கடந்த இரண்டு பதிவுகளாய் உலக வெப்பமயமாதலைப் பற்றி பார்ப்போம். இன்று அதன் இறுதியாக CFC உபயோகத்தினையும், நமது கடமையையும் பார்ப்போம்.
( முதல் பதிவு : உலக வெப்பமயமாதல் - ஆய்வு,
இரண்டாம் பதிவு : CFC உடைய பாதிக்கும் தன்மை)
பொதுவாக இன்றைய நிலையில் பசுமை வாயுக்களின் உபயோகத்தை நம்மால் நிறுத்த இயலாது. அதற்குப் பதிலாக ஏதாவது மாற்று ஏற்பாடுகளைச் செய்வதே இன்றைய சமூகத்தின் முன் உள்ள நிலை. இதை யார் மேற்கொள்ள வேண்டுமென்று பார்த்தால், யாரால் இந்த உலகம் வெப்பமயமாகிறதோ அவர்கள் தான் இதற்கு தீர்வு காண வேண்டுமென்பது தான் நியதி. அனைத்து கரங்களும் நம்ம அகில உலக அண்ணாச்சி ( நம்ம அண்ணாச்சி இல்லைங்க)யை நோக்கியே கரங்களை நீட்டுகின்றன.
உலகில் அதிகபட்சமாக சமூக சீர்கேடு மட்டுமல்ல, சுற்றுப்புற சீர்கேட்டிலுல் நம்ம அண்ணாச்சி அமெரிக்கா தான் முண்ணனியில் நிற்கிறார். உலகிற்கு குளிர்சாதனப் பெட்டிகளை முதலில் அறிமுகப் படுத்திய அவர்கள் தான் ஓசோனை சிதைப்பதிலும் கருத்தாக இருந்துள்ளனர்.
உலகில் புவி வெப்பமடைதலுக்கு காரணமான நாடுகளைப் பார்த்தால் அமெரிக்கா தான் 30.3 சதவீததுடன் முண்ணனியில் இருக்கிறது. உலகில் பாதி மக்கள் தொகையைத் தன்னகத்தே கொண்ட இந்தியா, சீனா, தெற்காசியாவில் வெறும் 12.2 சதம் மட்டுமே பங்களிப்பை செய்ய முடிகிறதாம். ஐரோப்பா முழுவதும் சேர்த்தே 27 சதம் தான் வருகிறது. (தஞ்சாவூராருக்கு நன்றி)
நாட்டாமை அண்ணாச்சி என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யாமல் ஊருக்கு உபதேசம் செய்கிறார். CFC யை தடை செய்ய வேண்டும் என்று கத்திக்கொண்டே உலகம் முழுவதும் CFC விற்பனை செய்கிறார். இது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் என்றாலும் இது தனிப்பட்ட அரசையோ, நாட்டையோ பாதிக்கும் விஷயம் அல்லவே? உலகையே பாதிக்கக்கூடிய விஷயம். ஆனால் அமெரிக்கா அதில் இரட்டை வேஷத்தை தொடர்கிறது.
உலகில் உள்ள பெரிய குளிர் சாதனப் பெட்டிகளை தயாரிக்கும் நிறுவனங்களில் முக்கியமானவை Carrier, York, மற்றும் Trane. இவைகளின் ஜாகை அமெரிக்கா தான். உண்மையில் அமெரிக்காவிற்கு சுற்றுப்புற சூழலில் அக்கறை இருந்தால் இந்த நிறுவனங்கள் தயாரிக்கும் CFC வகை குளிர்சாதனப் பெட்டிகளுக்கு தடை விதிக்க வேண்டும். ஆனால் கணக்கு காட்ட அதை தடை செய்துள்ளோம், இதை தடை செய்துள்ளோம் என்று சொல்வதோடு சரி. இன்றுவரை இந்த நிறுவனங்கள் CFC22 வில் இயங்கும் இயந்திரங்களை தயாரிக்கின்றன. ஐ.நா சபை என்ற டம்மி சபை ரிப்போர்ட் தாக்கல் செய்வதோடு சரி. அமெரிக்காவைத் தட்டிக் கேட்க முடியவில்லை. (நம்மால் அமெரிக்காவை திட்ட மட்டுமே முடியும் என்பதால் இதை அடுத்த பதிவில் செய்து நமது கொலை வெறியைத் தீர்த்துக் கொள்வோம்)
இனி நம்மால் என்ன செய்ய முடியும் என்பதைப் பார்ப்போம்.
1. நம்முடைய வாகனத்தில் அதிக புகை வராமல் பார்த்துக் கொள்வோம். அப்படி வருமானால் உடனடியாக அதை சரி செய்து நமது பங்கை நேர் செய்வோம்.
2. நாம் குளிர் பதனப் பெட்டி வாங்கினால் அவை CFC FREE யா என்று பார்த்து வாங்குங்கள். இன்றைய சந்தையில் அப்படிப்பட்ட குளிர் பதனப் பெட்டிகள் கிடைக்கின்றன. CFC FREE என அட்டையிலேயே எழுதப்பட்டிருக்கும். கவனித்து வாங்குங்கள். நீங்கள் பார்க்கும் கடையில் கிடைக்கவில்லையென்றால் அவசரம் பார்க்காமல் அடுத்தடுத்த கடையில் பார்த்து வாங்குங்கள்
3. அடுத்து உங்கள் குளிர்சாதனப்பெட்டி. CFC இல்லாத வீட்டில் வைக்கும் A/C இதுவரை வரவில்லை. வீட்டிலோ அலுவலகத்திலோ A/C வைக்காதீர்கள் என்று சொல்லலாமென்றால் நிறையப் பேர் சகோதரியை அடிக்க வருவீர்கள். எனவே இங்கு உபாயங்கள் மட்டும் தருகிறேன்.
அ.ஏற்கனவே பதிவு 78, பதிவு 79 ல் கூறியது போல உங்கள் A/C யை சுத்தமாக வைப்பதன் மூலம் CFC வாயுக்கசிவை தடுக்க இயலும். இதனால் உங்கள் பணமும், ஓசோனும் பாதுகாக்கப்படும்.
ஆ. உங்களது A/C எந்த விதமான Vibration ம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
( பெரும்பாலான வாயுக்கசிவுகள் இந்த இரண்டு காரணங்களால் மட்டுமே ஏற்படுகின்றன.)
இ.உங்களது A/C பழுதாகி வாயுவை வெளியேற்ற வேண்டுமெனில் அதை மறுசுழற்சி செய்து உபயோகப்படுத்த பரிந்துரை செய்யுங்கள். ( சில நேரங்களில் இது இயலாது. எனவே உங்கள் பங்க்குக்கு கொஞ்சம் ஓசோன் பழுதாக்குங்கள்)
இதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை. என்னாலெல்லாம் முடியாது என்று நாம் சொல்லாமல் நம்மால் முடிந்த அளவு சிரத்தை எடுத்து இந்த பூமியை காப்போம்.
90. உலகைக் காக்க உங்கள் பங்களிப்பைத் தாருங்கள் - GW -3
Subscribe to:
Post Comments (Atom)

7 comments:
சூப்பர், நான் தான் 1
நல்ல பயனுள்ள குறிப்புகள். அனைவரும் இதை கைக்கொண்டால் இந்த உலகைக் காக்கலாம். வாழ்த்துக்கள் சகோதரி
Hai உங்களின் பதிவு சூப்பர் .
எவர் தான் இன்று உங்களை போல உலகை பற்றி கவலைப்படுகிறார்கள்...
நீங்கள் இந்த பதிவை தொடர வாழ்த்துகிறேன்.
good post..
//Baby Pavan said...
சூப்பர், நான் தான் 1//
//தமிழ் பிரியன் said... நல்ல பயனுள்ள குறிப்புகள். அனைவரும் இதை கைக்கொண்டால் இந்த உலகைக் காக்கலாம். வாழ்த்துக்கள் சகோதரி//
நன்றிகள் பவன் மற்றும் தமிழ் பிரியன்
//rangan said...Hai உங்களின் பதிவு சூப்பர் .எவர் தான் இன்று உங்களை போல உலகை பற்றி கவலைப்படுகிறார்கள்... நீங்கள் இந்த பதிவை தொடர வாழ்த்துகிறேன்.//
சேலம் கொல வெறி படைப்பிரிவா? ம் வாங்க. நன்றி.
//முத்துலெட்சுமி said...good post..//
Thank u for the visit. Double thanks for the Comment
Post a Comment