக்குப் புரியாதையா!
அதனால்தான் யாரோ என்று எழுதினேன்.
புரிகிறவன் புரிந்து கொள்ளட்டும்
புரியாதவனுக்குப் புரியாமலேயே போகட்டும்!"
என்னவொரு அசத்தலான பதில் பார்த்தீர்களா?
மக்களின் நாடி தெரிந்தவர் அவர்.
அதனால்தான் அவர் கவியரசரானார்.
மக்கள் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்
இதே பாடலை நான் பள்ளியில் படித்துக்
கொண்டிருந்த காலத்தில், நானும், சகமாணவர்களும்
சேர்ந்து இப்படித் திரித்துப் பாடுவோம்.
"வீடுவரை லைஃபு (Life)
வீதிவரை ஒய்ஃபு (Wife)
காடுவரை சன்னு (Son)
கடைசிவரை மண்ணு"
இது உப செய்தி - தொடரின் சுவாரசியத்திற்காக.
அதை விடுங்கள் - இருவினைப் பாவ, புண்ணி
யத்தைப் பார்ப்போம்.
பாவம் எது என்பதும், புண்ணியம் எது என்பதும்
உங்களுக்குத் தெரியாததா என்ன?
இருந்தாலும் கட்டுரைக்காக ஒரு சிறு உதாரணம்
மட்டும் சொல்லி நிறுத்திக் கொள்கிறேன்.
பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களை
அவர்களுடைய வயதான காலத்தில்
வீட்டில் வைத்து அவர்களுடைய மனம்
மகிழும்படியாக பிள்ளை பார்த்துக் கொண்டால்
அது புண்ணியக் கணக்கில் வரும் :
மனைவியின் பேச்சைக் கேட்டு அல்லது
தொல்லை என்ற சுய சிந்தனையுடன் அவர்களைக்
கொண்டுபோய் முதியோர் இல்லத்தில் விட்டால்
அது பாவக் கணக்கில் வரும்
அமெரிக்காவில் வேலைக்குப் போகும் தம்பதிகள்
அதிகம் - 90% அவர்கள் தங்கள் குழந்தைகளைப்
பேணி வளர்க்காமல் விடுதிகளில் (Hostel) விட்டு
விடுவார்கள். அதே குழந்தைகள் வளர்ந்து ஆளாகி
ஒரு நிலைக்கு வரும்போது தங்களுடைய பெற்றோர்
களை முதியோர் இல்லத்தில் விட்டு விடுவார்கள்.
கேட்டால், நமது கவுண்டமணி பாணியில்
"அமெரிக்காவில இதெல்லாம் சகஜமப்பா...!"
என்று சொல்லி விடுவார்கள்.
ஒரு ரூபாயோ அல்லது கோடி ரூபாயோ
இறைப் பணிக்குச் செலவழித்தால் அல்லது
ஏழை, எளியவர்களுக்குச் செலவழித்தால் அது
புண்ணியம். பொதுச் சொத்தையோ அல்லது
கோவில் சொத்தையோ கொள்ளையடித்தால்
அது பாவம்
இன்னும் சிறப்பாக விளக்க ஒரு கதை
சொல்கிறேன். சுவாரசியமான கதை. கொஞ்சம்
பொறுமையோடு படியுங்கள்.
ஒரு துறவியும், அவருடைய சீடனும், திருத்தலம்
ஒன்றிற்குப் பயணமாகச் சென்று கொண்டிருந்தார்கள்
இரு நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் அது.
வோல்வா பேருந்துகளும், சதாப்தி ரயிலும் இல்லாத
காலம். நடைப் பயணம்தான்
சுட்டெரிக்கும் வெய்யிலில் நடந்த களைப்பு. உடன்
கடுமையான பசி. பெரியவர் பொறுத்துக்கொண்டார்
சீடனால் முடியவில்லை
"சாமி, அதோ ஒரு கிராமம் தெரிகிறது. சிரமபரிகாரம்
செய்து விட்டுப் போகலாமே" என்றான்
துறவியாரும் சரி என்று செயலில் இறங்கினார்.
வரப்பின் மேல் நடந்து, கிராமத்தை அடைந்தனர்.
கிராமத்தின் நுழை வாயிலிலேயே ஒரு பெரிய
பண்ணை வீடு இருந்து. பின்புறம் நூற்றுக்கணக்கான
ஏக்கர் நிலபுலன்களுடன் கூடிய மிகப் பெரிய வீடு.
துறவி கதவைத் தட்டினார். திறக்கப் படவில்லை
மீண்டும், மீண்டும் நான்கைந்து முறை தட்டினார்.
கால்மணி நேரம் கடந்திருக்கலாம். கதவைத் திறந்து
கொண்டு பீமசேனன் தோற்றத்துடன் ஒரு மனிதன்
வெளிப்பட்டான்.
அவன்தான் அந்தப் பெரும் பண்ணைக்கும், பண்ணை
வீட்டிற்கும் சொந்தக்காரன். பாதித்தூக்கம் அவன்
கண்களில் மிச்சம் இருந்தது
எரிச்சலோடு கேட்டான்," என்ன வேண்டும்?"
துறவி, பொறுமையாகத் தாங்கள் யார் என்பதையும்,
எங்கு பயணிக்கின்றோம் என்பதையும் கூறிவிட்டு
உண்வு வழங்கும்படி வேண்டினார்.
அடிப்படைப் பண்பின்றி அவன் கோபமாக," இதற்குத்
தான் தட்டினீர்களா - சனியன் பிடித்தவர்களே - என்
தூக்கத்தைக வேறு கெடுத்துவிட்டீர்களே - போய்
வேறு இடத்தில் கேளுங்கள்" என்று சொல்லி விட்டுத்
திரும்பவும் தன் வீட்டிற்குள் சென்று படார் என்று
கதவை அறைந்து சாத்தி விட்டான்.
அவன் நடத்தையைப் பார்த்துச் சீடனுக்கு அசாத்திய
கோபம் வந்தது. ஆனால் குருபக்தியினால் கோபத்தைக்
கட்டுப்படுத்தைக் கொண்டான்.
ஆனால் துறவி எதுவுமே நடக்காதது போல சாந்தமாக
நின்றவர், தன் கைகளை உயர்த்தி, "ஆண்டவனே
இவனுக்கு இன்னும் நான்கு மடங்கு செலவத்தைக்
கொடுப்பாயாக!" என்று பிராத்தனை செய்தார்.
சீடன் வியப்பின் எல்லைக்கே போய்விட்டான்.
குருவின் தவவலிமை அவனுக்குத் தெரியும்.
அவர் பிராத்தனை செய்தால் அது நடந்துவிடும்.
ஆனாலும் இவர் ஏன் இந்தக் கிராகதகனின்
நல்வாழ்விற்குப் பிரார்த்திக்கின்றார் என்பது
அவனுக்குப் பிடிபடவில்லை.பேசாமல் நின்றான்.
இறங்கி நடந்த துறவி, கிராமத்தை நோக்கி
நடந்தார். சீடனும் தொடர்ந்தான். கண்ணில்
பட்டது ஒரு குடிசை வீடு. முன் பக்கம்
திண்ணை. அருகில் உள்ள கொட்டகையில்
நான்கு பசுமாடுகள் கட்டப்பட்டிருந்தன
துறவி,"தாயே!" என்று ஓங்கிக் குரல் கொடுத்தார்.
அடுத்த நொடியே, ஒரு மூதாட்டி கதவைத்
திறந்து கொண்டு வெளியே வந்தாள்.
" வாங்க சாமிகளா? என்ன சாமிகளா வேணும்?"
என்று அன்புடன் கேட்டாள்
துறவி சொன்னார்
அவள் பதறி விட்டாள். அவள் வீட்டில் சற்று
முன்தான் சாப்பிட்டுவிட்டு, பாத்திரங்களைக்
கழுவிப் போட்டிருந்தார்கள்
"சாமி நல்ல மோர் இருக்கிறது.ஆளுக்கு ஒரு
செம்பு தரட்டுமா?" என்று தயக்கத்துடன்
வினவினாள்.
கொண்டுவரச் சொல்லிவிட்டுத் துறவி திண்ணையில்
அமர்ந்தார். சீடனையும் அமரச் செய்தார்.
இரண்டு பெரிய செம்புகளில் அமிர்தம் போன்ற
சுவையுடன் மோர் வந்தது. வாங்கி அருந்தினார்கள்
பசி அடங்கிய பிறகுதான் இருவரும் ஒரு
நிலைக்கு வந்தார்கள்.
துறவி அந்த மூதாட்டியிடம் பேச்சுக் கொடுத்தார்
அவள் தன் கதையைச் சொன்னாள். அவள் வீட்டில்
விதைவைக் கோலத்துடன் ஒரு மகள். பதினெட்டு
வயதில் ஒரு பேத்தி - ஆக மூன்று பேர்கள். நான்கு
பசு மாடுகளை வைத்து ஜீவனம். பால், தயிர், மோர்
விற்று வயிறு வளர்ப்பதை நடிகை மனோரமா
பாணியில் ஏற்ற இறக்கத்துடன் சொன்னாள்.
துறவி விடை பெற்றுக் கொண்டு புறப்படும்போது,
இப்படிச் சொல்லி ஆசீர்வதித்தார்." உன் பேத்திக்கு
சீக்கிரம் திருமணம் ஆகும். நல்ல மணாளன்
கிடைப்பான். உன் மாடுகளில் இரண்டு இறந்துவிடும்
அனாலும் நீ நன்றாக இருப்பாய்!"
சீடன் நொந்து போய்விட்டான்
அந்த அயோக்கியன் வீட்டில் உன் செல்வம்
நான்கு மடங்கு பெருகட்டும் என்று
சொன்னவர். ஏழையானாலும், பசிக்கு
அற்புதமான மோர் கொடுத்த இந்த
மூதாட்டி வீட்டில் இரண்டு பசுமாடு சாகட்டும்
என்கிறாரே - எதற்காக இப்படி சொல்கிறார்?
என்று புரியாமல், குழப்பத்துடன் தன்
குருவைத் தொடர்ந்தான்.
அவன் மன ஓட்டத்தை ஊகம் செய்த துறவி
அவராகவே முன்வந்து விளக்கம் சொல்லி
அவன் குழப்பத்தைத் தீர்த்துவைத்தார்.
"பண்ணைக்காரனிடம் அபரிதமான செல்வம்
இருந்தும் பசித்தவர்க்கு உணவளிக்க மறுக்கும்
பாவியாக இருக்கின்றான். அவன் செல்வம்
நான்கு மடங்கு பெருகினால் - அவன் பாவமும்
நான்கு மடங்கு பெருகும்.அதனால்தான் அவனை
அப்படி ஆசீர்வதித்தேன். இந்தப் பெண்மணி தன்
ஏழ்மையிலும் தர்மம் செய்யும் தயாநிதியாக
இருக்கிறாள். நான்கு மாடுகளை மட்டுமே வைத்து
இவள் செய்யும் தர்மம் (புண்ணியம்) இரண்டு
மாடுகளை மட்டும் வைத்துச் செய்யும்
போது இரண்டு மடங்காக மாறும். அத்னால்தான்
இங்கே அப்படி ஆசீர்வதித்தேன்"
புண்ணியத்தைப் பற்றியும், பாவத்தைப் பற்றியும்,
என் சிற்றறிவிற்குத் தெரிந்தவரை ஓரளவு
தெரிவு படுத்தியிருக்கிறேன்.
Posted by
வித்யா கலைவாணி
at
0
comments
ஜெயிச்சோம்ல.. ஜெயிச்சோம்ல...
நான் இப்ப புதுசாக வேலைக்கு சேர்ந்து இருக்கும் இடத்தில் தென் ஆப்பெரிக்கர்கள் அதிகம். இன்று இந்தியாவிற்கும் தென் ஆப்பெரிக்காவிற்க்கும் நடந்த கிரிகெட் போட்டி 6 தெ. ஆ., 5 இந்தியர்கள்(நான் உட்பட), ஒரு அமெரிக்கன், 2 கனடா, 1 நைஜிரியன் உடன் பார்க்க நேர்ந்தது.
இந்தியாவால் மிக குறைந்த ரன்கள் தான் எடுக்க முடிந்தது 20 ஒவர்களில்.(153/5). அதனால் இந்தியர்களை தவிர மற்ற அனைவரும் தெ.ஆ. வெற்றிக்கு ஆதரவு தெரிவித்தார்கள். குறைந்த ரன் ஆக இருந்த போதிலும், இந்தியா தோற்றாலும், ஜெயித்தாலும், என்றும் இந்தியாவிற்கு மட்டும் ஆதரவு தெரிவித்து வந்த நாங்கள் வழக்கம் போல இந்தியா வெற்றி பெறும் என்று தெ.ஆ. பேட்டிங் செய்வதற்கு முன்பே அடித்து சொன்னோம்.. எங்கள் சொல்லை மெய்ப்படுத்தி காட்டினார் ஆர்.பி. சிங்.(4-0-13-4)
5 விக்கெட் விழ்ந்த பிறகு தெ. ஆ. செமி. பைனலுக்கு தகுதி பெற நாங்கள் ஆதரவு தருகிறோம், என்ன சொல்கின்றீர்கள் என்று தெ. ஆ. ஆதரவாளர்களிடம் கேட்டும் அவர்கள் தெ.ஆ. தான் வெற்றி பெறும் என்று அடிச்சு சொன்னார்கள். அவர்கர் சொன்ன வாக்கை பொய்க்காகி எங்களை பெருமிதம் படும்படி செய்த இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்... மற்றும் நன்றிகள்....
பாகிஸ்தானை வென்றதை விட தெ. ஆ. வென்றது மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது.
வாழ்த்துக்கள் பல... கோப்பை வென்றதை விட மிக்க மகிழ்ச்சி அடைய வைத்த வெற்றி.. இந்த வெற்றியை வச்சு தெ. ஆ. களை பல நாள் மட்டம் தட்டம் மிக அருமையான வாய்ப்பு.... இது போதும் ராசா... நல்லா இருங்க.. நல்லாவே இருங்க....
இதன் மூலம் இந்தியா மற்றும் நியுசிலாந்து அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றன... இதன் மூலம் தெ. ஆ. விற்கு அரைஇறுதி கனவு ஆப்பு அடிக்க பெற்றது...
Posted by
வித்யா கலைவாணி
at
2
comments
புனித ரமழான் - ஆசிப் மீரானின் கதை
இது புனித ரமழான் மாதம் - இஸ்லாமியர்கள் பகல் முழுதும் நோன்பிருக்கும் மாதம். நான் இருக்கும் ரியாத்தில் இம்மாதம் விமரிசையாக இருக்கும்.
இந்த சூழலில் சகோதரர் ஆசிப் மீரானின் கதை ஒன்றைப் பார்ப்போம்..
"ஹாஜியாருக்குத் தகவல் சொல்லியாச்சா?" யாரோ ஒருவர் உரக்க சொல்லிக் கொண்டிருக்க, "அதெல்லாம் அப்பவே சொல்லியாச்சு. வீட்டை விட்டும் அவர் புறப்பட்டாச்சாம்" என்று இன்னொருவர் பதில் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார் .
"இருந்தாலும் எவ்வளவு நெஞ்சழுத்தம் பார்த்தீங்களா இந்தப் பயலுக்கு?" என்றார் மற்றொருவர்.
"ஆமா. இதுக்குப் பேரு நெஞ்சழுத்தமில்ல. திமிரு!" என்று இரண்டுக்கும் இடையில் பெரிய வித்தியாசத்தைக் கண்டுபிடித்தது போல முன்னவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார் இவர்.
"எனக்கு அன்னைக்கே சந்தேகமாத்தான் இருந்துச்சு. ஆனா, சரி ஏதோ வெளியூர்காரன் போலன்னு நெனச்சுக்கிட்டேன். ஆனா, இன்னைக்கு சரியா மாட்டிக்கிட்டான் பய" என்று சொல்லிக் கொண்டே தொப்பியைச் சரி செய்து கொண்டார் பள்ளிவாசலின் பராமரிப்பு வேலைகளைப் பார்ப்பதாகச் சொல்லிக் கொண்டு ஒன்றும் செய்யாமலிருக்கும் காதர் அண்ணன்.
"காதர் சொன்னபோது நான் நம்பவேயில்ல பாத்துக்கிடுங்க. அது எப்படி ஒருத்தன் தைரியமா நம்ம பள்ளிக்குள்ள வந்து இப்படி செஞ்சுடுவான்னு நானும் கொஞ்சம் மெத்தனமாத்தான் இருந்துட்டேன். ஆனா, எத்தனை நாளைக்குத்த்தான் கள்ளப் பயலுவளால தப்பிக்க முடியும்? இன்னைக்கு வசமா மாட்டிக்கிட்டான் பாத்தியளா?" பெரிய விசயம் செய்து முடித்த திருப்தியோடு சொல்லிக் கொண்டிருந்தார் முகமது மாஸ்டர். அவர் எப்போது, யாருக்கு, எங்கே மாஸ்டராக இருந்தார் என்பது யாருக்கும் தெரியாதென்றாலும், அவர் அப்படித்தான் அழைக்கப்படுகிறார். சுருக்கமாக 'மாஸ்டர்' என்று சொன்னாலேயே, "யாரு? அந்த வெளங்காத மம்மது மாஸ்டரா?" என்று 'பளிச்'சென்று அடையாளம் காட்டப்படக் கூடிய அளவுக்குப் பிரபலமானவர்.
"அதற்குள் "அம்மாஆஆஆஅ" என்ற வேதனைக் குரல் அந்த அதிகாலை நேரத்தின் அமைதியைக் குலைக்கும் வண்ணம் அந்தப் பள்ளிவாசலின் சுவரில் மோதித் தெறித்தது.
"லே சுலைமான்! அவனை ஏம்ல அடிக்க? அதான் ஹாஜியாரு வருதாருல்லா? அதுக்குள்ள அவனைக் கொன்னுப்போடாதலே" மோதினார் அப்துல் சலாம் சுலைமானிடம் கோபமாகப் பேசுவது போல காட்டிக் கொண்டார். நிஜமான கோபத்தோடு சுலைமானிடம் பேசினால் அப்புறம் அவரும் அலற வேண்டியிருக்கும் என்பது அவருக்கு மிக நன்றாகத் தெரியும்.
சுலைமானுக்கு அப்படி ஒரு உடம்பு. தார் ஊற்றிக் காய்ச்சிய கறுப்பில் 'தஹால்' போல வளர்ந்திருந்தான். மேல்நோக்கிய வளர்ச்சி என்றில்லாமல் பக்கவாட்டிலும் அதே போன்ற அசுர வளர்ச்சி. மடித்துக் கட்டிய சாரமும் அதற்கு மேல் கம்பி வலை ஜன்னல் போல முகத்தில் அடிக்கும் வண்ணத்தில் பனியனும், அதற்கும் மேல் பொத்தான்கள் போடப்படாத சட்டையும் எந்தக் கூட்டத்திலும் அவனை அடையாளம் காட்டி விடும்.
பள்ளிக்கூடம் என்றில்லை- பள்ளிவாசல் பக்கத்திலும் கூட மழைக்கு ஒதுங்காத இசுலாமியன். காலையில் எழுந்து இரண்டு வெள்ளாடுகளை அறுத்து காலைக் கட்டித்தொங்க விட்டால் மதியத்திற்குள் விற்று முடித்துவிட்டு காசை எண்ணிப் பார்த்துக் கொண்டு, அப்படியே வண்டியேறி திருநெல்வேலி அல்லது தூத்துக்குடி என்று எங்காவது சுற்றியலைந்து படம் பார்த்து அன்றைய காசை அன்றைக்கே செலவழித்து விடுவது என்பதில் மிகக் கவனமாக இருப்பவன். ஆடறுப்பதை விட்டு விட்டால், தகராறு என்று வரும்போது ஆளறுப்பதிலும் சமர்த்தன். இரண்டு முறை ஆட்டின் தோலைக் கிழிப்பது மாதிரி சிலரது குடலைக் கிழித்துப் பார்த்து அதற்காக மூன்று வருடங்கள் படமே பார்க்க முடியாமல் சிறையில் கிடந்தவன். சிறையை விட்டு வெளி வந்தபிறகும் கூட படம் பார்க்க முடியாமல் போனதற்காக வருந்தினானே தவிர வேறெதற்கும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
ஆட்டோடு ஆளையும் அறுப்பதில் நிபுணத்துவம் இருந்ததால் அவனிடம் கடன் சொல்லவோ, அவன் அறுத்துக் கொடுப்பதைத் தவிர வேறேதும் அவனிடம் மறுத்துப் பேசவோ, அவனை எதிர்த்து இன்னுமொரு கடை நடத்தவோ யாரும் துணிந்ததில்லை. அவன் மேல் மற்றவர்களுக்கு அவ்வளவு பயம் இருந்தும் ஏதோ சத்தியத்திற்குக் கட்டுப்பட்டவன் போல தனது ஆடுகளை ஓதி மட்டுமே அறுக்க வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருந்தான்.
பள்ளிவாசல், பள்ளிக் கூடம் இந்த இரண்டையும் தவிர, சுலைமான பார்த்தறியாத சில இடங்களில் 'மத்ரசா'** வும் ஒன்று. எனவே, சொந்தமாக ஓதி அறுக்கும் அளவிற்கு சுலைமானுக்கு ஞானம் இல்லை என்பதால் காலையிலேயே 'சுபஹூ' ** தொழுகைக்காக 'பாங்கு'*** சொல்ல வரும் மோதினாரைத்தான் ஓதி அறுப்பதற்காக அழைத்துச் செல்வது வழக்கம். அந்தப் பழக்கத்தில் மற்ற எவரையும் விட மோதினார் அப்துல் சலாம் கொஞ்சம் உரக்கவோ அல்லது உரிமையாகவோ உள்ளுக்குள் பயந்துகொண்டே பேசுவார். அதே போலத்தான் இப்போதும் பேசினார் அவர்.
"சரி, இவனை என்னதான் செய்யப் போறதா இருக்கீங்கன்னு சொல்லுங்க?" என்று கேட்டான் சுலைமான். அவன் கேட்ட விதமே கொஞ்சம் பயம் காட்டுவதாக இருந்தது.
"இப்போதைக்கு ஒண்ணும் செய்ய வேணாம் சுலைமான் காக்கா, ஹாஜியார் வருதாங்க. அவங்க வந்ததுக்கப்புறம்தான் இந்த 'ஹராம்'** பொறந்தவனை என்ன செய்யணும்னு யோசிக்கணும்" என்றார் மம்மது மாஸ்டர். தன்னை விடப் பல வயது சிறியவன் என்றபோதும் சுலைமானுக்கு பயந்து அவனை காக்கா என்றழைத்ததன் மூலம் தன்னை ஒரு மாஸ்டராக அவர் அடையாளம் காட்டிக் கொண்டார்.
"அவரு வர்றாரு வராம போறாரு. எனக்கு அதப் பத்தி கவலையில்லை. மோதியாரப்பா, நீங்க வர்றீங்களா? எனக்கு ஆடு வெட்டப் போவணும்" என்று மோதியாரைப் பார்த்து சொன்னான் சுலைமான்- 'கருமமே கண்ணான' சான்றோரைப் போல.
"இரு சுலைமான். இப்ப ஹாஜியார் வந்துடுவாங்க" என்று வாசலைப் பார்த்துக் கொண்டே சொன்னார் மோதினார். ஹாஜியார் வரும்போது தான் இல்லாமல் போனால் தனது வேலையும் இல்லாமல் போய் விடக் கூடும். சுலைமான் கூப்பிட்டும் போகாமல் போனால் தானே இல்லாமல் போய் விடக் கூடும். எது உசிதம்? என்று மனக் கணக்கு போட்டுக் கொண்டிருந்தார் அவர். "கொள்ளைல போற பய! இப்படி வந்து அவன் மாட்டிக்கிட்டதால இப்ப எனக்குத்தான் சிக்கலாவுது" என்று மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்தவன் மேல் அனாவசியத்துக்குக் கோபம் வந்தது அவருக்கு.. 'சரி அவனைக் கட்டி வச்சு அரைமணி நேரமாவுது. இந்த ஹாஜியார் 'ஹரபாப்'** போறவனாவது நேரத்துக்கு வந்துதொலைஞ்சா நல்லா இருக்கும்? அந்தாளு இனிமே எப்ப வருவானோ? இனி 'சஹர்'** செஞ்சுட்டுத்தான் வந்து தொலைப்பாரா இருக்கும்?! இந்த சுலைமான் வேற நிலையழிஞ்சு நின்னுக்கிட்டு இருக்கான்' மனசுக்குள் அலையலையாய் எண்ணங்களை எழுப்பிக் கொண்டிருந்தார் மோதினார்.
அதற்குள் வாசலில் அரவம் கேட்க 'ஹாஜியார் வந்தாச்சு" என்று கிசுகிசுப்பாகவும், கொஞ்சம் உரக்கவும் சப்தம் கேட்டது. கலாம் ஹாஜியாருக்கு வயது எழுபதைக் கடந்து விட்டது என்றாலும் அந்தக் காலை நேரத்திலும் மிடுக்கு கலையாமல் விறுவிறுவென நடந்து வந்தார்.
பள்ளிவாசலுக்குள் நுழைந்ததுமே அவரது கண்கள் தீர்க்கமாக அங்குமிங்கும் தேடத் துவங்கின.
"எங்கே?" என்றார் அருகிலிருந்தவர்களிடம். ஹாஜியார் எப்போதும் அப்படித்தான். வார்த்தைகளில் சிக்கனம்.
"'கபரடி'**க்குப் போற வழியில" என்று பணிவாகச் சொன்னார் மாஸ்டர்
வேறெதுவும் கேட்காமல் நடையைத் தீவிரப்படுத்தினார் ஹாஜியார். போகும் வழியில் சுலைமானைப் பார்த்து" எப்படி இருக்க சுலைமான்?" என்று அவர் கேட்ட கம்பீரத்திற்கு, "நல்லா இருக்கேன் காக்கா" என்று சாரத்தை அவிழ்த்து விட்டுக் கொண்டே பதில் சொன்னான் சுலைமான். அதுதான் கலாம் ஹாஜியாரின் குணத்திற்குக் கிடைக்கும் மரியாதை. பெரும் செல்வந்தராக இருந்தபோதும் அனைவரையும் அனுசரித்துப் போகும் உயர்ந்த குணம் இருந்தது அவரிடம். வியாபாரத்தில் நேர்மை, பேச்சில் கண்ணியம், பார்வையில் சாந்தம் என்று அவரது குணநலன்களை அறியாதவர்கள் மிகக் குறைவுதான்.
'ஒளு'** செய்யும் இடம் தாண்டி கபரடிக்குப் போகும் வழியில் இருந்த தென்னை மரத்தில் கட்டிப் போடப்பட்டு கிடந்தான் அவன். "அவன் தான்!"என்று மற்றவர்கள் கை காட்ட, கையை உயர்த்தி அவர்களைப் பேசாமல் இருக்குமாறு பணித்து விட்டு அவனருகில் சென்றார் ஹாஜியார்.
கட்டி வைக்கப்பட்டிருந்ததாலோ என்னவோ 'வீரர்கள்' அனைவரும் ஆளாளுக்குத் தங்களது திறமைகளை அவன் மேல் காட்டியிருந்ததில் சில்மூக்கு உடைந்து குருதி வழிந்து கொண்டிருந்தது. "மோதியாரப்பா, தண்ணி கொண்டு வாங்க!!" சற்று உரக்கவே சொன்னார் ஹாஜியார்.
கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்தார் மோதினார். கையில் தண்ணீர் இருந்தது.
"மரம் மாதிரி நிக்காம, இவரு கட்டை அவுத்து வுட்டுட்டு, முகத்தை கழுவச் சொல்லுங்க. குடிக்க தண்ணி குடுங்க. மத்ததெல்லாம் பொறவு பார்த்துக்கலாம்" என்றார் ஹாஜியார்.
"ஹாஜியார், இவன் என்ன செஞ்சிருக்கான் தெரியுமா?" என்று இழுத்தார் மாஸ்டர்
"என்ன வேணும்னா செஞ்சிருக்கட்டும். அதுக்காக இந்த நோன்பு நேரத்துல இப்படியா ஒருத்தனை மாட்டை அடிக்குற மாதிரி அடிக்குறது? அவுத்து விடுங்க அவனை" ஹாஜியாரின் குரலில் தெரிந்த உறுதியைப் பார்த்ததும் சுறுசுறுப்பாகக் கட்டு அவிழ்க்கப்பட்டது.
கட்டவிழ்க்கப்பட்டதும் அவன் ஓடி வந்து ஹாஜியாரின் காலில் விழுந்து,"ஐயா!! என்னை மன்னிச்சிடுங்கய்யா" என்று கதறிக் கொண்டு அழுதான். அவன் காலில் விழுவதை எதிர்பார்க்காத ஹாஜியார் பதறிப் போய் விலகி, "டேய்! என்னப்பா இது. கால்ல விழுந்துக்கிட்டு.. மொதல்ல எந்திரிச்சு தண்ணியக் குடி. மோதியாரப்பா, அவனுக்குத் தண்ணி குடுங்க," என்றார்
மோதியாரப்பா அவனுக்குத் தண்ணீர் கொடுக்க, அடிபட்டுக் களைத்திருந்தவன் ஒரு செம்புத் தன்ணீரையும் ஒரே மூச்சில் உள்ளிறக்கினான். அவனையே பார்த்துக் கொண்டிருந்தார் கலாம் ஹாஜியார். அவன் அவசரம் அவசரமாக தண்ணீரை குடிக்கும்போது அவன் தொண்டைக்குழி ஏறி இறங்குவதையே கவனித்துக் கொண்டிருந்தவர் மெதுவாக மோதினார் பக்கமாகத் திரும்பி, "இவனை எவ்வளவு நேரமா கட்டி வச்சிருக்கீங்க?" என்றார்
"இப்பதான் ஒரு பத்து நிமிஷமா...." என்று இழுத்தவர் ஹாஜியாரின் பார்வையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு "ஒரு மணி நேரமா" என்று உண்மையைச் சொல்லி முடித்தார்.
"என்ன தப்பு செஞ்சான் அவன்?" அடுத்த கேள்வி வந்தது
"என்ன ஹாஜியார் அப்படிக் கேக்குதியோ? அவன் யாரு தெரியுமா? அவன் நம்மளவனே இல்ல. ஒரு கள்ள காஃபிர்.** அவனுக்குப் பள்ளிவாசலுக்குள்ள என்ன வேலைன்னு மொதல்ல கேளுங்கோ!" என்றார் மாஸ்டர். அதைச் சொல்லி முடிக்கும்போதே சொல்ல வேண்டியதைத் தெளிவாகச் சொல்லி விட்டதான பெருமிதம் அவர் முகத்தில் பொங்கி வழிந்தது.
கூட்டத்தில் இருந்தவர்களுக்கும் மாஸ்டர் சரியாக விசயத்தை அதன் தீவிரம் குறையாமல் எடுத்துச் சொன்னதான திருப்தி முகத்தில் தென்பட்டது. மாஸ்டரைப் பிடிக்காதவர்கள் தவிர மற்றவர்கள் அவரைக் கொஞ்சம் பெருமையோடு பார்த்தார்கள்.
"அவன் பள்ளிவாசலுக்குள்ள நொழைஞ்சதுக்கா அவனைக் கட்டி வச்சு அடிச்சிருக்கீங்க?" ஹாஜியரின் குரலில் அதிருப்தி பலமாகத் தென்பட்டதும், மாஸ்டர் ஆதரவாளர்கள் மாஸ்டரை எரிப்பது போலப் பார்க்கத் துவங்கினார்கள்.
"அதில்ல காக்கா. இவன் இன்னொரு தப்பும் செஞ்சிருக்கான்" இம்முறை வேறு யாரும் வாய் திறக்காததால் சுலைமான் வாய் திறந்தான்.
"அப்படி என்ன தப்பு செஞ்சான்? சொல்றதைத் தெளிவாச் சொன்னாத்தானே எனக்கும் தெரியும். அவசரமா பள்ளி வாசல் பக்கம் வரைக்கும் வாங்கன்னு கூப்பிட்டீங்க. என்னனு கேட்டதுக்கு ஒருத்தனைக் கட்டி வச்சிருக்கோம் வந்து விபரமாக் கேளுங்கன்னு சொன்னீங்க. என்னமோ ஏதோன்னு வந்தா பள்ளிவாசலுக்குள்ள வந்தான். அதான் கட்டி வச்சிருக்கோம்னு சொல்றீங்க. வெக்கமா இல்ல உங்களுக்கு? அவன் வந்தா என்ன கெட்டுப் போச்சு உங்களுக்கு?" ஹாஜியாரின் குரலில் அதட்டும் தொனி தென்பட்டது.
"அப்படியில்ல ஹாஜியார். இவன் பள்ளிவாசல்ல நொழஞ்சதுக்காக அவனைக் கட்டி வைக்கலை. ரெண்டு மூணு நாளாவே இவன் பள்ளிவாசலுக்கு வந்து போய்கிட்டு இருக்கான். நாம பள்ளிவாசல்ல 'சஹர்'** செய்றதுக்காக சோறு வச்சிருக்கோம். இந்த 'மொஹல்லா'**ல இருக்குறவங்க மட்டும் காலைல வந்து 'சஹர்' செய்யுற மாதிரி ஏற்பாடு செஞ்சிருக்கோம்." காதர் அண்ணன் மெதுவாக எடுத்துச் சொன்னார்.
"ஆமா அது தெரிஞ்ச விசயம்தானே? நோன்பு வந்ததுன்னா காலைல 'சஹர்' வைக்குறதுக்கும் சாயங்காலம் நோன்பு திறக்க கஞ்சி வைக்குறதுக்கும் நம்ம 'மொஹல்லா'ல ஏற்பாடு வருசா வருசம் நடக்குற விசயம்தானே? அதுல என்ன இருக்கு?" ஹாஜியார் குரலில் இப்போது லேசான எரிச்சல் தென்பட்டது.
"இந்தப் பய ரெண்டு நாளா இங்கன வரான் ஹாஜியார். காலைல வந்து தொப்பி போட்டுக்கிட்டு எல்லாரு மாதிரியும் சஹர் செஞ்சிக்கிட்டு இருந்தான்."
"மொதல்ல எங்களுக்கு யாருக்கும் சந்தேகமே வரலை. பக்கத்து ஊருக்காரனா இருக்கும்னுதான் நெனச்சோம் கேட்டியளா?"
"ஆனா பொறவு பார்த்தா, இவன் சாப்பிடுதான். சாப்பிட்டுப் போட்டு அப்படியே மெதுவா காணாமப் போயிடுதான். 'சுபுஹு' பாங்கு சொல்லுறதுக்குள்ள ஆளே காணோம். சலாம் சொன்னா கூட ஒழுங்கா பதில் சலாம் சொல்லத் தெரியலை."
"அப்பத்தான் சலாம் காக்கா இவனை கொஞ்சம் கவனிச்சிருக்காரு. 'பேரு என்ன வாப்பா?'ன்னு கேட்டதுக்கு ரஹ்மான்னு சொல்லியிருக்கான். சரி 'வாப்பா பேரு என்ன?' ன்னு கேட்டதுக்கு முழிச்சிருக்கான். பொறவுதான் யோசிச்சு அல்லா பிச்சைன்னு சொல்லியிருக்கான். அவருக்கு இன்னும் கொஞ்சம் சந்தேகமாயி 'உம்மா பேரு என்னலே?'ன்னு கேட்டதுக்கு 'எனக்கு உம்மா இல்ல'ன்னு சொல்லியிருக்கான். 'எந்த ஊருலே?'ன்னு கேட்டதுக்கு 'விசலாமரம்'னு சொன்னதும்தான் சலாம் காக்காவுக்கு சந்தேகமா போயி காதர் அண்ணன் கிட்ட சொல்லியிருக்காரு"
"ஆமா ஹாஜியார் காக்கா, விசலாமரத்துல துலுக்கன் எங்க இருக்கான்? அதான் எனக்கு சந்தேகமாப் போச்சு"
கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு ஆளாளுக்குக் கொஞ்சம் நடந்ததை எடுத்துச் சொல்ல,
"சரி அதுக்கு....?" என்றார் ஹாஜியார்.
"என்ன ஹாஜியார் அப்படிக் கேக்குறீங்க? நம்ம பள்ளிவாசலுக்குள்ள நம்மாளு இல்லாத ஒரு காஃபிர் வந்து, நாம நோம்புக்கு 'சஹர்' செய்யுற நேரத்துல நம்ம கூட வந்து சாப்பிட்டு நம்மள ஏமாத்துறான். என்னன்னு சாதாரணமா கேக்குதீங்க?" என்றார் முகமது மாஸ்டர்.
எப்போதுமே முக்கியமான நேரத்தில் குரல் கொடுத்து அவரது மகிமையை நிலைநாட்டுவதை எண்ணி மாஸ்டரிஜின் ஆதரவாளர்கள் இன்னொருமுறை பெருமை பொங்க மாஸ்டரைப் பார்க்க, மாஸ்டரும் புன்னகை தவழ அதை ஏற்றுக் கொள்பவர் போலத் தலையசைத்தார்.
"தம்பி இங்க வாப்பா" என்றார் ஹாஜியார்.
அந்தத் தம்பி நடுக்கத்தோடு தரையிலிருந்து எழுந்து வந்தான்.
"நீ இசுலாமியனா இல்லையா?" ஹாஜியார் குரல் மென்மையாக ஒலித்தது
"இல்லீங்கண்ணாச்சி.. என்னை மன்னிச்சுடுங்க அண்ணாச்சி" குரல் தழுதழுத்தது அவனுக்கு..
"இது முசுலீம்கள் பள்ளிவாசல்னு உனக்குத் தெஜியாதாப்பா?" மீண்டும் அதிராத மென்மையான குரலிலேயே கேட்டார் ஹாஜியார்
"தெரியும் அண்ணாச்சி" தலையைக் கவிழ்ந்து கொண்டான் அவன். தரையைப் பார்த்துக் கொண்டிருந்த அவன் கண்கள் குற்றவுணர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் கண்ணீரைப் பெருக்கிக் கொண்டிருந்தன.
"இந்த பாரு தம்பி. அழுது என்ன புண்ணியம்? தப்புன்னு தெரிஞ்சும் எதுக்குப்பா பள்ளிவாசலுக்கு வந்தே?"
"தப்புத்தான் அண்ணாச்சி தெரியாம செஞ்சுப்புட்டேன். தப்புத்தான்" மீண்டும் மீண்டும் அதையே முணுமுணுத்தன அவனது உதடுகள்.
"பாருங்களேன் திமிரை. செய்யுறதையும் செஞ்சுட்டு மொதலக் கண்ணீரு வுடுறான்" என்றார் சலாம். கூட இருந்தவர்களும் ஆமோதித்து முணுமுணுக்க ஹாஜியார் மெல்லத் திரும்பி அவர்களைப் பார்த்ததும் மீண்டும் அங்கே அமைதி நிலவியது.
"சரி தம்பி. தப்பு செஞ்சிட்டீங்க. இனிமே இந்த மாதிரி செய்யாதீங்க என்ன?" என்றார் ஹாஜியார்
ஓடி வந்து மீண்டும் அவர் காலில் விழுந்தான் அவன். "ஐயா என்னை மன்னிச்சிடுங்கய்யா. நான் தெரிஞ்சே இந்தத் தப்பை செஞ்சுட்டேன்யா. என்னால ஏதாவது தெய்வக் குத்தம்னா என்னை தயவுசெஞ்சு மன்னிச்சிடுங்கய்யா" அவனது கதறல் அந்த அதிகாலை நேரத்தை கனமாக்கிக் கொண்டிருந்தது.
அவனை மெதுவாகக் கைத்தாங்கலாக உயரத் தூக்கினார் ஹாஜியார். "சரி தம்பி!! தெய்வக் குத்தம்லாம் ஒண்ணும் இல்ல. அதெல்லாம் மனுசங்களா நெனச்சுக்கறதுதான். நீனும் மனுசன் நானும் மனுசன் தானே? அதனால் தப்பெல்லாம் ஒண்ணுமில்ல. ஆனா, உனக்கு இங்க வரக்கூடாதுன்னு தெரிஞ்சும் வந்திருக்கிய என்ன காரணம்?"
ஹாஜியார் கேட்டதும் கையால் முகத்தை மூடிக் கொண்டு அழுதான் அவன். அந்த மெல்லிய உடல் குலுங்குவதையே கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்தார் அவர். மெல்ல அவனருகே சென்று, "தம்பி, எதுக்காக அழணும்? காரணத்தை மட்டும் சொல்லு"
பேச முடியாமல் தொடர்ந்தும் அழுதான் அவன். அவன் அழுகை அடங்கட்டும் என்று ஹாஜியார் காத்திருந்தார். அவனது உடல் குலுங்கி நின்றதும் மெதுவாகக் கேட்டார். "தம்பி, இப்பவாவது சொல்லலாமா?"
"என்ன சொல்றது அண்ணாச்சி.. எழவெடுத்த பசி அண்ணாச்சி. நாலு நாளாவுது நானும் என் தம்பியும் சாப்பிட்டு. வெவசாயக் கூலிக்குப் பொழைக்குறவன் அண்ணாச்சி. மழயில்லாம வெவசாயமும் இல்ல வேலையும் இல்ல. கூலி வேலை செஞ்சும் ஒண்ணும் மிஞ்சலை. காலைல வேல தேடி வரக்குள்ள இங்க எல்லாம் காலைல நோம்புக்காக சாப்பிடுதாங்கன்னு தெரிஞ்சு போச்சு. அதான் நானும் கூட்டத்தோட வந்து கொஞ்சம் சாப்பிட்டுட்டு தம்பிக்கும் கொஞ்சமா ஒளிச்சு கொண்டு போய் குடுத்தேன் அண்ணாச்சி. உங்க ஆட்கள் புண்ணியத்துல மூணு நாளா அரை வயித்துக்குச் சாப்பிட்டோம். பண்ணுதது தப்புன்னு எனக்கு தெரிஞ்சுது அண்ணாச்சி. ஆனா எங்க பாழாப் போன வயித்துக்கு எதுவும் தெரியலை. எங்களை மன்னிசச்சிடுங்க!!" என்று அவன் அழுதபோது ஹாஜியார் கண்களும் கலங்கிப் போயிருந்தது.
கொஞ்ச நேர அமைதிக்குப் பின் ஹாஜியார் கூடியிருந்தவர்களைப் பார்த்தார்.
"என்ன மாதிரி 'ஈமான்' உள்ளவங்க நீங்க எல்லாம்னு எனக்குப் புரியலை? நோன்பு எதுக்காக வைக்குறோம்னு கூடத் தெரியாம நோன்பு வச்சு நீங்கள்லாம் என்னத்த சாதிக்கப் போறீங்களோ?! இல்லாதவனோட பசியையும், ராணுவத்துல கஷ்டப்படுறவனோட தாகத்தோட அருமையையும் புரிஞ்சுக்கறதுக்குத்தான் நோன்பு. இல்லாத ஒருத்தன் பசிக்காக உங்க கூட உட்கார்ந்து சாப்பிட்டா, அவனை மரத்துல கட்டி வச்சு அடிச்சுட்டு, நீங்க வைக்குற நோன்பை அந்த ஆண்டவன் எப்படி ஏத்துக்குவான்னு நினைக்குறீங்க? பசிச்சவனுக்கு ஒருவாய் சோறு போட வக்கில்லாம தலைல தொப்பிய வச்சுக்கிட்டு முஸ்லீம்னு சொல்லிக்கிட்டு திரியாதீங்க. எவனையும் அடிக்குறதுக்கு முன்னால என்ன ஏதுன்னு விசாரிங்க. விடிஞ்சும் விடியாமலும் ஒருத்தன் பள்ளிவாசலைத்தேடி வந்து சாப்பிட வந்திருக்கான்னா அவன் எந்தளவு பசியோட இருந்திருக்கணும்னு யோசிச்சிருந்தா இவனை அடிக்க உங்களுக்கெல்லாம் மனசு வந்திருக்காது. எதையும் அறிவோடயும் மனுசத்தனத்தோடயும் பாருங்க மொதல்ல!" ஹாஜியாரின் குரலில் கோபம் வெளிப்படையாகத் தெரிந்தது.
"இப்ப சொல்றேன் நல்லா கேட்டுக்குங்க. இந்தத்தம்பி நோன்பு முடியப் போற மீதி நாளுக்கும் அவன் தம்பியோட இங்கத்தான் சஹர் பண்றதுக்கு வருவான். இல்லாத அவனோட பசிக்கும் சேர்த்து நாம சோறு போட்டா நாம் ஒண்ணும் குறைஞ்சு போயிட மாட்டோம்.. புரிஞ்சுதா? மோதியாரப்பா. தம்பியப் பாத்துக்கிடுங்க!" சொல்லி விட்டு நகர்ந்தவர் அவனிடம் போய்,
"நாளைலேருந்து உன் தம்பியையும் கூட்டிக்கிட்டுவா தம்பி. தலைல தொப்பி எல்லாம் போட வேண்டாம் புரிஞ்சதா? என்று அவன் கன்னத்தை மெல்லமாகத் தட்ட அந்தக் கைகளைப் பிடித்துக் கொண்டவனின் கண்கள் நிறைந்து போயிருந்தது.
====
** மத்ரசா - 'குர்-ஆன்' ஓதச் சொல்லித்தரும் பாடசாலை
** சுபஹு - அதிகாலைத் தொழுகை
** பாங்கு - தொழுகைக்கான அழைப்பு
** ஹராம் - விலக்கப்பட்டது
**ஹராபாப் போறவன் - வீணாகப் போகிறவன்
** ஒளு - தொழுகைக்கு முன்பு செய்யும் உடல் சுத்தி
** கபரடி - இறந்தவர்களைப் புதைக்கும் இடம்
** சஹர் - அதிகாலையில் நோன்பு வைப்பதற்கு முன்பு உண்ணப்படும் உணவு
** மொஹல்லா - குறிப்பிட்ட பள்ளிவாசலுக்குண்டான பகுதி
====
Posted by
வித்யா கலைவாணி
at
0
comments


