உரையாடலின் முதல் பகுதி பார்க்க
ஒரு தமிழாசிரியருடன் நடைபெற்ற சாட்டினை அப்படியே போன பதிவில் தர முயற்சி செய்தேன். அதன் தொடர்ச்சியாக இது இரண்டாவது பகுதி.இனி உரையாடல் தொடர்கிறது..............
தமிழாசிரியை : 35 ஆண்டு காலப் பழக்கம் அவ்வளவு எளிதில் மாறாது. கவிதை நடைச் சாயல் என் உரை நடைக்கு உண்டு - அதை அவ்வளவு எளிதில் மாற்றிவிட முடியாது.
வித்யா :சரிம்மா இத்துடன் நாம் முடித்துக் கொள்வோம். உங்களுடைய தமிழுக்கு எனது வந்தனங்கள்
தமிழாசிரியை : ஏன் பயந்துகிட்டுஓடறே
வித்யா : ஓட வில்லை
தமிழாசிரியை : பின்னே
வித்யா : நீங்கள் பழக்கத்தை மாற்ற முடியாது என்று தான் கூறுகிறீர்களே தவிர.. அதற்கு சரியான காரணம் கூற வில்லையே
தமிழாசிரியை : மாற்றத்திற்கு தேவை இன்னும் வரவில்லை
வித்யா : இளைய தலைமுறையினர் கூறுவதுதான் அதற்கு சான்று
தமிழாசிரியை : எத்தனை பேர் ?? விழுக்காடு அதிகமில்லையே !!
வித்யா : அப்படியென்றால் என்னைப் போன்றவர்களை உருவாக்க முடியாது
என்கிறீர்களா?
தமிழாசிரியை : முடியும் என்ற நம்பிக்கை உண்டு
வித்யா : அப்படியானால் எங்களுக்கு புரிய வேண்டுமே? புரிந்தால் தானே நீங்கள் சொல்வது போல வளர இயலும்.
தமிழாசிரியை : அடிக்கடி வந்து படி - கேள் - பழகப் பழகத் தமிழ் புரியும். ஒரு நல்ல செயலுக்காக நடை மாறாமல் இருப்பது நல்லது தான்
வித்யா : காலத்தின் கட்டாயம் என்று ஒன்று உள்ளதே? செய்தித்தாள்களில் பார்த்தால் புரியும்.
தமிழாசிரியை : கட்டாயம் என்பது அவரவர் கருத்தைப் பொறுத்தது.
வித்யா : இல்லை. இது தமிழின் கட்டாயம். இதை நீங்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள்.
தமிழாசிரியை : செய்திதாள்களின் தரம் என்று ஒன்று இருக்கிறதல்லவா - தினமணிக்கும் தினமலருக்கும் வேறுபாடு இல்லையா?
வித்யா : இருக்கு. அது தான் காலத்தின் கட்டாயம் என்கிறேன்
தமிழாசிரியை : தினமணி தினமலர் போல மாற வேண்டுமென்று விரும்புகிறாயா ?
வித்யா : நான் அப்படி சொல்ல வில்லை. தினமணி சுதேசமித்ரனாகக் கூடாது என்று தான் சொல்கிறேன்
தமிழாசிரியை : அது காலத்தைப் பின்னோக்கி இட்டுச் செல்லாது
வித்யா : இல்லை நீங்கள் உங்கள் இடத்தை விட்டு வர மாட்டேன் என்கிறீர்கள் 35 ஆண்டுகளாக
தமிழாசிரியை : வரவேண்டும் எனச் சொல்கிறாயா?
வித்யா :கண்டிப்பா! தமிழ் கொலை செய்ய சொல்ல வில்லை. நீங்கள் எப்படி பேசுகிறீர்களோ அப்படி எழுதுங்கள்
தமிழாசிரியை : மொழி மரபில்லாமல் வளர்ந்துகொண்டிருக்கின்ற – இல்லை இல்லை - வாடிக்கொண்டிருக்கின்ற மொழியைப் பார்க்கும்போது உண்மை மறைந்து போய் விடுமோ என்ற உள்ளுணர்வு உறுத்துகின்றது.
வித்யா :இது வாடுதல் அல்ல. வளார்ச்சி தமிழ் சாகா வரம் பெற்றது.
தமிழாசிரியை : பேசுவது போல் எழுதுவது என்பது கருத்துப் பரிமாற்றத்திற்கு சரியே. ஆனால் நான் கருத்துப் பரிமாற்றம் செய்யவில்லை. கருத்துப் பதிவு தான் செய்கிறேன். புதுக்கவிதை மரபை ஏற்றுக்கொண்டிருக்கிறோம் நாம். அதில் கருத்து இருக்கிறது என்பது தான் அதன் வடிவம்.
வித்யா :அது போல தான். பேச்சுத் தமிழின் உருமாற்றம். அதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்
தமிழாசிரியை : சங்க கால நடையில் யாரும் இப்போது எழுதுவதில்லை. என்னுடைய நடை மு.வ, வ.சுப.மா, பார்திதாசன், அறிஞர் அண்ணா, ஆகியோரின் மொழி நடையைப் படித்துப் படித்து சுவைத்ததால் வந்தது.
வித்யா : அதுவும் காலத்தின் கட்டாயத்தினால் ஏற்பட்ட உருமாற்றம் தானே. அதை ஏற்றுக் கொள்ளும் நீங்கள் இதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள்.
தமிழாசிரியை : இந்தப் பேச்சுத்தமிழையே நான் படித்திருந்தால் பேசாமல் தமிழ் படிக்காமலேயே இருந்திருப்பேன்.
“இருந்தமிழே உன்னால் இருந்தேன்!!
இமையோ விருந்தமிழ்தம் வேண்டினும் வேண்டேன்”
என்ற நாவலர் தமிழைச் சுவைத்தும்
“தமிழே நீ ஒரு பூக்காடு அதில் நான் ஒரு தும்பி” என்ற அவர் பாவினைப் படித்தும் “சாதல் தமிழறிந்து சாதல் வேண்டும்
எந்தன் சாம்பலுமே தமிழ் மணந்து வேதல் வேண்டும்”
என்ற பாரதி தாசனைச் சுவைத்தும்
“தனிமைச் சுவையுடைய சொல்லை
எங்கள் தமிழினும் வேறெங்கும் கண்டதில்லை”
என்ற பாரதியை பாவால் பார்த்தும் வந்ததே என் தமிழ் நடை - அது எப்படி மாறும்?
வித்யா : சரி இறுதியாக என்னதான் சொல்கிறீர்கள்.
தமிழாசிரியை : ஒவ்வொரு கட்டத்திலும் மொழியானது தனது வளர்ச்சியை நோக்கி செல்லும். ஆனால் தற்காலத்தில் இருப்பது தான் சரியானது என்று நினைத்து விடக்கூடாது. பழையவர்கள் அதில் இருந்து சரியானவைகளைத் தேர்ந்தெடுத்து புதியவர்களுக்கு தருகின்றனர். எப்படி சிறு குழந்தைக்கு பெற்றோர் எது தேவையோ, அதைத் தேர்ந்தெடுத்து கொடுக்கின்றனர். அதே போல் தான் இதுவும். உங்களுக்கு சந்தேகங்கள் வரும் போது எங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். எடுத்துக்காட்டாக இப்போது எழுதுபவர்களில் பலருக்கு ல, ள, ழ போன்றவற்றிற்கு வித்தியாசம் தெரிவதில்லை. அதே போல் தாம் ன, ண, மற்றும் ர ற போன்றவை. இவைகளை எங்கள் எழுத்துகளைப் படிக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக திருந்திவிடும். தொடர்ந்து படித்துக் கொண்டே இருந்தால் அனைத்தும் சுலபம் தானே.
வித்யா : அம்மா உங்கள் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். நாங்கள் செல்லும் வழியை நீங்கள் கண்காணித்துக் கொண்டே இருங்கள். நாங்கள் தவறு செய்யும் போது கண்டியுங்கள். அதை சிரமேற்கொண்டு ஏற்றுக் கொள்கிறோம்.
பின்குறிப்பு
அந்த தமிழாசிரியை என்னுடைய தாய்க்குச் சமமான செல்வி ஷங்கர் என்ற பெயரில் எழுதி வருபவர். தமிழ்மண மக்கள் அறிந்த சீனா அப்பாவின் மறுபாதியானவர். ( துணைவியாருக்கு மறுபாதி என்று புது பெயர் கொடுத்தது சீனா அப்பா தான்) அவரது தமிழமுதை சுவைக்க வாருங்கள்.
எண்ணச்சிறகு
பட்டறிவும் பாடமும்
கேட்டதில் பிடித்தவை
2. நாங்கள் இருக்கும் ரியாத்தில் இருந்து புதிதாக தமிழ்மணத்திற்கு அறிமுகமாகி இருக்கும் எனது புதிய சொந்தம் சகோதரி பாசமலரும் தனது தமிழ் அறிவை தனது பதிவுகளில் பறைசாட்டுகிறார். என்னுடைய முதல் பதிவில் நான் கூறிய கருத்துகளால் கோபமடைந்து ஒரு கவிதை கூட அவரது பதிவில் எழுதி விட்டார். பாருங்கள்.
“சிதையில் நீ போகாமல்
சீராய்க் காக்கும்
மெய்காப்பாளர்
திருப்பணி பெற்றுத்
துறை தோறும்
துலங்குவாய் தமிழே!”
3. இவர்கள் இருவரும் மதுரையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
96. தமிழாசிரியையுடன் உரையாடல் - 2 மற்றும் ஒரு புதிய அறிமுகம்.
Subscribe to:
Post Comments (Atom)

14 comments:
இப்போ தான்க 15 வருடத்துக்கு பிறகு தமிழ் எழுத ஆரம்பிச்சிருக்கேன். நிறையா தப்பு வருது.
ஆகா. நான் நினைத்தது சரியாகப் போனது. ஐயா, அம்மா இருவரின் இடுகைகளையும் தொடர்ந்து படித்து வருகிறேன். உங்கள் அரட்டை இடுகைகள் இரண்டினையும் இன்னொரு முறை நன்கு படிக்க வேண்டும்.
நானும் மதுரைக்காரன் தான் என்பதை தங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். :-)
\\அந்த தமிழாசிரியை என்னுடைய தாய்க்குச் சமமான செல்வி ஷங்கர் என்ற பெயரில் எழுதி வருபவர். தமிழ்மண மக்கள் அறிந்த சீனா அப்பாவின் மறுபாதியானவர்\\
ஆகா...அப்படியா செய்தி!!...நன்றி ;)
//
இம்சை said...
இப்போ தான்க 15 வருடத்துக்கு பிறகு தமிழ் எழுத ஆரம்பிச்சிருக்கேன். நிறையா தப்பு வருது.
//
நான் 10 வருசம்
:)
இதனால் அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் வித்யா அவர்களுக்கு மல்டி பெர்சனாலிடி டிஸாடர் இல்லை.
மேலும் பேட்டியில் பங்கு கொண்ட தமிழாசிரியை செல்விஷங்கர் அவர்களுக்கும், பேட்டி கண்ட வித்யா அவர்களுக்கும் தமிழ்மனம் சார்பில் பெரிய கும்பிடு சாமியோவ்!!
ஆஹா வித்யா..கோபமில்லை வித்யா..சிதைக்கிறோம் என்று புரியாமலே இருக்கிறார்களே, சிதைப்பதை நியாயப் படுத்துகிறார்களே..அவர்களுக்கான கோபம்..வித்யா அந்த ரகமில்லை என்பது என் எண்ணம்...
குமரன் (Kumaran) ने कहा
//நானும் மதுரைக்காரன் தான் என்பதை தங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்//
மதுரைக்காரவங்க நிறைய பேர் இருக்கோம் போலருக்கே...
வித்யா..அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள் பல..
குட்டிப் பிசாசு!!
தல ! அவசரப்பட்டு அறிக்கை விட வேண்டாம். மறுப்பறிக்கை எப்போ வெளிவரும்?
குட்டிச்சாத்தான்
//இம்சை said...இப்போ தான்க 15 வருடத்துக்கு பிறகு தமிழ் எழுத ஆரம்பிச்சிருக்கேன். நிறையா தப்பு வருது.//
மங்களூர் சிவா said...
நான் 10 வருசம்
:)//
பழக்ப் பழக எல்லாம் வரும். நான் மட்டும் என்னவாம்? கடந்த 6 வருடமா தமிழில் எழுவதே விட்டுப் போய் விட்டது. இப்ப 3 மாதமாத்தான் மீண்டும்.
//குமரன் (Kumaran) said... நானும் மதுரைக்காரன் தான் என்பதை தங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். :-)//
தங்கள் வருகைக்கு நன்றி. அபாரமாக எழுதுகிறீர்கள். அடுத்து மதுரையில் தமிழ் பதிவர்கள் கூட ஆலோசித்து வருகிறோம்,.
வித்யா,
எதோ வலைப்பதிவு புண்ணியத்தில் தமிழ் எழுதமுடிகிறது. தமிழில் எழுதி 7 வருடம் ஆகிறது. நிறைய சொற்களை வலைப்பதிவு படிப்பதன் மூலம் தான் கிடைக்கப் பெற்றேன். இருப்பினும், முழுமையாக கைகொள்ளாமல் தான் இருக்கிறேன்.
//குட்டிபிசாசு said...
இதனால் அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் வித்யா அவர்களுக்கு மல்டி பெர்சனாலிடி டிஸாடர் இல்லை.//
கு.பி. ... நீங்க எங்க குடும்பத்தைச் சேர்ந்தவரென்பதால் விட்டாச்சு. இல்லனா பேய் ஓட்டிருப்போம். ஆமா
//பாச மலர் said...//
இதெல்லாம் எங்கள் கடமையாச்சே
//குட்டிப் பிசாசு!!தல ! அவசரப்பட்டு அறிக்கை விட வேண்டாம். மறுப்பறிக்கை எப்போ வெளிவரும்?
குட்டிச்சாத்தான்//
வாங்க ஹிட்லர் ஆத்து அனானியே! நீங்க "அந்த" அனானி தானே? குட்டி பிசாசு எங்க குடும்பம். அதனால குட்டி சாத்தானுக்கு எல்லாம் பயம் கிடையாது.
Post a Comment