தலைப்பை பார்த்து விட்டு கலைவாணியிடம் ஏதாவது (திருப்பித் தாராக் )கடன் வாங்கலாம் என்று வருபவர்கள் உடனடியாக பின்னூட்டத்தில் தங்களுக்கு தேவையான தொகையை எழுதவும். இப்பொழுது என்னிடம் பணம் இல்லை. ஆனால் விரைவில் என்னை எப்படியாவது கோடீஸ்வரியாக்க வேண்டுமென்று சிலர் கங்கனம் கட்டிக் கொண்டு அலைகின்றனர். கதை இதுதான். என்னோட யாஹூ மெயில் பெட்டியைத் திறந்தா தினமும் எப்படியாவது இரண்டு மூன்று மின்னஞ்சல் இருக்கும். அதில் சில மின்னஞ்சல்கள் என்னை கோடீஸ்வரியாக்கப் பார்க்கின்றன. சில சின்ன வியாபார பேரங்களுக்கு உட்பட்டால் பல மில்லியன், பில்லியன் டாலர் தருவதாக வாக்களிக்கின்றன். அதுவும் இந்திய ரூபாயில் இல்லாமல் டாலரில் இருப்பதால் என்னை போன்ற இளகிய மனதுடையவர்கள் அதை பார்த்து ஆனந்தம் அடைய வேண்டி இருக்கிறது. எனவே அந்த வியாபாரங்களை சீக்கிரம் முடித்து நான் கோடிஸ்வரியானதும் உங்களுக்கு தேவ்வையான தொகை உடனடியாக வழங்கப்படும். சில சாம்பிள் காட்டுகிறேன்.
நீங்களே இந்த டீலிங்கில் நேரடியாக இறங்கி அதள பாதாளத்தில் விழ..... மன்னிக்கவும்.... பணக்காரராக வேண்டுமென்றாலும் அதற்கான உதவிகள் செய்யப்படும்.
Sample : 1
However, we have decided to transfer this sum of money, Thirty Seven Million Us dollars ($37million usa Dollars) out of this Country for disbursement. Hence, we seek for a reliable,honest and not greedy foreign partner whom we shall use his or her account for transferring the fund. And we agreed that the account owner shall benefit 30% of the total amount of money, 65% is for us here, and 5% will be used for miscellaneous expenses during the transfer.
Sample : 2
Kingdom National Lottery Program held on the 12th of Nov 2007. Your
e-mail address attached to ticket number 20511465463-7644 with
serialnumber S/N-00168 drew lucky numbers 19,23,24,25,38,39,Bonus32,
which
consequently won in the 2ND category, you have therefore been approved
for
a lump sum pay of £1,000,000.00(British Pounds).
CONGRATULATIONS!!
Sample : 3
//WE DECIDED TO SEEK WAYS THROUGH WHICH WE CAN TRANSFER THIS MONEY OUT OF THE BANK AND OUT OF THE COUNTRY TOO. THE TOTAL AMOUNT IN THE ACCOUNT IS TEN MILLION FIVE HUNDRED THUSAND DOLLARS (USD 10,500,000.00).I AND MY PARTNERS HAVE DECIDED TO GIVE AWAY THIRTY % (30%) TO YOU FOR YOUR ASSISTANCE AND TEN (10%) FOR ANY EXPENSES THAT MIGHT ARISE DURING THE TRANSACTION OF THIS TRANSFER.//
Sample : 4
CONGRATULATIONS
You have the winning sum of GBP 950,000.00 from Microsoft Promotion
Board® because you are a Microsoft Windows and Internet user and Microsoft
software subcriber so you have automatically won yourself Nine
Hundred and Fifty Thousand Pounds !
இது போல் இன்னும் பல விதமான வியாபார பேரங்கள் தினமும் வந்து எப்படியாவது முகேஷ் அம்பானிக்கு விட என்னை பணக்காரியாக்க முயற்சி நடக்கிறது. எதை ஏற்றுக் கொள்வது எதை விடுவது எனத் தெரியாமல் திணறி வருகிறேன். எல்லாருக்கும் அக்கா பணக்காரியாவது சந்தோசம் தான?
மக்கா! என்னத்த சொல்லி என்னத்த செய்ய.
பின் குறிப்புகள்
1. என்னை மொக்கை பதிவர்கள் சங்கத்தில் இருந்து விலக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, சீரியஸ் லிஸ்ட்டில் சேர்க்க முயற்சி நடப்பதாக வந்த தகவலால் இந்த மொக்கை.
2. அந்த தகவலை அடுத்து எனக்கு ஆதரவாக டீக்குடிப்பு போராட்டம்........ மன்னிக்கவும்.. தீக்குளிக்க முன் வந்த ஆயில்யன் உள்ளிட்ட ஸ்ரேயா கோஸல் ரசிகர் மன்றத் தற்கொலைப்படைக்கு நன்றிகள்.
2. இந்த பதிவு மொக்கை இல்லவே இல்லை. இதிலும் கருத்து அதாங்க மெசெஜ் இருக்குனு சொல்பவர்களுக்கு கண்டிப்பாக பணம் கடன் கிடையாது.
93. நான் ஒரு கோடீஸ்வரி!!!!!!!! - நம்புங்க எல்லாரும்
Subscribe to:
Post Comments (Atom)

37 comments:
உங்களுக்குமா? படிப்பதேயில்லை அல்லுத்தூல் டெலிட்தான்.
" ஸ்ரேயா கோஸல் " அப்படி என்ற ஒரு பேர் வந்த பிறகு இது எப்படி மொக்கை பதிவு ஆகும்?
இல்லை இல்லை இது மொக்கை பதிவு இல்லை...
வாழ்க வளர்க ;)
வித்யா உங்களையாச்சும் கோடீஸ்வரியாக்கறதா மட்டும்தான் மெயில்வருது. ஆனா எனக்கு நைஜீரியால இருந்து அக்கா தங்கச்சிங்க ரெண்டு பேரு அவங்களோட 1000 கோடி சொத்தோட இண்டியா வந்து என்ன கட்டிக்க போறாங்களாமா.
dhoda!!!! naan koodathaan kodeeswari.
சத்தியமாக இது மொக்கைப்பதிவு அல்ல! எங்களின் மேல் தங்களுக்கு இருக்கும் பாசம் காரணமாக வந்த பாசக்கார (அ) செண்டிமெந்த் பதிவு.
(இம்ம்புட்டு சொல்லிட்டேன், காசு வந்தா எங்கள மறந்துடாதீங்க, சிங்கிள் டீயாவது வாங்கி தரோனும், இல்லாட்டி அழுதுடுவோம்.)
எனக்குக் கூட கோடி கோடியா பணம் தரேன்னு சொல்லி நம்ம நைஜீரிய மச்சான்கள் முன்னெல்லாம் அடிக்கடி ஈமெயில் அனுப்புவாங்க. எவ்வளவு தடவை வேணாம்னு சொன்னாலும் கேக்கவே மாட்டானுங்க... பாசக்கார பசங்க. அப்புறம் யாஹூல spam filterனு என்னென்னவோ கொண்டு வந்து சதிபண்ணிட்டாங்க, நானும் ஜிமெயில் மாத்திட்டேன், பந்தம் விட்டுப் போச்சு.......... நைஜீரிய உறவுகளுக்கு மெயில் பண்ணீங்கன்னா நான் விசாரிச்சதா சொல்லுங்க. (ஆனா என் இமெயில் அட்ரஸ் கேட்டா மட்டும் குடுத்துடவே குடுத்துடாதீங்க)
//ஜமாலன் said...உங்களுக்குமா? படிப்பதேயில்லை அல்லுத்தூல் டெலிட்தான்.//
அப்படித்தான் செய்கிறேன்.
//குசும்பன் said... " ஸ்ரேயா கோஸல் " அப்படி என்ற ஒரு பேர் வந்த பிறகு இது எப்படி மொக்கை பதிவு ஆகும்?இல்லை இல்லை இது மொக்கை பதிவு இல்லை...//
முதல் பந்திலயே அவுட் நீங்க. கடனெல்லாம் கிடையாது.
//கோபிநாத் said...வாழ்க வளர்க ;)//
வாங்க கோபி! நன்றி. நீங்க கேட்ட பணம் கிடைக்கும்.
( எவ்வளவு கேட்டீங்க? )
//நந்து f/o நிலா said...வித்யா உங்களையாச்சும் கோடீஸ்வரியாக்கறதா மட்டும்தான் மெயில்வருது. ஆனா எனக்கு நைஜீரியால இருந்து அக்கா தங்கச்சிங்க ரெண்டு பேரு அவங்களோட 1000 கோடி சொத்தோட இண்டியா வந்து என்ன கட்டிக்க போறாங்களாமா.//
நிலா அம்மா கிட்ட சொல்லி பூசைக்கு ஏற்பாடு செய்யலாமே? அதுவும் இரண்டு மடங்கு வேணுமாம்.
//குட்டிபிசாசு said...(இம்ம்புட்டு சொல்லிட்டேன், காசு வந்தா எங்கள மறந்துடாதீங்க, சிங்கிள் டீயாவது வாங்கி தரோனும், இல்லாட்டி அழுதுடுவோம்.)//
சரி அழாதீங்க. உங்களுக்கு சுடுகாட்லயே வந்து டீ தர்ரோம்
//Srini G said...
(ஆனா என் இமெயில் அட்ரஸ் கேட்டா மட்டும் குடுத்துடவே குடுத்துடாதீங்க)//
என்ன நீங்களும் கோடீஸ்வரராக வேணாம. என்னமோ போங்க. நல்லதுக்கு காலமில்லை.
//delphine said...எனக்கும் தினம் தினம் இடு மாதிரி மெயில் வருதுங்களே! அப்ப நானும் கோடீஸ்வரிதான்.//
நீங்கள் என்றும் எதிலும் உயர்ந்தவர் தான்.
//jaseela said...dhoda!!!! naan koodathaan kodeeswari.//
உண்மையிலா?
வித்யா - படிக்காமல் அழித்து விடு - ஸ்பாம் மார்க் செய் - பாத்துக்கோ - தளம் பத்ரம்
அது சரி, எவ்வளவு வட்டின்னு சொல்லவே இல்லையே, கந்து வட்டி எல்லாம் கேட்கக்கூடாது!
எங்கியோ போய்ட்டீங்க...ஆமா அந்த மெய்ல் எல்லாம் கூட முழுசா படிச்சி ரிப்ளை பண்றிங்களா
கோடீஸ்வரிக்கு, கோடீஸ்வரனின் வாழ்த்துக்கள்!!
இதையும் பார்த்து, படிச்சு, யாருகிட்டேயும் சொல்லாமே, இருக்குற காசையும் இழந்துட்டு இருக்காங்க நிறய பேரு. அவர்களுக்கு, கோடீஸ்வரர்கள் (மெயில்ல மட்டும்தான்!) சங்கம் சார்பா வருத்தங்கள்!!
'யாரும் விதிவிலக்கல்ல':-))))
//cheena (சீனா) said...வித்யா - படிக்காமல் அழித்து விடு - ஸ்பாம் மார்க் செய் - பாத்துக்கோ - தளம் பத்ரம்//
ஒரு மின்னஞ்சலில் இருந்து வருவதில்லை. தினமும் ஒவ்வொரு மின்னஞ்சல் முகவரி. :)
//ஜீவா (Jeeva Venkataraman) said...அது சரி, எவ்வளவு வட்டின்னு சொல்லவே இல்லையே, கந்து வட்டி எல்லாம் கேட்கக்கூடாது!//
சேச்சே கந்தி வட்டி, தனி வட்டி, கூட்டு வட்டி இதெல்லாம் எனக்கு பிடிக்காது.
:)
:)
:)
எங்களுக்கு மீட்டர் வட்டி தான் பிடிக்கும். ஒரு மீட்டர் = 24 மணி
:))
//இம்சை said...எங்கியோ போய்ட்டீங்க...ஆமா அந்த மெய்ல் எல்லாம் கூட முழுசா படிச்சி ரிப்ளை பண்றிங்களா//
நம்மை நம்பி அனுப்புறாங்களே! ஆனாலும் நிறைய பேரை சுத்துல விட்டாச்சு. நமக்கே அல்வாவா? நாம செஞ்ச குழப்பத்தில் அவனவன் இனி யாருக்கும் மெயிலே அனுப்ப மாட்டான். :)) வித்யாவா கொக்கா?
//தஞ்சாவூரான் said...கோடீஸ்வரிக்கு, கோடீஸ்வரனின் வாழ்த்துக்கள்!!//
நீங்க மாட்டலையே?
//துளசி கோபால் said...'யாரும் விதிவிலக்கல்ல':-))))//
இருக்கும். அவங்களுக்கு எல்லையே இல்லையே! :)
இது ஒரு இம்சைதான்..இதை நம்பி என் உறவினர் ஒருவர்...5000 டாலர் deposit செய்தால் 2 லட்சம் டாலர் நைஜீரியாவிலிருந்து கிடைக்கும் என்று சொல்லி என்னிடம் 5000 டாலர் கடன் வேறு கேட்டார்...
இன்னும் ஓர் இம்சை...எதையாவது அனுப்பி இதை இவ்வளவு நேரத்துக்குள் இத்தனை பேருக்கு forward செய்தால் உங்களுக்கு நல்லது நடக்கும் என்பது..
//பாச மலர் said...
இது ஒரு இம்சைதான்..இதை நம்பி என் உறவினர் ஒருவர்...5000 டாலர் deposit செய்தால் 2 லட்சம் டாலர் நைஜீரியாவிலிருந்து கிடைக்கும் என்று சொல்லி என்னிடம் 5000 டாலர் கடன் வேறு கேட்டார்...இன்னும் ஓர் இம்சை...எதையாவது அனுப்பி இதை இவ்வளவு நேரத்துக்குள் இத்தனை பேருக்கு forward செய்தால் உங்களுக்கு நல்லது நடக்கும் என்பது..//
ஆமாம். அதனால தான் தெரியாதவ்ர்கள் தெரியட்டும் என்று இந்த பதிவு. கொஞ்சம் நகையுடன்.
ஆமாங்க uk லாட்டரி, microsoft promotion team அப்புடின்னு டெய்லி மெயில் அனுப்பி கொல்றானுங்க..
//ரூபஸ் said...ஆமாங்க uk லாட்டரி, microsoft promotion team அப்புடின்னு டெய்லி மெயில் அனுப்பி கொல்றானுங்க..//
என்ன பள்ளிக்கு லேட்டா வர்ரீங்க. அப்புறம் ராகிங் பண்ணுவோம்.
//
நந்து f/o நிலா said...
வித்யா உங்களையாச்சும் கோடீஸ்வரியாக்கறதா மட்டும்தான் மெயில்வருது. ஆனா எனக்கு நைஜீரியால இருந்து அக்கா தங்கச்சிங்க ரெண்டு பேரு அவங்களோட 1000 கோடி சொத்தோட இண்டியா வந்து என்ன கட்டிக்க போறாங்களாமா.
//
இது வீட்டுக்கு தெரியுமா??
:-))))))
:-))))
குட்டிபிசாசு said...
சத்தியமாக இது மொக்கைப்பதிவு அல்ல! எங்களின் மேல் தங்களுக்கு இருக்கும் பாசம் காரணமாக வந்த பாசக்கார (அ) செண்டிமெந்த் பதிவு.
repeeetttaaaayyyyyyy:-))))
என்னையும் மறந்துடாதீங்க....ஹ்ஹி ஹி.....
மொக்கைதான்னு சொன்னா பணம் கிடைக்குமா.மொக்கையில்லைன்னு சொல்லி இருக்கவங்கல்ளாம் ஏற்கனவே கோடீஸ்வரங்கள் போல..
எனக்கு கொஞ்சம் பணம் கடன் கொடுங்க..
இது மொக்கையென்று உறுதியாக அடித்து சொல்கிறேன்.
junk mail junk mailன்னு (ரெண்டு இல்ல.. ஒன்னுதான் :-P) இருக்குன்னு தெரியுமா?
அதை யூஸ் பண்ணுங்க.. எல்லாம் சரியாகிடும்..
சரி.. அக்கா பணக்காரியானா, தங்கச்சிக்கும் ஒரு பங்கு கொடுத்துடுங்க. :-)))))
லேட்டா வந்து பின்னூட்டம் போட்டாலும் படிச்சுட்டு போடுறேன்கிற பாய்ண்டை நோட் பண்ணிக்கோங்க அக்கா. :-))))
//1. என்னை மொக்கை பதிவர்கள் சங்கத்தில் இருந்து விலக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, சீரியஸ் லிஸ்ட்டில் சேர்க்க முயற்சி நடப்பதாக வந்த தகவலால் இந்த மொக்கை.//
ஆமா ஆமா.. ரெண்டு சீரியஸ் பதிவுக்கு ஒரு மொக்கை போடுங்க.. இல்லன்னா, உங்களை தண்ணீ இல்லா காட்டுக்கு மாத்திடுவோம். :-))))
Post a Comment