போன பதிவில் அமெரிக்கா எந்த அளவு உலக சுற்றுப்புறச் சூழலில் அக்கறை காட்டுகிறது என்று பார்த்தோம். ஆனால் அமெரிக்காவை குறை கூறினால் ஏற்றுக் கொள்ள முடியாத சிலரும் நம்மிடையே இருக்கிறோம். அவர்களுக்கு அமெரிக்காவின் மறுபக்கத்தை லேசாக காட்டுவதே இந்த பதிவு.
உலக வெப்பமயமாதலில் அமெரிக்கா போடும் இரட்டை வேடம் சகிக்க முடியாததாக இருக்கும் இந்த நேரத்தில் அமெரிக்காவின் இரட்டை வேடங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
1. உலகின் மிகப்பெரிய அழிவு நிகழ்ச்சி, ஜப்பானில் ஹிரோஷிமாவில் முதலில் நிகழ்த்தப்பட்ட அணு குண்டு வீச்சு. ஒன்றரை லட்சம் பேர் கொல்லப்பட்டதை அணு அணுவாக ரசித்த அமெரிக்கா தன் ரத்த வெறி தீராமல் மூன்று நாட்கள் கழித்து மீண்டும் நாகசாகி மீது அணுகுண்டு வீச்சு நடத்தி 75 ஆயிரம் பேரை அழித்தொழித்தது. ( விளக்கம் - பதிவுகள்83 , பதிவுகள் 84 )
2. 1959 க்குப் பிறகு அமெரிக்காவின் வழக்கம் போல் பாணியில் உதவுகிறேன் என்ற ரீதியில் தெற்கு வியட்நாமுக்கு ஆதரவாக வடக்கு வியட்நாமில் நுழைந்தது. அதை அடுத்து 1975 வரை அமெரிக்கா படைகள் வியட்நாமின் அப்பாவி மக்களை கொன்று குவித்தது. பெண்கள், குழந்தைகள் என்று பாராமல் அழித்தொழித்தது. விமானங்கள் குடியிருப்புப் பகுதிகளில் குண்டு மழை பொழிந்தது. உலக வரலாற்றில் இரத்தத்தால் எழுதப் பெற்ற அந்த போரில் அமெரிக்கா உலக மற்றும் தமது மக்களின் அழுத்தத்தின் காரணமாக வெளியேறியது.
3. சோவியத் ரஷ்யா என்ற ஒரு நாடு இருந்த போது, அதை உடைக்க எந்த கீழ்த்தரமான காரியத்தையும் செய்ய தயாராக இருந்தது. கடைசியில் அதை உடைத்து தன் மேலாதிக்கத்தை உலகில் நிலை நாட்டியது.
4. இருபதாம் நூற்றாண்டின் முதல் ஆண்டுகளில் பிலிப்பைனில் அமெரிக்கா நடத்திய வெறியாட்டம் கொடுமையானது.
5.சோவியத் ரஷ்யாவை சிதைக்க ஒசாமா பின் லேடன் போன்றவர்களுக்கு ஆயுதம், பணம், பயிற்சி எல்லாம் கொடுத்து ஆப்கானில் உதவியது. வளர்த்த கடா மார்பில் பாய்ந்த போது நீலிக் கண்ணீர் வடிக்கிறது.(இரட்டை கோபுர தாக்குதல் கூட பாம்புக்கு பால் வார்த்து அது கொத்திய கதை தான்)
6.உலக் நாடுகள் அனைத்தையும் அணு ஆயதங்கள் வைக்கக் கூடாது என்று மிரட்டும் அமெரிக்கா தான் மட்டும் அனைத்து வித அணு ஆயதங்களையும் வைத்துள்ளது.
7. உலகில் ஆயுத பரவலை தடுக்க வேண்டும் என்று ஒரு புறம் கூறிக் கொண்டே மறுபுறம் உலக நாடுகளுக்கு தாராளமாக ஆயுத சப்ளை செய்கிறது.
8.மனித உரிமைகள் பற்றி ஜால்ஜாப்பு பேசும் இதே அமெரிக்கா குவண்டனாமோ சிறையில் நடப்பவைகளுக்கு நியாயம் பேசும். அல்லது சிலரை மட்டும் பலிகடா ஆக்கும்.
(அபு கரீப் சிறைக் கொடுமை, குவண்டனாமோ சிறைக் கொடுமை)
9.நாட்டில் அரசியல் தலைவர்கள் செய்யும் தவறுகளுக்கு அந்நாட்டு மக்களைக் கொன்று குவிக்கும். ( ஈராக். ஆப்கன்)
10. உலகிலேயே பேரழிவு ஆயுதங்களைத் தாராளமாக வைத்திருக்கும் அமெரிக்கா பேரழிவு ஆயுதம் என்றால் என்னவென்று ஸ்பெல்லிங் தெரியாத ஈராக்கை ஒழித்து அங்கு இன்னும் இல்லாத பேரழிவு ஆயுதத்தைத் தேடிக் கொண்டிருக்கிறது. ( 2007 ல் தான் ஈராக்கில் அதிகமான அப்பாவி அமெரிக்க படை வீரர்களை அமெரிக்கா பலி கொடுத்துள்ளது. பார்க்க )
11.கிழக்கு தைமூருக்கு ஒரு நியாயம் பேசும் அமெரிக்கா செசன்யாவிற்கும், போஸ்னியாவிற்கும். தமிழீழத்திற்கும் வேறு நியாயம் பேசுகிறது.
12.'வீடோ' என்ற அதிகாரத்தை வைத்துக் கொண்டு ஐ.நா. என்ற டம்மி சபையில் தான் நினைத்தை மட்டுமே செயல்படுத்தும் சபையாக மாற்றி வைத்துள்ளது.
13. அதிபருக்கு 'வீடோ' அதிகாரத்தை வழங்கி தனது அதிபரையே ஒரு சர்வாதிகாரியாக மாற்றி வைத்துள்ள சட்டதிட்டம் தான் அமெரிக்கா செனட் சபை சட்டம்
14.தேர்தலில் கூட தோல்வியை வெற்றியாக மாற்றும் இராஜ தந்திரம் அமெரிக்க ஜனாதிபதிக்கு மட்டுமே உண்டு. ( தேர்தலில் தனக்கு பிரச்சாரம் செய்த முன்னாள் நண்பன் ஒசாமாவிற்கு இதுவரை புஷ் நன்றி சொல்லாதது குறிப்பிடத்தக்கது.)
இதற்கு மேல் இங்கு எழுத மனசு வரவில்லை. ஆனாலும் அமெரிக்காவின் சர்வாதிகாரம் ஒழியும் நாள் வரும். கிரேக்கப் பேரரசும், ரோமானியப் பேராசும், சூரியனே மறையாத பிரிட்டீஸ் ஆதிக்கமும் ஒழிந்து விட்டது. இந்த 'அழிவு நாயகன்' அமெரிக்காவின் ஆதிக்கமும் ஒருநாள் ஒழியும். அதுவரை காத்திருப்போம்.
பின்குறிப்பு
1. இது அமெரிக்க சட்ட திட்டங்களையும், அரசியல்வாதிகளையும் வைத்தே எழுதப்பட்டது. சாதாரண அமெரிக்க குடிமக்களுக்கு இதில் விருப்பம் இல்லை என பல இடங்களில் நிரூபணமாகியுள்ளது.
2. ரொம்ப நாள் கொல வெறி ( அமெரிக்கா கத்துக் கொடுத்தது தான்) இன்னைக்கு தான் தீர்ந்தது.
91. அமெரிக்காவின் வண்டவாளம் - ஒரு சிறு பார்வை
Subscribe to:
Post Comments (Atom)

49 comments:
நல்ல பதிவு ஒரு தடவை படிச்சா புரியாது பொருமையா இன்னொருதரம் அப்புறம் படிக்கிறேன்.
வலிமையானவன் வெச்சவன் சட்டம்ங்கிறது அமெரிக்காவுக்கு பொருந்தும்.
அல்க்வைதா அடிச்சும் திருந்தலை.
பாப்போம்!!
Good posting vidhya Kalaivani!!
Wishes,
Kaargi
களவானிப் பெண்ணின் திருடல்கள்: 91. அமெரிக்காவின் வண்டவாளம் - ஒரு சிறு பார்வை
அப்பாடி!!!!!!! நானும் பின்னுட்டம் முதன் முதலா போடுகின்றேன்
கலைவாணி சிஸ்டர், நல்லா சரவெடி பட்டாசு மாதிரி வெளுத்து வாங்கீடிங்க.
மேலும் சில தகவல்கள் !!!!
அமெரிக்கா அரசாங்கம் Kyoto Protocol எனப்படும் சர்வதேச தீர்மானத்த அங்கீகாரம் செய்ய மறுக்கின்றது. இதன்படி வளர்ந்த நாடுகள் தன்னோட Green House Gas emission - 5 சதவிகிதம் குறைக்க வேண்டும், அதாவது 1990 - ஆம் ஆண்டு emission அளவில் இருந்து 5 சதவிகிதம் குறைக்க வேண்டும்.
(The Kyoto Protocol requires developed countries to reduce their GHG emissions below levels specified for each of them in the Treaty. These targets must be met within a five-year time frame between 2008 and 2012, and add up to a total cut in GHG emissions of at least 5% against the baseline of 1990).
பட்டி ராஜா
(ராஜசேகரன்)
//ரொம்ப நாள் கொல வெறி (அமெரிக்கா கத்துக் கொடுத்தது தான்) இன்னைக்கு தான் தீர்ந்தது.//
அது....
அக்கா காலை தொட்டு கும்டுக்கரென்...
வாழ்த்துக்கள்
ஈராக் அழிந்த போது தான் தெரிந்தது பேரழிவு ஆயுதங்கள் யாரிடம் உள்ளது என்று புதுக்கவிதை தாத்தா மு.மேத்தா அவர்களின் கவிதை நினைவுக்கு வந்தது, நல்ல பதிவு, இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்சினை தீர் ஒரு அறையில் சமாதான முயற்சியையும் மறு அறையில் இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனை வியாபாரத்தையும் நடத்தும் அமெரிக்காவை பற்றி பாயின்ட் பை பாயின்டாக எடுத்து வைத்து அசத்தி விட்டீர்கள் - நாகூர் இஸ்மாயில்
மங்களூர் சிவா,
உங்களுக்கு ஒரு செய்தி தெரியுமா
ட்வின் டவெர்ஸ் மோதினது என்னமோ
அல்கொய்தா ஆசாமிங்க
ஆனா இரண்டு flight மோதினதினால
மொத்த பில்டிங் தரைமட்டமா ஆகலை ன்னு
அமெரிக்க அரசு afganisthan மேல படைஎடுக்கரதுக்கு
அதை பயன்படுதிக்கிடாங்க அப்படின்னு ஒரு
புத்தகம் போன வருஷம் வெளியில் வந்தது
அமெரிக்காவோட நரித்தனத்தை உங்களால பட்டியலிட முடியாத அளவிற்கு மிகவும் நீண்டது. இருப்பினும், முயற்சிக்கும் தகவலுக்கும் வாழ்த்துக்கள்!!
//
valar said...
மங்களூர் சிவா,
உங்களுக்கு ஒரு செய்தி தெரியுமா
ட்வின் டவெர்ஸ் மோதினது என்னமோ
அல்கொய்தா ஆசாமிங்க
ஆனா இரண்டு flight மோதினதினால
மொத்த பில்டிங் தரைமட்டமா ஆகலை ன்னு
அமெரிக்க அரசு afganisthan மேல படைஎடுக்கரதுக்கு
அதை பயன்படுதிக்கிடாங்க அப்படின்னு ஒரு
புத்தகம் போன வருஷம் வெளியில் வந்தது
//
புதிய தகவல் நன்றி வளர்
அமெரிக்காவின் வண்டவாளத்தை நன்றாகத் தான் தண்டவாளத்தில் ஏற்றியுள்ளீர்கள்.
நீங்க அமெரிக்காவின் கள்ளத் தனத்தை புட்டு புட்டு வச்சத படிச்சி தல சுத்தி போச்சு.
ஆனாலும் உங்களுக்கு பொது அறிவு ஜாஸ்தி..பின்ணிட்டீங்க..
//'வீடோ' என்ற அதிகாரத்தை வைத்துக் கொண்டு ஐ.நா. என்ற டம்மி சபையில் தான் நினைத்தை மட்டுமே செயல்படுத்தும் சபையாக மாற்றி வைத்துள்ளது//
ஆமாங்க..
இந்த அமெரிக்காவைதான் அனைத்து நாடுகளும் ஆதரிக்கின்றன இந்தியாவும் தான் ஏன் இப்படி என்றுதான் தெரியவில்லை வளியவனுடன் சேர்ந்தால் லாபம் என்று நினைக்கிறார்களோ வளியவன் என்றுமே ஒரேமாதிரியாக இருக்கமாட்டான் நாம் எவ்வளவு நெருங்கி பழகுகிறோமோ அவ்வளவு நம்மை பற்றி அனைத்தையும் அறிந்துகொன்Dஉவிடுவார்கள் பிறகு நமக்குதானே ஆபத்து நம்பலம் பிறருக்கு தெரியாதவரைதான் நமக்கு பலம் தெறிந்தால் பலவீனம். இது ஏன் தெர்றிவில்லை நமது அரசியலருக்கு
1. அணுகுண்டு போடவில்லைடென்றால் ஜப்பானியர்களை அவர்கள் செய்த கொடூரங்களை அடக்கி இருக்க முடியாது. ஆசியா முழுவதும் அதகளம் செய்தும் அடங்காத ஜப்பான் பேர்ல் கார்பர் வரை தன் வாலை நீட்டிய பின்பே அணுகுண்டு போடப்பட்டது. ஆனால் இன்றளவும் அமெரிக்க இராணுவமே ஜப்பானைப்பாதுகாக்கிறது.
2. 1959 வியட்னாமைப்பற்றி பேசுகிறீர்கள். ஆனால் இன்று இலங்கையில் போடப்படும் குண்டுகளப்பற்றி என்ன சொல்கிறீர்கள்?
3. ரஷ்யாவின் வறுமையும் கம்யூனிச கிறுக்குத்தனமும் தான் அதை உடைத்தது. அமெரிக்காவின் பங்கு மிக சிறிதே.
4. 21ஆம் நூற்றான்டில் 2002ல் கஜராத்தில் மோடி நடத்திய வெறியாட்டத்தை விடவா? தெகல்காவைப் படித்தீர்களா?
5. வளர்த்த கடா மார்பில் பாய்ந்த போது நீலிக்கண்ணீர் மட்டும் வடிக்கவில்லை. அந்த கடாவின் பல்லைப்பிடுங்கி இருக்கிறது. இரட்டை கோபுர தகர்ப்பிற்கு முன்னால் ஒசாமா ஆப்கானிஸ்தானின் அரசன். இன்று எங்கே அவன்?
6. போலீஸ்காரனிடம் மட்டும் தான் துப்பாக்கி இருக்கவேண்டும்.
7. இது தொழில்
8. குவாண்டனாமோ பேவைப்பற்றி பேசுகிறீர்களே?. அது உலகத்தின் கொடூர குற்றவாளிகளின் சிறை. அது அப்படித்தான் இருக்கும். தேவாரம் என்ற மிருகம் வீரப்பவேட்டை நடத்திய போது செய்த கொடுமைகளைப்பற்றி 1991, 1992 மற்றும் 1993 களில் வந்த ஜூ.வி இதழ்களைப்படித்து இருக்கிறீர்களா?
9. அமெரிக்கா என்ன ஈராக் மக்களை குறி வைத்தா கொன்று கொண்டு இருக்கிறது? தமாஷ் பண்ணாதீங்க.
10. சதாம் சித்திரவதை செய்து கொன்று குவித்த மக்களின் எண்ணிக்கை இரண்டரை லட்சம்.
11. இன்னும் கொஞ்சம் விளக்குவீர்களா?
12. போலீஸ்காரனுக்கு வீட்டொ அதிகாரம் அவசியம் வேண்டும். இல்லையென்றால் இப்பொதைய தமிழக அரசைப்போல இந்த நல்ல திட்டத்தையும் செயல் படுத்த முடியாது.
13. ஒசாமாவிற்கு நன்றியா? சூப்பர் காமடி.
\இரட்டை கோபுர தாக்குதல் கூட பாம்புக்கு பால் வார்த்து அது கொத்திய கதை தான்)\\
இதுல கூட பல உள்குத்து விஷயம் இருக்குன்னு சொல்லறாங்க :)
தங்களுடைய விரிவான பதில்களுக்கு நன்றி. எனக்கெதற்கு முகமும் முகவரியும்?
//அமர பாரதி said...//
அமரபாரதி! அமெரிக்காவிற்கு வக்காலத்து வாங்கும் உங்களுக்கு ஒரு முகம் தர உங்களால் இயலவில்லை. என்னுடைய ஒவ்வொரு பதிவுற்கும் என்னிடம் விரிவான பதில் இருக்கும். அது இந்த பதிவிற்கும் பொருந்தும். உங்களுடைய கேள்விகளுக்கும் பதில் தர இயலும். உங்களுக்கு ஒரு அடையாளத்தையோ, ஒரு முகவரியோ வைத்துக் கொண்டு வாருங்கள். பதில் தருகிறேன்.
வித்யா,
மறுபடியும் சொல்கிறேன். எனக்கெதற்கு முகமும் முகவரியும்?
வித்யா,
பதில் தர முடிந்தால் மனமிருந்தால் தாருங்கள். அல்லது தேவையான நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய பதிலுக்கு என்னுடைய முகமும் முகவரியும் எதற்கு?
வித்யா,
சிறிது அவசரப்படுகிறீகளோ என்று நினைக்கிறேன். முதலில் குறைந்த பட்ச அநாகரீக வார்த்தையுடன் பின்னூட்டம்; அதன்பின் அதை அழிப்பதை சொல்கிறேன். நிச்சயமாக நீங்கள் என்னுடைய கேள்விகளுக்கு நேரடியான பதிலை தர முடியுமென்றே நினைக்கிறேன்.
அமரபாரதி, நியூயார்க்கில் இருக்கும் உங்களை நான் என்ன செய்ய முடியும்? யோசியுங்கள். நான் ஒரு பெரிய பதிவா அதற்கு போட இயலும். முகம் தெரியாத ஒரு நபருக்காக நான் என் நேரத்தை வீணாக்க இயலுமா? நீங்களே சொல்லுங்கள். என் பழைய பதிவுகளை விட இன்னும் நல்ல பதிவுக்கு நான் என்னை ஆயத்தம் செய்யலாமே அந்த நேரத்தில்.
//அமர பாரதி said...வித்யா,
சிறிது அவசரப்படுகிறீகளோ என்று நினைக்கிறேன். முதலில் குறைந்த பட்ச அநாகரீக வார்த்தையுடன் பின்னூட்டம்;//
மடையன் என்பது அநாகரிக வார்த்தை என்றால் அதை வைத்திருக்கும் உங்களை என்ன செய்வது? ஒரு பெண் தைரியமாக என்னை வெளிக்காட்டுகிறேன். ஒரு ஆணாகிய தங்களால் இயலாதது வேடிக்கையாக உள்ளது.
வித்யா,
நீங்கள் சொல்வதும் சரிதான். முகம் தெரியாத நபருக்காக நேரத்தை வீனாக்க வேன்டிய அவசியமில்லை. உங்களுடைய நேரம் பொன்னானதே. உங்களுடைய அடுத்த பதிவை படிக்க ஆவலாக உள்ளேன். நன்றி.
அமர பாரதி!!!
உங்கள் நியாயமான கேள்விகளுக்கு வித்யா பதில் தராது முகவரி தேடுவது வேடிக்கையாக இருக்கிறது. அமெரிக்க எதிர்ப்பு என்ற பெயரில் அர்த்தமில்லாமல் கோஷம்போடும் கூட்டம் உண்டு.
வித்யா!! முடிந்தால் அமர பாரதியின் கேள்விகளுக்கு நேரடியாக பதில் எழுதவும்.
அணுக்குண்டு போடப்பட்டதை யாரும் வரவேற்கவில்லை. ஆனால் யப்பானை அடக்கியிருக்காவிட்டால் உலக வரலாறு திசைதிரும்பியிருக்கும்.
சவுதி மட்டும் என்னவாம்? எண்ணை விற்ற பணம் இருந்தாலும் அமெரிக்காவின் துணையோடுதான் வளர்ச்சி காண்கிறது.
புள்ளிராஜா
புள்ளி ராஜா,
ஆதரவுக்கு நன்றி. ஆனால் பதில் தருவதும் தராததும் முழுக்க முழுக்க வித்யாவின் விருப்பமும் முடிவுமே.
அமர பாரதி!
எனக்கு நன்றி சொல்ல எதுவும் இல்லை. கேள்விக்கு பதில்கூற முகமும் முகவரியும் எதற்கு? வித்யா ஆழம் தெரியாமல் காலைவிட்ட அவதி மட்டும் தெளிவாகத் தெரிகிறது. இதில் உச்ச ஜோக் " நான் ஒரு பெண்" என அனுதாபம் தேடுவதுதான்.
பதிவுபோட நேரம் இருக்கிறது!!!. முகவரி/ முகம் கேட்க நேரம் இருக்கிறது. ஆனால்
கேள்வி கேட்டால் மட்டும் " நேரம் இல்லை".
சில நேரங்களில் சில மனிதர்கள் இப்படித்தானோ?
புள்ளிராஜா
அமர பாரதி!
எனக்கு நன்றி சொல்ல எதுவும் இல்லை. கேள்விக்கு பதில்கூற முகமும் முகவரியும் எதற்கு? வித்யா ஆழம் தெரியாமல் காலைவிட்ட அவதி மட்டும் தெளிவாகத் தெரிகிறது. இதில் உச்ச ஜோக் " நான் ஒரு பெண்" என அனுதாபம் தேடுவதுதான்.
பதிவுபோட நேரம் இருக்கிறது!!!. முகவரி/ முகம் கேட்க நேரம் இருக்கிறது. ஆனால்
கேள்வி கேட்டால் மட்டும் " நேரம் இல்லை".
சில நேரங்களில் சில மனிதர்கள் இப்படித்தானோ?
புள்ளிராஜா
//அமர பாரதி said...புள்ளி ராஜா,
ஆதரவுக்கு நன்றி. ஆனால் பதில் தருவதும் தராததும் முழுக்க முழுக்க வித்யாவின் விருப்பமும் முடிவுமே.//
விவாதப் பொருளை ஒட்டியே இருக்கும் உங்களுடைய கருத்துக்கு நன்றி. உங்களுடைய கேள்விகளுக்கு விரைவில் ஓரிரு நாளில் பதிவாக பதில் தரப்படும். நன்றி.
//மங்களூர் சிவா said...
Kaargi Pages said...
ராஜசேகரன் said...
NiMaL said...//
நன்றிகள் சகோதரர்களே!
உங்களின் பொறுமையான பதில்கள் பாராட்டதக்கது...great.
//இம்சை said...
nagoreismail said...
valar said...
குட்டிபிசாசு said...
தமிழ் பிரியன் said...
ரூபஸ் said...
ஜெயம் said...
கோபிநாத் said...
அமர பாரதி said...
Pulliraja said...
ரங்கன் said...//
அனைவருக்கும் நன்றி.
//1. அணுகுண்டு போடவில்லைடென்றால் ஜப்பானியர்களை அவர்கள் செய்த கொடூரங்களை அடக்கி இருக்க முடியாது.//
blah..blah..blah.. //ஆனால் இன்றளவும் அமெரிக்க இராணுவமே ஜப்பானைப்பாதுகாக்கிறது.//
இரண்டாம் உலகப்போர் முடியும் தருவாயில்.. ஜெர்மன், மற்றும் இத்தாலி தோற்ற பின், தோல்வியின் விளிம்பில் இருந்த ஜப்பானிய அரசுக்கு பாடம் புகட்ட லட்சக்கணக்கான அப்பாவி ஜப்பானியர்கள் அழித்தொழிப்பு! இன்றைய ஜப்பான் போன்ற ஆசிய பங்காளி அமெரிக்காவுக்குத் தேவை - சீனாவைச் சமாளிக்க! சோழியன் குடுமி சும்மா ஆடாது வோய்..
//1959 வியட்னாமைப்பற்றி பேசுகிறீர்கள். ஆனால் இன்று இலங்கையில் போடப்படும் குண்டுகளப்பற்றி என்ன சொல்கிறீர்கள்?//
Coutesy India! .. வித்யா கலைவானியின் கருத்து என்னவென்று தெரியாது - ஆனால் எனது கருத்து இது தான்
//ரஷ்யாவின் வறுமையும் கம்யூனிச கிறுக்குத்தனமும் தான் அதை உடைத்தது. அமெரிக்காவின் பங்கு மிக சிறிதே.//
இதை புருடாக்கள் பற்றி உங்கள் கூட்டாளிகள் அதிகமாக அசுரன் போன்ற இடதுசாரி பதிவர்களிடம் மூக்குடைபட்ட கதை மிகவும் நீளமானது.. பின்னூட்டத்தில் எழுத இடம் போதாது. அந்தப் பதிவுகளெல்லாம் poar-parai.blogspot.com ல் இருக்கிறது.. வாசித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்
//21ஆம் நூற்றான்டில் 2002ல் கஜராத்தில் மோடி நடத்திய வெறியாட்டத்தை விடவா? தெகல்காவைப் படித்தீர்களா?//
என்னயிருந்தாலும் அமெரிக்காவின் இளைய பங்காளிகளான மோடி வகையாறாக்கள் தமது குருவுக்கு மிஞ்சாமல் தான் அடக்கி வாசிக்கிறார்கள்.. எனவே இதிலும் அமெரிக்காவே மோடிக்கு ஏத்த ஜோடி!
ச்சும்மா போகிற போக்கில் கொன்று குவித்த நேட்டிவ் அமெரிக்கன்ஸ் என்று சொல்லப்படும் செவ்விந்தியர்களின் என்னிக்கை மட்டும் - சில கோடிகள் தான்! கூகிளில் சென்று "Native Americans" என்று அடித்து வரும் முதல் பத்து லிங்குகளைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்!
//வளர்த்த கடா மார்பில் பாய்ந்த போது நீலிக்கண்ணீர் மட்டும் வடிக்கவில்லை. அந்த கடாவின் பல்லைப்பிடுங்கி இருக்கிறது. இரட்டை கோபுர தகர்ப்பிற்கு முன்னால் ஒசாமா ஆப்கானிஸ்தானின் அரசன். இன்று எங்கே அவன்?//
முதலில் கடாவை வளர்ப்பானேன்! அந்தக் கடாவால் முட்டுப் பட்டு எல்லோரும் சிரமப்படுவானேன்.. தன்னையே முட்டியபின் அவனை விட்டு விட்டு க்ளஸ்டர் பாம்களை வீசி அப்பாவி மக்களைக் கொல்வானேன்?
இதென்ன அமெரிக்க நீதியா??? தானே உருவாக்கிய தீவிரவாதிகளைத் தேடிப் பிடித்து விளையாடும் விளையாட்டுக்கு விலை ஐந்து லட்சம் உயிர்களா? செத்துப் போனது ஏதோ ஜந்துக்கள் இல்லை சார்.. நம்மைப் போல சொந்தம் பந்தம், குடும்பம், கனவுகள், ஆசைகள், லட்சியங்கள், உணர்வுகள் எல்லாம் இருந்த மனிதப்பிறவிகள்.. ஒவ்வொரு குண்டு விழும் போதும் அந்த மக்களில் எத்தனை பேர் எப்படி எப்படியெல்லாம் துடித்துத் துடித்து செத்திருப்பார்கள்? நீங்களென்னடாவென்றால்.. இங்கே வந்து அதற்கெல்லாம் நியாம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.. குறைந்தபட்சம் உங்கள் மனதுக்குள் ஒரு உறுத்தலாவது இல்லையா?
//இது தொழில்//
எது தொழில்? உயிர்களோடு விளையாடுவதா? இது ஒரு தொழில் என்றால் இதைவிட உத்தமான தொழில் விபச்சாரம்.
//குவாண்டனாமோ பேவைப்பற்றி பேசுகிறீர்களே?. அது உலகத்தின் கொடூர குற்றவாளிகளின் சிறை. அது அப்படித்தான் இருக்கும். தேவாரம் என்ற மிருகம் வீரப்பவேட்டை நடத்திய போது செய்த கொடுமைகளைப்பற்றி 1991, 1992 மற்றும் 1993 களில் வந்த ஜூ.வி இதழ்களைப்படித்து இருக்கிறீர்களா?//
அங்கேயிருப்பவர்களெல்லாம் கொடூரக் குற்றவாளிகளா? மீண்டும் கூகிளுக்குச் செல்க; Alquida-bounty-pakistan போன்ற குறிச்சொற்களை அடித்து வரும் முதல் பத்து லிங்குகளைப் படித்து தெளிவு பெறுக! தேவாரம் நடத்திய கேம்புகளெல்லாம் குவண்டனாமோ பேவின் மினியேச்சர் தான் - மெகா ஷோ அமெரிக்கா காட்டுவது தான்.
//அமெரிக்கா என்ன ஈராக் மக்களை குறி வைத்தா கொன்று கொண்டு இருக்கிறது? தமாஷ் பண்ணாதீங்க.//
மக்களின் வாழ்க்கை என்பது உம்மைப் போன்றவர்களுக்கு தமாஷாகத்தான் இருக்கும். என்ன செய்வது. இல்லாத பேரழிவு ஆயுதங்களுக்காக பல ஆண்டுகளாக அத்தியாவசிய மருந்துகளை தடுத்து நிறுத்தி அமெரிக்கா கொன்று குவித்த குழந்தைகளின் எண்ணிக்கை மட்டுமே சில லட்சங்கள் தேறும் ஈராக்கில். அப்படியே சதாம் தவறு செய்திருந்தாலும் இந்த மக்களும் இந்தக் குழந்தைகளும் என்ன தவறு செய்தார்கள்? சதாம் சில ஆயிரம் பேரைக் கொன்றதற்காக தூக்கில் தொங்கிவிட்டான்.. லட்சக்கணக்கான இந்தக் குழந்தைகளின் சாவுக்கு எத்தனை அமெரிக்க ஜனாதிபதிகளை தூக்கில் போடுவது..
//இன்னும் கொஞ்சம் விளக்குவீர்களா?//
back to google again man!!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த அமெரிக்க வெறித்தனங்களை பதிவுகளில் எல்லாம் அடக்கி விட முடியாது.. அது சொல்லவொன்னாத சோகக் கதைகள்! இன்றைய வெள்ளை அமெரிக்கர்களுக்கு மூதாதையர்கள் அமெரிக்க கண்டத்தில் கால் வைத்த நிமிடத்திலிருந்து இன்று வரை எடுத்துப்பார்த்தால் அது ஒரு ரத்த மயமான வரலாறு. எத்தனையோ இனங்கள் பூண்டோடு அழித்தொழிக்கப்பட்டிருக்கிறது.. எத்தனையோ நாகரீகங்கள் மண்மேடாக்கப்பட்டிருக்கிறது.. அந்தக் கதைகளை வார்த்தைகளில் வடித்தெடுக்க முடியாது. கொஞ்சமாவது மனித மனம் என்று ஒன்று இருந்தால் அதனால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் சோகம் அது!
வித்யா கலைவானி, உங்களின் இந்த பதிவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! இது போல் பேசாத கதைகளை; பேசாத சோகங்களைப் பேசும் பதிவுகளாக நீங்கள் தொடர்ந்து எழுத எனது வாழ்த்துக்கள்
நிறைய உதராணங்கள்..
நல்ல பதிவு...
குட்.. கீப் இட் அப்..
சபாஷ் இரணியன் - நாகூர் இஸ்மாயில்
நல்ல பதிவு .
நன்றி
While most of the points are valid, it shows only one side of the coin. Communist Russia was even worser in suppressing human rights, esp in E.Europe and Afghanistan. and millions perished in 'experiments' in USSR and China in the last century. and USSR disintergrated not because of US conspiracy ,etc ; internal contradictions and a crumbling economy did it. it was inevitable. the present status of N.Korea is even terrible.
Free enterprise capitalism should not be confussed with Amercian polices and actions.
//K.R.அதியமான். 13230870032840655763 said...
While most of the points are valid, it shows only one side of the coin. Communist Russia was even worser in suppressing human rights, esp in E.Europe and Afghanistan. and millions perished in 'experiments' in USSR and China in the last century. and USSR disintergrated not because of US conspiracy ,etc ; internal contradictions and a crumbling economy did it. it was inevitable. the present status of N.Korea is even terrible.
Free enterprise capitalism should not be confussed with Amercian polices and actions.//
அதியமான் சார் உங்களுடைய கருத்தை இந்த விஷயத்தில் நான் ஏற்றுக் கொள்கிறேன். போஸ்னியா செசன்யாவைக் குறிப்பிட்டதிலிருந்து நீங்கள் உணர்ந்து கொள்ளலாம். மேலும் ரஷ்யாவை சிதைக்க அமெரிக்கா முயற்சி செய்தது உண்மை தானே. ஆனால் அது சிதைந்ததில் பல அதிகமான காரணிகள் உள்ளடங்கியுள்ளன.
உன்மையில் உலகின் அதி பயங்கரவாதிகள் அமெரிக்கர்கள். அமெரிக்காவில் குடி வந்த வெள்ளையர்கள் முதலில் செய்தது அங்கிருந்த குடிமக்களை (துரத்தக்கூட இல்லை) அழித்தது. செத்தவர்கள் எதற்காக சாகிறோம் என்று கூட தெரியாமல் செத்தார்கள். அமெரிக்கா வளர்ந்தது உலகின் அபாயம். அமெரிக்கா அழிக்கப்பட வேண்டிய தேசம் என்பதில் சந்தேகம் இல்லை.
உலகில் எங்காவது பிரச்சினை என்றால் முதலில் மூக்கை நுழைப்பது. பின், அதில் யாராவது ஒருவருக்கு துணை போவது. இது தூபம் போடும் வேலை. அவர்கள் அடித்துக் கொள்ளிம் வேளையில் இடையில் நுழைந்து ரத்தம் குடிப்பது. இது தான் அவர்கள் வேலை. மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி. சமீபத்தில் கத்ரீனா சூராவளியின் பொழுது தன் சகோதர மாகானங்களில் உள்ள மக்கள் அகதிகளாக வந்த பொழுது சற்றும் இரக்கம் இல்லாமல் கதவை சாத்தியது டெக்ஸாஸ். இது தான் அம்மக்களின் சுபாவம். கடைந்தெடுத்த சுயநலம்.
உலகில் தான் ஒருத்தன் மட்டும் வாழ அனைவரையும் அழிக்க தயங்காது அமெரிக்கா.
//'வீடோ' என்ற அதிகாரத்தை வைத்துக் கொண்டு ஐ.நா. என்ற டம்மி சபையில் தான் நினைத்தை மட்டுமே செயல்படுத்தும் சபையாக மாற்றி வைத்துள்ளது.//
ஐ.நா. சபைக்கு செலவாகும் பணத்தின் பெரும்பங்கு அமெரிக்கா கொடுப்பது. அது ஒரு டம்மி சபை. ஈராக்கில் அமெரிக்கா ஒரு காரணமும் இல்லாமல் நுழைந்த பொழுது வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்த ஐ.நா.வால் என்ன சாதித்துவிட முடியும்? புலிகளின் சடலங்களை அம்மனமாக்கிய பொழுது என்ன செய்தது ஐ.நா.? ஈராக் பெண்களை கற்பழித்தபொழுது என்ன செய்தது ஐ.நா.? ஜெனீவாவாம் மண்ணாம். எந்த நாடு ஜெனீவா ஒப்பந்தத்தை நிறைவேற்றுகிறது? போர் என்று வந்துவிட்டால் எந்த ஒப்பந்தமும் வெறும் காகிதம் தான். (இதை அப்பட்டமாக சொல்லியிருப்பார்கள் The Bridge on the River Kwai படத்தில்).
//இது அமெரிக்க சட்ட திட்டங்களையும், அரசியல்வாதிகளையும் வைத்தே எழுதப்பட்டது. சாதாரண அமெரிக்க குடிமக்களுக்கு இதில் விருப்பம் இல்லை என பல இடங்களில் நிரூபணமாகியுள்ளது.//
விருப்பம் இல்லை என்பதற்காக அதன் லாப நட்டத்தில் பங்கில்லை என்று சொல்ல முடியுமா? மக்களாட்சி தானே நடக்கிறது அங்கே? அப்புறம்?
ஒருவேளை, அமெரிக்கா அழிக்கப்படும் பொழுது அதற்காக கண்ணீர் சிந்த அமெரிக்கர்களை தவிற ஒருவரும் இருக்க மாட்டார்கள் என்பது தான் வேதனை.
//உங்களுடைய கேள்விகளுக்கு விரைவில் ஓரிரு நாளில் பதிவாக பதில் தரப்படும். நன்றி.// காத்திருக்கிறேன் வித்யா.
அமெரிக்கா ஜப்பானை அடக்குவதற்க்காக அணுகுண்டை போட்டதென்றால், ஏன் ஜெர்மன் மீதோ அல்லது இத்தாலி மீதோ போடவில்லை. தனது பலத்தைப் பரீட்சிக்கவே இரண்டு வகையான (யுரேனியம், புளூட்டோனியம்) அணு குண்டுகளை வீசியது.
ஜப்பானுக்கு பாதுகாப்பு என்ற போர்வையில் பசிபிக் பிராந்தியத்தில் தனது வல்லமையை தக்க வைத்துக் கொள்கிறது.
வியட்னாம் யுத்தத்தில் இரசாயன குண்டுகளை வீசியது.
இன்றுவரை ஒசாமாவைத் தேடுகிறேன், பயங்கரவாதத்தை ஒழிக்கிறேன் என்ற போர்வையில் லட்சக்கணக்கான மக்களை கொன்றதுதான் மிச்சம்.
9/11 இரட்டைக்கோபுர தகர்ப்பில் அமெரிக்காவின் திருவிளையாடல்களை "Loose Change" எனும் வீடியோவில் (google video or you tube) கட்டாயம் பாருங்கள்.
அமெரிக்காவில்தான் அதிக சிறைக்கைதிகள் உள்ளனர். சமாதான காலத்தில் தண்டனை என்ற பெயரில் கைதிகள் அதிக அளவில் தூக்கிலிடப்படுவதும் அமெரிக்காவில்தான்.
அமெரிக்காவின் செயல்களை எல்லாம் எழுதுவதானால் புதிதாக ஒரு ப்ளாக் ஆரம்பிக்க வேண்டியிருக்கும்.
காலச்சுழட்சியில் அமெரிக்கா தனது செயல்களுக்கு பலனை அனுபவிக்கும்.
//பின்குறிப்பு
1. இது அமெரிக்க சட்ட திட்டங்களையும், அரசியல்வாதிகளையும் வைத்தே எழுதப்பட்டது. சாதாரண அமெரிக்க குடிமக்களுக்கு இதில் விருப்பம் இல்லை என பல இடங்களில் நிரூபணமாகியுள்ளது.//
ஒரு 50% சத மக்களுக்கு இதில் விருப்பம் இல்லைன்னு சொன்னா இன்னும் பொருத்தமா இருக்கும். பாதி பேர் இன்னும் திமிருலதான் திரியிராய்ங்க!
என்ன மாதிரியே கொலவெறி :)
//இரட்டை கோபுர தாக்குதல் கூட பாம்புக்கு பால் வார்த்து அது கொத்திய கதை தான்)//
ஆண்ட்டி.. இந்த தாக்குதல் அமெரிக்க புலனாய்வு அமைப்புகளுக்கு முன் கூட்டியே தெரியும் என வலிமையான ஆதாரங்களுடன் சிலர் சொல்லி இருக்கிறார்கள். அமெரிக்காவில் புஷ் மீது இருந்த மக்களின் வெறுப்பை திசை திருப்ப இவர்கள் வேண்டுமென்றே இதை தடுக்க தவறியதாக அவர்கள் சொல்கிறார்கள். பெண்டகன் மீது தாக்குதல் நடத்துவது என்பதை அதுவும் சிவில் விமானத்தைக் கொண்டு நடத்துவதை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. அவ்வளவு பலமான பாதுகாப்பு மிக்க பகுதி அது.
இன்னும் இவர்களுக்கு பாகிஸ்தானிலிருந்து ஒரு பெரிய இதுவரையில் இவர்கள் கண்டிராத ஆப்பு ரெடியா இருக்கு பாருங்க. முஷாரப்பின் சொதப்பலால் அணு ஆயுதங்கள் தீவரவாதிகள்(அல் காய்தா) கைகளுக்கு போகத தான் போகிறது.அது அமெரிக்கவிற்க்கு எதிராக பயன்படுத்தப் படத் தான் போகிறது. இவர்கள் செய்யும் முட்டாள் தனங்களால் இந்தியாவிற்கும் இந்த ஆபத்து இருப்பது தான் பயமுறுத்துகிறது.
if you bend over in front of AlQuaida you may be spared....
வித்யா உங்கள் பதிவுகளில் கடந்த நான்கைந்த பதிவுகள் சூப்பர். மிகவும் சமூகப் பொறுப்புணர்வுடன் எழுதப்பட்டுள்ளன. குறிப்பாக இப்பதிவு நச்சென்று உள்ளது. விவாதங்களும். குறிப்பாக இரணியன் மற்றும் சீணாவின் கருத்துகள்.
அமேரிக்கா ஒட்டு மொத்த மனித குலத்தின் விரோதி என்பதையும் அது பெரும்பாலான அமேரிக்கர்களுக்கும் எதிரானதாக உள்ளது என்பதையும் காலம் உணர்த்ததான் போகிறது.
இன்று உலகின் பொது மக்கள் குறிப்பாக ஆசிய ஆப்பிரிக்க மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது அமேரிக்கா. அது அரச பயங்கரவாதம் மற்றும் உலகின் சில தீவிரவாத இயக்கங்களை கைக்குள் வைத்துக் கொண்டு நாட்டாமைத்தனம் பண்ணுவது அம்பலப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
//சோவியத் ரஷ்யாவை சிதைக்க ஒசாமா பின் லேடன் போன்றவர்களுக்கு ஆயுதம், பணம், பயிற்சி எல்லாம் கொடுத்து ஆப்கானில் உதவியது. வளர்த்த கடா மார்பில் பாய்ந்த போது நீலிக் கண்ணீர் வடிக்கிறது.(இரட்டை கோபுர தாக்குதல் கூட பாம்புக்கு பால் வார்த்து அது கொத்திய கதை தான்)//
இதை விளக்க மட்டுமே ஒரு நீண்ட கட்டுரை எழுதினேன் 'இஸ்லாமிய அடிப்படைவாதம்' குறித்து. அது எனது பதிவில் தொடராக வெளிவருகிறது.
உங்களது அசாத்தியமான இந்த பதிவுகளுக்கு பாராட்டுக்கள். நீங்கள் பெண் என்பது போன்றெல்லாம் யாரிடமும் நியாயப்படுத்த வேண்டியதில்லை. அதை வைத்துக் கொண்டு ஜல்லி அடிப்பார்கள். முகமற்றறவர்களிடம் பேச நாம் ஒன்றும் ஆவிகள் அல்ல. அப்படியே பேசுவது என்றாலும் அதனை நாமே தீர்மாணிப்போம். உங்கள் கருத்தும் அவர்களது கருத்தம் இரண்டு கருத்தகாளாக இருக்கட்டும் வாசிப்பவாக்ள தீர்மாணித்துக் கொள்ளட்டும்.
உங்கள் கருத்து உலக அளவில் பேசப்பட்டு வருபவைதான். அதற்கு நியயாமான எந்த பதில்களும் அவர்களிடம் இல்லை. அதை சொல்வதற்கும்கூட அமேரிக்க அரசு தயாரில்லை. தொடருங்கள் உங்கள் பணியை. வாழ்த்துக்கள்.
//Pulliraja said... வித்யா ஆழம் தெரியாமல் காலைவிட்ட அவதி மட்டும் தெளிவாகத் தெரிகிறது. //
புள்ளிராஜா, எனக்கு பின்னூட்டம் இடுவதற்காகவே புதிதாக பிளாக்கர் கணக்கு துவக்கியுள்ளீர்கள். நன்றி. எனது அடுத்த பதிவு வந்துவிட்டது. அதில் வந்து வித்யா எவ்வளவு ஆழம் தெரிந்து இறங்கியுள்ளாள் எனத் தெரிந்து கொள்ளுங்கள். இன்னும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.
//இரணியன் said...//
//1959 வியட்னாமைப்பற்றி பேசுகிறீர்கள். ஆனால் இன்று இலங்கையில் போடப்படும் குண்டுகளப்பற்றி என்ன சொல்கிறீர்கள்?//
Coutesy India! .. வித்யா கலைவானியின் கருத்து என்னவென்று தெரியாது - ஆனால் எனது கருத்து இது தான்//
உங்களது பொறுமையான நீண்ட பதில்களுக்கு நன்றிகள். இலங்கையின் நடப்பு பல விவாதங்களுக்கு உட்பட்டது. அது பற்றி மற்றோரு சந்தர்பத்தில் விளக்கம் தருகிறேன்.
//போஸ்னியா செசன்யாவைக் குறிப்பிட்டதிலிருந்து நீங்கள் உணர்ந்து கொள்ளலாம். மேலும் ரஷ்யாவை சிதைக்க///
some clarifiacations :
US desparately pursued the atomic bomb in 1940s (with the help of Einstein, Opperheimer, etc) because Germany was racing against them in making the first bomb. if Nazis had suceeded, then...
And Japan was no holy angel. its atrocities and genocide aganst fellow asians (esp Chinese) was terrible. Japs started the war in pacific and wanted to expand their empire (and our Nethaji wrongly joinned their bandwagon, in spite of knowing their record about violations and suppression of rights). In 1945, most of the territories were released from Japanese occupation. to end the war, the allies had to plan for a very costly invasion of Japanese islands. It was considered too costly in terms of life and material for that invasion. and Japs refused to surrender inspite of looking defeat in face. The Japanese culutre with kamekaze and feudal warrier clan in those days were obstinate. hence Amercians had to nuke Japan into surrender. the alternative was a massive invasion of the Japananese mainland at enromous cost of American and allied lives..
this version is still disputed as USSR had declared war against Japan at the last minute, etc.
And one American action saved millions of lives and stopped a terrible genocide. in 1999, NATO (read US and allies) bombed the christian sebia into submission to stop Serbian genocide against Bosonian muslims. the left and other 'liberals' of the world condemned NATO bombing as aggression. but for that, Bosonian mulsims would have been wiped out in the ethnic cleansing by Milosavic's Serbia (with Russian support), while UN and rest of the world condemns Serbia with mere words. US could have kept aloof and minded its business. there is no oil in Bosonia like Iraq and nor had US any vital 'interests' there. only compassion for a persequted people made them do it.
and this crippling of Serbian economic targets stopped the war for good. the terrible decade of 1990s in former yugoslaiva is over for good by NATO actions only.
can you argue against this ?
and even if US and CIA did not try to cripple USSR (While USSR and KGB did the reverse in a terrible game of cold war), USSR would have crumbled like current N.Korea due to the basic contradictions in any 'communist' state.
We cannot justify all US actions. but they are not a evil imperialists. if only Al Gore had become president (a matter of thousand votes in Florida), then Iraq invasion would bot have occured. and Bin Laden attacked US simply because US refused at act neutral and fair in Palestinian conflict with Israel. no other reason.
and the harsh economic truth is the USA is the engine of world economy now and if US economy goes into a deep recession or depression, then most of the world economy will shrink, esp the export dependent Asian nations like China, Japan , etc. and we too will face hardships.
Middle eastern oligarchies are dependent on US for their security against internal and external aggression. (from the likes os Saddam, etc). and in 1991, after Kuwait was liberated, Saddam was spared and Iraq was left to its former state mainly because of the 'strategic' reason of not disarming Iraq which acts as a natural bulwark against 'fundamentalist' Iran which is US's no 1 enenmy there since 1979. it is a complex process and plan...
hi
good wish for everyone
தற்போது தான் படிக்க முடிந்தது,
அருமை,வாழ்த்துக்கள்
Post a Comment