85. தாய் மண்ணுக்கு மரியாதை - எங்க ஊருங்க

எல்லா ஊரைப் பறறியும் பேசும் போது எங்க ஊரைப் பற்றியும் கொஞ்சம் சொல்வது தானே நியாயம். அதனால இன்னைக்கு எங்க ஊர் சிறப்பிதழ். மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள அழகான ஊர் பெரியகுளம். மதுரை மாவட்டத்தில் இருந்த எங்க ஊர் இப்ப தேனி மாவட்டத்தில் இருக்கிறது. ஊருக்கு நடுவில ஒரு அழகான ஆறு ஓடுகிறது. பெயர் வராக நதி. இந்த நதி மேற்குத் தொடர்ச்சி மலைல உருவாகி வைகை ஆற்றில் கலக்கிறது.கவிஞர் வைரமுத்து எங்க ஊருக்கு 4 கி,மீ தொலைவில் இருக்கும் வடுகபட்டியைச் சேர்ந்தவர் என்பதால் அவருடைய பாடல்களில் வராக நதி இடம் பெற்றிருக்கிறது. ( வராக நதி வடுகபட்டி வழியாகத் தான் சென்று வைகையைச் சேருகிறது.) மேலும் ஊருக்கு வெளியே அழகான பெரிய குளம் ஒன்று உள்ளது. ( பெயர்க்காரணம்). மேலும் இது குழந்தை மாநகரம் என்றும் அழைக்கபடுகிறது. நூறாண்டு கால வரலாறு மிக்க நகராட்சி.
Photo Sharing and Video Hosting at Photobucket
Photo Sharing and Video Hosting at Photobucket
பெரியகுளத்திற்கு அருகில் பல சுற்றுலாத் தளங்கள் உள்ளன. மலைகளின் இளவரசி கொடைக்கானல் 70 கி.மீ தூரத்தில் உள்ளது. பெரியார் அணையும், தேக்கடி வன விலங்குகள் பூங்கா 80 கி,மீ தூரத்தில் உள்ளது.
Photo Sharing and Video Hosting at Photobucket
தேக்கடி வனவிலங்கு சரணாலயம்

பெரியகுளத்திலிருந்து தெற்கே 15 கி.மீ தூரத்தில் வைகை அணை மற்றும் பூங்காவும், மேற்கே 8 கி.மீ தூரத்தில் சோத்துப்பாறை நீர்த் தேக்கமும், வடக்கே 8 கி.மீ தீரத்தில் கும்பக்கரை நீர் வீழ்ச்சியும், கிழக்கே 16 கி.மீ தூரத்தில் மஞ்சளாறு நீர்த் தேக்கமும் உள்ளது.
Photo Sharing and Video Hosting at Photobucket
வைகை அணை
இங்குள்ள பாலசுப்ரமணிய சுவாமி பெரிய கோவில், அனுமார் கோவில், மாரியம்மன் கோவில், பெருமாள் கோவில் ஆகியவை புகழ்மிக்கவை. பெரிய கோவில் சித்தர்களால் பாடல் பெற்றது.( ஊர் சென்று வரும் போது கல்வெட்டை படம்பிடித்து கொண்டு வருகிறேன்.)
Photo Sharing and Video Hosting at Photobucket
சோத்துப்பாறை அணை

Photo Sharing and Video Hosting at Photobucket
பெரிய கோவில்
இயற்கையாகவே அழகான எங்கள் ஊரின் சிறப்பான ஒரு விஷயம் குடிதண்ணீர். எந்த காலத்திலும் தண்ணீர் பஞ்சமே வருவதில்லை. ( மின்சாரம் போன்ற காரணங்களைத் தவிர்த்து). தினமும் காலையில் 3 மணி நேரமும், மாலையில் 3 மணி நேரமும் நல்ல குடிதண்ணீர் வீட்டிற்கு வரும். பம்ப் போட்டு அடிக்க வேண்டியது இல்லை. தானாகவே 20 அடி உயரத்தில் உள்ள குடிநீர் தொட்டிக்கு கூட ஏறி விடும்.சென்னை, மதுரைக்காரர்கள் பொறாமைப் படாதீர்கள்.
Photo Sharing and Video Hosting at Photobucket
பெரியகுளத்திற்கு நீர் தரும் பேரிஜம் ஏரி
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருப்பதால் சீதோஷணமும் அருமையாக இருக்கும்.ஊரின் அமைப்பு சாய்வாக இருப்பதால் மழை காலங்களில் மழை நீர் சுலபமாக வெளியேறி விடும்.
புகழ்பெற்றவர்களென்றால் தமிழக முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம், கவிஞர் மு.மேத்தா, சினிமா இயக்குனர் 'சேது' பாலா மற்றும் நான் (ஓவரா இருக்கோ) பெரியகுளத்தைச் சேர்ந்தவர்கள். இப்போதைக்கு இது போதும் தான! அப்பப்ப மேலும் சொல்றேன்,
பின் குறிப்பு:
பாத்துக்குங்க எல்லாரும். நான் தமிழ்மண்ணில் பெரியகுளத்தில் பிறந்தவள். இன்னும் பெரியகுளத்தை பத்தி ஏதாவது தெரியனும்னா கேளுங்க. ( மாயவரம்னு சொல்லனும்னா அபி அப்பாவுக்கு லஞ்சம் குடுக்கலாம். இதுக்கு என்ன செய்யனு தெரியலையே)

24 comments:

said...

நல்ல சேதிதான்.

மாமியா(ர்) வீடு போடி( எனக்கு)

said...

இந்த மாதிரி எழுதுனாதானே எங்களுக்கு இந்தியாவுல இருக்கிற சில இடங்களை தெரியவரும். இன்னும் சொல்லுங்களேன் உங்க ஊரைப்பற்றி. :-)

said...

நான் வடகரை. நம்ம ஊரு மாங்காய் மற்றும் அதைப் பறிக்க காலை 4- 5 மணிக்கெல்லாம் எந்தரித்து செல்பவர்கள், அவர்கள் சென்றவுடன் அங்கு நிலவும் அமைதி, மெதுவாக நகரும் கால்நடைகள் மற்றும் மக்கள், பார்வதி,அருள்,பவழம் மறக்க முடியவில்லை. நம் ஊரின் தண்ணீர் சுவை பற்றி இன்னும் கூறியிருக்கலாம். சிறுவாணிக்கு இணையான சுவை. தீபாவளி நேரத்தில் பதிவு போட்டு ஊருக்கு போகும் ஆசையை அதிகரித்து விட்டீர்கள்

said...

பெரியகுளத்து புள்ளயாம்மா நீ!
சந்தோஷம்!

கும்பகரை நீர்விழ்ச்சியை ரசிச்சிட்ட்டு (சொல்லியிருக்கீங்க!) அப்படியே நேராபோய் நின்ன இடம் பெரியகுளத்துல நம்ம பன்னீர் டீக்கடை! ஆனா அதப்பத்தி சொல்லலையேம்மா!? (எவ்ளோ முக்கியமான டூரிஸ்ட் பார்ட் தெரியுமாஆஆ!

said...

\\மற்றும் நான் (ஓவரா இருக்கோ)\\\

கண்டிப்பா இல்ல..:)

இப்படி அடிக்கடி ஊரை எல்லாம் சுத்தி காட்டுங்க ;)

said...

\\( ஊர் சென்று வரும் போது கல்வெட்டை படம்பிடித்து கொண்டு வருகிறேன்.)//
இனி ஊருக்கு போகும் போது ஒரு ப்ளாக் எழுத்தாளர்கணக்காவே எல்லாத்தையும் கவனிப்பீங்க இல்லையா..
உங்க்ளுக்கும் அந்த வியாதி வந்துடுச்சு..
:)

said...

பெரியகுளம்..காரணப் பெயர் தானா..
எனக்கு கூட தாய் வழி தொடர்பு இருக்கு...பெரியகுளம்...தேனி, போடி கூட..
ஆனைமலையன்பட்டி என்று ஒரு ஊரு இருக்கு தெரியும்மா...
நம்ம சுருளித்தீர்த்தம் போற வழியிலே....அந்த ஊரு...

said...

கும்பக்கரை பத்தி தனியாவேஒரு பதிவு கலைவாணிக்கா போட போறாங்க, அதான் அதபத்தி அதிகமா சொல்லல

said...

மதுரைல இருந்து எவ்வளவு தூரம் உங்க ஊர்??

எங்க அண்ணி மருதகாரங்க!!!

said...

ஹாப்பி தீபாவளி

said...

அட நான் தான் கடைசியா....ஹாப்பி தீபாவளி.

said...

அக்கா, மாமா, கார்த்தீ அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

said...
This comment has been removed by the author.
said...

//.:: மை ஃபிரண்ட் ::. said... இந்த மாதிரி எழுதுனாதானே எங்களுக்கு இந்தியாவுல இருக்கிற சில இடங்களை தெரியவரும். இன்னும் சொல்லுங்களேன் உங்க ஊரைப்பற்றி. :-)//
கண்டிப்பாக்கா.

said...

//முரளி கண்ணன் said...நம் ஊரின் தண்ணீர் சுவை பற்றி இன்னும் கூறியிருக்கலாம். சிறுவாணிக்கு இணையான சுவை.//
ஊர்க்காரரா? வாங்க. இன்னும் சொல்லி எல்லாரும் கண் வைக்கவா? சிறுவாணியை விட நம்மூர் தண்ணீர் சூப்பர். ( ஆலந்துறை, காருண்யா தாண்டி சிறுவாணி போய் தண்ணீர் குடிச்சுட்டுதான் சொல்றேன்)

said...

//.:: மை ஃபிரண்ட் ::. said... இந்த மாதிரி எழுதுனாதானே எங்களுக்கு இந்தியாவுல இருக்கிற சில இடங்களை தெரியவரும். இன்னும் சொல்லுங்களேன் உங்க ஊரைப்பற்றி. :-)//
கண்டிப்பாக்கா.

எங்க அக்கா உங்களுக்கும் அக்காவா...

said...

தமிழக முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம், கவிஞர் மு.மேத்தா, சினிமா இயக்குனர் 'சேது' பாலா மற்றும் நான் (ஓவரா இருக்கோ) பெரியகுளத்தைச் சேர்ந்தவர்கள்.

சரியா தான் இருக்கு,தமிழக நாளைய முதல்வர் னு போட்டு இருக்கனும்.

said...

//ஆயில்யன் said...
அப்படியே நேராபோய் நின்ன இடம் பெரியகுளத்துல நம்ம பன்னீர் டீக்கடை! ஆனா அதப்பத்தி சொல்லலையேம்மா!? //
ஆயிலயன் சார். RC சர்ச்க்கு எதிரில் உள்ள PV கேண்டினை சொல்றீங்க. ஒன்னொன்னா வருவோம்ல

said...

//கோபிநாத் said... \\மற்றும் நான் (ஓவரா இருக்கோ)\\\கண்டிப்பா இல்ல..:) இப்படி அடிக்கடி ஊரை எல்லாம் சுத்தி காட்டுங்க ;)//
உங்களுக்குமா? சரி இனி அதுதான வேலையே? ( இதுக்கு பின்னாடி பஜ்ஜி, சொஜ்ஜி திங்க ஏதும் திட்டமில்லையே?

said...

// முத்துலெட்சுமி said... உங்க்ளுக்கும் அந்த வியாதி வந்துடுச்சு..:)//
ஜோதில ஐக்கியமாயேச்சே! கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடுமாமே

said...

//TBCD said...ஆனைமலையன்பட்டி என்று ஒரு ஊரு இருக்கு தெரியும்மா...நம்ம சுருளித்தீர்த்தம் போற வழியிலே....அந்த ஊரு...//
தெரியும் சார். ஆனா அங்க பஸ் வசதி குறைவு தான். நல்ல ஏரியா. இராயப்பன்பட்டி போயிருக்கேன்.

said...

//நிலா said...கும்பக்கரை பத்தி தனியாவேஒரு பதிவு கலைவாணிக்கா போட போறாங்க, அதான் அதபத்தி அதிகமா சொல்லல//
நிலா சொன்னா அதுக்கு மறுப்பே கிடையாது.

said...

//மங்களூர் சிவா said... மதுரைல இருந்து எவ்வளவு தூரம் உங்க ஊர்?? எங்க அண்ணி மருதகாரங்க!!!//
சிவா சார். வீட்ல எல்லாம் சுகமா? மருதயில இருந்து 75 கி.மீ. 2 மணி நேரம் தான். வீட்ல எல்லாருக்கும் தீபாவளி வாழ்த்து சொல்லுங்க.

said...

//Baby Pavan said...அட நான் தான் கடைசியா....ஹாப்பி தீபாவளி. அக்கா, மாமா, கார்த்தீ அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.//
கண்ணா நீ லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்மா செல்லம். என்ஜாய் தீபாவளி. பட்டாசு வெடிக்கக் கூடாது இப்ப. கொஞ்ச நாள் போகனும்.சரியா