இது தமிழ்நாட்டில் A/C வைத்திருப்பவர்களுக்கான சிறப்பு கவன ஈர்ப்பு.நீங்கள் தமிழ்நாட்டில் 1.5 டன் அளவு ( நிறுத்தல் எடை அல்ல இது) A/C வைத்துள்ளீர்கள் என்று எடுத்துக் கொள்வோம். ஒரு 1.5 டன் கு.சா.பெட்டி சுமாராக 9 ஆம்பியர் கரண்ட் எடுக்கும்.(220 V இருக்கும் போது).அதாவது ஒரு மணி நேரம் A/C பயன்பாட்டில் இருந்தால்
Watts = current x Voltage
W = I x V
1980W = 9 x 220 = 1.98 யூனிட்
கிட்டத்தட்ட 2 யூனிட்கள் மின்சாரம் செலவாகும். ஒரு நாளில் உங்கள் கு.சா.பெட்டி சுமார் 10 மணி நேரம் பயன்பாட்டில் இருந்தால் அதில் கம்பரசர் பயன்பாட்டில் இருப்பது 5 மணி நேரம் என்று எடுத்துக் கொள்வோம். அப்படியானால் ஒரு நாளைக்கு 10 யூனிட் மின்சாரம். இரு மாதங்களுக்கு 600 யூனிட்கள் மின்சாரம். அதாவது 600 x 2.20 = 1320 ரூபாய்கள். உங்கள் அறையில் தேவையான வெப்பநிலை அளவு 22'C (71.6'F) எனவும், வெளியே 36'C ( 96.8'F) என்றும் வைப்போம். அறையில் கு.சா.பெட்டி செயல்படத்துவங்கிய பிறகு 36'C லிருந்து 22'C வர சுமார் 30 நிமிடங்கள் எடுக்கிறது எனக்கொள்வோம். கு.சா.பெட்டி தரக்கூடிய காற்றின் அளவு 600 CFM எனக்கொள்வோம்.
இனி நமது கணக்குக்கு வருவோம். உங்களுடைய கு.சா.பெட்டியின் வடிகட்டி சரியாக சுத்தம் செய்யாமல் இருந்தால் வெளியேற்றக்கூடிய காற்றின் அளவு 500 CFM ஆகக் குறைந்தால் 36'C லிருந்து 22'C வர, காற்றின் அளவு குறைந்ததால் 40 நிமிடம் ஆகிவிடும். ( இது ஒரு மாதிரி கணக்குக்கு) அப்படியானால் செயல்பாட்டில் உள்ள 10 மணி நேரத்தில் கம்பரசர் செயல்படும் நேரம் 5 மணி நேரத்தில் இருந்து சுமாராக 6.30 மணி நேரமாக மாறி விடுகிறது. அதாவது தினசரி 13 யூனிட்கள். அப்படியானால் இரு மாதத்திற்கு சுமார் 780 யூனிட்கள். 780 x 3.05 = 2379 ரூபாய்கள். இதற்கு மேல் இங்கு விளக்குவதற்கு ஏதும் இல்லையென்று நினைக்கின்றேன். மீதியை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள்.
இங்கே பொருத்தமான படம் ஏதும் இல்லாததால் இது.
நாங்களும் சூடான இடுகைல வருவோம்ல
தமிழ்நாடு மின் வாரிய மின் கட்டணப்பட்டியல்
0 to 50 யூனிட் ----- 0.75
51-100 யூனிட் ----- 0.85
101-200 யூனிட் ---- 1.50
201-600 யூனிட் ----- 2.20
601 & மேல் யூனிட் --3.05
CFM
CFM என்பது ஒரு நிமிடத்தில் உங்களுடைய கு.சா.பெட்டியின் காற்றாடி இழுத்து குளிரூட்டி மீண்டும் அறைக்குள் அனுப்பும் காற்றின் கன அடி அளவு.( Cubic Feet per Minute)
பின்குறிப்பு :
அடுத்த பதிவாக A/C யில் பயன்படும் CFC எனப்படும் வாயுவால் இந்த புவிக்கு ஏற்படும் பாதிப்புகளைப் (Global Warming, Climate change) பற்றி அறிவியல் துணையுடன், வேதிவினைகளுடன் போடலாம் என்று நினைத்தேன். ஆனால் தொடர்ச்சியாக ஒரே மாதிரி வேண்டாமென்று விட்டு விட்டேன். நாளைக்கு ஒரு கவுஜ.
80. உங்கள் A/C யின் மின் கட்டணம் - ஒரு ஷாக் ரிப்போர்ட்
Posted by
வித்யா கலைவாணி
at
6
comments
Labels: குளிர்சாதனம்
79. எச்சரிக்கை - குளிரூட்டப்பட்ட A/C அறையில் இருப்பவரா நீங்கள் ? - பாகம் 2
கடந்த பதிவுக்கு சில இடங்களில் இருந்து பயமுறுத்துவதாக கடிதங்கள் வந்ததை எடுத்து சிறு விளக்கம். அங்கே இடப்பட்ட படங்கள் பயமுறுத்த அல்ல. அதன் தீவிரத்தை உணர்த்த மட்டும் தான்.
மேலும் சிகரெட் பிடிப்பவர், மது அருந்துபவர் அவர் விருப்பப்படியே தனது உடலைக் கெடுத்துக் கொள்கிறார். ஆனால் இந்த விஷயம் கிட்டத்தட்ட Passive Smoking மாதிரி.(Passive Smoking = புகை பிடிக்காத ஒருவர் புகையின் பாதிப்பை அடைவது). ஆகவே தான் இந்த பதிவுக்கு முக்கியத்துவம். அதே போல் Fபில்டர்( இனி வடிகட்டி என்று மட்டும் வரும்) பற்றியும் சிறு அறிமுகம் செய்வது நன்று என்று நினைக்கிறேன்.
வடிகட்டிகள் பொதுவாக சில வகைகளில் அடங்கி விடும். அவற்றையும் அதன் செயல் திறனையும் வரிசையாகப் பார்ப்போம்.
1. அலுமினிய வலையால் ஆனது - 40 முதம் 60 சதம்
2. தேங்காய் நார் போன்றது - 50 முதல் 60 சதம்
3. ஸ்பாஞ்ச் மாதிரியானது - 70 முதல் 85 சதம்
4. பேக் வடிகட்டி ( Back Filter) - 90 முதல் 95 சதம்
இவை அனைத்தும் பெரிய இயந்திரங்களில் பயன்படுத்தப்படுவை. இதில் கடைசியில் உள்ளது மட்டும் திரும்ப சுத்தம் செய்து பயன்படுத்த இயலாதது. மற்றவைகளை சுத்தப்படுத்த முடியும்.
இது தவிர Window, Split A/C களில் வரக்கூடிய ப்ளாஸ்டிக்கால் ஆன வடிகட்டிகள் 70 முதல் 80 சதம் மட்டுமே வடிகட்டும்.தொழில் நுட்ப ரீதியில் இதை மறுப்பவர்கள் மறுக்கலாம். ஆதாரங்களுக்கு வழி காட்டப்படும்.
இனி கட்டுரைக்குள் நுழைவோம்.இதில் பயமுறுத்தும் படங்கள் தரப்போவதில்லை. ஆனாலும் உபயோகமான சில படங்கள் தருகிறேன். Window, Split A/C நாம் கவனிக்க வேண்டியது அறைக்குள் இருக்கும் இண்டோர் எனப்படும் பகுதியே. இதில் வடிகட்டி, Evaporator எனப்படும் Cooling Coil, Blower, ஆகியவை இருக்கும். பொதுவாக வடிகட்டியை எல்லோரும் சுத்தம் செய்கின்றனர். ஆனால் மற்ற பகுதிகளைக் கவனிப்பது இல்லை. Cooling Coil என்பது எப்போதும் ஈரப்பதத்துடன் இருப்பது.எனவே வடிகட்டியைத் தாண்டிச் செல்லக்கூடிய சிறு சிறு தூசுகள் ஈரத்துடன் சேர்ந்து அழுக்காக Cooling Coil, Blower ஆகியவற்றில் தேங்கி விடுகின்றது.
அடுத்த தடவை உங்கள் குளிர் சாதனப் பெட்டி சுத்தப்படுத்தப்படும் போது Cooling Coil, Blower எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.அதே போல அழுக்கு தண்ணீர் தேங்குமிடம், செல்லும் வழி எப்படி இருக்கிறது என்று கவனியுங்கள். இந்த அழுக்குகள் சேரும் போது தான் A/C யில் இருந்து தண்ணீர் கொட்டும்.( வளைகுடாவில் இருப்பவர்களுக்கு இந்த அனுபவம் அதிகமாக இருக்கும்). அப்படி வந்தால் உங்கள் A/C கவனிக்கப் பட வேண்டியது.
Window A/C எனும் போது அதை அப்படியே இறக்கி சுத்தம் செய்ய முடியும். ஆனால் Split A/C எனில் யாரும் அதிகம் சுத்தம் செய்வதில்லை. கீழே அதை சுத்தம் செய்ய வேண்டிய முறை.
சுத்தம் செய்வதற்கு முன்னும், பின்னும்
இனி குறிப்புகள்
அ. சன்னல் வகை கு.சா.பெட்டிகள் ( Window A/C)மற்றும் பிரிக்கப்பட்டவகை கு.சா.பெட்டிகள் ( Split A/C)
1.வடிகட்டியை 15 நாட்கள் முதல் ஒரு மாதத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்யுங்கள். ( பயன்பாட்டைப் பொறுத்து)
2.வடிகட்டியை மீண்டும் பொருத்தும் போது இடைவெளி இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்
3.Cooling Coil, Blower போன்றவற்றை வெயில் காலம் ஆரம்பமாவதற்கு முன் சுத்தம் செய்து வையுங்கள்
4.கு.சா.பெட்டி பயன்பாட்டில் இருக்கும் போது சன்னல்களைத் திறந்து வைக்காதீர்கள்.
5.A/C யின் கழிவு நீர் தேங்குமிடம், செல்லும் வழியை சுத்தமாக வையுங்கள்
6.கு.சா.பெட்டி பயன்பாட்டில் இருக்கும் போது அறையை சுத்தம் செய்யாதீர்கள்
இதுவரை சுகாதார, தொழில்நுட்பரீதியாக இதைப் பார்த்த நாம் நாளை வணிக ரீதியாகப் பார்ப்போம்.
பின் குறிப்புகள் :
1.இந்த இரு பதிவுகளும் உண்மையில் சுகாதாரத்தின் மீதும், சுற்றுப்புறத்தூய்மையின் மீதும் அக்கறை இருப்பவர்களுக்கு எழுதப்பட்டது. நீங்கள் இருக்கும் இடத்தில் இதை கண்காணிக்க உங்களுக்கு அதிகாரம் இல்லையென்றால் அதற்காக என்ன செய்வது?. விட்டுவிடுங்கள்.
2. இது முன் குறிப்பாக இருக்க வேண்டியது. முதலில் உள்ள படத்தில் இருப்பவர் பெயர் ஹெர்பி. இவரும் இவரது கூட்டாளிகளும் தான் Duct களில், அழுக்குகளில் குடி இருந்து நமக்கு தொல்லை கொடுப்பவர்கள். ஆனா ரொம்ப நல்லவங்க. (படம் பெரிதாக்கப்பட்டுள்ளது)
3.தொழில்நுட்ப ரீதியான தகவல்களை இந்த மரமண்டைக்கும் புரியும் வகையில் விளக்கிய தங்க மச்சானுக்கு நன்றிகள். ( ஆனால் பதிவை படித்து முடித்து விட்டு "ஆகா! எங்களுக்கு நாங்களே சூனியம் வச்சிருக்கமா?" என்று அவரை மாதிரி A/C தொழிலில் இருப்பவர்களுக்கு ஆதரவாக சொன்னதை யாரிடமும் சொல்ல மாட்டேன்)
78. எச்சரிக்கை - குளிரூட்டப்பட்ட அறையில் இருப்பவரா நீங்கள் ? - பாகம் 1
Posted by
வித்யா கலைவாணி
at
8
comments
Labels: குளிர்சாதனம்
78. எச்சரிக்கை - குளிரூட்டப்பட்ட அறையில் இருப்பவரா நீங்கள் ? - பாகம் 1
சமீபத்தில் பார்த்த சில புகைப்படங்கள் என்னை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.எதை நாம் சுத்தமானது என்று நினைக்கிறோமே அதுவே நம்மை பாதிக்கும் எனும் போது மிகவும் கவலையடையச் செய்தது.முதலில் இந்த படங்களைப் பாருங்கள்.
இந்த படங்கள் அனைத்தும் Duct உள்ளே எடுக்கப் பட்டவை. Duct என்பது Centralized Air Condition இயந்திரத்தின் காற்று வரும் வழி. மேலும் விளக்குவதாக இருந்தால் நாம் இருக்கக் கூடிய இடத்தை, அலுவலகத்தை குளிரூட்ட பல வகையான இயந்திரங்கள் உள்ளன். Centralized Air Condition என்பது Chiller என்ற இயந்திரத்தை ஒரு இடத்தில் வைத்து அதன் மூலம் நீரை 5'C க்குள் குளிரூட்டுகின்றனர்.அந்த குளிர்ந்த நீரை AHU எனப்படும் இயந்திரத்தில் செலுத்தி காற்றை 10'C வரை குளிரூட்டுகின்றனர். அந்த காற்றை Duct கள் மூலம் நமக்கு தேவையான இடங்களுக்கு எடுத்து வருகின்றனர்.
அவ்வாறு எடுத்து வரப்படும் காற்று வரும் வழி தான் மேலே உள்ள படங்கள். எல்லா இடங்களிலும் இது போன்று இருப்பதில்லை. ஆனால் சரியாக பரமாரிக்கப்படாத, பழைய குளிர்சாதனப் பெட்டிகளில் தான் இது போன்று இருக்க வாய்ப்பு அதிகம்.
நாம் சுவாசிக்கக் கூடிய காற்று இப்படிபட்ட அசுத்தங்கள் வழியாக வரும் போது ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்சினைகள் இருப்பவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். சில மருத்துவமனைகளிலேயே இது போல் இருப்பது வேதனையான விஷயம்.
தீர்வுகள் :
1. நீங்கள் வசிக்கும் அல்லது வேலை செய்யும் இடத்தில் உள்ள A/C களின் fபில்டர்கள் குறைந்த பட்சம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சுத்தப்படுத்தப் படுகிறதா எனக் கண்காணியுங்கள்.
2. fபில்டர்கள் சரியான முறையில் சுத்தப்படுத்தப்படுகிறதா எனக் கண்காணியுங்கள்.
3. A/C பழையதாக இருந்தால் Duct உள்ளே எப்படி இருக்கிறது என்று கவனித்து அதை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யுங்கள்.
4. Cooling Coil மற்றும் Blower எந்த நிலையில் உள்ளது எனப்பார்த்து நடவடிக்கை எடுங்கள்.
5. Condensate கழிவு செல்லக் கூடிய Drain Pan மற்றும் Drain Tray எப்பொழுதும் சுத்தமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
டிஸ்கி : எங்களிடம் Duct இல்லாத Window, Split Type A/C தான் உள்ளது. அதனால் பயம் இல்லை என்பவர்களுக்கு நாளைய அதிர்ச்சி பதிவு.
Posted by
வித்யா கலைவாணி
at
18
comments
Labels: குளிர்சாதனம்
77. ஒரு சட்டையின் விலை ரூ 16 கோடி மட்டுமே
துபாயில் உள்ள ஒரு நட்சத்திர உணவகத்தில் நடைபெற்ற ஏலத்தில் ஒரு சட்டை இந்திய ரூபாயில் சுமார் 16 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. அமீரக திர்ஹம் 16 மில்லியன்).இந்த சட்டை ஷேக் ராஷித் பின் முகமத் அல் மக்தூம் என்ற வீரருக்கு உரியது. ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஷேக் அஹமத் பின் ஹஸார் அல் மக்தூம் என்ற துப்பாக்கி சுடும் வீரரும் இதில் கலந்து கொண்டார். (இவர் தங்கம் வென்ற போட்டியில் தான் இந்திய வீரர் R.V.S. ரத்தோர் வெள்ளிப் பதக்கம் பெற்றது நினைவிருக்கலாம்) இதில் பல விளையாட்டு வீரர்களின் ஆடைகள் ஏலம் விடப்பட்டன. இந்திய கிரிக்கெட் வீரர் டெண்டுல்கரும் இதில் தனது மனைவியுடம் கலந்து கொண்டார்.
சட்டையுடன் ஷேக் ராஷித்
டெண்டுல்கர் தனது மனைவியுடன்
நன்றி : கல்ப் நியூஸ்
டிஸ்கி : 16 கோடி இருந்தால் என்னவெல்லாம் செய்யலாம், எத்தனை நலிந்தவர்களுக்கு உதவும் முடியும் என்று யோசித்தேன். மயக்கம் :(((
Posted by
வித்யா கலைவாணி
at
5
comments
76. இரயில் சிநேகம் நாடகம் - பாடல் வீடியோ
இரயில் சிநேகம் பாடல் நிறைய பேரை கவர்ந்து விட்டது. என்வே அதன் இரு பாடல்களும் இங்கு வீடியோவுடன் வருகிறது.
(Wait Some Seconds to load)
முதல் பாடல் - இந்த வீணைக்கு தெரியாது
இரண்டாவது பாடல் - முதலும் இல்லாதது முடிவும் இல்லாதது
இந்த பாடலை யூடுயுபில் இட்டவருக்கு நன்றி.
Posted by
வித்யா கலைவாணி
at
5
comments
75.தொழில் துறையில் சவுதி அரேபியப் பெண்கள்
சவுதி அரேபியத் தீபகற்பத்தில் பொதுவாக முஸ்லிம் பெண்கள் தொழில் துறையில் ஈடுபடுவது இல்லை. ஆனாலும் தற்போது அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பல தொழில்களில் பங்கெடுத்து வருகின்றனர். சுமாராக 1500 க்கும் மேற்ப்பட்ட நிறுவனங்களை பெண்களே நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழில் முதலீடுகளில் பெண்கள் பங்கு 21 சதவீதமாகவும் உள்ளதாம். இந்நிலையில் பெண்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் ஜித்தா மாநகரில் பெண்களுக்கான தொழில் முகமையை ஆதிலா பின்த் அப்துல்லாஹ் தொடங்கி வைத்தார். இவர் சவுதி நாட்டின் மன்னர் அப்துல்லாஹ்வின் மகள். இவர் பல தொழில்களை திறம்பட நடத்தி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலே படத்தில் இருப்பவர்கள் அனைவரும் தங்களது தந்தையின் பெயரை மேலும் புகழ் பெறச் செய்பவர்கள்.
1. ஆதிலா பின்த் அப்துல்லாஹ் சவுதி நாட்டின் மன்னர் அப்துல்லாஹ்வின் மகள்
2.மரினா மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதிரின் மகள்
3. நூரி மலேசியாவின் தற்போதைய பிரதமர் அப்துல்லா பதவியின் மகள்
இவர்களைப் போல துபாய் அரசில் பல துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் லுப்னா அல் காஸிமியும் குறிப்பிடத்தக்கவர்.
பெண்கள் அனைத்து துறைகளிலும் மேம்பட வாழ்த்துவோம்...
Posted by
வித்யா கலைவாணி
at
4
comments
74. இந்த வீணைக்கு தெரியாது - ஒரு கொசுவர்த்தி
அக்கா மைபிரண்ட் புண்ணியத்தில் சமீபத்தில் ஒரு பாடல் கேட்க முடிந்தது. நல்ல அழகான பாடல். ஏதோ பூர்வ ஜென்மத்தில் கேட்டது போல் இருந்தது. இரயில் சிநேகம் என்ற தொலைக்காட்சி தொடரில் இடம் பெற்ற பாடலாம். இதைப் பற்றி கேட்டவுடன் அனைவரும் மலரும் நினைவுகளுக்கு சென்று விட்டனர். சரி நமது இணைய சகோதர சகோதரிகளுக்கும் கொஞ்சம் கொசுவர்த்தி சுத்த வைப்போம் என்று இங்கு கொண்டு வந்து விட்டேன்.
இந்த வீணைக்கு தெரியாது
இதை செய்தவன் யார் என்று
என் சொந்த பிள்ளையும் அறியாது
இதை தந்தவன் யார் என்று?
எனக்குள் அழுது ரசிக்கின்றேன்,
இரண்டையும் மடியில் சுமக்கின்றேன்
மலையில் வழுக்கி விழுந்த நதிக்கு
அடைக்கலம் தந்தது கடல் தானே!
தரையில் வழுக்கி விழுந்த கொடிக்கு
அடைக்கலம் தந்தது கிளை தானே!
எங்கோ அழுத கண்ணீர் துடைக்க
எங்கோ ஒரு விரல் இருக்கிறது!
காகம் குருவிகள் தாகம் தீர
கங்கை இன்னும் நடக்கிறது.
சொந்தம் பந்தம் என்பது எல்லாம்
சொல்லி தெரிந்த முறை தானே!
சொர்க்கம் நரகம் என்பது எல்லாம்
சூழ்நிலை கொடுத்த நிறம் தானே !
உள்ளம் என்பது சரியாக இருந்தால்
உலகம் முழுதும் இனிக்கிறது
உதிர போகும் பூவும் கூட
உயிர் வாழ்ந்திட தான் துடிக்கிறது !
( Wait Some Seconds to load)
MP3 ஆக இதை பதிவிறக்கி கேட்டுக் கொள்ளுங்கள்
இதோ லிங்க்
http://rapidshare.com/files
Posted by
வித்யா கலைவாணி
at
16
comments
73. ஷார்ஜா - அழகுப் பதுமை
இது ஒரு அறிமுகப் படலம். அமீரகத்தில் உள்ள ஷார்ஜா நகரத்தின் படங்கள் சில.பாலைவனத்தினை சோலை வனமாகியவர்களுக்கு நன்றிகள். என்னை பொறுத்து வரை துபாயை விட ஷார்ஜா அழகு. ஊரின் அமைப்பும் அருமையாக இருக்கும்.
அழகான கடற்கரை. அந்த கல்பாலத்தின் வழியே நடப்பதே ஆனந்தம்
அழகான செயற்கைக் கால்வாயில் உருவாக்கப்பட்ட பூங்கா
குளம் போல உள்ள கடல் நீரைச் சுற்றி நடைபாதையுடன் கூடிய பசுமை.
அரேபிய கலாச்சாரத்துடன் கூடிய தங்க நகைக்கடைகள்(GoldSouq )
பிரசித்திபெற்ற ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம் ( இதில் எங்கள் கோபி இருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு 30 திர்ஹம் தொ(ல்)லைபேசி அட்டை இலவசம்
உள் வீதிகள், பூங்காக்கள்,விளையாட்டு மைதானங்களுடன் உள்ள பசுமையான அரபுகள் வசிக்குமிடம். ( Tala, Daraari, Khezzamia, Al Qasimi Hospital Area)
நன்றி : கூகுள் எர்த் ( கொடுமைடா சாமி :)))))))
Posted by
வித்யா கலைவாணி
at
16
comments
Labels: வளைகுடா பகுதி
72. ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற தயாரா?
இந்தியாவில் உள்ள வாக்காளர்கள் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கியே தீருவது என்று தேர்தல் ஆணையம் ஒற்றைக் காலில் நிற்கிறது. அதுவும் தமிழக தேர்தல் ஆணையம் மிகவும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு 100 சதவீத வாக்காளார்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கி முடிக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. எனவே புகைப்படம் எடுக்க இயலாத வாக்காளர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கொடுத்தால் கூட போதும் என்று அறிவித்துள்ளது.
ஆனாலும் 10 முதல் 15 சதம் வரை இப்பணி இன்னும் நிறைவடையாமல் இருக்கிறது. என்வே அந்த 10 முதல் 15 சதம் வாக்காளர்களை நீக்கி விட்டு 100 சதவீதம் பேருக்கு வழங்கியதாக காட்ட வேண்டிய நிலை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நமது இந்திய ஜனநாயக நாட்டில் நமக்கு இருக்கும் ஒரு முக்கிய கடமை ஓட்டளிப்பது. அந்த உரிமையுடன் கூடிய கடமையை நிறைவேற்ற நமது பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பது அவசியம். என்வே உடனடியாக உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என சரி பாருங்கள். இல்லையெனில் உடனடியாக பட்டியலில் இடம் பெற வேண்டிய ஏற்பாடுகளை செய்யுங்கள்.
உங்கள் பெயரை பட்டியலில் பார்க்க
http://er2005.tn.nic.in/acwise_pdf.asp
இதை விளக்கமாக அறிய இங்கே வரவும்.
Posted by
வித்யா கலைவாணி
at
4
comments
71.அபி அப்பா ஒரு உண்மைத்தமிழரா? அதிரடி சர்வே முடிவு
அபி அப்பா ஒரு உண்மைத் தமிழர் யார் என்றெல்லாம் கேட்டு ஒரு பதிவைப் போட்டிருந்தார். அதைத் தொடர்ந்து பல பதிவுகளை தமிழ்மணத்தில் பார்க்கமுடிந்தது. ஆனால் உண்மையில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யார்? ( கவனிக்கவும் தமிழ்நாடு மட்டும்) என்பதைக் கண்டுபிடிக்கும் சோதனை தான் இது. இது 7 கட்டமான சோதனை
சோதனை : 1
முதலில் இதைக் சொடுக்கவும் நான் தமிழனா?
சோதனை : 2
உங்கள் கணிணியில் எழுத்துரு சரியாக இல்லையென்றால் பதிவிறக்கவும் செய்யவும்.
சோதனை : 3
முதலில் உள்ள Drop Down List ல் உங்கள் மாவட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
சோதனை : 4
அடுத்த உள்ள கட்டத்தில் உங்கள் தொகுதியை தேர்ந்தெடுக்கவும்
எடுத்துக்காட்டாக உங்கள் தொகுதி நாகை மாவட்டம் மயிலாடுதுறை எனில் இப்படி இருக்கும்.
சோதனை : 5
தேர்ந்தெடுத்தது சரி எனில் சமர்ப்பிக்கபொத்தானை அழுத்தவும்
சோதனை : 6
இப்போது வரும் முழு வார்டுகளுக்கான பகுதியில் உங்கள் வார்டை சொடுக்கவும். வார்டு தெரியாதவர்கள் தெருப் பெயர் மூலம் அதைக் காணலாம்
( வார்டு, தெரு தெரியாதவர்கள் இத்துடன் உங்கள் ஆட்டத்தை நிறுத்திக் கொள்ளலாம்)
சோதனை : 7
சிறிது நேரத்தில் உருவாகும் PDF பைலில் உங்கள் பெயர் இருந்தால் நீங்கள் தமிழ்நாட்டைத் சேர்ந்தவர்கள். இல்லையென்றால் உடனடியாக தமிழ்நாட்டவராக ஆக வேண்டிய முயற்சிகளை மேற்க்கொள்ளுங்கள். கீழே இருப்பது போல்.,
டிஸ்கி : இந்த பதிவுக்கும், தகவல்களுக்கும் அபி அப்பாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனாலும் புலன் விசாரணை நடத்தியதில் அவர் உண்மையில் தமிழ்நாட்டவர் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
Posted by
வித்யா கலைவாணி
at
9
comments
70. கிளைமாக்ஸ் - அசத்தலான பதிவர் உலக கிரிக்கெட் போட்டி - முடிவு
///ஆசிரியையின் விளக்கம், அன்பு நேயர்களே! தமிழ் மண நேயர்கள் அனைவரும் ஆட்டத்தின் மீது கொண்ட ஆர்வம் மற்றும் பதட்டத்தில் மைதானத்தை சேதப்படுத்த தொடங்கி விட்டதால் நேரடியாக கதையின் கடைசி கட்டத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது////
இப்போது நாம் ஆட்டத்தின் கடைசி தருணத்தில் இருக்கிறோம். இதுவரை சிவப்பு அணி 5 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 62 ஓட்டங்கள் எடுத்துள்ளது. இது ஆட்டத்தின் கடைசி ஓவர்
சிவப்பு அணி வெற்றி பெற 8 ஓட்டங்கள் வேண்டும்
வெள்ளை அணி வெற்றி பெற ஒரே ஒரு விக்கெட்டைச் சாய்த்தால் போதும்.
பெண்கள் அணியில் கடும் குழப்பம் நிலவுகிறது. ஆட்டம் சுவாரஸ்யமாகவும், மக்கள் அனைவரும் ரசிக்கும் படியும் சென்று கொண்டிருக்கிறது. மழை வேறு வருவேன் மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. நம்முடைய இலட்சியம் நிறைவேறாமல் போய் விடுமோ என்ற பதட்டத்தில் அனைவரும் இருக்கின்றனர். இதற்கிடையே கண்மணி டீச்சரிடம் வந்து கிச்சுவும், பிச்சுவும் சாக்லேட் கேக்க கைப் பையில் சாக்லேட் பூராவும் கானோம். பார்த்தால் G3 க்கு பக்கத்தில் சாக்லேட் கவர் மட்டும் கிடைக்கிறது.
சிவப்பு அணியில் செல்லா 18 ரன்களுடனும் சிவா 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். சிவப்பு அணியில் அதிகபட்சமாக ரவி 18 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கடைசி மற்றும் ஆறாவது ஓவரை வீச மின்னுது மின்னல் வருகிறார். அதிவேகப் பந்துவீச்சாளரான மின்னல், ரவி போல எல்லைக் கோடு வரை செல்லாமல் கொஞ்ச தூரத்தில் இருந்தே ஓடி வந்து மணிக்கு 140 முதல் 160 கி.மீ வரை வேகத்தில் பந்து வீசக் கூடியவர்.
ஆறாவது ஓவர் முதல் பந்து மின்னல் டு சிவா
வெற்றி பெற 6 பந்தில் 8 ரன் தேவை
இப்போது மழை பெய்தால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வெள்ளை அணி வெற்றி பெறும். ஆப் ஸ்டம்ப்புக்கு சற்று வெளியே வீசப்பட்ட பந்து. அதை ரவி பாயிண்ட்டில் அடிக்க அங்கே டீப் பாயிண்டில் இருந்த அபி அப்பா எடுத்து கீப்பர் தேவிடம் எறிகிறார். ஒரு ரன் மட்டுமே
ஆறாவது ஓவர் இரண்டாவது பந்து மின்னல் டு செல்லா
வெற்றி பெற 5 பந்தில் 7 ரன் தேவை
இப்போது வானத்தில் கருமேகங்கள் நன்றாக திரண்டிருக்கின்றன. மழை வர வாய்ப்பு அதிகமாகி வருகிறது. இந்த பந்தை மின்னல் யார்க செய்ய முயற்சிக்கிறார். ஆனால் செல்லா விலகி நன்றாக அறை எடுத்து ( அதாங்க Makes his room) அடிக்க முற்ப்பட பந்து நான்காவது விலகல் வழியாக 4 ஓட்டங்களைப் பெற்றுத் தருகிறது.
மகளிர் அணியினரின் முகத்தில் ஒரு தெளிவு தெரிகிறது. கண்மணி டீச்சர் நேராக காயத்ரியிடம் வருகிறார்.
க.டீ : காயத்ரி இப்பயும் ஒன்னும் கெட்டுப் போகலை. நீ நினைத்தால் இந்த ஆட்டத்தை நிறுத்தலாம்
கா : நம்ம சங்கத்தோட கொள்கையே அதுதான என்ன செய்யனும்னு சொல்லுங்க
க.டீ : நீ ஒரே ஒரு கவுஜய எடுத்து விடு. மழைக் கொட்டோ கொட்டுனு கொட்டி ஆட்டமே இல்லாம செய்திடலாம்
வித்யா கலைவாணி : டீச்சர் நான் வேணா பாடவா
கா : ஏய்! முந்திரிக்கொட்டை சும்மா இரு ( கண்மணி டீச்சரிடம்) சரி டீச்சர்
ஆறாவது ஓவர் மூன்றாவது பந்து மின்னல் டு செல்லா
வெற்றி பெற 4 பந்தில் 3 ரன் தேவை
இப்போது மழை பெய்தால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி சிவப்பு அணி வெற்றி பெறும். ஆட்டம் முக்கியமான கட்டத்தை எட்டி விட்டது.
மின்னல் அடுத்த பந்தை வீச தயாராகி ஓடி வருகிறார்.
காயத்ரி கவிதை பாடத் தயாராகிறார்.
"ஒரு கனவைப்போல்-
காலம் நம்
நினைவுகளிலிருந்து
தப்புகிறது
ஏறுவெயிலிடை
பனித்துளி போலவும்...
கடந்த எதிர்
இரண்டுக்குமிடையே
நுரைத்தெழும்புகிறது
வாழ்வின் மீதான பெருவிருப்பு”
மின்னல் இந்த பந்தை இன் ஸ்விங் செய்ய இம்முறையும் செல்லா பின் கால் (பேக் புட்) செய்து மீண்டும் ரூம் போட்டு அடிக்க முற்பட பந்து செல்லாவின் வலது கால் காப்பில் படுகிறது. வெள்ளை அணி வீரர்கள் அனைவரும் ஒரே குரலில் சத்தமிடுகின்றனர். கோபி மட்டும் கூவுகிறார். “How is that” நடுவர் 2 அவுட் என்று கையைத் தூக்கி விரலைக் காட்டுகிறார். வெள்ளை அணி வீரர்கள் அனைவரும் ஹே என்று கத்திக் கொண்டு குதிக்க மைதானமே அதிரும் வண்ணம் ஒரு குரல் கேட்கிறது.
“ யாரும் அவங்கவுங்க இடத்தை விட்டு நகரக்கூடாது “
காயத்ரி மட்டும் கவிதையை தொடர்ந்து பாடுகிறார்
வாழ்வைச் சுவாரசியமாக்கும்
உத்திகளிலொன்றாய்
சிப்பி சேர்க்கத் தொடங்கி
சிப்பிகள் சேகரித்தலே
வாழ்வாகியிருக்கிறது இப்போது....
சிந்தும் மழைத்துளி
ஒவ்வொன்றிலும்
சிக்கியிருக்கிறது வானம்
குரல் கொடுத்தது நம்ம செல்லா.
செல்லா : (சத்தமாக) யார ஏமாத்தலாம்னு பாக்குறீங்க. நான் யார் தெரியும்ல. இந்த மைதானத்தில இருக்கிற எல்லாரோட ஜாதகமும் என் கைல. எல்லாரோட ஐடி பாஸ்வேர்டும் என் கைல. அராஜகம் பண்ணலாம்னு பாக்கிறீங்களா?
நடுவர் 2 : இங்க பாருங்க செல்லா
செல்லா : எங்கயும் பாக்க முடியாது போப்பா
அண்ணாச்சி: என்னலே இப்படி தங்கு தங்கு குதிக்க. ஒனக்கு இப்ப என்ன செய்யனும்னு சொல்லும்வே
செல்லா : பந்து என் பேட்ல பட்டுட்டுதான் கால்ல பட்டுச்சு. அதனால நான் அவுட் இல்லை.
அண்ணாச்சி பரிதாபமாக நடுவர் 2 ஐப் பார்க்க அவர் விட்டால் அழுது விடுவது போல நிக்கிறார்.
அண்ணாச்சி commantary box ஐப் பார்த்து கையால் கட்டம் போடுகிறார்
மூன்றாவது நடுவர் நிலா தெளிவாக தன் பொக்கை வாய்ச் சிரிப்புடன் action replay பார்க்கிறார். நீண்ட யோசனைக்குப் பிறகு தன் அருகில் இருக்கும் பட்டனை அழுத்துகிறார்
காயத்ரி கவிதையை தொடர்கிறார்
உள்ளங்கைக் குழிவிற்குள்
அள்ளிய தண்ணீரில்
ஓடிக் கொண்டிருக்கிறது நதி
ஆழ்ந்தும் அகண்டும்
ஆகிருதி காட்டியும்
அலையடிக்கும் சமுத்திரச் சப்தம்
கேட்டபடியிருக்கிறது
சங்குகளுக்குள்ளும்.....
டிஜிட்டல் போர்டில் “Not out” என வருகிறது. அதே நேரம் மழை கொட்ட ஆரம்பிக்கிறது. மைதானம் தார்ப்பாயால் மூடப்படுகிறது.
காயத்ரி கவிதையை தொடர்கிறார்
எது எப்படியிருந்தென்ன?
நிகழ்வுகளனைத்தின் முடிவிலும்
தக்க வைத்துக் கொள்ளவென
என்ன இருக்கிறது?
மக்கள் அனைவரும் செய்வதறியாது திகைக்கின்றனர். இந்த சந்தர்ப்பத்தில் வித்யா கலைவாணி எப்படியாவது இவ்வளவு பேர் இருக்கும் மைதானத்தில் பாடியே ஆக வேண்டும் என்று முடிவு செய்கிறார்.
நேராக வர்ணனையாளரின் அறைக்குச் சென்று மைக்கைப் பிடுங்கி அப்போது தான் தனது மனதில் உதித்த கவிதையைப் பாடுகிறார்
?????????????????????????????????????????????????????
???????????????????????????????????????????????????????
????????????????????????????
?????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????????????
???????????????????????????????
??????????????????????????????????????????
???????????????????????????????????
??????????????????????????????????????????
??????????????????????????????????????????
மைதானத்தில் இருந்த ப.பா.சங்கம் , மற்றும் வ.வா. சங்கம் உட்பட அனைவரும் இந்த கவிதையைக் கேட்டவுடன் உயிர் பிழைத்தால் போதும் என்று தலை தெறிக்க ஓடுகின்றனர். பாடல் முடியும் போது மழை மேகம் கூட ஓடி விடுகிறது.மைதானமே காலியாக இருக்கிறது
ஆனாலும் மைதானத்தின் நடுவில் ஒருவர் மட்டும் உட்கார்ந்து தேம்பி தேம்பி அழுகிறார். வித்யா அங்கே சென்று பார்த்தால் அது நம்ம G3
G3 : வித்யா! கோபியும், லக்கியும் இந்த ஆட்டத்தில ஜெயிச்சா KFC ல ட்ரீட் தர்றதா சொன்னாங்க . சரி யார் ஜெயிச்சாலும் KFC இருக்குன்னு நினைச்சேன். அய்யோ எல்லாம் போச்சே
வித்யா : கவலைப் படாதீங்கக்கா,. யாம் இருக்க பயமேன். நான் KFC ல எடுத்துத் தர்றேன். என்று அழைத்து மைதானத்தை விட்டு வெளியே வருகிறார்.
இப்போது கேமரா பின்னோக்கி.. பின்னோக்கி.. பின்னோக்கி.. பின்னோக்கிப் போக அவர்கள் இருவரும் சிறு புள்ளியாகத் தெரிகிறார்கள்.
டிஸ்கி : இவ்வளவு பெரிய பதிவை போட்ருக்கேன், இதுக்கும் டிஸ்கி போட வேண்டி இருக்கே! என்னோட கவிதை ஏன் கேள்விக் குறியா இருக்குன்னா அதைக் கேட்டவுடன் எல்லோரும் மைதானத்தை விட்டு ஓடுன மாதிரி நீங்களும் படிச்சுட்டு பின்னூட்டம் போடாம ஓடக்கூடாதுல்ல. அதனால பின்னூட்டம் போட்டுட்டு போங்க, இல்லை இக்கவிதை உங்க வீடு தேடி இ மெயில் கொசு மெயில் சென்னை மெயில் எல்லாத்திலயும் வரக்கூடும்.
Posted by
வித்யா கலைவாணி
at
4
comments
Labels: கிரிக்கெட் தொடர்
69."மோதி பார்த்துடலாம் வாங்க- எங்க அண்ணாச்சிங்ககிட்டயேவா???"" பாகம் 5
69.அசத்தலான பதிவர் உலக கிரிக்கெட் போட்டி பாகம் 5
வணக்கம் நேயர்களே! வித்யா கலைவாணி விளையாட்டுக் குழுமம் மீண்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறது. முதல் ஓவர் முடிந்த நிலையில் வெள்ளை அணி விக்கெட் இழப்பின்றி 10 ஓட்டங்கள் எடுத்துள்ளது. அபி அப்பா 9 ஓட்டங்கள் எடுத்துள்ளார்கள். இதற்கு மேல் ஒவ்வொரு பந்துக்கும் வர்ணணை மறுக்கப் படுவதால் ஒவ்வொரு ஒவரிலும் நடைபெற்ற சுவாரஸ்யமான தகவல்கள்.
==== இது இரண்டாவது ஓவர்
* இதை லக்கி வீசினார்
* நடுவரிடம் வந்த லக்கி " பந்து கிழியும், ஆனால் கிழியாது" என்று சொல்ல அதை நடுவர் 2 வும் அவசரப்பட்டு வழிமொழிய ஒரே குழப்பம். மூன்றாவது நடுவர் நிலா வந்து நிலைமையை சமாளித்தார். பின்னர் லக்கிலுக் "விக்கெட்டுக்கு வலது புறமிருந்து வலது கை பந்து வீச்சு" எனக்கூறினார்.
* முதல் பந்தில் அபி அப்பா ஒரு ரன் எடுத்தார்
* அடுத்த மூன்று பந்துகளிலும் கோபி அபாரமாக ஆடி தொடர்ந்து 3 பவுண்டரிகள் அடித்தார்.
*ஓவரின் ஐந்தாவது பந்தை தூக்கி அடிக்க அதை லாங் ஆனில் இருந்த செல்லா பிடிக்க கோபி அவுட். புதிய வீரர் நாமக்கல் சிபி
*கடைசி பந்தை எதிர்கொண்ட அபி அப்பா ஜல்லியில் மன்னிக்கவும் கல்லியில் தட்டி விட்டு 3 ஓட்டங்கள் எடுத்தார்
26/1 - 2 Overs அபி அப்பா 13(8) சிபி 0(0)
கடைசி ஆட்டமிழப்பு கோபி (பி) செல்லா (வீ) லக்கி லுக் 12(4)
==== இது மூன்றாவது ஓவர்
*இதை மீண்டும் ரவியே வீசினார்
* அபி அப்பா முதல் பந்தில் 4 ஓட்டமும் இரண்டாவது பந்தில் 2 ஓட்டமும் எடுத்தார்
*மூன்றாவது பந்தை பற்றிய வர்ணனையை இங்கு பார்ப்போம்
மூன்றாவது பந்து ரவி டு அ.அ
லெக் சைடில் தோளுக்கு மேல் பவுன்ஸான பந்தை அ.அ ஹூக் செய்ய கிட்டத்தட்ட மிஸ்பாக் டு ஸ்ரீசாந்த் மாதிரி. இப்ப கைப்புள்ளயின் தலைக்கு மேலாக வருகிறது. இருந்த இடத்தில் இருந்தால் பிடித்து விடலாம். பந்து கீழே வருகிறது
கீழே
கீழே
கீழே
கீழே
ஆ அதென்ன ஏதோ சத்தம் ஏன் கைப்புள்ள தலைமீது இரு கைகளையும் வைத்து குனிந்து கொள்கிறார். Miss field there . அபி அப்பாவுக்கு மேலும் 4 ஓட்டங்கள். என்ன சத்தம் என்பதை அந்த காட்சியை மறு ஒளிபரப்பு செய்து பார்ப்போம். பந்து கீழே வருகிறது
கீழே
அபி பாப்பா: "கட்டத்துரை வந்துட்டான்"
ஆகா அபி பாப்பா கூட இராஜ தந்திரங்களைக் கரைத்துக் குடித்திருக்கிறது. ( என்னங்கப்பா எல்லாரும் கரைச்சுக் குடிக்க அதென்ன ரஸ்னாவா, டேங்கா) கைப்புள்ள கோவமாக சுற்றும் முற்றும் பார்க்கிறார். அபி பாப்பாவையும் பார்க்கிறார். டைகர் ஏதோ உறுமுகிறது. இது கைப்புள்ளைக்கும் டைகருக்கும் மட்டும் தெரியுமாதலால் இதோடு விடுவோம்.
*நான்காவது பந்து ரவி டு அ.அ
அதே மூன்றாவது பந்து போல. இதையும் அ.அ ஹூக் செய்ய அதே நிலை. ஆனால் கைப்புள்ளைக்கு இரண்டு அடி தள்ளி விழுகிறது. மீண்டும் 4 ஓட்டங்கள். ஆனால் பந்து டைகரை லேசாக உரசிக் கொண்டு செல்கிறது. இதனால் அ.பா & டைகர் Co கோபத்துடன் ரவியைப் பார்க்கிறது. இப்போது ரவிக்கு அதன் அர்த்தம் புரிந்து விட்டது.
*ஐந்தாவது பந்து ரவி டு அ.அ
ரவி மிகவும் உற்சாகமாக ஓடி வந்து வீசுகிறார். கிளீன் போல்ட். மிடில் ஸ்டிக் உடைந்து விட்டது. வெள்ளை அணி தனது நம்பிக்கை நட்சத்திரத்தை இழந்து விட்டது . Excellent Bowling from Ravi. Nearly 148 km/hr. புதிய வீரர் மின்னுது மின்னல்.
*ஆறாவது பந்து ரவி டு மின்னல் அவுட் கிளீன் போல்ட்.மின்னலுக்கு எஜமானிகிட்ட இருந்து போன் வரனும் போல இருக்கு . அதனால மின்னல் மாதிரி வந்தாரு மின்னல் மாதிரி போய்ட்டாரு
38/3 - 3 Overs
=======================
அடுத்த 3 ஓவர்களில் வெள்ளை அணி 30 ஓட்டங்கள் அடிக்க சிவப்பு அணிக்கு வெற்றி இலக்கு 69 ஓட்டங்கள் 6 ஓவரில்
=======================
வணக்கம் அன்பு நேயர்களே! இந்த சிறப்பான ஆட்டத்தின் இரண்டாம் பகுதியில் இருக்கிறோம். வெள்ளை அணியினர் அபாரமாக ஆடி 4 விக்கெட்களை இழந்து 69 ஓட்டங்களை எடுத்துள்ளனர். இதை எப்படி சிவப்பு அணியினர் எதிர் கொள்வார்கள் என்று பார்ப்போம். வெள்ளை அணியில் அபி அப்பா 27 ஓட்டங்களும், சிபி அவர்கள் 14 ஓட்டங்களும், தேவ் 13 ஓட்டங்களும், கோபி 12 ஓட்டங்களும் எடுக்க மின்னல் ரன் ஏதும் எடுக்க வில்லை. உதிரியாக 3 ஓட்டங்களும் கிடைத்துள்ளன. Now Over to Red Team's Dressing Room.இது சிவப்பு அணியின் டிரஸ்ஸிங் ரூம்.
மீண்டும் "இது இரகசிய கேமரா மூலம் பதிவு செய்யப் படுகிறது" என்ற ஸ்லைடுடன் படக்காட்சி வருகிறது.
சிவப்பு அணியின் அறுவரும் சோகமாக உட்காந்து இருக்கிறார்கள். இளா : நான் கடப்பாறை, மண்வெட்டியோட போயிருந்தா இவ்வளவு ஓட்டம் வந்திரிக்காது. சிவா தனது மடிக்கணிணியை பார்த்துக் கொண்டே சொல்கிறார்
சிவா : அவுங்க இப்ப 69 ரன் எடுத்திருக்காங்க
ரவி : அட தேவகவுடா, இது தான் எங்களுக்கும் தெரியுமே
சிவா : அவங்களுக்கு 4 விக்கெட் போயிருக்கு
கைப்புள்ள : இதுவும் தெரியுமில்ல நீ மேல சொல்றது.
ரவி : நமக்கு இப்ப ஒரு ஓவருக்கு 11.7 ரன் தேவை
கைப்புள்ள : என்னப்பு சொல்ற ஒரு தகர டப்பா வைச்சுக்கிட்டு! புள்ளி 7 ஓட்டம்லாம் கிரிக்கெட்ல கிடையாது. யார ஏமாத்தப் பாக்குதாப்ல
ரவி: இதுக்குத் தான் மழைக்காவது பள்ளிக்கூடத்துப் பக்கம் ஒதுங்கனும்கிறது. இவரெல்லாம் தல வேற
செல்லா : சரி விடுங்கப்பா, இப்ப என்ன செய்யனும் சொல்லு
ரவி : சராசரியா ஒரு ஓவருக்கு இரண்டு நாலு அடிச்சாப் போதும் நாம ஈஸியா ஜெயிச்சிடலாம்.
இளா : நானும் லக்கியும் பொறோம். நான் போயி கிண்டி கிழங்கு எடுத்துடுறேன்
செல்லா : நான் வேணா போகவா? நான் தைரியமான ஆளு, யாருக்கும் பயப்பட மாட்டேன்
லக்கி : என்னன்னே இருக்குற ஒரே துருப்புச் சீட்டு நீங்க தான். நீங்க நாலாவதா இறங்குங்க.
கைப்புள்ள : சரி சரி இளாவும் லக்கியும் இறங்குங்க. அபி பாப்பா சொன்னது உண்மையா இருக்குமோனு எனக்கு தோணுது. எதுக்கும் வழில வெளியே போயி பாத்துட்டு வர்றேன்.
லக்கி: தல தனியா போகாதீங்க சிவாவையும் கூட்டிட்டுப் போங்க.
கைப்புள்ள : எதுக்கு அடி வாங்கித்தராவா. எங்க சங்கத்து ஆளுங்க இருக்கு
ரவி : இராஜதந்திரங்களைக் கரைத்துக் குடித்திருக்கிறீர்கள் தல
சிவா : ( மனசுக்குள்) போடி போ! அவங்களும் அடி தான் வாங்கிதரப் போறாங்க.
( ///சங்கத்துச் சாணக்கியன் said
ஏம்மா கலைவாணி உன் கதையில் எத்தனை பேருமா இராஜதந்திரங்களைக் கரைத்துக் குடிச்சிருக்காங்க. போதுமா போதும்.//
வித்யா கலைவாணி said
சரிங்க சார். இனி யாரும் இல்லை.கி.மு 290 ஆகஸ்ட 15 ல கோரக்பூர்ல நடத்தின மேட்சுக்கு வந்ததுக்கு நன்றி. அங்க சந்திரகுப்தரை கேட்டதாச் சொல்லுங்க)
Now Over to White Team's Dressing Room.
இது வெள்ளை அணியின் டிரஸ்ஸிங் ரூம்.
மீண்டும் "இது இரகசிய கேமரா மூலம் பதிவு செய்யப் படுகிறது" என்ற ஸ்லைடுடன் படக்காட்சி வருகிறது.
அபி அப்பா : ம்ம்ம் அபி பாப்பாவுக்கு பரதநாட்டியம்லாம் கத்துக் குடுக்க ஏற்பாடு செஞ்சனே? இப்படி செஞ்சுருச்சே?
சிபி : பரதநாட்டியம் அபி பாப்பா கத்துக்கிச்சா? கத்துக்குடுத்துச்சா?
ஜொள்ளு பாண்டி : ஆமா இப்ப இதுவா முக்கியம். ஆளே இல்லாத இந்த ரூம்ல என்ன பேச்சு
தேவ் : என்ன ஜொள்ளு? என்ன சொல்ற? நாங்கள்லாம் யாரு
ஜொள்ளு பாண்டி : அது வேற இது வேற வாங்க மைதானத்துக்கு போலாம்
மின்னுது மின்னல் : சரி சரி எனக்கு நேரமாகுது. சீக்கிரமா சொல்லுங்க
அபி அப்பா : 70 ஓட்டம் தான் டார்கெட். நம்ம சுலபமா ஜெயிச்சுடலாம்.
தேவ் : அபி பாப்பா வேற சொதப்பிடுச்சே
அபி அப்பா : அது பிரச்சினையில்லை. கண்மணி டீச்சர் கிட்டப் பேசி நான் ச்சுப்புரமணிய பயன்படுத்தலாமானு பாக்குறேன்.
சிபி : வேணாம்ப்பா. பாவம் ச்சுப்பு! அந்த லட்டையே இன்னும் கக்க முடியாம கஷ்டப்படுதாம்
தேவ் : சரி போனதெல்லாம் போகட்டும். நாம நல்லா பெளலிங் போட்டு ஜெயிச்சுக் காட்டுவோம். சரி வாங்க எல்லோரும் மைதானத்துக்குள் போவோம்.
டிஸ்கி 2 : பழைய பாகங்கள் உங்கள் பார்வைக்கு
பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4
அடுத்த பாகத்தில் முடியும்
Posted by
வித்யா கலைவாணி
at
4
comments
Labels: கிரிக்கெட் தொடர்
68.பார்வையற்றோர் பயன்படுத்த வசதியாக கம்ப்யூட்டர் மென்பொருள்
பார்வையற்றோர் பயன்படுத்த வசதியாக கம்ப்யூட்டர் மென்பொருள் கண்டுபிடிப்பு
சென்னை: பார்வையற்றோர் கம்ப்யூட்டர் நிபுணராக வளர பயன்படும் மென்பொருளை மும்பையைச் சேர்ந்த் கம்ப்யூட்டர் நிபுணர் தயாரித்துள்ளார். இதுகுறித்த விளக்க கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. பார்வையற்றோரும் கம்ப்யூட்டரை பயன்படுத்துவதற்கான புதிய மென்பொருளை கண்டுபிடித்த மும்பை கிருஷ்ணகாந்த் மானே சென்னையில் உள்ள பார்வையற்றோர் மத்தியில் மென்பொருளை பயன்படுத்துவது குறித்து நேற்று விளக்கினார். இந்த நிகழ்ச்சிக்கு எல்காட் ஏற்பாடு செய்திருந்தது. சென்னை நந்தனம் எல்காட் வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் எல்காட் மேலாண் இயக்குனர் உமாசங்கர் பேசுகையில் கூறியதாவது: மும்பை டாடா அடிப்படை ஆய்வு மைய ஆலோசகர் கிருஷ்ணகாந்த் மானே பார்வையற்றவர். இவர் தனது முயற்சியால் தற்போது பார்வையற்றவர்கள் எளிதில் கம்ப்யூட்டரை பயன்படுத்துதல் புரோகிராமிங் செய்தல், இ- மெயில் அனுப்புதல் உள்ளிட்ட பணிகளை செய்வதற்கான பிரத்யேக மென்பொருளை கண்டுபிடித்துள்ளார். தற்போது பூந்தமல்லி அரசு உயர் நிலைப்பள்ளி பார்வையற்ற மாணவர்கள் மற்றும் லிட்டில் பிளவர் பார்வையற்றோர் பள்ளி மாணவர்கள் என 70 மாணவ, மாணவியருக்கு இங்கு புதிய மென்பொருளை பயன்படுத்துவது பற்றி பயிற்சியளிக்கிறார். கம்ப்யூட்டர் பயன்படுத்துவது மட்டுமல்லாமல் இந்த மென்பொருளை மேம்படுத்துவதற்கான பணிகளில் இவர்களும் ஈடுபட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்' என்றார்.
நன்றி : தினமலர்
Posted by
வித்யா கலைவாணி
at
5
comments
67."மோதி பார்த்துடலாம் வாங்க- எங்க அண்ணாச்சிங்ககிட்டயேவா???"" பாகம் 4
67.அசத்தலான பதிவர் உலக கிரிக்கெட் போட்டி பாகம் 4
இப்ப டாப் ஆங்கில்ல மைதானத்த காட்டப்படுக்கிறது. சிவப்பு அணியின் வீரர்கள் மைதானத்துக்குள்ள நுழைகிறார்கள் . பெளலிங்க போடுற End ல மைதானத்து பவுண்ட்ரி எல்லைய ஒட்டி அபி பாப்பாவும் டைகரும் நிற்கிறார்கள் . ஜொள்ளு பாண்டி டிரஸ்ஸிங் ரூம்ல இருந்து கிளம்பி ஆண்கள் பெண்கள் என்று பிரிச்சு இருக்குற இடத்தில போய் நின்னு வழக்கம் போல பெண்கள் பகுதிய பாத்துக்கிட்டு நிக்கிறாரு. இதை எல்லாம் அபி அப்பா ஒரு மர்ம புன்னகையோட பாத்து சிரிக்கிறார்.
சிவப்பு அணியின் வீரர்கள் கைய கால ஆட்டி பிராக்டீஸ் பண்ண செல்லா மட்டும் கராத்தே எல்லாம் காட்டுகிறார்.
சிவப்பு அணியின் வீரர்கள் எல்லாம் ஒண்ணா வட்டமா தோள் மேல கையப் போட்டு குனிஞ்சு பேசுகிறார்கள் . கேமரா வட்டத்துக்கு நடுவில கீழே இருக்கு.
கைப்புள்ள : கட்டதுரை இந்த மேட்ச் பாக்க வரலை. அதனால எனக்கு எந்த பயமும் இல்லை. நாம இன்னைக்கு ஜெயிச்சுக் காட்டனும்.
லக்கி : அதெல்லாம் டவுசர கிழிச்சிடலாம்
செல்லா : என் கம்ப்யூட்டர்ல எல்லாம் ரெடி பண்ணியாச்சு. அவங்களை ஈஸியா மடக்கிடலாம்.
மங்களூர் சிவா: நானும் எல்லாக் கணக்கும் பாத்து வச்சுட்டேன். எப்ப யார் பால் போடனும், யார் எங்க நிக்கனும், எவ்வளவு ரன் ரேட் வேனும் எல்லாம் ரெடி
ரவி : அபி பாப்பா நாயோட நிக்கிது. எனக்கு பயமா இருக்கு. ஏதாவது ஆஸ்பத்திரி பக்கத்துல இருக்கா?
கைப்புள்ள : பயப்படாதீங்க ரவி. நாங்கள் எல்லாம் இருக்கம்ல
ரவி : அதுதான் பயத்தை அதிகமாக்குது.
செல்லா : யாரும் பயப்பட வேண்டாம். என்னை மீறி ஒன்னும் நடக்காது. டன்
எல்லோரும் கோரசா : டன்
இப்ப கேமரா மீண்டும் டாப் ஆங்கில்ல வருது. அபி அப்பாவும் கோபியும் டிரஸ்ஸிங் ரூம்ல இருந்து வருகிறார்கள். இதை பாத்த உடனே மங்களூர் சிவா வேக வேகமா பெண்கள் பக்கம் போயி யாரையோ தேடுகிறார். வித்யா கலைவாணியப் பாத்ததும் அவர் முகம் பெளர்ணமி நிலவு மாறி ஆகுது வித்யாவைக் கூப்பிட்டு
மங்களூர் சிவா : கலைவாணிக்கா, உங்களத்தான் நாங்க நம்பி இருக்கோம். எப்படியாவது எங்களை ஜெயிக்க வைக்கனும்
வித்யா : என்னங்க சிவா! இப்படி சொல்லிட்டிங்க! உங்களுக்கு என்ன செய்யனும்னு சொல்லுங்க, நான் காத்துக்கிட்ருக்கேன்.
மங்களூர் சிவா : ஒன்னுமில்லைக்கா..........
வித்யா : அப்ப போங்க
மங்களூர் சிவா : அக்கா ஒங்க கடி தாங்க முடியலக்கா
வித்யா : நான் எப்பங்க உங்களக் கடிச்சேன்
மங்களூர் சிவா : அக்கா என்னை சோதிக்காதீங்க கோபிகிட்ட ஏதாவது பீலிங்கா பேசி அவரை அழுக வைச்சுடுங்க. உங்களோட அடுத்த பதிவுக்கு சங்கம் சார்பா 1000 பின்னூட்டம் போடறோம்.
வித்யா : (கம்மிய குரலில்) உங்ககிட்ட இருந்து இப்படி ஒரு விசயத்தை நான் எதிர்பாக்கலை. நீங்க எனக்கு அண்ணன் மாதிரினா, கோபி எனக்கு தம்பி மாதிரி நான் யாருக்கும் துரோகம் செய்ய முடியாது.
மங்களூர் சிவா சோகமான முகத்துடன் மைதானத்துக்குள் செல்கிறார். இதற்கிடையே அபி அப்பா மைதானத்துக்குள் செல்லாமல் நேராக Bowler end boundary line அருகில் நிற்கும் அபி பாப்பா & டைகர் பக்கம் போகிறார். டைகரைத் தடவிக் கொடுத்துக் கொண்டே அபி பாப்பாவிடம் ரவியைப் பார்த்து கையைக் காட்டி ஏதோ சொல்கிறார். ஏற்கனவே கிலியில் இருக்கும் ரவி இதைப் பார்த்ததும் மெர்ஸலாகி விடுகிறார். அபி அப்பா இப்போது முக மலர்ச்சியுடன் மைதானத்திற்குள் வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைகிறார்.
பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று சத்தமாக உச்ச ஸ்தாயியில் கோரசாக ஒரே மாதிரி சொல்கிறார்கள்.
எங்கே நீங்களும் சொல்லுங்க
அபி அப்பா
அபி அப்பா
அபி அப்பா
அபி அப்பா
அபி அப்பா
அபி அப்பாவும் கோபியும் பிட்சை நோக்கி நடக்க இப்ப நாம மீண்டும் கமெண்ட்ரி பாக்ஸுக்கு போகிறோம்.
வர்ணனையாளர் : அன்பான நேயர்களே! அகில உலகமும் ஆவலுடன் எதிர்பார்த்த ஒரு அருமையான ஆட்டத்தை நீங்கள் இப்போது காணப் போகிறீர்கள். சற்றுமுன் நீங்க கேட்ட அபி அப்பா, அபி அப்பா குரலே உங்களுக்கு இதை புரிய வைத்திருக்கும் என நம்புகிறேன். வீரர்கள் அனைவரும் தத்தமது இடத்தில் இருக்கின்றனர். உலக் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக வீரர்கள் பேசிக் கொள்வது வரை உங்களுக்கு இங்கு ஒலிபரப்பப்பட இருக்கிறது. இப்ப பீல்டிங்க பாக்கப் போறோம்.
கீப்பர் அவரோட இடத்திலும், செல்லா சில்லி பாயிண்டிலும், கைப்புள்ள பைன் லெக்கிலும், லக்கி லுக் டீப் பாயிண்டிலும், மங்களூர் சிவா லாங் ஆனிலும் உள்ளனர். செல்லா சில்லி பாயிண்டில் நிற்பது ஆறுக்கு ஆறு உலகிற்கே ஓர் ஆச்சர்யம். அபி அப்பாவை இது பயமுறுத்த உதவும். என்ன கைப்புள்ளயோட இராஜ தந்திரம். முதல் ஓவரைப் போட ரவி ஆயத்தமாகிறார். ரவி நடுவரிடம் வந்து சொல்கிறார். "விக்கெட்டுக்கு வலது புறமிருந்து வலது கை பந்து வீச்சு" அதை அண்ணாச்சி உரத்த குரலில் வழி மொழிகிறார்.
ஆ இது என்ன ஆச்சர்யம். எப்போதும் சொயிப் அக்தர் போல எல்லைக் கோட்டில் இருந்து ஓடி வந்து பவுலிங் செய்யக் கூடிய ரவி எல்லைக் கோட்டில் இருந்து 40 அடி தூரத்தில் நிற்கின்றார். ஏதாவது பெட்டி வாங்கிட்டாரா என்று தெரியவில்லை.
ரவி அப்படிப்பட்டவர் இல்லையே. இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது. ரவி வேற அபி பாப்பாவையும் டைகரையும் அடிக்கடி திரும்பி பார்க்கிறாரே?
அபி பாப்பா ரவியை கையை காட்டி அழைக்கிறதே. கேமராவை அங்கு குளோசப்பில் கொண்டு செல்வோம். ரவி பதுங்கி பதுங்கி வருகிறாரே. அபி பாப்பாவுக்கு 4 அடி தூரத்தில் இப்போது ரவி நிற்கிறார். அபி பாப்பா ரவியை விடுவதாக இல்லை. டைகரை கொஞ்சம் தள்ளி நிற்கச் சொல்கிறது. டைகர் ரவியை முறைத்துப் பார்த்துக் கொண்டு தள்ளி நிற்கிறது.
ரவி : அபி பாப்பா நல்ல பிள்ளையில்ல நீ. டைகரைக் கூப்பிட்டுட்டு போயிடுமா
அ.பா: போறதா, எங்கப்பா விளையாடுறத நான் பாக்கனும் மாமா
ரவி : அப்ப நீ இரு, டைகரை அனுப்பிடுமா
அ.பா : உங்களுக்கு டைகரைப் பிடிக்குமேனு தான் கூப்பிட்டு வந்தேன். நீங்க கூட சொன்னீங்களே! எங்க வீட்டுக்கு வந்தப்ப.
ரவி : நானா சொன்னேன். ஆகா துட்டு குடுத்து எனக்கு நானே சூனியம் வச்சிருக்கேனே! அபி பாப்பா இப்ப நான் என்ன செய்யனும்.
அ.பா : ஒன்னும் இல்லை. எங்க அப்பாவுக்கு ஸ்டெம்புக்கு நேரா பந்தப் போடக் கூடாது. போட்டா அவ்வளவுதான்
ரவி : நான் ஏம்மா போடறேன். அந்த மாதிரி தப்ப நான் செய்ய மாட்டேன்மா செல்லம்.
அ.பா : அது
இப்ப அபி பாப்பா அந்த இடத்தை விட்டு கிளம்பி லெக் ஸைட் பவுண்டரி வழியாவே பைன் லெக்குக்கு வருது.
ரவி இப்போது எல்லைக் கோட்டிற்கு அருகிலேயே நிற்கிறார். அங்கிருந்து ஓடி வருவார். வலது கை ஆட்டக்காரர் அபி அப்பா முதல் பந்தை எதிர் கொள்ள தயாராக இருக்கிறார். 'பார்' போற்றும் ஆறுக்கு 6 ன் முதல் பந்தை போட ரவி ஓடி வருகிறார். அவர் ஸ்டெம்புக்கு வருவதற்க்குள் நாம் ஒரு குட்டி தூக்கம் கூட போடலாம். பரவாயில்லை.
ஆட்டத்தின் முதல் பந்து அபி அப்பாவிற்கு ஆப் சைடில் விலகிச் செல்ல அபி அப்பா மட்டையால் ஓங்கி அடிக்கிறார். செல்லா 0.08 வினாடியில் குனிந்து கொள்ள பந்து லாங் ஆப் திசையில் செல்கிறது. 4 ஓட்டங்கள். முதல் பந்தில் 4 ஓட்டங்கள்., வெள்ளை அணிக்கு நல்ல துவக்கம். அபி பாப்பாவும் டைகரும் சந்தோசத்தில் குதிக்கின்றனர். செல்லா கடும் கோபத்துடன் கைப்புள்ளையைப் பார்க்க அவர் அமைதி அமைதி என்பது போல கையைக் காட்டுகிறார்.
4/0 0.1 over
இரண்டாவது பந்து ரவி டு அபி அப்பா . இது மிகவும் ஆப் சைடில் வீசப்பட்டதால் சில்லி பாயிண்டில் அபி அப்பாவைப் பார்த்துக் கொண்டு நின்ற செல்லாவின் மீது பட்டு அங்கேயே விழுகிறது. அண்ணாச்சி வைட் எனச் சொல்லி கையை விரிக்கிறார். செல்லா அதே இடத்தில் உட்காருகிறார். கைப்பிள்ளை அங்கு ஓடி வந்து சமாதானப் படுத்திகிறார். இந்த நேரத்தில் அபி அப்பா பேட்டால் பிட்சை சரி செய்வது போல அவர்கள் பக்கத்தில் சென்று சொல்கிறார்
நீங்க யாரு எப்படிப்பட்ட ஆளு! உங்க தகுதி என்ன? உங்க அந்தஸ்து.......
கைப்புள்ள அபி அப்பாவை கொல வெறியோடு பாக்கிறார். கிட்டத்தட்ட சிமன்ஸூம், ஸ்ரீசாந்தும் மோதுவது போல இருக்கிறது. ஆனாலும் கைப்புள்ள அமைதியாகி செல்லாவை லாங்க ஆப் போகச் சொல்கிறார். ஆரம்பமே அமர்க்களமாக உள்ளது.
5/0 0.1 over
இது மீண்டும் இரண்டாவது பந்து ரவி டு அ.அ
வேகமாக அடிக்க முற்ப்பட்ட அ.அப்பாவின் பேட் விளிம்பில் பட்ட பந்து இரண்டாம் விலகல் ( அதாங்க செகண்ட் சிலிப்) வழியே செல்ல இளா ஓடி வந்து எடுக்கிறார். மானாவாரி நிலத்தில் டிராக்டரைப் போட்டு உழுதது போல அந்த ஏரியாவே புழுதி கிளம்புது. கோபி அங்கிருந்து 'வாணாம்ணா' என்று உரத்த குரலில் கத்துகிறார். அ.அப்பாவும் கிரீஸூக்கு திரும்புகிறார். புழுதி அடங்கியதும் பார்த்தால் இளா இப்போது தான் புழுதிக்குள் பந்தைத் தேடி எடுக்கிறார்.
5/0 0.2 over
மூணாவது பந்து ரவி டு அ.அ
ஆப் சைடில் பவுன்ஸாகி வந்த பந்தை அ.அ விட்டு விடுகிறார்.
5/0 0.3 over
நான்காவது பந்து ரவி டு அ.அ
கிட்டத்தட்ட ஆப் ஸ்டிக்குக்கு வந்த பந்து அ.அ அதை Straight drive செய்ய முற்ப்பட கால் காப்பில் படுகிறது. இளா 'How is that' என்று கத்த . 'வேணா' என்று குரலும் வருகிறது. இந்தக் குரல் ரவி. ரவி அபி பாப்பாவை பரிதாபமாகப் பார்க்க அ.பா பெருந்தன்மையாக பரவாயில்லை எனத் தலையை ஆட்டுகிறது.
5/0 0.4 over
ரவியின் பந்து வீச்சு நன்றாக உள்ளது. Great Come Back. Now Pressure builds on Abi Appa.
ஐந்தாவது பந்து ரவி டு அ.அ
லெக் சைடில் வந்த பந்தை அ.அ ஸ்வீப் செய்ய 4 ஓட்டங்கள்
9/0 0.5 over
ஆறாவது பந்து ரவி டு அ.அ
இதுவும் சிறிது ஆப் சைடில் வந்த பந்து அ.அ அதை செல்லாவிற்கு நேராக அடிக்க ஒரு ரன் கிடைக்கிறது.
10/0 - 1 over
Posted by
வித்யா கலைவாணி
at
12
comments
Labels: கிரிக்கெட் தொடர்
66. எது உண்மை? பாகம் 5
Posted by
வித்யா கலைவாணி
at
0
comments
65.முறிந்த கனவுகள் - கவிதை? உண்மை ?
உயரே உயரே செல்லக் கூடிய எதுவும்
கீழே வந்தே தீரும்
இது நியூட்டனின் விதி
உயரே உயரே பறக்கும் கழுகும், வானூர்தியும் கூட
இரை தேடி கீழே வரும்
உயரே உயரே பறந்தாலும் வீட்டுக்குருவி ப
ருந்தாகாது என்பார்கள் பெரியவர்கள்
இராக்கெட் கூட விடுபடு திசைவேகம் அதிகமானால் தான்
பூமியின் எல்லையை விட்டு வெளியே செல்லுமாம்.
ஏனிந்த வறட்டுத்தனமான பீடிகை!
::::::::::::::::::::::::::*********** :::::::::::::::::::::::::
வானத்தை நோக்கி குறுக்காக பிரயாணித்த
இந்த ஜடப்பொருள் நேராகக்
கீழே விழுந்து விட்டது.
இந்த சிட்டுக்குருவியின் சிறகுகளும் உடைந்து விட்டன
உடைக்கப்படவில்லை என்பது உண்மையான ஆறுதல்
ஃபீனிக்ஸ் பறவைக்கு வானமே எல்லை
எத்தனை முறை சிறகுகள் எரிந்தாலும் அது முயற்ச்சிக்குமாம்
நான் ஃபீனிக்ஸ் பறவை அல்ல
சிறகுகள் எரிய ஆனால் எரிந்தது எனது சிறகுகல்ல ஆன்மா.
ஆன்மா இன்றேல் மனிதனில்லை
சிறகுகள் எரிந்தால் மீண்டும் முளைக்கும் ஆன்மா எரிந்தால்?
ஆனால் இந்த ஆன்மா எரிக்கப்படவில்லை,
எரித்துக் கொண்டேன் என்பது தான் நிதர்சனமான உண்மை
:::::::::::::::::: ************ :::::::::::::::::::::::::::::::::::
கடவுளே! ஈசலைப் போல் ஏன் என்னைப் படைத்தாய்?
படபடத்து சீக்கிரம் மரிக்கச் செய்யவா?
ஒரு சோலையில் குயில் போல கூவ வேண்டிய
இநத கட்டில்லாத காட்டுக்குயில்
பாலையில் வதங்கி விட்டது.
:::::::::: ************ ::::::::::::::::::::::
பேசுவதற்கு வாயில்லை எழுதுவதற்கு வார்த்தை இல்லை.
ஆகவே பிரிந்து செல்கிறேன்
இது போய் வருகிறேன் என்பதற்கு அல்ல
போகிறேன் என்பதற்கு
அணையப் போகும் விளக்கு பிரகாசமாக எரியுமாம்
இந்த விளக்கு எரியும் முன்பே அணைகிறது
Posted by
வித்யா கலைவாணி
at
8
comments
Labels: கவிதை என்ற பெயரில்
64."மோதி பார்த்துடலாம் வாங்க- எங்க அண்ணாச்சிங்ககிட்டயேவா???"" பாகம் 3
64.அசத்தலான பதிவர் உலக கிரிக்கெட் போட்டி பாகம் 3
கீழே வந்த காயினை வானத்திலேயே பிடிச்சது வேற யாரு நம்ம அண்ணாச்சி தான். அவரோட நிக்கிற நடுவர் யார்னு தெரியலையா? இப்பத் தெரிஞ்சிடும்
அண்ணாச்சி : ஏலே ???????? நடுவங்கனு எதுக்கு இருக்கமா? உங்க இஷ்டத்துக்கு செய்தீகளோ!
நடுவர்2 : இவங்க எப்பவுமே இப்படிதான் அண்ணாச்சி . ஆளே இல்லாத கடையில தான் டீ ஆத்துவாங்க.
கைப்புள்ளையை நோக்கி “கைப்புள்ள! நாங்க தான் இதுக்கெல்லாம் வரனும்”. அபிஅப்பாவைப் பாத்து “அபி அப்பா! உங்க இஷ்டத்துக்கு எல்லாம் எதுவும் செய்யக்கூடாது”
திரும்ப அண்ணாச்சியைப் பார்த்து “ இந்த விஷயத்தை இப்படியே விடக் கூடாது....”
அண்ணாச்சி : ஏம்ல இப்ப நீ நிப்பாட்ட போறியா இல்லயா?
கைப்புள்ளையைபாத்து அண்ணாச்சி : நீங்க டாஸ் போடுறீங்களா? அபி அப்பா போடட்டுமா?
அபி அப்பா : என்ன இப்படி சொல்லிட்டீங்க! அவர் யாரு எப்படிப்பட்ட ஆளு! அவர்...
கைப்புள்ள : அபி அப்ப்ப்ப்ப்ப்பா போதும்! போதும்! நானே போடுறேன் காயினை மேலே போடுகிறார்
அபி அப்பா : ஹெட் இல்ல இல்ல டெய்ல் இல்ல இல்ல ஹெட் இல்ல டெய்ல் (காயின் ஹெட்டில் கிடக்கிறது)
அபி அப்பா : இல்ல ஹெட் ஐ நான் செயிச்சுட்டேன்
கைப்புள்ள : என்னது இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு . இது அழுகுணி ஆட்டம். நான் வரமாட்டேன்
அபி அப்பா : என்ன இப்படி சொல்லிட்டீங்க! நீங்க யாரு எப்படிப்பட்ட ஆளு! உங்க...
கைப்புள்ள : இல்ல…. இல்ல……… நீங்கதான் வின் பண்ணீங்க
அபி அப்பா டீவியைப் பாத்து அபி அப்பா : எங்க டீம் பேட்டிங்ல ஸ்ட்ராங் . அதனால நாங்க பேட் பண்ணப் போறம்.
கைப்புள்ள டீவியைப் பாத்து கைப்புள்ள: எங்க டீம்ல பெளலிங் தான் ஸ்ட்ராங். எங்க டீம்ல ரவி, லக்கி எல்லாம் இருக்காங்க. நாங்க தான ஜெயிப்போம்.
செய்தியாளர்X : Abi Appa Won the Toss. and decided to bat first. Now over to commentary box.
வர்ணனையாளர் : இப்ப இரண்டு டீமும் வழக்கப்படி பதிவர் மீட்டிங் போற மாதிரி லேட்டா தான் வருவாங்க. அதனால இப்ப நாம கிரெளண்டல என்ன நட்க்குதுனு பாப்போம். "இது இரகசிய கேமரா மூலம் பதிவு செய்யப் படுகிறது" என்ற ஸ்லைடுடன் படக்காட்சி வருகிறது. அங்கே G3 அழுது கொண்டே கண்மணி டீச்சரிடம் வருகிறார்.
G3 : "டீச்சர்..அங்க கூல்டிரிங்ஸ், ஸ்நாக்ஸ் எல்லாம் இருக்கு. ஆனா அதோட இன்சார்ஜ் கோபி ஒன்னும் தரமாட்டேங்குறாரு..ங்ங்ங்"
வித்: "இதுக்கு ஏங்க்கா அழுகிறீங்க! என்கிட்ட சொல்ல வேண்டியது தான . எங்க இருந்தாலும் அதை எடுக்குறதுல நான் PHD, MHD, OHD எல்லாம் வாங்கிருக்கேன்ல. இப்ப இருங்க வர்றேன்". அங்க போய் கோபி கிட்ட ஏதோ சொல்றா. உடனே கோபி முகமெல்லாம் ஒரு மாதிரி ஆகி தேம்பி தேம்பி புலம்புறாரு. அந்த கேப்ல கூல்டிரிங்ஸ், ஸ்நாக்ஸ் எடுத்துட்டு வித்யா கலைவாணி திரும்புறா. அதை ஓடிப் போய் G3 வாங்குறாங்க. காயத்ரிக்கு சந்தோசம் தாங்க முடியலை.
வித்யா வந்ததும் காயத்ரி அவருக்கு நெட்டி(?) முறிக்கிறார். கண்மணி டீச்சர்: (வித்யாவைப் பாத்து) "என்னடி சொன்ன" வித்யா : என்ன கோபி! பதிவே போடலனு எல்லோரும் உங்கள கலாய்க்குறாங்களே! ஏன் இப்படினு கேட்டேன். உடனே புலம்ப ஆரம்புச்சுட்டாரு. அந்த கேப்பில எல்லாத்தையும் களவாண்டுட்டு வந்திட்டேன். இது எங்க குலத்தொழிலாக்கும்”அப்டினு சொல்லி முடிய "குலக்கல்விக்கு ஆதரவளிக்கும் கயவர்கள் ஒழிக! அவர்களை ஒழிக்காமல் விட மாட்டோம்" என்று ஒரு குரல் வருகிறது. கேமரா மீண்டும் commentary box க்கு போகுது. அங்கே
வர்ணனையாளர் : மக்கள் அனைவரும் சந்தோசமா இருக்காங்க. இப்ப நாம வெள்ளை அணியின் டிரஸ்ஸிங் ரூம் போறோம். Over to White Team's Dressing Room. மீண்டும் "இது இரகசிய கேமரா மூலம் பதிவு செய்யப் படுகிறது" என்ற ஸ்லைடுடன் படக்காட்சி வருகிறது. அங்கே அபி அப்பா கோபமாக இருக்கிறார்.
அபி அப்பா : (சத்தமாக) எவன் இதுக்கு சிக்ஸ்6 னு பேர் வச்சது. எனக்கு 8 தான் ராசியான நம்பரு. நாம 8 பேரோட ஆடுனாதான் ஜெயிப்போம்.
கோபி : நாம வேணா இரண்டு பேர் அவுட் ஆகிட்டு வந்து திரும்பப் போயி விளையாடுவோமே? அப்ப 8 கணக்கு சரியாகிடும்.
நாமக்கல் சிபி : அங்க தான் மங்களூர் சிவா இருக்காரே? இன்னைக்கு சென்செக்ஸ் 17349.324687 ல முடிஞ்சுச்சு இன்னைக்கு டாலர் மதிப்பு 40.3546855. இது நேத்த விட 0.000024577665 அதிகம்னு பதிவு போடுரவரு. 6 விக்கெட்ட கணக்கு பண்ண மாட்டாரா? (அபி அப்பாகிட்ட போயி) கவலைபடாதீங்க நாம எல்லாரும் ஆளுக்கு 8 ரன் எடுப்போம். 48 ரன் வரும் எக்ஸ்ட்ரா ஒரு 8 வரும். ஆக 56 ரன் நமக்கு போதும் தானே?
அபி அப்பா : நீங்க சொல்றதும் சரிதான். அபி பாப்பாவும் டைகரும் அவங்க ஸ்பாட்டுக்கு போயிட்டாங்க . சரி ஓபனிங் நான் தான் போவேன். ஏன்னா நாந்தான் நிறைய பதிவு போடுறேன். சாட் பண்ணுறேன். அதனால என்க்குத் தான் சான்ஸ்.
தேவ் : நானும் தான் புதுசா பதிவு போட்டிருக்கேன் .. அதுக்கு டெம்ப்ளேட் ரெடி பண்ணினேன்.. சுமார் 720 லைன் கோடு எழுதினேன... எழுதண கோடு தவிர கண்ட இடத்துல்ல களவாண்டு சுமார் 400 லைன் காப்பி பேஸ்ட் பண்ணினேன.. 300 விட்ஜிட் வைத்தேன்... 200 லிங்க் கொடுத்தேன்... 100 இடத்துல்ல டேக் பண்ணினேன்.. 10 திரட்டியிலே சேர்த்தேன்... 5 சங்கத்துல்ல சேர்த்தேன்.. கும்மி அடித்தேன்.. கும்மி பதிவர்தெய்வங்கள், மொக்க பதிவர் உபதெய்வங்கள், ஜல்லி பதிவர் குட்டி தெய்வங்கள்ன்னு பின்னூட்டம் வாங்கினேன்...
நாமக்கல் சிபி : ஆமா இப்படி பண்ணீங்கண்ணா 6 ஓவர்ல 6 ரன் கூட எடுக்க முடியாது. நீங்க நாலாவதா போங்க
கோபி : அப்ப அபி அப்பாவோட யாரு இறங்குறது.
அபி அப்பா : ஜொள்ளு பாண்டிய இறக்குவமா?
நாமக்கல் சிபி : ஜொள்ளு பாண்டி வேணாம். இப்ப தான் மகளிர் பக்கம் பாத்து கொஞ்சமா ஜொள்ளு விட ஆரம்பிச்சு இருக்காரு. கடைசியா அனுப்பினாதான் ஜொள்ளு பூரா பிட்ச்ல வடிஞ்சு அவுங்க பேட் பண்ணும் போது நல்லா வழுக்கி விழுவாங்க
கோபி : இராஜ தந்திரங்களை கரைத்துக் குடித்திருக்கிறீர்கள் சிபி! சரி நானே போறேன். அடுத்து காட்சி மாறுகிறது. Over to Red Team's Dressing Room.இது சிவப்பு அணியின் டிரஸ்ஸிங் ரூம். மீண்டும் "இது இரகசிய கேமரா மூலம் பதிவு செய்யப் படுகிறது" என்ற ஸ்லைடுடன் படக்காட்சி வருகிறது. இளா கோபமா சுவத்தைப் பாத்துக்கிட்டு நிக்கிறாரு. கைப்புள்ள கையை பிசைஞ்சுக்கிட்டு நிக்கிறாரு அப்பதான் செல்லா உள்ள வர்ராரு.
செல்லா : (கோபமாக) என்ன ? என்ன நடக்குது இங்க?
லக்கி : ஒன்னும் இல்லைன்னே! நம்ம இளா விக்கெட் கீப்பிங் பண்றப்ப மண் வெட்டி, கடப்பாறை எல்லாம் எடுத்துட்டு போனுமாமாம். நான் இல்லை, அப்படி போனா டவுசர் கிழிஞ்சுடும்னு சொன்னேன். அதுக்கு கோவிச்சுக்கிட்டாரு
செல்லா : ( இளாவிடம் அமைதியாக) என்னங்க இளா இது, நானே பனியன், சட்டை எல்லாம் போட்டுட்டு வந்திருக்கேன். நீங்க இப்படி அடம் புடிக்கலாமா? செல்லா அமைதியா பேசறத பாக்கிற இளா அமைதியாகி கீப்பிங் பேடக் கட்றாரு.
டிஸ்கி : இதைப் படித்து சிரித்தவர்கள், சிரிக்காதவர்கள், காமெடி, மொக்கை, என்றவர்கள், எரிச்சல் அடைந்தவர்கள் அனைவரும் தயவு செய்து கீழே உள்ள இடுகையை படித்து விட்டுச் செல்லவும்.
Posted by
வித்யா கலைவாணி
at
3
comments
Labels: கிரிக்கெட் தொடர்
63.எது உண்மையின் ஒரு விளக்கம்
இந்த மாதத்தின் ஆரம்பத்தில் எது உண்மை என்ற தலைப்பில் சில இடுகைகளை இட்டிருந்தேன். அதன் தொடர்ச்சியான விளக்கம் தான் இது. அந்த இடுகைகளை வாசிக்காதவர்கள் முதலில் அதை சிறிது ஆழமாக கவனித்து விட்டு வரவும். இதில் தரப்பட்ட கேள்விகளை உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். பதிலையும் யோசியுங்கள்
அதோ இவைதாம்
எது உண்மை பாகம் 2
எது உண்மை பாகம் 3
எது உண்மை பாகம் 4
ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாத விஷயங்களை ஒரே ஒரு புகைப் படத்தின் மூலம் விளக்கி விட முடியும்.
இது இல்லாமல் புகைப்படத்தால் விளக்க இயலாத சில கேள்விகளும் என்னிடம் உள்ளன.
1. நீங்கள் நல்ல பசியோடு இருக்கும் போது நெய்ச் சோறும், கோழி குருமாவும் கிடைக்கிறது. ( சைவப்பிரியர்கள் ஒரு நல்ல சாப்பாடு என்று வையுங்கள்). அதில் முதல் கவளம் வைக்கும் போது யாராவது கையைத் தட்டி விட்டு சாப்பாடு கிடையாது என்று சொன்னால் உங்களது நிலை எப்படி இருக்கும்?
2. நல்ல பாலைவனத்தில் கடும் வெயிலில் நீங்கள் தாகத்தில் இருக்கும் போது ஒருவர் குளிர்ந்த சுவையான நீர் கொடுக்க மற்றொருவர் அதை தடுத்தால் உங்களது நிலை எப்படி இருக்கும்?
3.நல்ல சம்பளத்தில் மனதுக்குப் பிடித்த வேலையில் இருக்கிறீர்கள். திடீரென்று உங்களை வேலையை விட்டு தூக்கினால் உங்களுக்கு எப்படி இருக்கும்.
இப்படி இழப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் நல்ல சாப்பாடு கிடைத்த உடனோ, தண்ணீர் கிடைத்த உடனோ, அதை விட நல்ல வேலை கிடைத்த உடனோ நாம் அதை மறந்து விடலாம். ஆனால் நன்றாகப் படிக்கக் கூடிய ஒரு மாண்வனுக்கோ, மாண்விக்கோ கல்வி மறுக்கப் படுமானால் அதன் நிலை என்ன தெரியுமா? பல இரவுகள் தூக்கமின்றி கண்ணீருடன் இருந்தவர்களை என்க்குத் தெரியும். கல்வி என்பது 95 விகிதம் பேருக்கு வித்தியாசமானது. ஒருவனின் கல்வி தொடராமல் இடை வெளி விழுந்தால் மீண்டும் அவனால் அடுத்தடுத்த வருடங்களில் அதே பழைய வேகத்துடன் செல்ல இயலாது. ஆனால் கசப்பான உண்மை என்னவென்றால் வறுமையின் காரணமாக இடைநிறுத்தப்படும் கல்வி 99 சதவீதம் மீண்டும் தொடர வாய்ப்பே இல்லை என்பது தான்.
சரி இந்த பதிவின் நோக்கத்திற்கு வருவோம். இவ்வாறு கல்வி இடை நிறுத்தம் இந்தியா போன்ற நாடுகளில் மிகவும் அதிகமாக இருக்கிறது. அரசாங்கங்களும் ஆரம்ப கல்வி வரையாவது கட்டாயம் படிக்க வைக்க வேண்டும் என பல திட்டங்களைத் தீட்டி செயல் படுத்தி வருகிறது. வருங்கால சமுதாயம் முன்னேற்றப் பாதையில் செல்ல கல்வி மிக மிக அவசியம். கல்வி இடை நிறுத்தத்தை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்பதே இந்த பதிவின் குறிக்கோள்.
நான் யாரையும் இந்த உலகைத் திருத்த வாருங்கள் என்றோ, இந்தியாவைத் திருத்த வாருங்கள் என்றோ அழைக்கவில்லை. இதைப் படிக்கக் கூடியவர்கள் நிச்சயமாக நல்ல வேலையிலோ, வசதியானவர்களாகவே இருக்கக் கூடும். உங்களுக்குத் தான் இந்த அறைகூவல். நீங்கள் இந்தியாவில் உங்களுக்கு நன்கு தெரிந்த ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அது உங்களது சொந்த ஊரிலோ, நீங்கள் தற்போது இருக்கும் இடத்திலோ இருக்கட்டும். அதில் எவ்வளவு மாணவ மாணவிகள் தங்களது கல்வியை இடை நிறுத்தப் போகிறார்கள் என்று பாருங்கள். குறிப்பாக அரசுப் பள்ளிகளில் நன்றாகப் படித்துவிட்டு அடுத்த வகுப்பிற்கு நோட்டுப் புத்தகங்கள் வாங்க வழியின்றி படிப்பை நிறுத்துபவர்கள் யார் என்று கவனியுங்கள். உங்களால் அது இயலாதென்றால் உங்களது நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ விசாரியுங்கள். 500 ரூபாய் இருந்தால் பத்தாம் வகுப்பிற்க்கு புத்தகங்களை வாங்கி விடலாம். 1000 ரூபாய் இருந்தால் பதினொன்றாம் வகுப்பிற்க்கோ, பனிரெண்டாம் வகுப்பிற்க்கோ புத்தகங்களை வாங்கி விடலாம்.
அப்படிபட்டவர்களுக்கு நீங்கள் உங்களுடைய பணத்தில் இருந்து உதவுங்கள்.
5000 ரூபாய் இருந்தால் ஒரு I.T.I லோ 10000 ரூபாய் இருந்தால் ஒரு பாலிடெக்னிக்க்கிலோ சேரலாம். அவர்களுக்கும் உதவுங்கள். காய்ச்சல் என்று மருத்துவரிடம் சென்றால் 1000, 2000 செலவழிக்கத் தயாராக இருக்கிறோம். 5000 ரூபாயில் செல்பேசி வாங்குகிறோம். 10000 ரூபாயில் சுற்றுலா செல்கிறோம். ஏன் மற்றவர்களின் வாழ்க்கையின் ஈடேற்றத்திற்காக கொஞ்சம் செலவு செய்யக் கூடாது?. அதிகம் தேவை இல்லை. உங்களது மாத வருவாயில் 2 அல்லது 3 சதமோ நல்ல மனதிருந்தால் 5 சதமோ ஒதுக்குங்கள். ஒவ்வோரு வருடமும் பள்ளி திற்க்கும் காலங்களில் அதை திட்டமிட்டு தகுதியான மாணவ மாணவிகளுக்கு உதவிங்கள். அதில் தான் உண்மையான இன்பம் கிடைக்கும். அதை ருசித்துப் பாருங்கள். நாங்கள் எங்களது வருவாயில் 10 சதவீதம் இது போன்ற நல்ல காரியங்களுக்கு ஒதுக்குகிறோம்.
மாடல்ல மற்றை யவை
என்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண் டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
Posted by
வித்யா கலைவாணி
at
6
comments
62."மோதி பார்த்துடலாம் வாங்க- எங்க அண்ணாச்சிங்ககிட்டயேவா???"" பாகம் 2
62.அசத்தலான பதிவர் உலக கிரிக்கெட் போட்டி பாகம் 2
வர்ணனையாளர் : வணக்கம். நேயர்கள் அனைவருக்கும் வித்யா கலைவாணியின் விளையாட்டுக் குழுமம் இந்த நேர்முக மறைமுக வர்ணனைக்கு அன்புடன் வரவேற்கிறது. தமிழகத்தின் தலை சிறந்த கிரிக்கெட் வர்ணணையாளர் மதிப்பிற்குரிய ஜனாப் சாத்தான் குளம் அப்துல் ஜப்பார் அவர்கள் போல் அளிக்க இயலாவிட்டாலும் கூட எங்களால் முடிந்த அளவு உங்களுக்கு தொகுத்து அளிக்கிறோம். இந்தியாவிற்கே வழிகாட்ட வேண்டும் என்ற நோக்கில் தமிழ் மண பதிவாளர்கள் சார்பாக இப்போட்டி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இரு அணி வீரர்களும் பல தேசங்களில் இருந்தும் வந்துள்ளனர்.
குறிப்பாக ரவி அவர்கள் கொரியாவில் இருந்து வரும் போது ப்ளைட் உள்ளேயே ப்ராக்டீஸ் ஆரம்பித்ததாக கொரியன் ஏர்லைன்ஸ் செய்திக் குறிப்பு ஒன்று DNA வை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அமீரகத்தைச் சேர்ந்த பதிவர்கள் பிராக்டீசுக்கு சார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தை தேர்ந்தெடுத்து, ஆனாலும் அது வசதி குறைவாக இருக்கும் என்பதால் Sheik Zayed ரோட்டிலேயே ப்ராக்டீஸ்செய்ததாக Gulf News, Khaleej Times ல் செய்திகள் வந்துள்ளன.
சரி நேயர்களே. முதலில் மைதானத்தைப் பார்வையிடுவோம். மைதானம் வரும் வழி எங்கும் வ.வா.சங்கத்தின் சார்பில் வரவேற்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. பல இடங்களில் வளைவுகளும் வைக்கப்பட்டுள்ளன். மைதானம் முழுவதும் கட்டுக்கடங்காத கூட்டமாக உள்ளது. மக்களின் மீது உள்ள நம்பிக்கையின் காரணமாக மைதானத்திற்கும் பார்வையாளர் அரங்குக்கும் இடையே வேலி ஏதும் போடப்படவில்லை. எல்லைக் கோட்டுக்கு அருகில் தமிழ் ப்ளாக்குகளில் எழுதுபவர்கள் தங்களது விளம்பரப்பலகைகளை வைத்துள்ளனர். சில பலகைகளில் ஒளிப்படங்களும் ஓடுகின்றன.
நமது சிறப்பு செய்தியாளர்X மைதானத்தில் உள்ளார். அவரை இப்போது காண்போம்.
வர்ணனையாளர் : ஹலோ! இப்ப எங்க இருக்கீங்க
செய்தியாளர்X: இங்க பாருங்க. கொஞ்சம் பொறுக்கனும். மைக், கேமராலாம் இன்னும் ரெடி ஆகலை. எப்பவுமே உங்களுக்கு அவசரம் தானா? பெண் புத்தி பின் புத்தி தான?
வர் : இதெல்லாம் முதலயே ரெடி பண்ணி வைக்காம உங்களுக்கு வேற என்ன வேலை. காலைலயே வாங்கிக் கட்டனுமாக்கும். சரி நேயர்களே மைக் சரியாகும் வரை நாம் சிறிது விளம்பரங்களைப் பார்ப்போம்.
டிங் டிங் டிங்
சன் வொர்த் எமர்ஜென்ஸி லைட்டுகள் நீடித்த உழைப்பிற்கும் , பாதுகாப்பிற்கும் சன் வொர்த் எமர்ஜென்ஸி லைட்டுகள். கொரிய த்யாரிப்பில் யார் மண்டையையும் உடைக்கும் திறன் கொண்டது சன் வொர்த் எமர்ஜென்ஸி லைட்டுகள்
டிங் டிங் டிங்
வர்ணனையாளர் : இப்ப நம்ம செய்தியாளரின் மைக் சரியாகி விட்டது.அவரிடம் செல்வோம்.
செய்தியாளர்X : இங்க பாருங்க இங்கே கட்டுக்கடங்காத கூட்டமாக உள்ளது
வர்: அதெல்லாம் நாங்க சொல்லியாச்சு வேற ஏதாவது சொல்லு
செ X: இங்க பாருங்க இதுக்கு தான் பெண்களெல்லாம் வர்ணணைக்கு வரக் கூடாதுன்னு சொன்னேன். என்ன எப்ப சொல்லனும்னு எங்களுக்கு தெரியும். இரு அணி வீரர்களும் இப்ப களத்தில நிக்கிறாங்க. நேத்து இரவு முழுவதும் நெட் ப்ராக்டீஸ் அதாவது கும்மி அடிச்சனால எல்லாம் தூக்கக் கலக்கத்துல இருக்காங்க. வெயிலும் கொஞ்சமா 49'C தான் இருக்கு. வறண்ட வானிலை தான். ஆனாலும் சென்னை வானிலை ஆய்வு மையம் மழை வந்தாலும் வரலாம். லேசாகவோ, கனமாகவோ, இடியுடனோ, இடி இல்லாமலொ, மழையோ மழை இல்லாமலோ இருக்கும் எனவும், மீனவர்கள் மீன் பிடிக்க போகலாம், போகக்கூடாது என்வும் கூறி உள்ளது. ஆனால் இப்போதைக்கு பெண்கள் பகுதியில இருந்து மட்டும் கொஞ்சம் ஜில்லுன்னு காத்து வருது.
பெண்களுக்கு என்று பிரத்யேகமாக இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து ஜெஸிலா அவர்கள் எங்களுக்கு எங்கு வேண்டுமானாலும் உட்காரும் உரிமை வேண்டும் எனக் கூறி வெளி நடப்பு செய்ததாக மைதானத்தில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
வர்: ஆமா இதுல கூட பெண்களுக்கு உரிமை இல்லையா? அவங்க செஞ்சது சரி தான். சரி பார்வையாளர்கள் எப்படி பீல் பண்றாங்க
செX: இங்க பாருங்க! பார்வையாளர்கள் கிடக்காங்க. பாவையர்களப் பத்தி பேசுற நேரத்தில நீங்க வேற விவஸ்தை இல்லாம.
நேத்து இரவு முழுவதும் ப.பா.சங்கம் சார்பாக இரகசிய ஆலோசனை நடந்தது. எப்படியாவது இதை தடுத்து நிறுத்தனும்னு. ஆனா இறுதியா அதே நேரம் உறுதியாக கண்மணி டீச்சர் எப்படியும் இது உருப்படப் போறதில்லை, அதனால நம்ம சங்கத்து காச வீணாக்க வேணாமுனு சொல்லிட்டாங்க.. ஆனாலும் எல்லாரும் வேடிக்கை பாக்க வந்திருக்காங்க. கண்மணி டீச்சர் தலைமையில் கவிதாயினி காயத்ரி, அனு, .;;மை பிரண்ட்::.., இம்சை அரசி மற்றும் காயத்ரியின் புதிய சிஷ்யை வித்யா கலைவாணி (?) எல்லோரும் வந்திருக்காங்க. ஆனா G3 மட்டும் அப்ப இருந்தே கூல்டிரிங்ஸ் இருக்குற இடத்தையே நோட்டம் விடுறாங்க. இந்த பிட்சுல டாஸ் வின் பண்ணுறவங்க முதல பேட் செய்வாங்கனு எதிர்பாக்கலாம். ஓவர் டூ கமெண்ட்ரி பாக்ஸ்
வர்: நன்றி ! நேயர்களே ! பெண்களுக்கு அவர்களுக்கான உரிமைகள் வழங்கப்பட்டே தீர வேண்டும். இது போல பெண்களுக்கு ஒரு கிரிக்கெட் ஆட்டம் நடத்த யோசிக்கப்பட்டது. ஆனால் இந்திய பெண்கள் அணி ஆண்கள் அணி போல் இல்லாமல் சிறப்பாக செயல்படுவதால் அது கைவிடப்பட்டுள்ளது.
( பலத்த கரவொலி). ஹலோ படிச்சா போதுமா நீங்களும் கை தட்டுங்க
கைப்புள்ள : அபி அப்பா நீங்க டாஸ் போடுறீங்களா? நான் போடவா?
அபி அப்பா : என்ன கைப்புள்ள ! இப்படி சொல்லிட்டீங்க! நீங்க யாரு எப்படிப்பட்ட ஆளு! உங்க தகுதி என்ன? உங்க அந்தஸ்து என்ன? இந்த கூட்டமே உங்களுக்காகத்தான் வந்திருக்கு! அதுமில்லாம……………..
கைப்புள்ள : அபி அப்பா இதோட நிப்பாட்டுங்க. இப்படி சொல்லி சொல்லி தான் என் உடம்ப புண்ணா….க்கி வச்சிருக்கீங்க. குடுங்க காயினை. நானே போடுறேன்.
கைப்புள்ள காயினை மேலே தூக்கிப் போடுறாரு
மேலே
மேலே
மேலே
மேலே
மேலே போயி
கீழே
கீழே
கீழே
கீழே வருது
அப்ப கருப்பு கோட் போட்ட இரண்டு அம்பயர்கள் நிக்கிறாங்க. அதில ஒருத்தர் கையில காயின் இருக்கு
டிஸ்கி : இண்டர்போலின் தகவலின் படி இந்த கதையின் "திருட்டு பதிவு" வலையுலகத்தில் உலாவுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அவைகள் அனைத்தும் மேம்படுத்தப் படாதவைகள். எனவே அசல் பிரதிக்கு இங்கு மட்டும் வரவும். வித்யா கலைவாணி
Posted by
வித்யா கலைவாணி
at
19
comments
Labels: கிரிக்கெட் தொடர்
61."மோதி பார்த்துடலாம் வாங்க- எங்க அண்ணாச்சிங்ககிட்டயேவா???""
61.அசத்தலான பதிவர் உலக கிரிக்கெட் போட்டி பாகம் 1
"மோதி பார்த்துடலாம் வாங்க- எங்க அண்ணாச்சிங்ககிட்டயேவா???""
Twenty20 உலகக் கோப்பைக்கு பிறகு இந்தியா அணி ஆஸ்திரேலியாவிடம் அடிமேல் அடி வாங்குகிறது. இதை அடுத்து அனைத்து வலையுலக தமிழ் மண நண்பர்கள் சார்பாக இதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என ஆலோசனை நடந்தது. பலசுற்று பேச்சு வார்த்தைக்கும், பல ப்ளேட் பஜ்ஜி, சொஜ்ஜி, அமீரக நண்பர்களின் பிரியாணி ஏப்பங்களுக்கும் பிறகு இறுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அதாவது நாமே ICL, IPL, BPL... போல இரு அணி அமைத்து ஒரு ஆறுக்கு ஆறு ஆட்டம் ஆடுவது என்றும், இதற்கு சகோதரி வித்யா கலைவாணியின் கீழ்கண்ட LOGO வை பயன்படுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இதை அடுத்து நடைபெற்ற பத்திரிக்கை நிருபர்கள் கூட்டத்தில் இரு அணி வீரர்களையும் பத்திரிக்கைத் தொடர்பாளர் 'ஜி' அறிவித்தார்.
அணி விபரம் பின்வருமாறு
வெள்ளை அணி
1. அபி அப்பா( அணித்தலைவர்)
2.ஜொள்ளு பாண்டி
3. தேவ் ( விக்கெட் கீப்பர்)
4.கோபி
4.மின்னுது மின்னல்
6.நாமக்கல் சிபி
சிவப்பு அணி
1. கைப்புள்ள ( அணித்தலைவர்)
2. லக்கிலுக்
3.இளா ( விக்கெட் கீப்பர்)
4. ரவி
5. மங்களூர் சிவா
6. செல்லா
நடுவர்களாக நமது மதிப்பிற்குரிய இரண்டு வலைஞர்கள்(?) செயல்படுவார்கள்.
மேலும் இதுபற்றி 'ஜி' கூறும் போது Va.Vaa. Sangam, மற்றும் Pa.Paa.Sangam இரண்டும் இதற்கு முழு ஆதரவளிக்கிறது என்றும், அச்சங்கங்களின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் இதில் கலந்து கொல்(?)வார்கள் என்றும் தெரிவித்தார். மேலும் பிரதான விருந்தினர்களாக அபி பாப்பாவும், டைகரும் கலந்து கொள்கின்றனர்.
blogspot ல் முதன் முறையாக இதன் நேர்முக, மறைமுக வர்ணனை நமது http://kalavani.blogspot.com/ல் வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Posted by
வித்யா கலைவாணி
at
22
comments
Labels: கிரிக்கெட் தொடர்

