அது ஒரு அழகான தீவுக்கூட்டங்களில் உள்ள ஒரு நகரம். மிகவும் அழகான அந்த நகரத்திற்க்கு மெருகூட்டுவது போல நகரின் நடுவே ஒரு நதி சல சலவென ஓடிக்கொண்டிருந்தது. நேரம் காலை 8 மணி. கதிரவன் தனது செம்மையான கரங்களைப் பரப்பிக் கொண்டு பூமியை எட்டிப் பார்க்கத் துவங்கிய நேரம்.அந்த தீவுக் கூட்டத்தின் மக்கள் இயற்கையாகவே மகிழ்ச்சியானவர்கள். உலக மக்களால் அவர்கள் கடுமையான உழைப்பாளிகள் என்று போற்றப்படுபவர்கள்.
காலை நேரமாதலால் பள்ளி செல்லும் குழந்தைகளும், வேலைக்கு செல்பவர்களும் துரித கதியில் இயங்கிக் கொண்டிருந்தனர். அந்த அழகான நதிக்கரையின் ஓரத்தில் காலைப் பொழுதை சிலர் மகிழ்ச்சியாகக் கழித்துக் கொண்டிருந்தனர். ஏனெனில் அவர்களுடைய நாடு அப்போது நடந்து கொண்டிருந்த ஒரு போரில் வெற்றிகளைக் குவித்து வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தது. ஒரு பெரிய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போரில் தங்களது நாடு வெற்றி மேல் வெற்றி பெறுவதை மகிழ்வுடன் பேசிக் கழித்துக் கொண்டிருந்தனர். இன்னும் சிறிது நேரத்தில் நடக்கப் போகும் பயங்கரத்தை உணராமல்,.
இப்போது மணி 8:12. அந்த நகரை நோக்கி அழகான ஒரு பறவை வேகமாகப் பறந்து வந்து கொண்டிருக்கிறது. தரையிலிருந்து சுமார் 9357 மீட்டர் தூரத்தில் அந்த நகரத்தின் மையத்தில் வந்தவுடன் அந்த பறவையின் வயிற்றில் இருந்து ஒரு குட்டிப் பையனை பிரசவிக்கிறது. பிரசவித்த வேகத்தில் 155 பாகையில் திரும்பி வந்த வழியே செல்கிறது.9357 மீட்டர் உயரத்தில் அந்தரத்தில் விடப்பட்ட அந்த "குட்டிப்பையன்" மிக வேகமாக கீழே வருகிறான். தரையிலிருந்து 576 மீட்டர் தூரத்தில் 15 கிலோடன் விசையுடன் வெடித்து சிதறி விட்டான்.
அதி பயங்கரச் சத்தத்துடன் அந்த குட்டிப் பையன் வெடித்ததால் அந்த நகரமே அதிர்ந்தது. ஊரெங்கும் ஒரே புகை மூட்டம். காற்றின் வெப்பநிலை வேகமாக அதிகரிக்கிறது. எங்கு பார்த்தாலும் நெருப்பு. வீடுகளும் கடைகளும் எரிந்து சாம்பலாகின்றன்.வாகனங்கள் வெடித்துச் சிதறுகின்றன. அந்த அழகான நதிக்கரையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். உடல் முழுவதும் எரிச்ச்சல். தாங்க முடியாத வெப்பம். வெப்பத்திலிருந்து தங்களைப் பாதுகாக்க அந்த நதியில் குதிக்கின்றனர். அந்தோ பரிதாபம்! அப்போது தான் அந்த நதிநீர் கொதி நிலையை அடைந்து கொண்டிருந்தது. குதித்தவர்கள் ஜலசமாதியாகின்றனர். ஊரே மரண ஓலம். எங்கும் பிணம். அந்த நதியே பிணங்களால் மிதக்கிறது. ஊர் முழுவதும் சில கிலோ மீட்டர் தூரத்திற்கு எரிந்து சாம்பலாகி விட்டது.
இது கதையல்ல நிஜம். அந்த தீவுக்கூட்டத்தின் பெயர் ஜப்பான். அந்த நகரம் ஹிரோஷிமா. அந்த அழகான நதியின் பெயர் ஒடா(Ota). (மேலே உள்ள படம் தற்போதையது). நடந்த ஆண்டு 1945 ஆகஸ்ட் 6. வந்த அலுமினியப் பறவையின் பெயர் Enloa Gay. வந்த குட்டிப்பையனின் பெயர் 'Little Boy'.
ஆகஸ்ட் 7 1945
அந்த நகரம் முற்றிலும் அழிந்து போய் விட்டது. பலியான மக்களின் எண்ணிக்கை 1,40,000. படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை 80,000. ஹிரோஷிமா நகராட்சி வெளியிட்ட தகவல் இது. அதிகாரப் பூர்வமாக இல்லாமல் பலியானவர்கள் எண்ணிக்கை இதை விடக் கூடும். உலகமே அதிர்ந்து போகின்றது. எரிந்து போய் கதிர்விச்சால் பாதிக்கப்பட்ட அந்த நகருக்குள் வந்து மீட்புப் பணியை செய்ய முடியாமல் அரசாங்கமே திணருகின்றது.
ஆகஸ்ட் 8 1945
உலகமே இதைக் கவலையுடன் பேசிக் கொள்கிறது. இரண்டாம் உலகப் போரின் போக்கு மாறுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.
ஆகஸ்ட் 9 1945
ஜப்பானிய மக்களுக்கு மிகுந்த கவலையுடன் இந்த நாள் விடிகின்றது. அதே சமயம் அணுகுண்டைப் போட்டு விட்டுச் சென்ற அந்த நாட்டின் உயரதிகாரிகள் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகிறது. அவர்களுக்கு இரத்த வெறி மிகவும் அதிகமாகி விட்டதாம். இந்த வாய்ப்பை நழுவ விட்டால் வேறு வாய்ப்பு கிடைக்காதே.மேலும் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாண்டா! இவன் ரொம்ப நல்லவண்டா என்ற ரீதியில் பேசிக் கொள்கின்றனர். இந்த தடவை ஹிரோஷிமா வேண்டாமாம். ஏனெனில் அங்கு அழிக்க எந்த ஜீவராசியும் மிச்சம் இல்லை. இந்த தடவை இலக்கு நகரம் நாகசாகி.அது வியாபாரத் துறைமுக நக்ரம்.இப்போது காலை நேரம் இல்லை. மதியம் 11.02. நாகசாகி நகரின் மீது அலுமினியப் பறவை B29 பறந்து வந்து குண்டு மனிதனைப்(Fat Man) போட்டு விட்டுச் செல்கிறது. இப்போது சேதம் குறைவு தான். சுமார் 74,000 பேர் மட்டுமே கொல்லப்பட்டனர்.அதே அளவு மக்கள் படுகாயம்.
ஆகஸ்ட் 10 1945
மீண்டும் உலக மக்கள் மீள இயலாத துக்கத்தில் ஆழ்கின்றனர். ஜப்பான் முழுவதும் மரண ஓலம். அதே நேரம் குண்டு வீசி விட்டு வெற்றிகரமாகத் திரும்பியதற்கு படைத்தலைவர் கார்ல் ஸ்பார்ட்ஸ்(Carl A Spaatz)தலைமையில் விருந்து.
ஆகஸ்ட் 11 1945
குண்டு வீசிய நாடு மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறது. ஏனெனில் அவர்கள் தயாரித்த அணு குண்டு சோதனை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுவிட்டதல்லவா?. அதனால்.
ஆகஸ்ட் 12 1945
மீண்டும் அந்த நாட்டில் இருந்து விமானம் பறந்து வருகிறது. மக்கள் ஆவலுடன் வானத்தைப் பார்க்கின்றனர். ஏனெனில் எரிக்கும் செலவு இல்லாமல் மரணத்தைக் கொடுக்க அந்த விமானங்கள் வருமே என்று. ஆனால் அவர்கள் நம்பிக்கை வீணாகி விட்டது. அவைகள் அணு குண்டுகளை வீசாமல் வெறும் காகிதங்களை வீசிச் செல்கின்றன. அதில் உடனடியாக சரணடைய வில்லையெனில் மீதம் உள்ள நகரங்களும் நரகமாக்கப் படுமாம். அவர்களிடம் உள்ள இன்னும் சில ஆயுதங்களை சோதித்துப் பார்க்க வேண்டுமாம்.
ஆகஸ்ட் 13 1945
இன்றும் காகித எச்சரிக்கைகள் தொடர்கின்றன்.
ஆகஸ்ட் 14 1945
ஜப்பான் உடனடியாக எந்த நிபந்தனையும் இன்றி சரணடைகின்றது.
இனி விடுகதை தான்
இந்த அளவு மிகுந்த இரக்கத்துடன் மக்களை மதித்து, மனித உரிமைகளைக் காத்து, இரண்டு அணு குண்டுக்கு மேல் வீசாமல் கொஞ்சமாக இரண்டரை லட்சம் மக்களை மட்டும் சந்தோசமாக மறுஉலகிற்கு அனுப்பிய அந்த நாடு எது? இது தான் இன்றைய விடுகதை. விடை நாளை.
83.வரலாற்று நிகழ்வுகளுடன் ஒரு விடுகதை - விடை நாளை
Subscribe to:
Post Comments (Atom)

20 comments:
விடுகதை போட்ட விதம் சூப்பர்..;))
\இந்த அளவு மிகுந்த இரக்கத்துடன் மக்களை மதித்து, மனித உரிமைகளைக் காத்து, இரண்டு அணு குண்டுக்கு மேல் வீசாமல் கொஞ்சமாக இரண்டரை லட்சம் மக்களை மட்டும் சந்தோசமாக மறுஉலகிற்கு அனுப்பிய அந்த நாடு எது? இது தான் இன்றைய விடுகதை. விடை நாளை.\\
அமெரிக்கா.
மிக அழகாக முக்கியமான ஒரு வரலாற்று நிகழ்வை விளக்கியிருக்கிறீர்கள்.
அருமையான பதிவு.
இப்பதிவைப் படிக்கும்போது, சில வருடங்களுக்கு முன்பு நான் படித்த ஒரு புத்தகத்தின் சில உருக்கமான வரிகள் ஞாபகத்திற்கு வந்தன. புத்தகத்தின் பெயர் 100 Great Lives என்பதுபோல் இருக்கும்; முழுப் பெயரும் சரியாக ஞாபகமில்லை. அப்புத்தகத்தில் Ernest Rutherford அவர்களுக்குக் கொடுக்கப்படும் முன்னுரை இவ்வரிகளுடன் முடியும்:
"அணுவின் சக்தியைக் கண்டுபிடித்தபோது, எர்னெஸ்ட் ரூதர்போர்ட் என்ற அம்மனிதன், அணுசக்தியை உபயோகப்படுத்த தெரிந்த அறிவை எந்த ஒரு மனிதனும் பெற்றுவிடக்கூடாது என வேண்டிக் கொண்டார். ரூதர்போர்டின் பிராத்தனை கடைசி வரை நிறைவேற்றப்படவில்லை".
-ஞானசேகர்
கலைவாணிக்கா எழுத்து நடைல்லாம் மாறிகிட்டே இருக்கு. பெரிய ஆளாகப்போரிங்க. வாழ்த்துக்கள்
நல்ல நடையுடன் ரத்தினச் சுருக்கமாக விளக்கியுள்ளீர்கள். இதைப்பற்றி இன்னும் விரிவாக எங்கள் மின்னிதழில் எழுதியுள்ளேன்.
http://www.varalaaru.com/default.asp?articleid=377
நன்றி
கமல்
//கோபிநாத் said...
அமெரிக்கா //
நன்றி கோபி
//jaseela said...
மிக அழகாக முக்கியமான ஒரு வரலாற்று நிகழ்வை விளக்கியிருக்கிறீர்கள்.//
முதல் வருகைக்கு நன்றிகள்.
//J.S.ஞானசேகர் said...
அருமையான பதிவு.//
நன்றிகள் சார். உங்களுடைய கருத்து சிந்திக்கத்தூண்டியது. அணு ஆராய்ச்சி செய்த ரூதர்போர்டு போல AK47 துப்பாக்கியைக் கண்டுபிடித்த மிக்கேல் கலாஷினிகோவ் ( Mikhail Kalashnikov )கூட தனது கண்டுபிடிப்புகளினால் நிகழ்த்தப்படும் படுகொலைகளுக்கு வருந்தியதாக படித்த ஞாபகம்.
முதல் வருகைக்கு நன்றிகள்.//mudhal warugai alla.mudhal pinnoottam.
//நிலா said...
கலைவாணிக்கா எழுத்து நடைல்லாம் மாறிகிட்டே இருக்கு. பெரிய ஆளாகப்போரிங்க. வாழ்த்துக்கள்//
நன்றிம்மா செல்லம்.
ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க வித்யா... வித்தியாசமான முயற்சி ..
//வரலாறு.காம் said... நல்ல நடையுடன் ரத்தினச் சுருக்கமாக விளக்கியுள்ளீர்கள்.//
நன்றிகள் கமலக்கண்ணன். உங்களுக்கான நன்றி அறிவிப்பு அடுத்த பதிவில் சேர்ந்து வருகிறது.
//jaseela said...முதல் வருகைக்கு நன்றிகள்.//mudhal warugai alla.mudhal pinnoottam.//
முதலில் பின்னூட்டம் வந்ததால் அந்த வார்த்தை பிரயோகம். சரி அடிக்கடி வாங்க. பின்னூட்டம் போடாவிட்டாலும் பரவாயில்லை. உங்கள் ஆதரவு தேவை.
//முத்துலெட்சுமி said...ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க வித்யா... வித்தியாசமான முயற்சி ..//
நன்றிகள் அக்காவுக்கு
ஆன்டி, எங்க friend'a சீக்கிரம் வந்து எங்க சங்கத்துல join பண்ண சொல்லுங்க...
என்னது இது சின்னப்புள்ளத்தனமா? எங்களுக்கு கேட்கத்தான் தெரியும். பதில் சொல்ல தெரியாது. :-P
.:: மை ஃபிரண்ட் ::. said...
என்னது இது சின்னப்புள்ளத்தனமா? எங்களுக்கு கேட்கத்தான் தெரியும். பதில் சொல்ல தெரியாது. :-P
அதானெ, ரிப்பிட்டெய்ய்ய்ய்...
வித்யா கலைவாணி said...
//முத்துலெட்சுமி said...ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க வித்யா... வித்தியாசமான முயற்சி ..//
நன்றிகள் அக்காவுக்கு
அக்காவுகெ அக்காவா, அப்ப அவங்க எங்க பாட்டியா...
//Baby Pavan said...
வித்யா கலைவாணி said...
//முத்துலெட்சுமி said...ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க வித்யா... வித்தியாசமான முயற்சி ..//
நன்றிகள் அக்காவுக்கு
அக்காவுகெ அக்காவா, அப்ப அவங்க எங்க பாட்டியா...//
அக்காவுக்கு அக்காவும் அக்கா தான் பவன். ( இம்சை இது கூடச் சொல்லித் தராமலா இங்க விட்ருக்காரு)
Post a Comment