94. டாலரில் எண்ணைய் விற்பனையை நிறுத்த கோரிக்கை.

19 நவம்பர் 2007 அன்று இங்கு ரியாத் மாநகரில் OPEC எனப்படும் (Organization of the Petroleum Exporting Countries ) எண்ணைய் எடுக்கும் நாடுகளின் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஈரானின் அதிபர் அஹமத்திந்நிஜாத் எண்ணைய் விற்பனை டாலரில் இருப்பதை மாற்றி வேறு கரன்ஸியில் செயல்படுத்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார். அவர் மேலும் கூறும் போது " நாம் தரும் எண்ணைய்க்கு மதிப்பில்லாத காகிதங்களைப் பெறுவதை நிறுத்த வேண்டுமென்றும், டாலரின் மதிப்பு வீழ்ச்சியை நோக்கி மேலும் சென்று கொண்டிருக்கிறது." என்றார்.

அந்நிஜாத்தின் வேண்டுகோளை வெனிசுலா அதிபரும், மற்றும் ஈக்குவடார் நாட்டின் பிரதிநிதகளும் ஆதரித்தனர். வளைகுடாவில் உள்ள பல நாடுகள் இதை ஆதரிக்கவில்லை. ஆனாலும் எண்ணையின் விலை பாரலுக்கு 100 டாலரை நெருங்குவதையும் அந்நாடுகள் கவலையுடன் குறிப்பிட்டன. இதற்கு டாலரின் வீழ்ச்சியே காரணம்.

இந்நிலையில் வரும் டிசம்பரில் அபுதாபியில் நடைபெறும் OPEC நாடுகளின் நிதியமைச்சர்களின் இது குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. அவ்வாறு அந்த விவாதத்தில் டாலரிலிருந்து வேறு கரன்ஸிக்கு மாற முடிவெடுத்தால் அது ஆசியக் கண்டத்தில் ஒரு பொருளாதார மறுமலர்ச்சிக்கு வி்த்திடும் என நம்பலாம்.

மேலும் புவி வெப்பமடைதலில் இருந்து உலகைக் காக்க அனைவரும் இணைந்து பணியாற்றவும், அதற்கான நிதி ஒதுக்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

இது தொடர்பான பழைய பதிவு ஒன்று பார்வைக்கு
http://kalavani.blogspot.com/2007/11/81_01.html
http://satrumun.com/?p=3575

செய்தி மூலம்
அல் ஜஸீரா

அரப் நியூஸ்

8 comments:

said...

கேக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு. .

முதுகெலும்பில்லாத வளைகுடா தேசங்கள் இந்த துணிச்சலான முடிவை மட்டும் எடுத்துவிட்டார்களேன்றால் காலமெல்லாம் வளையாமல் வாழலாம்.

Anonymous said...

ஆக ஈரானுக்கு ஆப்பு தயாராகிட்டிருக்கு-ன்னு தெரிஞ்சிக்கிலாம். சாவேஸுக்கும் சேத்துதான்.

பேரழிவு ஆயுதங்கள், அல்கொய்தாவோடு கூட்டணி என்ற போர்வையில் சதாமை சாய்த்ததற்கு வலுவான மற்றொரு காரணம் அவர் எண்ணெய் வர்த்தகத்தை யூரோவுக்கு மாற்ற முயன்றது என்று படித்த நினைவு.

பிரிஞ்ச மாடுக தப்ப உணர்ந்து திருந்து திரும்பி ஒண்ணா சேந்தா ....

அன்புடன்
முத்துக்குமார்

said...

எண்ணய் டாலரில் விற்பனை செய்வதால் டாலருக்கு கிடைக்கும் நன்மைகளை இந்த பதிவில் காணலாம்
http://tamilfuser.blogspot.com/2007/09/blog-post.html

said...

/ முதுகெலும்பில்லாத வளைகுடா தேசங்கள் இந்த துணிச்சலான முடிவை மட்டும் எடுத்துவிட்டார்களேன்றால் காலமெல்லாம் வளையாமல் வாழலாம். //

அரபு நாடுகளின் கை ஓங்கினால்தான் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளின் பிடியிலிருந்து தங்களை காத்துக்கொள்ள முடியும்.
இப்போது அவர்கள் எதுக்கும் சிறப்பான முடிவில் தான் அவர்களின் எதிர்காலம் அடங்கியுள்ளது.
இந்த பதிவை தந்த வித்யா கலைவாணி-க்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

said...

\ஆசியக் கண்டத்தில் ஒரு பொருளாதார மறுமலர்ச்சிக்கு வி்த்திடும் என நம்பலாம்.\\

நல்ல விஷயம் :) ஆனா இதனால நம்ம நாட்டுக்கு என்ன பயன்னு சொல்லுங்களோன்.

Anonymous said...

//முதுகெலும்பில்லாத வளைகுடா தேசங்கள் இந்த துணிச்சலான முடிவை மட்டும் எடுத்துவிட்டார்களேன்றால் காலமெல்லாம் வளையாமல் வாழலாம்.///

சரியான கருத்து.
துணிச்சலின்மையின் இருக்கையில் ஒளிந்திருப்பதென்னவோ "நாற்காலிஆசை"தான். துணிச்சலான சாவேஸ்கள் வளைகுடா மக்களுக்கு கிடைக்கும்வரை சாம் மாமா டப்பாங்குத்து ஆடத்தான் செய்வார்

said...

///உறையூர்காரன் said...
முத்துக்குமார் Said...
சதுக்க பூதம் said...
ரங்கன் said...
பாபு said... ///
நன்றிகள்.

said...

// கோபிநாத் said...\ஆசியக் கண்டத்தில் ஒரு பொருளாதார மறுமலர்ச்சிக்கு வி்த்திடும் என நம்பலாம்.\\

நல்ல விஷயம் :) ஆனா இதனால நம்ம நாட்டுக்கு என்ன பயன்னு சொல்லுங்களோன்.//
எந்த நாடு தன்னுடைய பலத்தில் முன்னேறினாலும் அதன் ஏற்றுமதி, இறக்குமதி டாலரில் இருக்கும் போது சம்பந்தமேஇல்லாத அமெரிக்காவின் பொருளாதாரம் உயர்கிறது. அதனாலேயே தேவைக்கு அதிகமாக டாலர் கரன்ஸி அடிக்கப்படுகிறது. இது மாறி அந்தந்த நாட்டின் கரன்ஸியில் வியாபாரம் நடக்கும் போது உண்மையில் முன்னேற வேண்டிய நாடுகள் முன்னேறும். உலக சந்தையின் அளவுக்கு இங்கும் கரன்ஸி மதிப்பு மாறினால் வளைகுடாவில் பணி செய்யும் தெற்காசியாவினரும் பயன் பெறலாமே.
பார்வைக்கு
http://kalavani.blogspot.com/2007/11/81_01.html