92. அமெரிக்காவின் வண்டவாளம் - அமரபாரதிக்கு பதில்கள்

என்னுடைய 91. அமெரிக்காவின் வண்டவாளம் - ஒரு சிறு பார்வை வது பதிவில் அமெரிக்காவிற்கு ஆதரவாக நியூயார்க்கைச் சேர்ந்த அமரபாரதி என்ற சகோதரர் பின்னூட்டம் போட்டிருந்தார். அவரது கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும், அவரைப் போல் அமெரிக்காவின் அனைத்து கொடுமைகளுக்கும் ஆதரவு அளிக்கும் சிலர் இருப்பதால் அவருடைய 12 கேள்விகளுக்கு இங்கு பதில் தருகிறேன். ஒரு மனிதனுக்குரிய மனநிலையுடன் இதை படியுங்கள். 91 வது பதிவு அமெரிக்காவை வைத்து மட்டுமே எழுதப்பட்டது.எனவே அதற்கு மட்டுமே பதில்.
அப்பாவி மக்களை கொல்லும் ரஷ்யா, இனவெறி ஹோவர்ட், பர்மா, இலங்கை, உள்நாட்டு சண்டைகள் உக்கிரத்தில் இருக்கும் ஆப்பிரிக்கா கண்டம், அவர்களின் சொகுசான அதிபர்கள், அமெரிக்கா பிடியில் தவிக்கும் தென் அமெரிக்கா நாடுகள், அமெரிக்காவின் வால் பிடிக்கும் மன்மோகன் சிங், பாகிஸ்தான் அரசியலின் கையாலாகாதத்தனம், இப்படி எவ்வளவோ விஷயங்களை இன்னும் கொண்டு வரலாம்.

இனி அவரது கேள்விகளும் எனது பதில்களும்

//1. அணுகுண்டு போடவில்லைடென்றால் ஜப்பானியர்களை அவர்கள் செய்த கொடூரங்களை அடக்கி இருக்க முடியாது. ஆசியா முழுவதும் அதகளம் செய்தும் அடங்காத ஜப்பான் பேர்ல் கார்பர் வரை தன் வாலை நீட்டிய பின்பே அணுகுண்டு போடப்பட்டது. ஆனால் இன்றளவும் அமெரிக்க இராணுவமே ஜப்பானைப்பாதுகாக்கிறது.//

ஜப்பானின் போர் தவறானது என்றே வைத்துக் கொள்வோம். அப்படியானால் அதற்கும் ஹிரோஷிமா, நாகசாகியில் அப்பாவி மக்களைக் கொன்றதற்கும் என்ன தொடர்பு? போரை நிறுத்த அதுதான் வழியா?. ஒரு அரசு போர் செய்தால் அந்த நாட்டின் அப்பாவி மக்கள் மீது அணுகுண்டு வீசலாமா? ஆப்கனில், ஈராக்கில் அமெரிக்கா போர் செய்கிறது என்பதற்காக நியூயார்க்கின் மீது அணுகுண்டு வீசலாமா?
வரலாறு தெரியாமல் சொல்கிறீர்கள். 1945ல் அணுகுண்டு வீசப்பட்டதற்குரிய காரணம் பியர்ல் கார்பரில் ஜப்பான் செய்த தாக்குதல் தான். அது நடந்த ஆண்டு 1941.பியர்ல் கார்பர் தாக்கப்பட்டதற்குப் பிறகு அமெரிக்கா அதிபர் ரூஸ்வெல்ட் செனட்டில் அதிகமான நிதியை அணுஆயுதம் செய்ய ஒதுக்கினார். ஜப்பானில் போடுவதற்காகவே அந்த அணுஆயுதங்கள் தயாரிக்கப்பட்டன். இரண்டாம் உலகப் போரில் ஜப்பானை விட ஹிட்லர் அதிகமாக அதகளம் செய்தார். அங்கு ஏன் அணுகுண்டு போடப்படவில்லை?.(போட்டிருக்க வேண்டுமென்று சொல்லவில்லை.) ஜப்பான் பிரிட்டீஸ் கலானிக்குள் நுழையும் போது அதைக் காரணமாகக் காட்டி தான் அமெரிக்கா தாக்கியது. ஜப்பானில் அணுகுண்டு போடப்பட்டது ஒரு பழிவாங்கும் வெறியின் உச்சகட்டமே ஒழிய மக்களைக் காக்க வேண்டுமென்று அல்ல. ஹிரோஷிமாவில் குண்டு போட்டு உலகமே மானுடத்தின் அழிவைப் பார்த்து செய்வதறியாது திகைத்த அந்த வேளையில், பொறுமையாக எல்லாவற்றையும் ரசித்துவிட்டு, மூன்று நாட்கள் கழித்து மீண்டும் நாகசாகியில் குண்டு வீசியதற்கும் ஆதரவளிக்கிறீர்களா?
ஜப்பானை இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்கா அடிமை நாடாக வைத்திருப்பது தான் அனைவருக்கும் தெரியுமே? அது பாதுகாப்பு இல்லை. காலனி.

// 2. 1959 வியட்னாமைப்பற்றி பேசுகிறீர்கள். ஆனால் இன்று இலங்கையில் போடப்படும் குண்டுகளப்பற்றி என்ன சொல்கிறீர்கள்?//
// 7. இது தொழிலல்//


என்னுடைய பதிவை நீங்கள் சரியாக படிக்கவில்லை என்று தான் நினைக்கிறேன். உலகில் உண்மையில் அமைதியை நாடும் நாடாக இருந்தால் அமெரிக்கா இதற்கும் முயற்சி எடுக்க வேண்டும். தமிழ் மக்களைப் படுகொலை செய்ய இலங்கைக்கு ஆயுதங்களை தனது செல்லப்பிள்ளைகள் இஸ்ரேல், பாகிஸ்தான் வழியாக விற்று விட்டு பின் இலங்கையை போரை நிறுத்து என்று சொல்ல அமெரிக்காவிற்கு என்ன பைத்தியமா பிடித்துள்ளது?.

// 3. ரஷ்யாவின் வறுமையும் கம்யூனிச கிறுக்குத்தனமும் தான் அதை உடைத்தது. அமெரிக்காவின் பங்கு மிக சிறிதே.//

கம்யூனிஷத்தைப் பற்றி வேறு ஒரு சந்தர்பத்தில் பார்ப்போம். இரும்புத்திரை நாடான சோவியத் ரஷ்யாவில் சி.ஐ.ஏ வின் முகவர்கள் ஊடுறுவி இருந்தனர். அவர்கள் செய்த அரசியல் தகிடுதத்தங்களும் அதற்கு காரணம். ரஷ்யா ஆப்கனில் ஆக்கிரமிப்பு செய்து தனது பொம்மை அரசை வைத்திருந்தது. அப்போது ஆப்கனில் தங்கி ஆயுதப் போர் புரிந்த ஒசாமா பின் லேடன் போன்றவர்களுக்கு ஆயுதம் கொடுத்தது யார்? கிட்டதட்ட 1.4 பில்லியன் அமெரிக்கா டாலர் மதிப்பிற்கு ஆயுதங்களை இலவசமாக சப்ளை செய்தது யார்?
இதை இன்னும் விவரமாக சொல்கிறேன். 1975 க்குப் பிறகு அமெரிக்க சோவியத்தின் பனிப்போர் உச்சத்தை அடைந்தது. ரஷ்யாவின் நாலா புறங்களிலும் இருந்து அமெரிக்கா தனது சதி வலைகளை விரித்து வைத்தது. அதில் ஒரு வலை தான் ஆப்கன். அப்போது ரஷ்யா ஆப்கனில் ஆதிக்கம் செலுத்தியது. எனவே அப்போது அங்கு கொரில்லா போர் புரிந்த முஜாஹிதீன்களுக்கு தனது முழு ஆதரவையும் அமெரிக்கா வழங்கியது. 1979 களில் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்டர் பல உதவிகளை வழங்கினார். 1981 ல் அதிபரான ரொனால்ட் ரீகன் தனது புலனாய்வுப் படையான CIA மூலம் சுமார் 600 மில்லியன் டாலருக்கு உதவி வழங்கினார். இதற்கு அப்போதைய பாகிஸ்தான் அதிபர் ஜியா-உல்-ஹக் உபயோகப்படுத்தப்பட்டார். CIA தலைவர் Gust Avrakotos நேரடிக் கண்காணிப்பில் சீனாவில் இருந்து ஆயுதங்கள் வாங்கி முஹாஜிதீன்களுக்கு தரப்பட்டன. ஹோரின்கோ வகை 69RPG ராக்கெட் லாஞ்சர்கள் சீனாவில் இருந்தும், எகிப்தில் இருந்து ரைபிள்களும் வாங்கப்பட்டன. அமெரிக்கா தயாரிப்பான தரையில் இருந்து விமானங்களைத் தாக்கும் FIM-92 Stinger anti-aircraft missile கள் தருவிக்கப்பட்டு வழங்கப்பட்டன. பாகிஸ்தான் வழியாக முஜாஹிதீன்களுக்கு CIA பயிற்சியும் தரப்பட்டது. அந்த போரில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு ரஷ்யாவிற்கு இறங்கு முகமே இருந்தது. இன்னும் தகவல் தேவைப்பட்டால் கார்டரிடம் பாதுகாப்பு தலைவராக வேலை பார்த்த Zbigniew Brzezinski எழுதிய "From the Shadows" என்ற புத்தகத்தைப் படியுங்கள்.

// 4. 21ஆம் நூற்றான்டில் 2002ல் கஜராத்தில் மோடி நடத்திய வெறியாட்டத்தை விடவா? தெகல்காவைப் படித்தீர்களா?//

உண்மையான மனித உணர்வு கொண்ட எந்த மனிதனும் அதை ஆதரிக்க மாட்டான். என்னுடைய உச்சபட்ச கண்டனம் அந்த கொடூரத்திற்கு. இதே கண்டனம் தான் பிலிப்பைனில் அமெரிக்கா நடத்திய வெறி ஆட்டத்திற்கும்.

//5. வளர்த்த கடா மார்பில் பாய்ந்த போது நீலிக்கண்ணீர் மட்டும் வடிக்கவில்லை. அந்த கடாவின் பல்லைப்பிடுங்கி இருக்கிறது. இரட்டை கோபுர தகர்ப்பிற்கு முன்னால் ஒசாமா ஆப்கானிஸ்தானின் அரசன். இன்று எங்கே அவன்?//

முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். ஒசாமாவை மதத்தின் பெயரால் 80 களில் மூளைச் சலவை செய்தது அமெரிக்கா தான். அந்த மூளைச்சலவை தான் தனக்கு எதிராக திரும்பியதை பின்னர் அமெரிக்கா உணர்ந்த போது, காலம் கடந்து விட்டிருந்தது. ஒசாமாவை அழித்து விட்டதாக சொல்லலாம். ஆனால் அவன் விதைத்த விதைகளை என்ன செய்வது? ஒசாமாவுக்கு முன் சுதந்திரமாக உலாவிய அமெரிக்கா மக்கள் இன்று வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு அலைகின்றனர். அதுவும் செப்டம்பர் 11 என்றால் அதோ கதிதான். ஆனால் ஒசாமா அன்று போலவே இன்றும் காடு மேடு என்று ஜாலியாக இருக்கிறார். (பின் குறிப்பில் விபரம் பார்க்க) இப்ப தோல்வி யாருக்கு?

// 6. போலீஸ்காரனிடம் மட்டும் தான் துப்பாக்கி இருக்கவேண்டும்.//

இதற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அமரபாரதி! நியூயார்க்கில் வரும் பத்திரிக்கைகளுக்கு சுதந்திரம் இல்லையென்று நினைக்கிறேன். போலிஸ்காரர் என்றால் நீதியாக இருக்க வேண்டும். இஸ்ரேலில் நடப்பதை கண்டும் காணாமல் இருப்பது தான் நல்ல போலிஸ்காரருக்கு அழகா?. மியன்மார் என்று ஒரு நாடு தெரியுமா? அங்கு என்ன நடக்கிறது என்று தெரியுமா? இலங்கையைப் பாதுகாக்க அமெரிக்காவை அழைப்போமா? உலக போலிஸ்காரருக்குள்ள தகுதி ஐ.நா விற்கு மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் அதே அமெரிக்காவின் கைப்பாவையாகி விட்டபோது வேறு என்ன சொல்வது?

//8. குவாண்டனாமோ பேவைப்பற்றி பேசுகிறீர்களே?. அது உலகத்தின் கொடூர குற்றவாளிகளின் சிறை. அது அப்படித்தான் இருக்கும். தேவாரம் என்ற மிருகம் வீரப்பவேட்டை நடத்திய போது செய்த கொடுமைகளைப்பற்றி 1991, 1992 மற்றும் 1993 களில் வந்த ஜூ.வி இதழ்களைப்படித்து இருக்கிறீர்களா?//

எப்படி வீரப்பன் செய்த கொலைகளை இதற்கு தேவாரம் நியாயமாக கற்பித்தாரோ, அதே போல் அவர்கள் செய்த கொலைகளை இதற்கு நியாயமாக அமெரிக்கா சொல்கிறது. மனிதனின் தவறுகளுக்கு பாலியல் சித்திரவதை தான் தண்டனையா? 1993 ல் நான் சிறுமி. எனவே அதைத் தெரிந்திருக்க நியாயம் இல்லை. ஆனால் தேவாரம் செய்த சித்திரவதைகள் தவறு என்றால் புஷ்ஷும் அது போன்ற ஒரு மிருகம் தானே?. குவாண்டனாமோ சிறையில் சில ஆண்டுகள் இருந்து விடுதலையான பல பிரிட்டீஸ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அப்பாவிகளுக்கு அவர்கள் அனுபவித்த கொடுமைகளுக்கு என்ன இழப்பீடு வழங்க இயலும்?.

//9. அமெரிக்கா என்ன ஈராக் மக்களை குறி வைத்தா கொன்று கொண்டு இருக்கிறது? தமாஷ் பண்ணாதீங்க.//

அமரபாரதி! தமாஷ் யார் செய்வது? வளைகுடா போர்களின் போது தொலைக்காட்சியை நீங்கள் பார்க்கவில்லையா? பாக்தாத் நகரமும், ஆபக்ன் போரில் காபூலும் தரைமட்டமாக்கப் பட்டதே? பாக்தாத்திலும். காபூலிலும் வசித்தவர்கள் என்ன அனைவரும் தீவிரவாதிகளா? பச்சிளங்குழந்தைளின் சடலங்களையும், மனிதர்களின் மரண ஓலத்தையும் நீங்கள்
பார்க்கவில்லையென்றால், அதை உணரவில்லையென்றால், அவைகள் உங்களுக்கு தமாஷாகத் கார்டூன் படங்களாகத் தெரிந்தால், நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. இருதயத்தில் கொஞ்சம் ஈரத்திற்கும் இடம் வையுங்கள். அமெரிக்காவில் வாழ்வதால் மட்டும் கண்மூடித்தனமாக படுகொலைகளை ஆதரிக்காதீர்கள்.

//10. சதாம் சித்திரவதை செய்து கொன்று குவித்த மக்களின் எண்ணிக்கை இரண்டரை லட்சம்.//

ஆம். சதாமும் பதவி வெறி பிடித்த ஒரு சர்வாதிகாரிதான். அதில் எந்த ஆட்சேபணையும் இல்லை எனக்கு. குர்தீஸ் இன மக்கள் மீது நடத்திய தாக்குதல் கொடூரம் தான். அவர் கொன்ற இரண்டரை லட்சம் பேருக்கும் அமெரிக்கா ஜப்பானில் அழித்த இரண்டரை லட்சம் பேருக்கும், ஈராக்கிலும், ஆப்கனிலும் கொன்று குவித்த ஐந்து லட்சம் பேருக்கும் வித்தியாசம் இல்லையே? அப்படியானால் சதாமும், அமெரிக்காவும் ஒன்று தானே? ஈரான், ஈராக் போர் நடந்த போது அமெரிக்காவிற்கு சதாம் உசைன் நல்லவராக தெரிந்தாரே? என்னுடைய கருத்து மனித உரிமையை வைத்து தானே ஒழிய அமெரிக்கா எதிர்ப்பு மட்டுமே அல்ல. மனித உரிமை எங்கு பால்படுத்தப் பட்டாலும் அதை எதிர்க்கலாம் தானே.

// 11. இன்னும் கொஞ்சம் விளக்குவீர்களா?//

இதில் விளக்க என்ன இருக்கிறது. நாட்டில் ஒரு பகுதி மட்டும் மத, இன வேறுபாட்டால் புறக்கணிக்கப்படும் போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு வலியவர்கள் உதவ வேண்டும். தனது ஆதாயத்திற்காக ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு நிலை எடுக்கும் அமெரிக்காவின் பச்சோந்தித்தனத்தைத் தான் அங்கு குறிப்பிட்டேன்.

//12. போலீஸ்காரனுக்கு வீட்டொ அதிகாரம் அவசியம் வேண்டும். இல்லையென்றால் இப்பொதைய தமிழக அரசைப்போல இந்த நல்ல திட்டத்தையும் செயல் படுத்த முடியாது.//

எது அதிபரின் வீட்டோ அதிகாரம்? தனது அரசியல் லாபத்திற்காக தனது படை வீரர்களை ஈராக்கிற்கு அனுப்பியதா? பாக்தாத்தில் கோடைகால வெப்பம் எவ்வளவு தெரியுமா? காபூலில் குளிர்காலக் குளிர் அளவு தெரியுமா? ஏன் அப்பாவி வீரர்களைக் கஷ்டபபடுத்த வேண்டும்?. காசா பகுதிகளில் இஸ்ரேலின் அத்துமீறிய அக்கிரமிப்புக்கு எதிராக ஐ.நாவில் தீர்மானம் கொண்டு வந்த போது அதை ரத்து செய்வது தான் வீட்டோவ்வா?. இது போல பல உதாரணங்களை அடுக்கலாம். போலிஸ்காரர் ஈராக்கில் அதி பயங்கர ரசாயன, உயிரி ஆயுதங்கள் இருப்பதாக சொன்னாரே, 2003 ல் இருந்து தேடியும் கிடைக்கவில்லையா? வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இலங்கையைக் கண்டிக்கலாமே?. மியான்மரின் இராணுவ அரசை தூக்கலாமே? அதெல்லாம் இருக்கட்டும் இப்போது அமெரிக்கா ஈராக்கிலிருந்தும், ஆப்கனில் இருந்தும் வெளியேறுவது எப்போது?

//13. ஒசாமாவிற்கு நன்றியா? சூப்பர் காமடி.//
அது உண்மையில் காமெடி தான்.


இறுதியாக சில வரிகள்

உலகில் எங்கு மனித உரிமைகள் மீறப்பட்டாலும் அதை எதிர்க்க வேண்டும். அவன் கொலை செய்ததால் நானும் செய்தேன் என்பது எவ்வளவு அபத்தமான வாதம். இரத்ததிற்கு இரத்தம் என்றால் இந்த உலகில் ஒரு மனிதனும் உயிர்வாழ முடியாது. இரத்த வெறி கொண்டு அலையும் அரசியல் பதர்களை ஓட்டு என்ற ஒரு ஆயுதம் கொண்டு மட்டுமே நம்மால் எதிர்க்க இயலும். இது போன்ற கட்டுரைகளின் நோக்கம் இது போன்ற நாடுகள் எது செய்தாலும் சரி என்று ஏற்றுக் கொள்பவர்களை மாற்றி ஒரு அமைதியான உலகை உருவாக்க வேண்டும் என்பது தான். அப்படிபட்ட உலகம் உருவாகும் என நம்புவோம். வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது.
பின்குறிப்பு
ஒசாமா பின் லேடனுடைய சொந்த நாடு சவுதி அரேபியா. அங்குள்ள ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்த ஒசாமா அனைத்து சுகங்களையும் விட்டுவிட்டு ஆப்கனில் ரஷ்ய படைகளுக்கு எதிராகப் போராட கிளம்பியவர். வளைகுடா பிராந்தியத்தில் பின்லேடன் குழுமம் எவ்வளவு பெரியது என்பது அங்குள்ளவர்களுக்கு தெரியும். இராஜ வாழ்க்கை வாழும் போதே அதை விட்டு ஆப்கன் மலைகளில் துப்பாக்கி ஏந்தி போராடக் கிளம்பியவர். அங்கு அமெரிக்கா ஏஜண்ட்களின் சகவாசம் கிடைக்கப் பெற்ற பிறகு தான் வழிமாறி தீவிரவாதத்தில் இறங்கினார்.
அமெரிக்கர்க்களின் மூளைச் சலவை அவர்களுக்கு எதிராகவே திரும்பிவிட்டது. 1990 களுக்கு பிறகு ஒசாமா சுகமான வாழ்க்கை வாழவே இல்லை. எப்போதும் போல காடு, மேடு, குகை என்று தான் இப்போதும் வாழ்க்கை ஓடுகிறது. மூத்த மனிதர் என்பதால் தான் அவருக்கு மரியாதை. ஹிரோஷிமாவில் குண்டு போட்டு அமெரிக்கா செய்த மனித அழிவுக்கும், இரட்டைக்கோபுர தாக்குதலுக்கும் வித்தியாசம் ஏதுமில்லை.

23 comments:

said...

then can you condemn about ltte's human rights violations in Srilanka?
or you are saying ltte never violated anything?
what is your stand on ltte???

or you don't "know" about ltte???

said...

சவுதி அரேபியாவில் அரேம்கோ (அரேபிய அமேரிக்க கூட்டு) எனும் பெட்ரோலிய கம்பெனி உள்ளது, சவுதி அரேபியாவிற்கு அடுத்து அதிக பெட்ரோலிய வளங்களை அதிகம் வைத்திருக்கும் பெரிய நாடு ஈராக் தான், ஆனால் ஈராக்கில் அமேரிக்க நிறுவனம் ஒன்று கூட இல்லை, இதை பொறுக்க முடியாமல் இல்லாத ஆயுதத்தை தேட ஆயுதம் ஏந்தி ஒரு நாட்டுக்குள் விசா இல்லாமல் நுழைந்தனர், ஆயுதத்தை அழிக்க கிளம்பிய பாவிகள் மக்களை அழித்தனர், பெண்களை மானபங்கப்படுத்தினர், இதுவரை நடந்த போரால் நடந்த பேரழிவுக்கு அமெரிக்காவின் பங்கு இல்லாமல் இருந்ததில்லை, குரான் ஷரீபின் படி உலகின் முதல் கொலையை செய்தவன் ஆதத்தின் மகன் - தன் சகோதரனையே கொன்றான் - குரான் ஷரீப் மேலும் சொல்கிறது உலகில் நடக்கும் ஒவ்வொரு கொலைக்கும் அவனுக்கு பங்கு இருப்பதாக, அது போல் இன்றைக்கு நடக்கும் பேரழிவு போரில் அது எங்கு நடந்தாலும் சரி அதை அறிமுகப்படுத்திய அமேரிக்காவுக்கு ஒரு பங்கு இருக்கிறது - நாகூர் இஸ்மாயில்

said...

ஈராக்கில் பலுஜா நகர் மீது இரசாயன குண்டுகள் வீசப்பட்டு 50,000 பேர்கள் அழிக்கப்பட்டது குறித்து இராணுவ மந்திரி டோனால்டிடம் பத்திரிக்கைகாரர்கள் கேட்ட போது, 'நாங்கள் பிணங்களை எண்ணுவதில்லை..' என்று திமிராக பதில் சொன்னவருக்கு ஆதரவாக பேசியவருக்கு விளக்கமான பதிலை பொருமையாகவும் நேர்த்தியாகவும் பதில் சொன்ன சகோதரி வித்யா கலைவாணி அவர்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை - இனி நீங்கள் களவாணி என்ற பேரை மாற்றிக் கொள்ள சரியான நேரம் - நாகூர் இஸ்மாயில்

said...

உங்கள் மனித உரிமைக்கான குரல் இந்த பதிவில் ஓங்கி ஒலித்திருக்கிறது ..
உங்களின் இந்த உரிமைக்கான குரல் மிக சரியானது.

said...

வெத்து வேட்டு பொருத்தமான பெயர்.. பதிவுக்கு சம்பந்தம் இல்லாம இப்படி ஒரு கேள்வி எதுக்கு???

said...

நல்ல பதிவு.. சரியான வாதம் நன்றி.

said...

அசத்திவிட்டீர்கள் சகோதரி. கைகொடுங்கள். அள்ளி விசிறிவிட்டீர்கள். சவுதியில் பின்லாடனுக்கும் மட்டும் கிடைத்த வாரிசு சொத்து மதிப்பு சுமார் 500 மில்லியன் டாலர். அவரின் அடிப்படைவாதத்தை நாம் எற்க முடியாது என்றாலும் அவர் அமேரிக்கர்களின் வளர்த்த கடா என்பது ஊரறிந்த உண்மை.

மைக்கல் மூரின் பாரன்ஹீட் இரட்டைக் கோபுர சதிபற்றியும் புஷ்ஷின் பங்கு பற்றியும் அம்பட்டமாக சொல்கிறது.

மனித உரிமை பேற்றி பேச எந்த அடிப்படை தகுதியுமற்ற நாடு அமேரிக்காவும் அதன் அடிவருடிகளும். உங்களது பொறுமையான ஆணித்தரமான பதில்களுக்கு ஒரு பாராட்டுக்கள். உங்கள் பதிவலக பணி ஒரு பாய்ச்சலை அடைந்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. தொடருங்கள் இதுபோன்ற பயனுள்ள அழமான பதிவுகள் மூலம் உங்கள் சமூகக் கடமையை மனித உரிமைகள்மீதான பற்றுறுதலை.

பி.கு.: உங்கள்து எழுத்தின் வீச்சும் மோழிநடையும் போர்க்குணத்தை வெளிப்படுத்துகின்றன.பணி தொடர வாழ்த்துக்கள்.

said...

நீங்க சொல்லியிருக்குற எல்லா விஷயமும் சரின்னு சொல்ல தெரியல ஏன்னா எனக்கு அந்த அளவுக்கு சரியாக தெரியலை. ஆனால் ஒன்னும் மட்டும் தெரியுது நீங்க விஷயம் தெரிந்த வித்யா கலைவாணின்னு நிருப்பிச்சிட்டிங்க :))

said...

அருமையான, ஆணித்தரமான பதில்கள் - வாழ்த்துக்கள். தொடருங்கள்...

said...

//வெத்து வேட்டு பொருத்தமான பெயர்.. //

யோவ் வெத்து வேட்டு, கேள்வி கேட்கணும் அப்படீங்கிறதுக்காக லூசுத்தனமா எல்லாம் கேட்க்கக்கூடாது.

LTTE பத்தி சந்தேகமிருந்தா ஒரு பதிவை எழுதுங்க, எல்லோரும் வந்து சந்தேகத்தை தீர்த்து வைப்பாங்க!


வித்யா, நல்லதோர் பதிவு/பதில்கள்.

அமெரிக்காவிற்க்கு மெதுவாக பதிலடி தரப்படும்.

ஈரான் விசயத்தில் என்ன நடக்கிறது பாருங்கள். அமெரிக்கா நினைத்த மாதிரி ஈரானை மிரட்ட முடியவில்லை.

இதுபோல் எல்லா நாடுகளும் ஒருநாள் அமெரிக்காவை எதிர்க்கும்.

said...

இந்த பதிவை படிக்கும் போது விஷயம் தெரிந்த வித்யா கலைவாணின்னு நிருப்பிச்சிட்டிங்க :)

said...

எச்சூச்மி யாராவது கேள்வி கேக்கறிங்களா?

இப்பவே கண்ண கட்டுது.)

கலக்கறிங்க வித்யா!

said...

உங்களோட முந்தைய பதிவில் சற்று குறைவாக கூறினீர்கள். இப்போது அமரபாரதி புண்ணியத்தில் முழுமையாகிவிட்டது.

வாழ்த்துக்கள்!

Anonymous said...

அமர பாரதி புண்ணியத்தால் வித்யா என்ற நகைச்சுவை எழுத்தாளரை அறியமுடிகிறது.
நீங்கள் என்ன தருமியா? அல்லது நீங்கள் எழுதியதுசொந்தச் சரக்கா? சந்தேகம்?
சோவியத்தின் சிதறலுக்கு சோவியத் பொருளாதாரமே காரணம் என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும். இதுவரை கிரம்ளின் கடைப்பிடித்த வரட்டுப் பொருளாதாரத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த முடியாது என்பதை கோர்பச்சோ
பகிரங்கமாக தனது கிரம்ளின் உரையில் தெளிவுபடுத்தினார். அதன் முதற்கட்டமாக
ஜேர்மன் சான்சலர் ஹெல்மூட் ஹோல் மூலமாக 500 பில்லியன் (?) டொச் மாக்குகளை கடனாகப் பெற்றார். " சோவியத் மக்கள் ஏனைய நாடுகளிடம் உதவிகளுக்காக கையேந்துவதைவிட ஒரு முதலாளித்துவ நாட்டிடம் கடன் பெறுவது
கவலையான ஒன்றல்ல" . இதன்மூலம் சோவியத்திற்குள் கம்யூனிசத்துக்கு எதிராக ஏற்ப பொருளாதாரக் கிளர்ச்சி தடுக்கப்பட்டது.

இதில் ஜோக் என்ன தெரியுமா? கொமிக்கோண் என்ற கி.ஐரோப்பிய பொருளாதாரக் கூட்டமைப்பு நாடுகளுக்கு சோவியத் தலைமைதாங்கியதுதான். தன் சொந்த மக்களை அடக்கிக்கொண்டு கி.ஐரோப்பிய நாடுகளையும் அடக்கியதுதான்.

தனது சொந்த மக்களின் அடிப்படை ஜனனாய உரிமைகளைக் கூட வழங்க முடியாத சோவியத் தொடர்ந்தும் கி.ஐரோப்பிய நாடுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் கைவிட்டுவிட்டது.

1. வித்யா!!! சோவியத்தின் சித்தாந்ததில் 50 ஆண்டுகள் இருந்து போலந்து, கங்கேரி போன்ற நாடுகள் ஏன் ஐரோப்பிய யூனியனில் தஞ்சம் பெறவேண்டும்?

2.யப்பானில் போடப்பட்ட அணுக்குண்டு ஜேர்மனியில் ஓப்பன் ஹைமர் என்ற விஞ்ஞானியால் உருவாக்கப்பட்டது. நீங்கள் குறிப்பிட்டது போல் அமெரிக்காவில் அல்ல.
யப்பான். இலங்கை என்ற குட்டித் தீவில் கூட குண்டுகள் வீசியது தெரியுமா?

ஜேர்மணியில் குண்டு போட வேண்டிய தேவை அப்போது இருக்கவில்லை. பிராண்ஸ், பிரித்தானியா, சோவியத் யூனியன், அமெரிக்கா என்பன நேரடியாக படைகளை நகர்த்தி
ஜேர்மனியை முற்றுக்கையிட்டுவிட்டது.
யப்பாணையும் ஜேர்மனியையும் " ஜோன் மார்ஷல்" திட்டத்தில் அமெரிக்காதான் இன்று வல்லரசு நிலைக்கு கொண்டு வந்ததாவது தெரியுமா? .
வித்தயா படிக்கவேண்டிய நூல் உலக வரலாறு. அனால் படிக்க ஆரம்பிக்க வேண்டிய வகுப்பு 3.

புள்ளிராஜா

Anonymous said...

HI nagoreismail!!!

முதலில் அமெரிக்காவை வம்பிழுப்பதைவிட்டுவிட்டு ஒரு நல்ல காரியம் செய்யுங்கள்!!1.ஈராக்கில் அமெரிக்கப்படையால் கொல்லப்பட்டவர்களைக்காட்டிலும் "சுண்ணீ" "சியாக்" எனப் பிரிந்து மோதி இறப்பவர்கள்தான் அதிகம்.
2.பாகிஸ்த்தான் மசூதிகள் நடைபெறும் தாக்குதல்களுக்கும் இந்த இரு பிரிவினரும்தான் காரணம்.
3. ஈரான்‍ /ஈராக் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா?


ஆற‌ அம‌ர‌ கூட்டிப்பாருங்க‌ள் அமெரிக்கா உல‌க‌ம் முழுவ‌து அழித்த‌திலும் அதிக‌மாக‌ இருக்கும். நீங்க‌ள் செய்ய‌ வேண்டிய‌ ந‌ல்ல‌ காரிய‌ம் அமெரிக்காவை திருத்துவ‌தைவிட்டுவிடு "இஸ்லாமிய‌ ச‌கோத‌ர‌ மோத‌ல்க‌ளை" நிறுத்துங்க‌ள்.

புள்ளிராஜா

said...

அன்பு தோழிக்கு வாழ்த்துக்கள்.

தெளிவான் சிந்தனை...

நேர்மையான கருத்துக்கள்..

Xlent.. Great..

சூர்யா
சென்னை
butterflysurya@gmail.com

said...

கையக்குடுங்க...வாவ்....

கலக்கல்...

--<>----(@-@)--<>----

அமரபாரதி போன்றோர், அமெரிக்காவிற்கு வால் பிடிக்க பல காரணம் இருக்கலாம்..சிடிசன்ஷிப், வேலை, சிஐஏ (இருக்குமய்யா, அவங்க வீட்டு வேலைக்காரி வரைக்கும் ஊடுருவுவாங்க..), உலக அரசியல் குருட்டுத்தனம், பைத்தியக்காரத்தனம் (உலக பைத்தியங்கள் என்னை மன்னிப்பார்களாக )

--<>----(@-@)--<>----

கேள்விக்கேட்கத் தெரிந்தவர், இன்னும் பல எதிர் கேள்விகளோட வந்தால், எங்களுக்கு ஒரு அருமையான விவாதம் பாத்த திருப்தி கிடைக்கும்...

அமரபாரதி ஆவனை செய்வாரா...?

said...

//PULLIRAJA said...//

பின்னூட்டங்களில் நல்ல குழப்பம் தெரிகிறது. இன்னும் நல்ல கேள்வியாய் யோசித்து திரும்பி வாருங்கள்.
//வித்தயா படிக்கவேண்டிய நூல் உலக வரலாறு. அனால் படிக்க ஆரம்பிக்க வேண்டிய வகுப்பு 3.//
//வித்தயா = வித்யா
அனால் = ஆனால்//
நான் மூன்றாவதுக்கு மேல் படிக்க முயற்சி செய்கிறேன். நீங்க......

said...

நண்பர் புள்ளிராஜாவுக்கு..

சம்பந்தமில்லாமல் இங்குவந்து ஏன் சோவியத் பற்றிய ஜல்லி. சோவியத் சிதைந்ததற்கு பல காரணங்களில் ஒன்று அதன் பொருளாதாரச் சிதைவு பற்றிய கோட்பாடு. அது பலகாலமாக பேசப்பட்டு முடிந்த கதை. இங்கு வித்யா முன்வைக்கும் அச்சிதைவிற்கு அமேரிக்காவின் இடையீடும் அதன் ரகசிய உளவுப் படையும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியுமா?

நீங்கள் அமேரிக்க ஆதரவு நிலை எடுப்பது உங்கள் உரிமை அதற்காக அதனை விமர்சிப்பதே தவறு என்றும் அமேரிக்க எதுவுமே செய்யாத நல்லபிள்ளை என்கிற தோற்றத்தை உருவாக்க முனையாதீர்கள்.

சோவியத் ரஷியா மோசமான நாடு மக்கள் விரோதி. கம்யுயூனிஸம் மக்களை அழிக்கும் தீயசக்தி. அதனால் உலகில் உள்ளள அப்பாவி மக்களை அந்த தீய சக்தியிலிருந்து காப்பாற்ற எனது விருப்பத்திற்கு கொன்று குவிப்பேன் என்பது என்ன நியாயம்? இன்று கம்யூனிஸம் என்கிற சத்ரு இல்லை அதனால் இஸ்லாமிய அடிப்படைவாதம் என்கிற மற்றொரு சத்ருவை வளர்த்து அதனை எதிர்ப்பதான நிலைப்பபாட்டை எடுத்து எண்ணற்ற மக்களை கொண்று குவிப்பது என்ன நியாயம்.

//1. வித்யா!!! சோவியத்தின் சித்தாந்ததில் 50 ஆண்டுகள் இருந்து போலந்து, கங்கேரி போன்ற நாடுகள் ஏன் ஐரோப்பிய யூனியனில் தஞ்சம் பெறவேண்டும்?//

ஐரொப்பிய யூனியனில் தஞ்சம் புகுவைப்பதுதூனே அமேரிக்காவின் திட்டம். அதனை தனது பனிப்போர் காலத்தில் நிறைவேற்ற என போலந்தில் தொழிற்சங்கங்களை அரசுக்க எதிராக திருப்பியது. அமேரிக்கா பிடல் காஸ்டரோவை கொல்வதற்காக 30-க்கும் மேற்பட்ட திட்டங்களை தீட்டி தோல்வியடைந்த கதை எல்லாம் ஏரளமாக வந்துவிட்டன. அமேரிக்கா தனது மேலாண்மைக்காக எதையும் செய்யும் யாரையும் தூண்டும். இங்கு நீங்கள் அமேரிக்க தன்னார்வு ஆய்வு நிறுவனங்கள் போர்டு முதல் மைக்ரோஷாப்ட் வரை பல பவுண்டேஷன்கள் மூலம் உலக வரலாற்றை ஆய்வு செய்வதும், சிறு சிறு இனங்கள் ஆதிவாசிகள் மத்தியில் ஆய்வுகள் நாட்டார் ஆய்வுகள் என நடத்த பல ஆய்வாளர்களை நிறைய செலவழித்து நியமித்து ஆய்வு முடிவுகளை தொகுப்பதும் எதனால் தெரியுமா? நாளை அந்த அரசுக்கு எதிராக அந்த சிறு குழுக்களை தூண்டி விடுவதற்குதான். அதனை ஊடகங்கள் எப்படி கட்டமைக்கும் என்பது ஊடகவியல் கூறும் உண்மைகள். இதற்கான உதாரணம் ஆரியு/திராவிட இந்திய/பாகிஸ்தான் பிரிவனை துவங்கி சுன்னி/சியா/குர்திஷ் சிங்கள/தமிழ் முரண்பாடுகள் வரை நிறைய உண்டு.

//2.யப்பானில் போடப்பட்ட அணுக்குண்டு ஜேர்மனியில் ஓப்பன் ஹைமர் என்ற விஞ்ஞானியால் உருவாக்கப்பட்டது. நீங்கள் குறிப்பிட்டது போல் அமெரிக்காவில் அல்ல. யப்பான். இலங்கை என்ற குட்டித் தீவில் கூட குண்டுகள் வீசியது தெரியுமா?//

ஜப்பானில் போடப்பட்ட குண்டை யார் தயாரித்தது எங்கு தயாரிக்கப்பட்டது என்பது பிரச்சனையல்ல. ஜப்பான் குட்டித் தீவுகளில் குண்டு வீசியதால் ஜப்பான் மீது அணுகுண்டு வீசுவேன் என்பதில் என்ன நியாயம் உள்ளது. சோவியத்தை ஹிட்லர் அழிப்பான் என்று அமேரிக்காவும் அமேரிக்க முதலாளித்துவ நாடுகளை ஹிட்லர் அழப்பான் என்று சோவியத்தும் அமர்ந்து வேடிக்கைப் பார்த்ததின் விளைவுதான் 'உனக்கும் பெப்பே உப்பனுக்கம் பெப்பே' என அவன் ஒரு பெரிய சக்தியாக வளர்ந்தது. போர் என்பது எந்த வடிவில் வந்தாலும் அது மக்களைக் கொண்று குவிக்கும் மனிதகுல விரோதச் செயலே.

//ஜேர்மணியில் குண்டு போட வேண்டிய தேவை அப்போது இருக்கவில்லை. //

ஏன் இல்லை என்பதற்கான காரணங்களைத் தரமுடியுமா? ஜப்பான் பியர்ல் ஹார்பரை தாக்கியதை தனது மேலாண்மைக்கு ஏற்படுத்திய சவாலாக ஒரு காயமாக அமேரிக்கா கருதியதால்தான். அந்த ஒரு அதிபயங்கர விளைவின் மூலம் இன்றுவரை தனது பேட்டை ரவுடித்தனத்தை காத்தவருவதே அதன் கலாச்சார அரசியலாகும்.

அடுத்து நாகூர் இஸ்மாயிலுக்கு பதில் கூறும் உங்கள் கருத்துகள்:

//1.ஈராக்கில் அமெரிக்கப்படையால் கொல்லப்பட்டவர்களைக்காட்டிலும் "சுண்ணீ" "சியாக்" எனப் பிரிந்து மோதி இறப்பவர்கள்தான் அதிகம்.
2.பாகிஸ்த்தான் மசூதிகள் நடைபெறும் தாக்குதல்களுக்கும் இந்த இரு பிரிவினரும்தான் காரணம்.
3. ஈரான்‍ /ஈராக் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா?//

உண்மைதான். இப்பிரச்சனைகளில் எண்ணற்ற மக்கள் கொல்லப் படுகிறார்கள். இஸ்லாமியர்களே இஸ்லாமியர்களைக் கொல்கிறார்கள். இது எதற்கு சாதகமான நிலை? இந்நிலை ஏன் தற்சமயம் மட்டும் உக்கிரம் அடைகிறது? இதற்குமுன் ஆண்ட சதாமின் ஆட்சியலோ அல்லது மன்னர் ஷாவின் ஆடசியிலோ ஏன் இத்தனை படுகொலைகள் நடக்கவில்லை? தற்பொழுது ஏன் நடக்கிறது? இந்த பகை இஸ்லாம் தோன்றிய காலந்தொட்டு உள்ள பகை. இப்பொழுது ஏன் கூர்மையடைகிறது? ஷாவை தூக்கி எறிந்த ஒரு எதேச்சாதிகார ஆட்சியை நிறுவிய சதாமை ஆதரித்த அமேரிக்க பல ஆயுதங்கள் தந்த ஈரானிய சியாக்களுக்கு எதிராக தொடர்ந்து 20-வருடங்களுக்கு மேலாக பேர்மேகங்களை சூழச் செய்து அமைதியற்ற பிராந்தியமாக வைத்திருந்தது. சோவியத் தன் பங்கிற்கு ஈரானை ஆதரித்து ஆயுத உதவிகளைச் செய்தது. சற்று உற்றுப் பார்ததால் இரண்டு வல்லரசுகளும் தனது பனிப்போர் காலத்தில் பந்தாடிய நாடுகள்தான் இந்த இஸ்லாமிய நாடுகள். மூண்றாம் உலகப்போர் என்பது மூண்றாம் உலகில் நடைபெறும் போர்தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இனி ஒருபோரை ஐரோப்பா சந்திக்காது. அதனால் பேர்க்களத் தயாரிப்புத்தான் தற்பொழுது நடைபெறும் போர்கள்.

சோவியத் ஒழி்ந்த பிறகு சதாமை கட்டுப்படுத்த குர்திஷ் இனமக்களைத் தூண்டியது. அதன் பின் சதாம் அமேரிக்காவை எதிர்க்கத் தவங்கியவுடன் பொருளாதாரத் தடை துவங்கி எல்லா அட்டுழியங்களும் செய்து கொண்டுள்ளது. கடைசிவரை ஈராக்கில் ஆயதம் ஈஈரப்பதாக அமேரிக்கா கூறக்காரணம்.. தான் அனுப்பிய ஆயுதங்களை சதாம் என்ன செய்தான் என்று தெரியாமல்தான். அவ்வளவு அடமண்டாக இருந்தது அமேரிக்கா.

ஈராக்கின் பொருளாதார தடையால் இறந்த 50000குழந்தைகள கொன்றது யார்? இந்த கதை வரலாற்றில் PHD முடித்த உங்களுக்கு தெரிந்திருக்க கூடும். அதனால் இதனை இரண்டாம் வகுப்பை தாண்டாத நான் கூறவேண்டியதில்லை.

இன்று அமேரிக்காதான் சுன்னிகளுக்கு எதிராக சியாக்களை தூண்டி இந்த உள்நாட்டு குழப்பத்தை உருவாக்குகிறது. இதன்பொருள் அமேரிக்கா உடகார்ந்து கொண்டு அதை செய் இதை செய் என்று சொல்லிக் கொண்டிருக்கிறது என்பதல்ல அர்த்தம். ஒரு சித்தாந்த வெறியைத் தூண்டி சில படுகொலைகளை நிகழ்த்திவிட்டால் போதும். பிறகு அது தானே பரவிவிடும் அமைதிப்படையில் சத்யராஜ் செய்வதுபோல. அமேரிக்காவே ஆசைப்பட்டாலும் அதனை நிறுத்த முடியாது. இன மத சாதிக் கலவரம் என்பது தொடர் படுகொலைகள் நிகழும் ஒரு விளையாட்டுக் களமாகிவிடும். இதுதான் எல்லா உள்நாட்டு கலகங்களிலும் நடைபெறுகிறது. உள்நாட்டு குழப்பம் இருந்தால்தான் தனது ஆயுதங்களை விற்க முடியும் மற்றும் படைகளை நிலைநிறுத்திக் கொள்ள முடியும், உலகில் போர் பதற்றத்தை கட்டவித்து மக்கள தனக்கு மனோவியல் அடிமையாக்க முடியும். அங்கங்கு நாட்டாமையாகி தீர்ப்பை மாற்றிச் சொல்லமுடியும்.

இன்ற பாகிஸ்தானில் அந்த விளையாட்டை அமேரிக்கா துவங்கிவிட்டது. நண்பரே.. அமேரிக்க மீதான உங்கள் பற்றை நான் குறைகூறவில்லை. அதன் உயர்ந்த மனிதகுல சேவைகளைப் பற்றி நீங்கள் எழுதுங்கள் நாங்களும் படித்துக் கொள்ள தயாராக இருக்கிறோம். அதற்காக மனித குலத்திற்கு பெரும் பரிசாக தந்த எய்ட்ஸ் பற்றி பேசாதீர்கள்.

குறிப்பாக, ஆப்கானிஸ்தான் மற்றும் இஸ்ரேல் என்கிற இரண்டு நாடுகளையும் அமேரிக்கா எந்த விலை கொடுத்தாவது தனது கட்டுப்பாட்டுக்கள் வைத்துக் கொள்ளும். காரணம் இரண்டு நாடுகளும் உலகின் பெரும்பாண்மை மக்களைக் கொண்டுள்ள ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் கிழக்க ஐரோப்பிய நாடுகளை கட்டுப்படுத்துவதற்கான புவியியல் மையங்கள். இது அமேரிக்காவின் புவிசார் அரசியலின் மையப்புள்ளி. இதனை அமேரிக்கா எக்காலத்திலும் விட்டுக் கொடுக்காது. துரதிஷ்டவசமாக இந்நாடுகள் இஸ்லாமிய மற்றும் இஸ்லாமிய சார்பு நாடகளாக இருப்பதே இன்றைய இஸ்லாம் அனுபவிக்கும் பல இன்னல்களுக்கும் குழப்பங்களுக்கும் காரணம். அதனால் இஸ்லாமியர்கள் ஒற்றுமையாக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. பிரிவினை என்கிற விஷம் தூவப்பட்டபின் ஒற்றுமை சாத்தியமில்லை. அப்படியே ஒன்றுபட்டாலும் மேலும் மேலும் பல குழப்பங்கள் உண்டு பண்ணப்பட்டு அவை பிரிக்கவே படும். பாருங்கள் பாஸ்தீனத்தை. ஹமாஸை அராபத்திற்கு எதிராக தூண்டியது. இன்று ஹமாஸை ஒழிக்க அராபத்தின் இயக்கத்தை முன் வைக்கிறது. "அரசியல் என்பது ரத்தம் சிந்தாத யுத்தம். யுத்தம் என்பது இரத்தம் சிந்தும் அரசியல்." என்கிற லெனினின் கூற்றையே இவை மெய்ப்பிக்கின்றன.

உதாரணமாக, ஆரிய திராவிடப் பிரச்சனை எப்படி வெள்ளையர்களால் கட்டமைக்கப்பட்டு இன்றுவரை மீள முடியாத பிரச்சனையாக இருக்கிறதோ அதைப் போன்றதுதான். இன்று வெள்ளையர்கள் அமர்ந்து கொண்டு இப் பிரச்சனையைக் கிளறுவதில்லை. ஆனால் துவக்கிவர்கள் அவர்கள்தான் தங்களது அளப்பறிய வரலாற்று ஆய்வுகள் என்கிற பெயரால்.. வேரைத் தோண்டி விதேஷத்தை விதைத்தார்கள். அது ஆலமரமாகிவிட்டது. ஆக, வரலாறுதான் மக்களின் இத்தனை வன்முறைக்கும் சுமைகளுக்கும் காரணம். மீண்டும் மீண்டும் மனிதனை வன்முறையாளனாக அது மாற்றிக் கொண்டே இருக்கிறது.

தண்டனை தருவதற்கு ஒரு முறையியல் உள்ளது. குற்றம் செய்தவனைவிட அதை தூண்டியவனே பெரிய குற்றவாளி. அவன் குற்றவாளியைக்காட்டிலும் பன்மடங்கு தண்டணைப்பெற வேண்டியவன் என்பது ஒரு பாலபாடம்.

நானும் பதிவிற்கு சம்பந்தமில்லாத வகையில் எழுதியதற்கு விதயாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எழுதத் தூண்டிய உங்களுக்கும் நன்றி.

அணாணியாகத்தான் எழுதத் துவங்கினேன் பெயரைக் குறிப்பதும் ஒரு அரசியல் செயல்பாடு என்பதாலும், தனது கூற்றிற்கு பொறுப்பேற்பது அடிப்படை மனித உரிமை என்பதாலும் இதனை எழுதுகிறேன். ஒரு மட்டுறுத்தல் மூலம் அணாணிகளை விதயா நிறத்தியிருக்க முடியும். அப்படி செய்யவி்ல்லை. அது அவர்களது ஜனநாயகப்பண்பு. பேரை ஏன் கேட்கிறீர்கள் என்பதுதான் என்னவகை என்ற புரியவில்லை. எனது "கொலைவெறியை" இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

அன்புடன்-
ஜமாலன்.

Anonymous said...

"பேரை ஏன் கேட்கிறீர்கள் என்பதுதான் என்னவகை என்ற புரியவில்லை. எனது "கொலைவெறியை" இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

அன்புடன்-
ஜமாலன்."

சோவியத்தின் வரலாற்றின் கறை படிந்த பக்கங்கள் அதிகம் உண்டு. செக் அரசை புரட்டிப்போட்டதில் இருந்து ஆப்கானை ஆக்கிரமித்த வரலாறு வித்யாவிற்கு தெரியவில்லை. தயவுசெய்து. முடிந்தால் விளக்கமாக எழுதவும்.

சுண்ணி/ சியாக் பிரிவுகள் மோதிக்கொள்வது இப்போதுதானா?
6ம் நூற்றாண்டில் இருந்து இஸ்லாமிய வரலாற்றை வாசித்தால் புரியுமே?!
ஈரான்/ஈராக் போரின் அடிப்படை என்ன?

போருக்கு போர் தீர்வில்லை என்ற அற்புதமான கருத்தை உலகில் முதலில் கூறிய வித்யாவிற்கு பாராட்டுக்கள்.
நான் என்ன சொல்ல? " அன்பே சிவம் அவன் கையிலும் ஆயுதம்தான்"





இந்தக் கேள்வியை வித்யாவிடம் தானே கேட்கிறீங்க?!!. அவர்தான் முதலில அமர பாரதியின் முகவரி, பெயர், சாதகம், டி என் ஏ றிப்போற்ட் கேட்டாங்க.

Anonymous said...

அனால் = ஆனால்//
நான் மூன்றாவதுக்கு மேல் படிக்க முயற்சி செய்கிறேன். நீங்க?



வித்யா டீச்சர் !!

நீங்க மட்டும் என்னவாம்?
கம்யூனிஷத்தைப் பற்றி வேறு ஒரு சந்தர்பத்தில் பார்ப்போம். இரும்புத்திரை நாடான சோவியத் ரஷ்யாவில் சி.ஐ.ஏ வின் முகவர்கள் ஊடுறுவி இருந்தனர்.




டீச்ச‌ர் அம்மா!!!


ஊடுறுவி என்ப‌து த‌ப்பு. ஊடுருவி என்ப‌துதான் ச‌ரி என்று ஒண்ணாம் கிளாஸ் பைய‌ன்
சொல்றான் டீச்ச‌ர்! பைய‌னை பெஞ்சில ஏத்துறீங்களா?!!!!!!!!!!!!!!


அமெரிக்க கூட்டில் சவுதி வளருது, சவுதியில நம்ம வித்யா டீச்சர் வாழ்க்கை ஓட்டுறாங்க. வாழ்க வளர்க‌

புள்ளிராஜா

said...

அன்பு புள்ளிராஜா, உங்கள் ஆதரவு நாட்டின் இராணுவ தலைவர், 'பிணங்களை நாங்கள் எண்ணுவதில்லை' என்கிறார், நீங்கள், 'எண்ணிப் பாருங்கள், உங்களுக்குள் சண்டையிட்டு அழிந்து உயிர்களை விட நாங்கள் குறைவாக தான் அழித்திருக்கிறோம்' என்கிறீர்கள், நல்லா இருங்க சார் - நாகூர் இஸ்மாயில்

said...

இந்த விவாதத்தில் நல்ல முறையில் பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி.:)
விளக்கமான விளக்கங்களைக் கொடுத்த சகோதரர்களுக்கும் நன்றி. :)
1. புள்ளிராஜா விவாதத்திற்கு தொடர்பில்லாமல், நான் பதில் கூறிய 12 விஷயங்களை விட்டு விட்டு என்னை கீழே இறக்குவதிலேயே கவனம் செலுத்துகிறார். இதில் எனக்கு அவமானம் ஏதுமில்லை. அவருக்கு வாய்ப்பே இல்லை. ஏனெனில் அவர் யாரென்று யாருக்கும் தெரியாது. எனவே இனி அவரது கேள்விகளை யாரும் கணக்கில் கொள்ள வேண்டாம்.
2. இந்த பதிவுக்குக் காரணமான சகோதரர் அமரபாரதி இரண்டு நாட்கள் ஆகியும் வராததால் இந்த விவாதம் இத்துடன் முடித்துக் கொள்ளப் படுகிறது. மீண்டும் வேறு ஒரு விவாத களத்தில் சந்திப்போம். :)
சகோதரி...
வித்யா கலைவாணி