87. மலையாள சேட்டாக்களே! இது நியாயமா?

நமது தமிழ் மணத்தில் மலையாள மக்களைப் பற்றி பல பதிவுகள் வந்திருக்கின்றன. நமக்கு அவர்களையும், அவர்களுக்கு நம்மையும் கேலி செய்வது ஒரு சகஜமான ஒன்றாகவே கருதப்படுகின்றது. ஆனால் இது ஒரு சீரியஸான பதிவு. தமிழநாட்டில் இருக்கக் கூடிய நீர்த்தேக்க அணைகளில் முக்கியமானவை மேட்டூர் மற்றும் பெரியார் அணைகள். மேட்டூர் அணை சுமார் 93.4 டி.எம்.சி. (1 டி.எம்.சி = 100 கோடி கன அடி)தண்ணீர் தேக்கவல்லது. அதன் உயரம் 120 அடிகள். பெரியார் அணை அவ்வளவு பெரியதாக இல்லாதது என்றாலும் 6 மாவட்டங்களுக்கு நீராதாரமாக இருப்பது.இதிலிருந்து வைகை அணைக்கு உபரி நீர் வரும். அதன் உயரம் 152 அடிகள்.
Photo Sharing and Video Hosting at Photobucket
பெரியார் அணை


மேட்டூர் அணையின் நீர் மட்டம் கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவைப் பொறுத்து இருக்கிறது. ஆனால் பெரியார் அணையின் நீர் மட்டம் கேரளா அரசாங்கம் என்ன விரும்புகிறதோ அதுதான். என்ன புரியவில்லை?. பெரியார் அணை வலுவில்லை எனக்கூறி கேரளா அரசாங்கம் 136 அடிக்கு மேல் நீர்தேக்க அணுமதிப்பதில்லை. இது சம்பந்தமான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. பல நிபுணர் குழுக்கள் ஆய்வு நடத்தி கடைசியாக 142 அடி வரை நீரைத் தேக்க அனுமதி வழங்கியது.ஆனாலும் இதை எல்லாம் கேரள அரசு கண்டுகொள்வதில்லை.
இந்த அணை கேரள, தமிழக எல்லையில் இருப்பதால் இரண்டு மாநிலங்களும் தண்ணீர் எடுக்க ஏதுமாக அமைப்புகள் உள்ளன. தமிழக வழி வழியாக குழாய் மூலம் 3 ஜெனரேட்டர்கள் வைத்து மின்சாரமும் தயாரிக்கப் பட்டு வருகிறது. இது தவிர இறைச்சல் பாலம் எனப்படும் ஒரு சாதாரணமான வழி மூலம் தமிழகத்திற்கு தண்ணீர் எடுக்கலாம்.
சில நாட்களுக்கு முன் அணையின் நீர் மட்டம் 136 அடியை விட அதிகரித்தது. அதற்கு முன்பே தமிழகம் குழாய் வழியாக நீர் எடுக்கப் பட்டு வருகிறது. ஆனால் ஜெனரேட்டர்கள் சரியாக பராமரிக்கப் படாததால் அவை அடிக்கடி பழுதாகி சரியாக பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டது.எனவே இறைச்சல் பாலம் வழியாக நீர் வெளியேற்றப்படுகிறது.
சமீபத்திய மழையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பல அணைகள் நிரம்பி விட்டன. பெரியார் அணைக்கும் அதிகமான அளவு நீர்வரத்து அதிகமாக இருந்தது. வினாடிக்கு இறைச்சல் பாலம் வழியாக சுமார் 1500 கனஅடி நீரும், குழாய் வழியாக சுமார் 600 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதற்கு மேல் தண்ணீர் தமிழக வழியே எடுக்க இயலாது. அப்படி எடுத்தால் இறைச்சல் பாலபகுதி சாலைகள், கரைகள் பழுதாகி விடும். ஆனால் 136 அடிக்கு மேல் நீர் தேக்கப்படும் போது கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளின் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயரும்.
Photo Sharing and Video Hosting at Photobucket
இறைச்சல் பாலம் - பெரியார் அணை


கடந்த வாரம் நீர் மட்டம் 137 அடியைத் தாண்டியது. தமிழக பொதுப்பணித்துறை எவ்வளவு நீர் எடுக்க முடியுமோ அவ்வளவு எடுத்து வருகிறது. ஆனாலும் பலத்த மழை காரணமாக நீர்மட்டம் மேலும் உயர்ந்தது.கேரளா அரசு உடனடியாக தன்னுடைய பகுதியில் உள்ள 13 ஷட்டர்கள் வழியாக சுமார் 3000 கனஅடித் தண்ணீரை வெளியேற்ற ஆரம்பித்தது. ஏதாவது முக்கியமான விவசாய நிலங்கள் கருகுகிறதா என்றால் இல்லை, ஏதாவது குடியிருப்புப் பகுதிகள் குடிக்க தண்ணீர் இன்றி கஷ்டப்படுகிறதா என்றால் அதுவும் இல்லை. வேறு என்ன? வழக்கம் போலத்தான் அரபிக்கடலில் நடக்கும் விவசாயத்திற்கு தண்ணீர் தேவைப்படுகிறதாம். புரியவில்லை? 136 அடிக்கு மேல் நீரைத் தேக்க விடக்கூடாது என்று அதற்கு மேல் வரும் தண்ணீரைத் திறந்து விட்டு அரபிக்கடலில் வீணாகக் கொட்டுகின்றனர். என்ன கொடுமை சார் இது? தேனி மாவட்டமே நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். (எங்கள் பகுதியில் பல இடங்களில் மா, புளி, பலா போன்ற நீண்டகால விவசாயங்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன) கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் நல்ல மழை பொழிந்துள்ளது.
கடவுள் வரம் தந்தாலும் பூசாரி வரம் தராத கதையாய் நீர் மட்டம் உயரும் போது அதை கடலில் கொட்டுவதால் என்ன பயன்?. இதில் கேரளாவில் நடப்பது கம்யூனிஸ்ட் ஆட்சி வேறு. என்ன கருமமோ தெரியவில்லை?. சரி உச்ச நீதிமன்றம் தான் 142 அடி தண்ணீர் தேக்க அணுமதி அளித்து விட்டதே? தமிழக ஆட்சியாளர்கள் 136 அடிக்கு மேலே போகும் போது அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமே? மூச்! இப்போது ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் ஏதும் பேசாது. அடப்பாவிகளா? எதெதற்கோ முழு மூச்சாக உழைக்கிறீர்களே? தென் தமிழக விவசாயிகளின் ஜீவாதாரப் பிரச்சினை, இப்போது தண்ணீரை தேக்கி வைத்தால் பின்னர் பயன் படுமே? நடவடிக்கை எடுக்கக் கூடாதா?
எங்க சேட்டன்மார்களே! உங்களுக்கு அப்படி என்ன வீம்பு? நாங்க தான உங்களுக்கு அரிசி காய்கறி எல்லாம் அனுப்புகிறோம்? கொஞ்சம் கருணை காட்டக்கூடாதா? ஏது பறஞ்சங்கிலுல் மனசிலாகுத்தில்ல
இந்தியாவின் சமத்துவ சமுதாயம் வாழ்க!
என்னவோ போங்கப்பா உங்க அரசியல் எங்களுக்கு புரிய மாட்டுது.

உபயோகமான குறிப்பு
பெரியார் அணை - கூகுள் எர்த்
9°57'39"N 76°57'23"E
கடலில் கடக்கும் இடம் - கூகுள் எர்த்
10°10'45.54"N 76°10'1.34"E

28 comments:

said...

ரிப்பிட்டெய்ய்ய்ய்ய்.....படிச்சிட்டு வந்து கருத்து சொல்லரென்

said...

ஏது பறஞ்சங்கிலுல் மனசிலாகுத்தில்ல

இதுக்கு ஒரு ரிப்பிட் போட்டுக்கரென்...

said...

நாம அவங்களைக் கலாய்ப்பாதால தான் தண்ணி தரமாட்டாங்களோ என்னவோ?

நல்லா ஆய்வு செய்து எழுதியிருக்கீங்க

said...

//Baby Pavan said...ஏது பறஞ்சங்கிலுல் மனசிலாகுத்தில்ல//
நீ பெரிய ஆளா ஆனதும் வந்து கண்டிப்பா படிச்சு பாரும்மா! எல்லாம் புரியும்! இப்ப ரிப்பிட் போட்டா போதும் சரியா? இன்னிக்கு உங்க ஊர்ல தீபாவளியா? வாழ்த்துக்கள்.

said...

திரும்ப புள்ளிவிவரத்தோட ஒரு பதிவா????

உங்களை 'லேடி விஜயகாந்த்'னு சொன்னது தப்பே இல்லை.

said...

//Anonymous said...
എന്ത് പറയാനാ ?? ഈ ചേട്ടന്‍ മാര് ഇങ്ങന തന്ന ?//
அதுக்கு பிறகு வந்ததற்கு அனுமதி இல்லை. அனானி கவனம் தேவை.

said...

நிறைய தகவல்களுடன், காலத்தில் பதிவுச்செய்யப்பட்டமைக்கு வாழ்த்துக்கள்.

தான் வாழும் சூழலில் அன்றாடப்பிரச்சினைகளை தனிமனிதர்கள் எதிர்க்கொள்ள முடியாது. அதற்க்கான அமைப்புகள் தான் போராட்ட வடிவங்கள் கொடுக்க வேண்டும்.

குறைந்தப்பட்சம் அதை பதிவு செய்தமைக்கு மீண்டும், மீண்டும் வாழ்த்துக்கள்!

said...

//கானா பிரபா said...நாம அவங்களைக் கலாய்ப்பாதால தான் தண்ணி தரமாட்டாங்களோ என்னவோ?//
நன்றி கானா! நம்மலை விட அவங்க நம்மலை கலாய்ப்பாங்க! ஆனாலும் நம்மால் அவர்கள் தான் அதிகம் பயனடைறாங்க. தமிழகத்தில் லாரி ஸ்டிரைக் என்றால் அரிசி, காய்கறி, பூ விலை அங்கே எகிறிடும். அதே கேரளாவில் லாரி ஸ்டிரைக் என்றால் இங்கு ஏதும் பாதிக்காது. ஏற்றுமதி வியாபாரிகள் மட்டுமே பாதிக்கப் படுவார்கள்.

said...

//மங்களூர் சிவா said...திரும்ப புள்ளிவிவரத்தோட ஒரு பதிவா????//
எல்லாம் நீங்க கத்துக் கொடுத்தது தான்.
//உங்களை 'லேடி விஜயகாந்த்'னு சொன்னது தப்பே இல்லை.//
வஞ்சப்புகழ்ச்சி அணியா? புரியலையே?

said...

இரண்டு மாநிலத்தவர்களும் இதிலுள்ள அரசியலை தவிர்த்து சுமுகமான நல்ல முடிவு எடுக்கவேண்டும்.

said...

கட்டுரையை பற்றி ஒன்றும் சொல்லாமல் போய்விட்டேன்.

விவரமாகவும் தெளிவாகவும் புகைப்படங்களுடன் எழுதியிருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்

said...

//பாரி.அரசு said...நிறைய தகவல்களுடன், காலத்தில் பதிவுச் செய்யப்பட்டமைக்கு வாழ்த்துக்கள்.//
நன்றி பாரி அரசு

said...

//மஞ்சூர் ராசா said...இரண்டு மாநிலத்தவர்களும் இதிலுள்ள அரசியலை தவிர்த்து சுமுகமான நல்ல முடிவு எடுக்கவேண்டும்.//
பல முறை நடந்துள்ளது. ஆனால் பலன் தான் கிடைக்கவில்லை.
வருகைக்கு நன்றி

said...

வித்யா, ஊர் நினைவு வந்து விட்டதா ?? பெரியார் நீர்த்தேக்கம் பற்றிய விளக்கமான பதிவொன்று லேடி விஜயகாந்தால் பதியப் பட்டிருக்கிறது. சீரியஸான பதிவு. இத்தனை விளக்கங்கள் கொடுத்தும், அரபிக்கடலில் நடக்கும் விவசாயத்தை நிறுத்த கேரள அரசியல் வாதிகளோ, தமிழக அரசியல்வாதிகளோ முன் வராததும் ஒரு அரசியல் தான்.

ஆமா - மலயாள சம்சாரம் கொல்லாம்- எனிக்கு கொறைச்சு அறியும் -

said...

\\மங்களூர் சிவா said...
திரும்ப புள்ளிவிவரத்தோட ஒரு பதிவா????

உங்களை 'லேடி விஜயகாந்த்'னு சொன்னது தப்பே இல்லை.\\

சூப்பர் சிவா..சரியாக சொல்றியிருக்கிங்க...;))

பதிவை பத்தி சொல்ற அளவுக்கு அந்த விஷயத்தை பத்தி தெரியல :(

ஆனால் உபயோக படக்கூடிய நீரை வீனாக கடலில் கலப்பது சரியில்ல.

said...

சீனா சார், கோபி நன்றி

said...

இந்த அவலங்களை காணும்போது அண்ணா தனித் தமிழ்நாடு கோரியது தவறே இல்லையென்று தோன்றுகிறது.

said...

அருமையான பதிவு:) நல்ல புள்ளி விவரம்.

//உங்களை 'லேடி விஜயகாந்த்'னு சொன்னது தப்பே இல்லை.//
வஞ்சப்புகழ்ச்சி அணியா? புரியலையே?//

இதுல என்னா வஞ்சப்புகழ்ச்சி அணி? ஒன்லி டைரக்ட் மீனிங்தான், சிவா உங்களை ரொம்ப அசிங்கபடுத்திட்டார், அதை நினைச்சி நினைச்சி ரூம் போட்டு அழுதுக்கிட்டு இருக்கேன் ரூம் ரெண்ட் செலவு 1000 திர்ஹாம் அனுப்பி வைக்கவும்!!

said...

//உறையூர்காரன் said...இந்த அவலங்களை காணும்போது அண்ணா தனித் தமிழ்நாடு கோரியது தவறே இல்லையென்று தோன்றுகிறது.// வருகைக்கு நன்றி. :) வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற கோஷத்தின் தொடர்ச்சியாகவே இதை நான் காண்கிறேன். நிலவியல் ரீதியாகக்கூட தனித் தமிழ்நாடு பிரிவது நிறைய சிக்கல்களை உள்ளடக்கியது. காவிரி கர்நாடகாவிலும், பெரியார் கேரளாவிலுல் இருந்து வருவது கூட யோசிக்க வேண்ண்டிய ஒன்று. ( குடகுவில் காவிரியை நிறுத்த முடியாது என்று நினைக்கிறேன்.

said...

//குசும்பன் said... அருமையான பதிவு:) நல்ல புள்ளி விவரம்.//
நன்றி தல எல்லாம் உங்க டிரைனிங் தான் :))

said...

//குசும்பன் said...அதை நினைச்சி நினைச்சி ரூம் போட்டு அழுதுக்கிட்டு இருக்கேன் ரூம் ரெண்ட் செலவு 1000 திர்ஹாம் அனுப்பி வைக்கவும்!!//
அச்சச்சோ! நீங்க 'Grant Hayat' ஹோட்டல்ல ரூம் போட்டு அழ அபி அப்பாகிட்ட 2500 திர்ஹம் கொடுத்தனே? உங்ககிட்ட தரலையா? அய்யோ பாவம். அபி அப்பா கூட உங்களை ஏமாத்துறாரா?

said...

சரியான தருணத்தில் வந்தள்ள பதிவு.

said...

பறஞ்சுட்டு காரியமில்ல சேச்சி..

said...

//ஜமாலன் said...சரியான தருணத்தில் வந்தள்ள பதிவு.//
நன்றி ஜமாலன் சார்
//ஜமாலன் said...பறஞ்சுட்டு காரியமில்ல சேச்சி..// தமிழர்களுக்கு என்ன நடக்குது என்று தெரிய வைக்க ஒரு சிறு முயற்சி மட்டுமே!

said...

நம்ம நெலம வடிவேலு மாதிரி ஆயிடுச்சு.

தனிப்பதிவாவே போட்டுட்டேன்!

http://uraiyurkaran.blogspot.com/2007/11/blog-post_10.html

said...

நல்லப்பதிவு , ஆனால் பல முக்கியமான தகவல்களை தவறவிட்டு விட்டீர்கள், கடந்த ஆண்டு ஜூனியர் விகடனில் தமிழக அரசின் ஒரு முன்னால் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் எழுதிய கட்டுரை வந்தது அதில் இந்த அணைக்குறித்தான அனைத்து தகவல்களும் இருந்தது.மேலும் நான் படித்த தகவல்களையும் சேர்த்து சொல்கிறேன்( நான் ஒரு பதிவு போடலாம் என்று இருந்தேன், இன்னும் அதிகம் விவரம் வேண்டும் என காத்திருந்தேன், நீங்கள் போட்டு இருப்பதால் பின்னூட்டமாக அதைப்போட்டுவிட்டேன், பெரிய பின்னூட்டம் என சலிக்க வேண்டாம் :-)) )

1)பெரியார் தோன்றுவது , தமிழகத்தில் இருந்து தான்.

2)முல்லையார் என்பது பெரியாரின் ஒரு உப நதி, அதனால் தமிழகத்திற்கு எந்த நலனும் இல்லை.அது கேரளா பக்கம் மட்டுமே பாய்வது.

3)கிழக்கிலிருந்து மேற்காக கேரளாவில் பாய்வதால் , அந்நீரை தமிழகத்திற்கு திருப்ப, கேரளா பக்கம் ஒரு சிறு தடுப்பணையும், தமிழகம் பக்கம் பெரிய அணையும் கட்டி, மேற்கு தொடர்ச்சி மலையில் ஒரு டன்னல் வெட்டி அங்கிருந்து மீண்டும் இங்கு நீர் கொண்டு வரப்படுகிறது.

அதாவது சுருக்கமாக சொன்னால் மேற்கு நோக்கி பாயும் ஆற்றை கிழக்கு நோக்கி திருப்ப , இரண்டு அணைகள் கட்டப்பட்டு , குறுக்கு இருக்கும் மலையின் வழியாக டன்னல் வெட்டி நீர் எடுத்து வரப்படுகிறது.

4) கேரளா எதிர்க்க காரணங்கள் என்ன வென்றால்,

ஆரம்பத்தில் அங்கு 152 அடி நீர் தேக்கப்பட்டது, அப்போது அங்கு கேரளப்பக்கம் மூழ்கிய சுமார் 8000 ஹெக்டேர் நிலத்திற்காக ஆண்டுக்கு 4,00,000 ரூபாய் உரிமைத்தொகையாக தரப்பட்டது, பின்னர், அணையில் விரிசல் ஏற்பட்டதைக்காரணம் காட்டி அணையினை சீரமைப்பு செய்வதற்காக 25 ஆண்டுகளுக்கு முன்னர் நீர் மட்டம் குறைக்கப்பட்டது, அதனால் நீரில் மூழ்கிய பாதிக்கு மேற்பட்ட நிலம் வெளியில் வந்தது, சீரமைப்பு பணி நடைபெறும் காலத்தில்(ரொம்ப தாமதப்படுத்தி விட்டோம், அதைப்பயன்படுத்திக்கொண்டர்கள்) நீர் பிடிப்பு பகுதியில் இருந்து வெளி வந்த நிலங்களில் பண்ணைகள், ரிசார்ட்ஸ்களை கேரளாவின் பெரும் புள்ளிகள் அமைத்து ஆக்ரமித்துக்கொண்ட்டார்கள். ஏன் எனில் அங்கு தேக்கடி யானைகள் சரணாலயம்,புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது.எனவே நல்ல வருமானம். மீண்டும் நீர் மட்டம் உயர்த்தப்பட்டால் அவர்கள் ஆக்ரமித்த நிலம் மூழ்கிவிடும் என்பதாலேயே அதனை எதிர்க்கிறார்கள்.

ஆனால் இன்று வரை தமிழக அரசு மொத்த மூழ்கிய நிலத்திற்காகவும் ஆண்டு கட்டணத்தை கேரளாவிற்கு செலுத்து வருகிறது.

மேலும் மற்றொரு காரணம்,

இடைப்பட்ட காலத்தில் பெரியாரில் இடுக்கி அணை கட்டப்பட்டு அதன் மூலம் மின் உற்பத்தியை கேரளா செய்ய ஆரம்பித்து விட்டது. அதற்கு நீர் தொடர்ந்து செல்ல வேண்டும் என்றால் முல்லைப்பெரியார் டேமில் நீர் அதிகம் தேக்காமல் இருக்க வேண்டும்.நீங்கள் சொன்னது போல அவர்கள் சும்மா கடலில் நீரை திறந்து விடவில்லை!

பூகம்ப அபாயம் பற்றி பயம் கிளப்பும் கேரள அரசிற்கு சரியான பதில் கொடுக்க தமிழக அர்ஆள் இல்லை, உண்மையில், பெரியார் டேமிற்கு நேர் கீழே சரிவில் இடுக்கி அணை இருக்கிறது டேம் உடைந்தால், அந்த அணைக்கு தான் நீர் செல்ல வேண்டும்,எனவே வெள்ளப்பாதிப்பு என்பது உடனே வராது, அதை விட கொடுமை, நாம் நீரின் ஓட்டத்திற்கு எதிராக டன்னல் வழியாக நீரைக்கொண்டு வந்து சேமித்து தான் பயன்படுத்துகிறோம், எனவே அணை உடைந்தால் முதலில் தமிழகத்திற்கு தான் தண்ணீர் ஓடி வரும் ,ஏன் எனில் மேற்கு தொடர்ச்சி மலைக்கு அந்த பக்கம் , இந்த பக்கம் என இரண்டு அணைக்கள் கட்டி நீரினை சேமித்து உருவாக்கப்பட்ட அணை தான் முல்லைப்பெரியார் அணை. டன்னல் வழியாக பின்னோக்கி நீர் சென்றால் ஒழிய கேரளாவிற்கு பாதிப்பு வராது.

இதை விட குறிப்பிட தக்க விஷயம் என்னவென்றால் உயரம் வேண்டுமானால் அதிகம் இருக்கலாம் , ஆனால் அணையின் கொள்ளளவு சுமார் 6 டிம்சி அளவு தான், (132 அடி உயரத்தில்)மேட்டூர் அணையின் கொள்ளலவில் 15 இல் ஒரு பாகம் கூட வழக்கமாக அங்கு இருப்பதில்லை.அதுவும் அணை இரண்டு பாகமாக இருக்கும் போது , அணை உடைந்தால் எவ்வளவு நீர் அவர்கள் பக்கம் ஓடி விடும்!

அரசியல்வாதிகள் , பெரும் புள்ளிகளின் தனிப்பட்ட நலனுக்காக மட்டுமே கேரளாவில் நீர் தேக்க தொடர்ந்து எதிர்ப்பு கிளப்பப்படுகிறது.

said...

வவ்வால் சார் வருகைக்கு நன்றி. உங்க அளவுக்கு என்னால் தலை கீழாக தொங்கி பார்க்க இயலவில்லை. என்னுடைய ஆதங்கங்களை சொல்ல முயற்சி செய்தேன். பெரியார் அணையின் அமைப்பை விளக்கியதற்கு நன்றி. மேட்டூர் அணையின் கொள்ளலவுக்கும் இதற்கும் பல மடங்கு வித்தியாசம் உண்மை தான். ஆனாலும் தேனி மாவட்ட விவசாயிகள் இதையே நம்பி உள்ளனர். இந்த அணையின் பராமரிப்பு பணியை தமிழகமே மேற் கொள்கிறது.
நல்லதே நடக்க வேண்டும் என வேண்டுவோமாக!

said...

மிக நல்ல பதிவு..தெரியாத பல விஷயங்கள் தெரிந்துகொண்டேன்...மிக்க நன்றி வவ்வாலுக்கும் தங்களுக்கும்..ஒரு தீர்க்கமான ஓட்டுக்கு பயப்படாத தலைவர் வந்தால் இதற்கு தீர்வுகாணலாம்!!!!! அப்படி வருவதற்கு எத்தனை காலம் ஆகுமோ???
கம்யுனிஸ்ட்கள் எல்லாம் இனிமேல் தொழிலாழர்களின் தோழன் என்று பேசுவதற்கு அருகதையே இல்லை.... அவர்கள் ஆளும் மாநிலத்தின் லட்சணத்தை பார்த்தாலே தெரியும்...