உலகில் உள்ள பல பொதுநல அமைப்புகள் புவியின் வெப்பமயமாதலை பற்றி பல வகைகளிலும் விளம்பரப்படுத்தி வருகின்றன. இந்தியாவில் இது சம்பந்தமான பிரச்சாரங்கள் குறைவு தான். ஆனாலும் இது வருங்காலங்களில் இந்தியாவிலுல் அதிகரிக்கும் என நம்பலாம். நாம் அது பற்றிய ஒரு சிறு முன்னுரையை இங்கு தெரிந்து கொள்வோம்.
நமது பூமிப் பந்தானது மிகச்சிறப்பான முறையில் படைக்கப்பட்டுள்ளது. பூமிப் பந்தைச் சுற்றிலும் பல வகையான வளி மண்டல அடுக்குகள் உள்ளன. இவை சூரியனில் இருந்து வரும் வெப்பத்தை தடுக்கும் கவசமாக செயல்படுகின்றன. சூரியனில் இருந்து வரும் அகசிவப்பு, மற்றும் புறஊதாக்கதிர்களை வடிகட்டி அனுப்புகின்றன. இந்த வடிகட்டும் அமைப்பை சில காரணிகள் பாதிக்கும் போது அதிகமான வெப்பக்கதிர்கள் பூமியை வந்தடைந்து பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும். இந்த நிகழ்வை புவி வெப்பமடைதல் ( Global Warming) என்கின்றனர். இந்த காரணிகள்பல விதமான வாயுக்களால் நிகழ்கின்றன. அவைகளை Green House Gases ( தமிழில் ?) என்கின்றனர். அதிலும் ஸ்ட்ரடோஸ்பியர் (stratosphere) என்ற படலம் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த பதிவில் இதைப் பற்றி மட்டும் சுருக்கமாக பார்ப்போம். இந்த stratosphere வளி மண்டல அடுக்கில் 90 சதவீதம் ஓசோன் படலத்தால் ஆனது. ஓசோனின் வேதிப்பெயர் O3. ஒவ்வொரு தனிமத்திற்கும் ஒரு பெயர் உள்ளது. (எ.கா) O - ஆக்ஸிஜன், N - நைட்ரஜன், C - கார்பன், Cl - குளோரின், H - ஹைட்ரஜன். இவற்றின் அளவுகள் கூடும் போதும், குறையும் போதும் அதன் பண்புகள் மாறும். ஹைட்ரஜனும், ஆக்ஸிஜனும் காற்றில் இருப்பவை தான். அதில் ஹைட்ரஜன் இரண்டு பங்கும், ஆக்ஸிஜன் ஒரு பங்கும் சேரும் போது அது தண்ணீராக மாறி விடுகிறது.
ஓசோன் படலம் சிதைக்கப்படும் போது சூரியக்கதிர்கள் பூமியை நேரடியாகத் தாக்குகின்றன.
இதை சிதைப்பதில் பங்கு வகிக்கும் சில வாயுக்கலவைகளில் முக்கியமானவை
1. Co2 - carbon dioxide
2. CH4 - Methane
3. CFC - Chlorofluorocarbons
4. இன்னும் சில வாயுக்கள்
1.Co2 - carbon dioxide (கார்பன்-டை-ஆக்ஸைடு)
நமக்கு நன்கு தெரிந்தது தான். மரங்கள் அழிக்கப் படுவதால் காற்றில் கார்பன்-டை-ஆக்ஸைடு அதிகமாகி வளி மண்டல அடுக்குகளைப் பாதிக்கிறது. பச்சையக வாயுக்களில்( Green House Gases) 50 சதம் இதுவே முக்கிய பங்கு வகிக்கிறது.அமேசான் காடுகள் 1987 ல் தீப்பற்றி எரிந்ததால் 500 மில்லியன் டன் கார்பன்-டை-ஆக்ஸைடு காற்றில் பரவியது.
2. CH4 - Methane ( மீத்தேன் ) இயற்கை எரிவாயு
சுரங்க வேலைகளிலும், பச்சை மரங்கள் எரிக்கப்படுவதாலும், நிலத்தில் இருந்து கச்சா எண்ணைய் எடுக்கப்படும் போதும், ஈரப்ப்பதமான விளை நிலங்களில் இருந்தும், மாடு போன்ற விலங்குகளின் கழிவுகளில் இருந்தும் மீத்தேன் வெளியேறுகிறது.மக்கள் தொகை பெருகுவதால் இதை நிறுத்துவது மிகவும் கடினமான ஒன்று
3. CFC - Chlorofluorocarbons
நாம் பயன்படுத்தக்கூடிய குளிர் சாதன/பதனப் பெட்டிகளில் பயன்படும் ஒரு விதமான வாயு தான் குளோரோ ப்ளோரோ கார்பனாகும். இது தான் ஓசோன் படலத்தை அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. (இதைப் பற்றி விரிவாக அடுத்த பதிவு வருகிறது) சுருக்கமாக இதன் வீரியத்தைப் பற்றி சொல்வதானால் Co2 காற்றில் 10 வருடம் வரை அழியாமல் இருக்கும் தன்மையுடையது என்றால் CFC 110 வருடம் வரை தனது அழிவு வேலையை செய்யும் ஆற்றல் பெற்றது.
புவி வெப்பமடைதல் ( Global Warming) - விளைவுகள்
1. புவியின் தட்பவெப்பநிலை மாற்றம்
தொடர்ச்சியான புவி வெப்பமடைதலால் பூமியின் வெப்பநிலை உயர்ந்து நீர்நிலைகள் வற்றத் தொடங்கி விடும். அதே வேலையில் நிலத்தடி நீர்மட்டமும் கீழே சென்று கொண்டே இருக்கும். கட்டுப்பாடற்ற சீதோசன நிலை நிலவும். வெயில் காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஒரு கட்டத்தில் மனிதன் வாழும் சீதோசன நிலையைத் தாண்டி சென்று விடக்கூடும்.
2. கடல் நீர் மட்டம் உயர்தல்
பூமியின் தொடர்ச்சியான வெப்பநிலை அதிகரிப்பால் கடலில் உள்ள பனிப்பாறைகள் உருகி கடலின் நீர்மட்டம் படிப்படியாக உயரும். இதனால் கடற்கரை ஓரங்கள் அரிக்கப்பட்டு கடல் நீர் ஊருக்குள் வர வாய்ப்பு ஏற்படும். உலகில் உள்ள மக்கள் தொகையில் பாதிப்பேர் கடலில் இருந்து 100 கி.மீ தொலைவிற்குள் வசிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவை நிகழ பல நூறு ஆண்டுகள் ஆகும். ஆனாலும் நமது சந்ததிகளுக்கு தூய்மையான உலகைத்தர வேண்டியது நம் கடமை தானே!
புவியைக் காப்பதில் நம் பங்கு என்ன இருக்க வேண்டும் என்பதை மண். மரம், மழை,மனிதனில் தெரிந்து கொள்ளுங்கள்.
என் வேலையை சுலபமாக்கியதற்கு மண். மரம், மழை,மனிதனுக்கு நன்றி
*************####### நாளையும் மண்டை சூடாக அறுக்கப்படும் :))
88. புவி வெப்பமடைதல் - Global Warming - 1
Subscribe to:
Post Comments (Atom)

21 comments:
Thanks for brining Global Warming education in Tamil. Could you write atlease a blog opposing proposee new coal fired power plants in tamilnadu (TUTICORIN )? if you are serious enough with GW ?
//Anonymous said...
Thanks for brining Global Warming education in Tamil. Could you write atlease a blog opposing proposee new coal fired power plants in tamilnadu (TUTICORIN )? if you are serious enough with GW ?//
Certainly, But you know the kootan kulam Automic Power Plant near tuticurin?. (On the Way to uvari from kanyakumari). This is very very dangerous then coal power plant. This all under government process. We Some people can’t stop this. But We can only educate our people on Global Warming. Thank You for your Comment.
\\\"88. புவி வெப்பமடைதல் - Global Warming - 1"\\
யக்கா எப்படி இப்படி ரவுண்டு கட்டி அடிக்கிறிங்க! ;)
கலக்குறிங்க :)
\\நாளையும் மண்டை சூடாக அறுக்கப்படும்\\
பயமாக இருக்கே..;((
நல்ல பதிவு.
ஆனா ஒன்னும் செய்யறதுக்கில்லை !!
மிகவும் நல்ல, அவசியமான பதிவு. விரைவில் எனது வலைப்பூவிலும் GW குறித்த பதிவு வெளியாகவுள்ளது. வருகை தரவும்
மிகவும் நல்ல பதிவு, குட்டீஸ் பதிவுல ரெக்கமெண்ட் பண்றொம்....
24X7 நீங்களெ கம்யூட்டர் முன்னாடி இருந்தா எப்படி, அப்ரா கிட்டயும் குடுங்க....அவனும் பதிவு போடட்டும்...
இது Request இல்லை...கட்டளை....
அக்கா அடுத்த தேர்தல்ல பெரியகுளம் தொகுதி உங்களுக்குத்தான். கள்ள ஓட்டு போட்டாச்சும் உங்கள ஜெயிக்க வைக்கிறோம்,
மிகவும் பயனுள்ள பதிவு. இதன் மீதான விழிப்புணர்வு அதிகம் வளர உதவும்.
இந்த சுட்டியில் உள்ள சி.என்.என். வீடியோவையும் பார்க்கவும்.
http://edition.cnn.com/SPECIALS/2007/planet.in.peril/
நன்றி.
சிவா.
sivaramang.wordpress.com
//கோபிநாத் said...கலக்குறிங்க :) பயமாக இருக்கே..;((//
இப்பயே பயந்தா எப்படி! இன்னும் எவ்வளவோ இருக்கே!
//மங்களூர் சிவா said...நல்ல பதிவு
ஆனா ஒன்னும் செய்யறதுக்கில்லை !!//
நன்றி. ஆமா நாம செய்ய இதில ஒன்னும் இல்லை தான். ஆனாலும் கொஞ்சம் விழிப்புணர்வு இருந்தா நம்மால் ஆன பங்கை செலுத்த இயலும்.
//RVC said...மிகவும் நல்ல, அவசியமான பதிவு. விரைவில் எனது வலைப்பூவிலும் GW குறித்த பதிவு வெளியாகவுள்ளது. வருகை தரவும்//
கண்டிப்பாக சார். இது ஒரே நாளில் நடக்கக்கூடிய விஷயம் இல்லையே!. அனைவரும் சேர்ந்து தேர் இழுப்போம், வாருங்கள்.
//Baby Pavan said...மிகவும் நல்ல பதிவு, குட்டீஸ் பதிவுல ரெக்கமெண்ட் பண்றொம்....//
நன்றி பவன்.
//Baby Pavan said...24X7 நீங்களெ கம்யூட்டர் முன்னாடி இருந்தா எப்படி, அப்ரா கிட்டயும் குடுங்க....அவனும் பதிவு போடட்டும்...இது Request இல்லை...கட்டளை...//
நீங்க எல்லாம் அடிக்கிற கும்மி, மொக்கையைப் பாத்து பயந்து போய்ட்டான் உங்க பிரண்ட். பதிவு போட்ட அம்மா போடற மாதிரி நாலு பேரு பயனடையனுமாம்.
வித்யா கலைவாணி said...
//Baby Pavan said...24X7 நீங்களெ கம்யூட்டர் முன்னாடி இருந்தா எப்படி, அப்ரா கிட்டயும் குடுங்க....அவனும் பதிவு போடட்டும்...இது Request இல்லை...கட்டளை...//
நீங்க எல்லாம் அடிக்கிற கும்மி, மொக்கையைப் பாத்து பயந்து போய்ட்டான் உங்க பிரண்ட். பதிவு போட்ட அம்மா போடற மாதிரி நாலு பேரு பயனடையனுமாம்.
அப்ரா நீயும் அம்மா கூட சேந்து கெட்டு போகாதெ...வா நாம குசும்பன் மாமாகிட்ட டியுசன் படிச்சிட்டு அவரயெ கலாய்ப்போம்...
//நிலா said...அக்கா அடுத்த தேர்தல்ல பெரியகுளம் தொகுதி உங்களுக்குத்தான். கள்ள ஓட்டு போட்டாச்சும் உங்கள ஜெயிக்க வைக்கிறோம்,//
எனக்கு அந்த ஆசையெல்லாம் கிடையாதும்மா
(நிலா இதை இப்படியா பப்ளிக்கா சொல்வது. நம்ம அரசியல் திட்டங்களைத் தனியா பேசிக்கலாம். :))
// siva said... மிகவும் பயனுள்ள பதிவு. இதன் மீதான விழிப்புணர்வு அதிகம் வளர உதவும்.//
நன்றி
காலத் தேவைக்கேற்ற நல்ல பதிவு. தொடருங்கள்.
மிகவும் நல்ல மற்றும் தேவையான கட்டுரை. இதுல நாம செய்யரத்துக்குதான் நிறைய இருக்கு, ஒன்னும் செய்யறதுக்கில்லை என்ற மனப்பான்மைதான் முதல் தடை. அதைத் தாண்டினாலே பாதி செஞ்சு முடிச்ச மாதிரிதான். இது போன்ற பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வும் கிடையாது நிரந்தரத் தீர்வும் கிடையாது. கால மாற்றத்திற்கேற்ப மூலங்களையும், நிவாரணங்களையும் வளர்த்தெடுத்துக் கொண்டே முன் செல்ல வேண்டும்.
//ஓசோனின் வேதிப்பெயர் O3. அதாவது 3 பங்கு ஆக்ஸிஜனின் கலவைதான் ஓசோன்.//
இதைக் கொஞ்சம் சரி பார்க்கவும்
சகோதரி, இப்போதைய காலகட்டத்துக்கு மிகத்தேவையான பதிவு!! தொடருங்கள்..
பூமிப்பந்தை சுட்டு வேக வைத்து சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்களில் முதன்மையானவர் யார் தெரியுமா?? இங்கே போய் கொஞ்சம் பாருங்க ...
http://thanjavuraan.blogspot.com/2007/08/blog-post_24.html
//தஞ்சாவூரான் said...சகோதரி, இப்போதைய காலகட்டத்துக்கு மிகத்தேவையான பதிவு!! தொடருங்கள்..பூமிப்பந்தை சுட்டு வேக வைத்து சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்களில் முதன்மையானவர் யார் தெரியுமா?? இங்கே போய் கொஞ்சம் பாருங்க ...
http://thanjavuraan.blogspot.com/2007/08/blog-post_24.
தஞ்சாவூராருக்கு நன்றி. அடுத்து உருளப்போவது நாட்டாமை தலை தான். Wait and See
//நமது பூமிப் பந்தானது மிகச்சிறப்பான முறையில் படைக்கப்பட்டுள்ளது.//
ரொம்ப சென்சிடிவ்ன்னு சொல்லுங்க...
சமீபத்தில் அமெரிக்க முன்னாள் துணை அதிபர் அல் கோரின் டாக்குமென்டரி படமான An Inconvenient Truth-ல் புவி வெப்பமடைதல் பற்றி சிறப்பாக சொல்லப்பட்டிருக்கும். அதை மற்றவர்களுக்கு சிபாரிசு செய்யலாம்.
Post a Comment