97. தமிழகத்தில் இணைய இணைப்பு - யாராவது உதவுங்க!!!!

இது தமிழகத்தில் இணையம் உபயோகிப்பவர்களுக்கானது. இன்னும் சில தினங்களில் நாங்கள் ஊருக்கு விடுமுறையில் செல்ல உள்ளோம். ஊரில் (பெரியகுளம்) தற்போது இணைய இணைப்பு இல்லை. என்வே ஊருக்கு போன பிறகு BSNL மூலம் தொலைபேசி இணைப்பும், அகலக்கற்றை ( Broadband) இணைப்பும் பெறலாம் என்று இருந்தோம். ஆனால் கடந்த வாரம் தினமலரில் வந்த செய்தி, அந்த ஐடியாவிற்கு மூடு விழா நடத்தி விட்டது.

அதாவது தொழில்நுட்பக் காரணங்களினால் எங்கள் ஊரில் அகலக்கற்றை இணைப்பு 6 மாதமாக வழங்கப்படாமல் உள்ளதாம். எனவே எங்களுக்கும் உடனடியாக கிடைக்க வாய்ப்பு இல்லை. தமிழகத்தில் இணைய இணைப்பு உள்ளவர்கள் BSNL தவிர்த்து மற்ற சேவைகள் இருந்தால் எனக்கு சொல்லுங்கள்.
நேரத்தை அடிப்படையாகக் கொள்ளாமல் பதிவிறக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தால் நலம். என்ன திட்டம், மாதம் எவ்வளவு வரும் என்று தெரிவியுங்கள் . டயல் அப் பரிந்துரைக்க வேண்டாம். நம்ம வேகத்துக்கு டயல்அப் சரிவருவதில்லை. நண்பர்களே, உறவுகளே கொஞ்சம் உதவுங்கள்.

++++++++++++++++++%$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$%***********

ஒரு மொக்கை
மல்லுகளோடு மல்லுக்கு நிற்போம்.
இது மொக்கையா என்னன்னு தெரியலை. ஏஷியாநெட் தொலைக்காட்சியில் வந்த செய்தி. இரண்டு நாளுக்கு முன்னால் கேரள விமான நிலையத்தில் நம்ம சேட்டா சாஜி வந்திருக்கார். 34 வயதான அவர் தமாம் ( சவுதியில் ஒரு நகரம்) நகருக்கு டிரைவர் வேலைக்கு விசா கிடைத்து முதன் முறையாக வெளிநாடு செல்ல வந்துள்ளார். அதற்கு ஏஜண்ட்களுக்கு கிட்டதட்ட ஒன்றே கால் லட்சம் இந்திய ரூபாய் கொடுத்துள்ளார்.
விசா கிடைத்து டிக்கெட் கிடைத்த உடன் தனது குடும்பத்தினரிடல் விடை பெற்று வந்தா சாஜி மகிழ்ச்சியா ஏர்போர்ட்டில் நுழைந்துள்ளார். அவரது கடவுச்சீட்டைப் பார்த்த குடியேற்றத் துறை அதிகாரிகள் அவரது பயணத்தை ரத்து செய்து திருப்பி அனுப்பி விட்டனர். என்ன காரணம் இருக்கலாம் என்று நினைக்கிறீர்கள்.
அவரது பிறந்த நாள் தான் அவரை திருப்பி அனுப்பியது. அவரது பிறந்த தேதி கடவுசீட்டில் 30-02-1973 என்று இருந்தது. பிப்ரவரியில் 30 நாள் எப்படி வந்தது என்று தெரியவில்லை. அதைவிடக் கொடுமை சாஜி சொன்னது. அவரது பள்ளி, ஓட்டுநர் உரிமம் அனைத்திலும் இந்த தேதிதான் உள்ளதாம். பள்ளி, அரசு இலாகாக்கள், கடவுச்சீட்டு இலாகா, விசா அடித்த சவுதி தூதரகம் எதுவும் இதைக் கவனிக்கவில்லை. பாவம் சாஜி.

இன்னும் சிலவற்றுடன் செய்தி மூலம்

23 comments:

said...

வித்யா,

bsnl அகலப்பட்டை இணையம் வழங்காத ஊரில் தனியாரின் அகலப்பட்டை சேவை கண்டிப்பாக இருக்காது, ஏன் எனில் "back bone network" கிற்கு தனியார் பயன்படுத்திக்கொள்வது bsnl இன் சேவையைத்தான், எனவே அவர்களால் முடியவில்லை எனில் தனியாரும் பெரு நகரங்கள் தவிர்த்து பிற இடங்களில் சேவையை தருவதில்லை.

கம்பியில்லா இணையம் வழங்கும் சேவைகள் இருந்தால் தான் உண்டு, ரிலையன்ஸ், சிபி எல்லாம் சில இடங்களில் அப்படி தருகிறார்கள். விசாரித்தால் தான் தெரியும்.

//30-02-1973 என்று இருந்தது. பிப்ரவரியில் 30 நாள் எப்படி வந்தது என்று தெரியவில்லை.//

லீப் இயர் போல சூப்பர் லீப் இயர் என்றுள்ளது, 400 ஆல் மீதம் இல்லாமல் வருடம் வகுபட்டால் அது சூப்பர் லீப் இயர், அந்த ஆண்டில் பிரவரிக்கு 30 நாட்கள்.இது 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நிகழும், கடைசியாக 2000 இல் நடந்தது.

ஆனால் சாஜிக்கு நடந்தது அதிகாரிகளின் கவனக்குறைவால் ஆன தவறு.

said...

// நம்ம வேகத்துக்கு டயல்அப் சரிவருவதில்லை//

யக்கோவ்! ஊருக்கு லீவுக்கு போறீங்க
நின்னு நிதானிச்சு லீவ கொண்டாடிட்டு வந்து பதிவுகள்ல காமிக்கணும் உங்க லீவு அனுபவங்கள்ல
ஒ.கே வா!

விடுமுறை கால வாழ்த்துக்கள்

said...

//வவ்வால் said... bsnl அகலப்பட்டை இணையம் வழங்காத ஊரில் தனியாரின் அகலப்பட்டை சேவை கண்டிப்பாக இருக்காது, ஏன் எனில் "back bone network" கிற்கு தனியார் பயன்படுத்திக்கொள்வது bsnl இன் சேவையைத்தான், எனவே அவர்களால் முடியவில்லை எனில் தனியாரும் பெரு நகரங்கள் தவிர்த்து பிற இடங்களில் சேவையை தருவதில்லை.//
வவ்வால் சார், ஏற்கனவே அகலக்கற்றை வழங்கப்பட்ட ஊர் தான். 6 மாதமாகத்தான் இணைப்பு தரப்படுவதில்லை.

said...

லேப்டாப் எடுத்துகிட்டு போயிடுங்க . ரிலையன்ஸ் / டாடா இன்டிகாம் டேட்டா கார்ட் வாங்கி போட்டுக்கங்க.

எக்கா, பணம் எல்லாம் நமக்கு ஒரு பிரச்சனையா? திரும்ப போய் சம்பாரிச்சிகிட்டா போச்சு!

சாஜிக்கு நடந்தது !!!!!!
அது சாஜிக்கே வெளிச்சம்!!!!

said...

//ஆயில்யன் said...//
நன்றிகள். திருப்பி 'வந்தா' கண்டிப்பா கலக்கலான பதிவுகள் இருக்கும்.

said...

வவ்வால் சார்,

2000-ல் பிப்ரவரிக்கு 30 ஆம் தேதி எங்கே வந்தது?

said...

விடுமுறை இனிதே கழிய வாழ்த்துக்கள். அங்கேயுமா? பதிவு.. கொஞ்ச நாளைக்கு எல்லாரையும் ப்ரியாத்தான் விடுங்களேன். just for a fun don't take serious.

இந்தியாவில் இணைய வசதிக்கு எளிமையான வழிகள்.

1. நீங்க usb connected mobile or blutooth computer connected mobile வைத்திருக்க வேண்டும்.

2. AIRTEL -ல் sim card இருக்க வேண்டும். இது 300-ற்கும் குறைவாக கிடைக்கிறது.

3. AIRTEL 20-ருபாவிற்கு 24 மணி நேர இணைப்பு தருகிறது. இந்த இணைப்பை நீங்கள் கஸ்டமர் கேரில் கூறிப் பெறலாம்.

4. இணையம் உங்கள் மொபைலில் இயங்கத் துவங்கியவுடன் நீங்கள் அதனை கணிப்பொறியில் இணைத்து இணையத்தை 24 மணி நேரங்கள் 20 ரூவில் பெறலாம். பதிவுகள் தமிழ்மணம் எல்லாம் கலக்கலாம். இது எனது 3 மாதங்களுக்கு முந்தைய விடுமுறை அனுபவம்.

இத்துறையில் என்னைவிட எனது மகன் அனுபவவசாலி. வாவராவரம் ஞாயிறு மட்டும் இப்பொழுதும் 20 ரூவில் சாட் துவங்கி வீடியோ சாட்வரை நடத்தி்க் கொண்டிருக்கிறான். மற்ற நாட்களில் நமக்கு சாட்டில் வருவதில்லை. கொஞ்சம் படிப்பு வேலையும் இருக்கும்ல. ஊரில் இதற்கு உதவி செய்ய எண்ணற்ற நமது ஆட்கள் உள்ளனர். இப்பத்தான் வீட்டுக்க ஒரு மரம்போல வீட்டக்கு ஒரு IT ECE CSE இருக்கிறார்களே.

நான் பயன்படுத்திய மொபைல்கள் எனது IMATE எனது மகனின் Nokia 6120. வேகத்தைப் பொறுத்தவரை பரவாயில்லை something is better than nothing.

இதுவும் bsnl இல்லாத இடத்தில் வருமா? என்பது தெரியவில்லை. நண்பர் வவ்வால்தான் கூற வேண்டும். மற்றபடி இதில் நான் நிபுணன் இல்லை.

said...

\வித்யா கலைவாணி said...
//ஆயில்யன் said...//
நன்றிகள். திருப்பி 'வந்தா' கண்டிப்பா கலக்கலான பதிவுகள் இருக்கும்.\\\

என்ன இப்படி சொல்லிட்டிங்க...ஜாலியாக என்ஜாய் பண்ணிட்டு வாங்க ;)))

said...

//RATHNESH said...வவ்வால் சார், 2000-ல் பிப்ரவரிக்கு 30 ஆம் தேதி எங்கே வந்தது?//
அதுதானே! வவ்வால் சார் 2000 ல் பிப்ரவரிக்கு 30 வரலை.
http://www.printfree.com/Calendar_files/Yearly/2000printablecalendar.htm

said...

//ஜமாலன் said... விடுமுறை இனிதே கழிய வாழ்த்துக்கள். அங்கேயுமா? பதிவு.. கொஞ்ச நாளைக்கு எல்லாரையும் ப்ரியாத்தான் விடுங்களேன்//
அதெப்படி சார் விட முடியும். ஊர்ல நம்ம படர கஷ்டத்தை இங்க கொஞ்சம் இறக்கி வைப்போம். ஏதோ நம்மால ஆனது.

said...

ஆமா பிப்ரவரிக்கு 2000 த்தில் 30ந் தேதி இல்லையே..ஒரு வேளை வருடம் மாற்றிப் போட்டிருப்பாரோ..

ஊர்ல நல்லபடியா enjoyyyy!!!!

said...

ஜமாலன்,
//இதுவும் bsnl இல்லாத இடத்தில் வருமா? என்பது தெரியவில்லை. நண்பர் வவ்வால்தான் கூற வேண்டும். மற்றபடி இதில் நான் நிபுணன் இல்லை.//

கம்பிவட அகலப்பட்டைக்கு தான் bsnl உதவியுடன் தனியார் தருகிறார்கள், பெரிய ஊர்களில் மட்டும் தனியார் சொந்தமாக கம்பிவடம் போட்டுக்கொள்வார்கள் , மற்ற இடங்களில் bsnl இன் தொலைப்பேசி நெட் வொர்க்கைப்பயன்படுத்திக்கொள்வார்கள்.
கம்பியில்லா இணையத்திற்கு பிரச்சினை இல்லை , அந்த ஊரில் டவர் இருந்தால் போதும்.

டாடா இண்டிகாம், ரிலையன்ஸ், டேட்டா கார்டுகள், அலைப்பேசி வழி இணையம் எல்லாம் வரும். வேகம் குறைவாக இருக்கும் அவற்றில் எல்லாம் அதிகப்பட்ச வேகம் 115 kbps ஆனால் அதில் பாதி வருவதே சந்தேகம் தான், அகலப்பட்டையில் இருந்து அதற்கு போனால் ரொம்ப படுத்தும்.

எதுவும் இல்லாத ஊரில் அது மேல் என்றால் ரொம்ப மேல் தான் :-))

சிஃபி கம்பியில்லா முறையில் அகலப்பட்டை தருகிறார்கள், அந்த ஊரில் இருந்தால் பெற்றுக்கொள்ளலாம்.
----------
வித்யா,
//வவ்வால் சார், ஏற்கனவே அகலக்கற்றை வழங்கப்பட்ட ஊர் தான். 6 மாதமாகத்தான் இணைப்பு தரப்படுவதில்லை.//

ஒஹோ ஏற்கனவே இருந்து இப்போது நிறுத்திக்கொண்டார்களா, ஒரு வேளை அவர்களது வழங்கும் திறன் முடிந்து இருக்கும், அல்லது சரியான அளவில் வாடிக்கையாளர்கள் கிடைக்கவில்லை என நிறுத்திக்கொண்டு இருப்பார்கள். இப்பொழுது நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டு மீண்டும் வந்திருக்கலாம், எதற்கும் போய் பாருங்கள் இல்லை என்றால் டேட்டா கார்டு வாங்கிப்போட்டு சமாளியுங்கள் கொஞ்ச காலம் தானே அங்கே!
----------------------------

ரத்னேஷ், வித்யா,

//RATHNESH said...வவ்வால் சார், 2000-ல் பிப்ரவரிக்கு 30 ஆம் தேதி எங்கே வந்தது?//
அதுதானே! வவ்வால் சார் 2000 ல் பிப்ரவரிக்கு 30 வரலை.//


இந்த சூப்பர் லீப் வருஷம் கதையில் கொஞ்சம் சொதப்பி விட்டது, 2000 ஆம் வருஷம் வந்த போது அப்படி ஒரு சமாச்சாரம் இருக்கிறது என்று சொல்லி நிறைய வலைத்தளங்களிலும், பத்திரிக்கைகளிலும் போட்டிருந்ததை படித்தை வைத்து சொல்லிவிட்டேன், ஆனால் இப்போது மீண்டும் தேடியதில் , அதனை சர்வதேச அளவில் அங்கீகரிக்கவில்லை, எனவே 29 நாட்கள் தான் காலண்டரில் இருந்தது.

அது எப்படி வந்தது என்றால் 4 வருடங்களுக்கு ஒரு முறை ஒரு கால் நாள் மீதம் இருப்பதை கூட்டி ஒரு நாள் ஆக்குவது போல , அதில் ஒவ்வொரு ஆண்டும் சில நிமிடங்கள் மீதம் மீரும், அவற்றை எல்லாம் கூட்டினால் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நாளாக வந்துவிடும், எனவே அதை வைத்து மீண்டும் ஒரு நாள் சேர்த்து காலண்டரை திருத்த வேண்டும் என்று , 2000 வருஷம் வந்த போது சிலர் சொல்லி இருக்கிறார்கள் அவ்வளவு தான். நானும் பழைய நினைவிலே சொல்லிவிட்டேன் :-))

அப்படி வரும் வாய்ப்புண்டு என்று போப் கிரிகோரியே சொன்னதாக சொல்லிக்கொண்டார்கள்.அவர்தான் இப்போதுள்ள காலண்டர் வடிமைத்தார். உண்மையில் 2000 ஆண்டில் என்ன நடந்தது என்று தெரியவில்லை.

வேறு யாராவது விஷயம் தெரிந்த ஆட்கள் தான் சொல்லவேண்டும் , பிரவரியில் 30 நாட்கள் வர சாத்தியம் உண்டா இல்லையா என்று.ஒரு வேளை 2000 ஆண்டு சிலர் கிளப்பிவிடப்பட்ட புரளியாக இருக்கும்.

said...

ஆயில்யன், ஜமாலன், கோபிநாத், சிவா, பாசமலர் - உங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.

said...

ஜமாலன் சார், சிவா - உங்களோட ஐடியாக்கள் சரியாக இருக்கும் போல் தெரிகிறது. கம்பியில்லா வேவைக்கு முயற்சி செய்கிறேன்.

எங்களிடம் N70 Nokia செல்பேசி உள்ளது. அதைப் பயன்படுத்தலாம் தானே!

said...

//வவ்வால் said...//
வவ்வால் சார், வருகைக்கும் தகவல்களுக்கும் நன்றி.
//இந்த சூப்பர் லீப் வருஷம் கதையில் கொஞ்சம் சொதப்பி விட்டது///
இதுக்கெல்லாம் கவலைப்படாதீங்க. யானைக்கும் அடி சறுக்கும் தானே! நம்மை மாதிரி பொது வாழ்க்கையில் உள்ள அரசியல்வாதிகளுக்கு இதெல்லாம் சகஜம்.

said...

மேடம்,

// நம்மை மாதிரி பொது வாழ்க்கையில் உள்ள அரசியல்வாதிகளுக்கு இதெல்லாம் சகஜம்.//

இந்தப் பொதுப்பட்டியலில் வவ்வால் சாரைச் சேர்த்ததற்கு என் கடுமையான கண்டனங்கள். அவர் இணைய தளத்தின் அப்துல்கலாம். (புத்தகக் கண்காட்சிகளின் போது மட்டும் விதிவிலக்கு).

said...

இது Airtel வழங்கும் சேவையாம்,
http://airtel.in/Prepaid_OtherService.aspx?path=1/6/6/2&cid=9

said...

ரத்னேஷ்,
//இந்தப் பொதுப்பட்டியலில் வவ்வால் சாரைச் சேர்த்ததற்கு என் கடுமையான கண்டனங்கள். அவர் இணைய தளத்தின் அப்துல்கலாம். (புத்தகக் கண்காட்சிகளின் போது மட்டும் விதிவிலக்கு).//

ஏன் ...ஏன் இந்த கொலைவெறி!

புத்தக கண்காட்சிகளின் போது என்னோட வேலையை சொன்னதுக்கு பரிசா இது .... போதும்... இனிமே நான் என்ன செய்வேன்னு வெளியில இனிமே சொல்லிக்கவே மாட்டேன் :-)

2000 ஆண்டு பிறந்த போது வித்யா இணையத்தில் வந்த கட்டுரைகளை(கதைகளை) படித்து இருக்கமாட்டார், அப்போது இப்படி பல புது கண்டுபிடிப்புகள் நிறைய சொன்னார்கள்(நானும் அவர்கள் லாஜிக்க நம்பிட்டேன்) அதை சரிப்பார்க்காமலே இப்போதும் சொல்லிட்டேன்(என்னோட நியாபகசக்தியே எனக்கு இப்போ எதிரி ஆகிவிட்டது) அவர்கள் கணக்கை சர்வதேச நாட்காட்டி அமைப்பு ஏற்றுக்கொள்ளவில்லை, அதை அப்போ நான் தொடர்ந்து படிக்கவில்லை!

அந்த கணக்கை சொன்னவர்கள் சொன்னது சரியே,(என்னைப்பொறுத்தவரை) ஒவ்வொரு ஆண்டும் இப்போதும் நாம் பல நிமிடங்களை கணக்கில் எடுக்காமல் புறம் தள்ளுகிறோம், இதற்கெல்லாம் ஒரு கரெக்ஷன் தேவை.கூடிய சீக்கிரம் சர்வதேச நாட்குறிப்பு அமைப்பு இதைக்கணக்கில் எடுத்துக்கொள்ளும், கொள்ள வேண்டும், அப்போ சொல்விங்க அன்னிக்கே சொன்னான் இந்த வவ்வால்னு :-))

மற்றபடி , நான் சறுக்கியது சறுக்கியது தான் ...அதுக்காக இப்படிலாம் என்னை மேலும் காலை வாரக்கூடாது ரத்னேஷ் சார்!

leap year என்று கூகிளில் சர்ச் போட்டால் நான் சொன்ன 400 ஆண்டுக்கு ஒரு முறை வரும் 30 நாள் பற்றி இப்போதும் லின்க் காட்டுகிறது , அதான் கொடுமை :-))(வித்யா புண்ணியத்தில் மீண்டும் தேடிப்பார்த்து கண்டுக்கொண்டேன்)

said...

வித்யா,

ஏர் டெல் என்று இல்லை அனைத்து செல்ப்பேசி சேவைகளிலும் இது உண்டு,சிக்னல் கிடைப்பது, சேவைக்கட்டணம் பார்த்து தேர்வு செய்துக்கொள்ள வேண்டும்,

உங்கல் செல்பேசியில் edge, gprs, என இரண்டில் எது இருந்தாலும் இணையத்தை கணினியுடன் இணைக்கலாம்,N70 மூலம் இணையத்தை இணைக்கலாம், உங்களுக்கு தேவை ஒரு டேட்டா கேபிள், அல்லது உங்கள் கணினியில் புளு டூத் கனெக்டிவிட்டி.

ஆனால் இது ரொம்ப மெதுவாக இருக்கும், அதற்கு , டாடா, ரிலையன்ஸ் போனின் டேட்டா கார்ட், அல்லது "fixed wireless" போன் மூலம் இணையத்தொடர்பு பெறலாம்.

அப்போது பெரியக்குளத்தில் அகலப்பட்டை இணையம் நிறுத்தப்பட்டு இருந்து இருக்கலாம், ஆனால் இப்போது வந்திருக்கும் என நினைக்கிறேன். முதலில் அதற்கு முயற்சி செய்யுங்கள்.ஏன் எனில் இப்போது பெரியக்குளம் நல்ல பெரிய ஊராக மாறி இருக்கிறது.(உங்க ஊரைப்பற்றி நானே சொல்வதா :-)) )

கடந்த வருடம் அந்தப்பக்கம் போனப்போது பார்த்தேன் நல்லாவே இருக்கு(புழுதி அதிகம் பறக்குது) ஆனால் கிராமம் ஆக இருக்கும் என நான் நினைத்தற்கு மாறாக இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம்!

said...

வித்யா - அதிகம் கவலைப் பட வேண்டாம். பெரியகுளத்தில் இறங்கிய உடன் விசாரித்தால் அனேக விற்பனையாளர்கள் படை எடுப்பார்கள். Relaince, Air tel - முயற்சி செய்யலாம்.

வவ்வால், எனக்குத் தெரிந்த வரை - லீப் வருடம் என்பது நான்காண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நாள் பிப்ரவரி மாதம் கூடும். வருடம் நூற்றாண்டாக இருந்தால் அது 400 வருடங்களுக்கு ஒரு முறை தான் கூடும்.

விளக்கம் : நூற்றாண்டாக இருந்தால் 400 ஆல் வகுத்து மீதம் இல்லை எனில் அது லீப் ஆண்டு. உதாரணம் - 2000 - 1600 - 1200 etc

1900 1800 1700 இவை எல்லாம் லீப் ஆண்டுகள் இல்லை.

மற்ற ஆண்டுகள் 4 ஆல் வகுத்து மீதம் இல்லை எனில் அது லீப் ஆண்டு.

அவ்வளவு தான்

said...

நன்றி வவ்வால்..

செல்போன் இணையத் தகவலுக்கு. சூப்பா லீப் வருடம் குறித்த தகவலுக்கும். பயன் படத்தப்படுகிறதோ இல்லையோ பொது அறிவுப் போடடிகளில் கலாய்க்க பயன்படும்.

said...

//விளக்கம் : நூற்றாண்டாக இருந்தால் 400 ஆல் வகுத்து மீதம் இல்லை எனில் அது லீப் ஆண்டு. உதாரணம் - 2000 - 1600 - 1200 etc

1900 1800 1700 இவை எல்லாம் லீப் ஆண்டுகள் இல்லை.//

இப்படித்தான் எனக்கு ஞாபகம்.

//bsnl அகலப்பட்டை இணையம் வழங்காத ஊரில் //
எனக்கு தெரிந்து ஜூன் மாதம் பெரியகுளத்தில் அகலப்பட்டை வழங்கிக்கொண்டிருந்தார்கள்

said...

அட போங்க. சென்னையில் இருக்கும் பழவந்தாங்கல் பகுதிக்கே 'இந்த வசதி தற்போது இல்லை'...நீங்க என்னான்னா பெரியகுளத்துக்கு போய்ட்டீங்க. எதுக்கும் நம்ம 'ஜீரோ' பன்னீர் செல்வதுக்கிட்ட கேட்டு பாருங்க. (அதாங்க ஓ.பி.எஸ்).