69.அசத்தலான பதிவர் உலக கிரிக்கெட் போட்டி பாகம் 5
வணக்கம் நேயர்களே! வித்யா கலைவாணி விளையாட்டுக் குழுமம் மீண்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறது. முதல் ஓவர் முடிந்த நிலையில் வெள்ளை அணி விக்கெட் இழப்பின்றி 10 ஓட்டங்கள் எடுத்துள்ளது. அபி அப்பா 9 ஓட்டங்கள் எடுத்துள்ளார்கள். இதற்கு மேல் ஒவ்வொரு பந்துக்கும் வர்ணணை மறுக்கப் படுவதால் ஒவ்வொரு ஒவரிலும் நடைபெற்ற சுவாரஸ்யமான தகவல்கள்.
==== இது இரண்டாவது ஓவர்
* இதை லக்கி வீசினார்
* நடுவரிடம் வந்த லக்கி " பந்து கிழியும், ஆனால் கிழியாது" என்று சொல்ல அதை நடுவர் 2 வும் அவசரப்பட்டு வழிமொழிய ஒரே குழப்பம். மூன்றாவது நடுவர் நிலா வந்து நிலைமையை சமாளித்தார். பின்னர் லக்கிலுக் "விக்கெட்டுக்கு வலது புறமிருந்து வலது கை பந்து வீச்சு" எனக்கூறினார்.
* முதல் பந்தில் அபி அப்பா ஒரு ரன் எடுத்தார்
* அடுத்த மூன்று பந்துகளிலும் கோபி அபாரமாக ஆடி தொடர்ந்து 3 பவுண்டரிகள் அடித்தார்.
*ஓவரின் ஐந்தாவது பந்தை தூக்கி அடிக்க அதை லாங் ஆனில் இருந்த செல்லா பிடிக்க கோபி அவுட். புதிய வீரர் நாமக்கல் சிபி
*கடைசி பந்தை எதிர்கொண்ட அபி அப்பா ஜல்லியில் மன்னிக்கவும் கல்லியில் தட்டி விட்டு 3 ஓட்டங்கள் எடுத்தார்
26/1 - 2 Overs அபி அப்பா 13(8) சிபி 0(0)
கடைசி ஆட்டமிழப்பு கோபி (பி) செல்லா (வீ) லக்கி லுக் 12(4)
==== இது மூன்றாவது ஓவர்
*இதை மீண்டும் ரவியே வீசினார்
* அபி அப்பா முதல் பந்தில் 4 ஓட்டமும் இரண்டாவது பந்தில் 2 ஓட்டமும் எடுத்தார்
*மூன்றாவது பந்தை பற்றிய வர்ணனையை இங்கு பார்ப்போம்
மூன்றாவது பந்து ரவி டு அ.அ
லெக் சைடில் தோளுக்கு மேல் பவுன்ஸான பந்தை அ.அ ஹூக் செய்ய கிட்டத்தட்ட மிஸ்பாக் டு ஸ்ரீசாந்த் மாதிரி. இப்ப கைப்புள்ளயின் தலைக்கு மேலாக வருகிறது. இருந்த இடத்தில் இருந்தால் பிடித்து விடலாம். பந்து கீழே வருகிறது
கீழே
கீழே
கீழே
கீழே
ஆ அதென்ன ஏதோ சத்தம் ஏன் கைப்புள்ள தலைமீது இரு கைகளையும் வைத்து குனிந்து கொள்கிறார். Miss field there . அபி அப்பாவுக்கு மேலும் 4 ஓட்டங்கள். என்ன சத்தம் என்பதை அந்த காட்சியை மறு ஒளிபரப்பு செய்து பார்ப்போம். பந்து கீழே வருகிறது
கீழே
அபி பாப்பா: "கட்டத்துரை வந்துட்டான்"
ஆகா அபி பாப்பா கூட இராஜ தந்திரங்களைக் கரைத்துக் குடித்திருக்கிறது. ( என்னங்கப்பா எல்லாரும் கரைச்சுக் குடிக்க அதென்ன ரஸ்னாவா, டேங்கா) கைப்புள்ள கோவமாக சுற்றும் முற்றும் பார்க்கிறார். அபி பாப்பாவையும் பார்க்கிறார். டைகர் ஏதோ உறுமுகிறது. இது கைப்புள்ளைக்கும் டைகருக்கும் மட்டும் தெரியுமாதலால் இதோடு விடுவோம்.
*நான்காவது பந்து ரவி டு அ.அ
அதே மூன்றாவது பந்து போல. இதையும் அ.அ ஹூக் செய்ய அதே நிலை. ஆனால் கைப்புள்ளைக்கு இரண்டு அடி தள்ளி விழுகிறது. மீண்டும் 4 ஓட்டங்கள். ஆனால் பந்து டைகரை லேசாக உரசிக் கொண்டு செல்கிறது. இதனால் அ.பா & டைகர் Co கோபத்துடன் ரவியைப் பார்க்கிறது. இப்போது ரவிக்கு அதன் அர்த்தம் புரிந்து விட்டது.
*ஐந்தாவது பந்து ரவி டு அ.அ
ரவி மிகவும் உற்சாகமாக ஓடி வந்து வீசுகிறார். கிளீன் போல்ட். மிடில் ஸ்டிக் உடைந்து விட்டது. வெள்ளை அணி தனது நம்பிக்கை நட்சத்திரத்தை இழந்து விட்டது . Excellent Bowling from Ravi. Nearly 148 km/hr. புதிய வீரர் மின்னுது மின்னல்.
*ஆறாவது பந்து ரவி டு மின்னல் அவுட் கிளீன் போல்ட்.மின்னலுக்கு எஜமானிகிட்ட இருந்து போன் வரனும் போல இருக்கு . அதனால மின்னல் மாதிரி வந்தாரு மின்னல் மாதிரி போய்ட்டாரு
38/3 - 3 Overs
=======================
அடுத்த 3 ஓவர்களில் வெள்ளை அணி 30 ஓட்டங்கள் அடிக்க சிவப்பு அணிக்கு வெற்றி இலக்கு 69 ஓட்டங்கள் 6 ஓவரில்
=======================
வணக்கம் அன்பு நேயர்களே! இந்த சிறப்பான ஆட்டத்தின் இரண்டாம் பகுதியில் இருக்கிறோம். வெள்ளை அணியினர் அபாரமாக ஆடி 4 விக்கெட்களை இழந்து 69 ஓட்டங்களை எடுத்துள்ளனர். இதை எப்படி சிவப்பு அணியினர் எதிர் கொள்வார்கள் என்று பார்ப்போம். வெள்ளை அணியில் அபி அப்பா 27 ஓட்டங்களும், சிபி அவர்கள் 14 ஓட்டங்களும், தேவ் 13 ஓட்டங்களும், கோபி 12 ஓட்டங்களும் எடுக்க மின்னல் ரன் ஏதும் எடுக்க வில்லை. உதிரியாக 3 ஓட்டங்களும் கிடைத்துள்ளன. Now Over to Red Team's Dressing Room.இது சிவப்பு அணியின் டிரஸ்ஸிங் ரூம்.
மீண்டும் "இது இரகசிய கேமரா மூலம் பதிவு செய்யப் படுகிறது" என்ற ஸ்லைடுடன் படக்காட்சி வருகிறது.
சிவப்பு அணியின் அறுவரும் சோகமாக உட்காந்து இருக்கிறார்கள். இளா : நான் கடப்பாறை, மண்வெட்டியோட போயிருந்தா இவ்வளவு ஓட்டம் வந்திரிக்காது. சிவா தனது மடிக்கணிணியை பார்த்துக் கொண்டே சொல்கிறார்
சிவா : அவுங்க இப்ப 69 ரன் எடுத்திருக்காங்க
ரவி : அட தேவகவுடா, இது தான் எங்களுக்கும் தெரியுமே
சிவா : அவங்களுக்கு 4 விக்கெட் போயிருக்கு
கைப்புள்ள : இதுவும் தெரியுமில்ல நீ மேல சொல்றது.
ரவி : நமக்கு இப்ப ஒரு ஓவருக்கு 11.7 ரன் தேவை
கைப்புள்ள : என்னப்பு சொல்ற ஒரு தகர டப்பா வைச்சுக்கிட்டு! புள்ளி 7 ஓட்டம்லாம் கிரிக்கெட்ல கிடையாது. யார ஏமாத்தப் பாக்குதாப்ல
ரவி: இதுக்குத் தான் மழைக்காவது பள்ளிக்கூடத்துப் பக்கம் ஒதுங்கனும்கிறது. இவரெல்லாம் தல வேற
செல்லா : சரி விடுங்கப்பா, இப்ப என்ன செய்யனும் சொல்லு
ரவி : சராசரியா ஒரு ஓவருக்கு இரண்டு நாலு அடிச்சாப் போதும் நாம ஈஸியா ஜெயிச்சிடலாம்.
இளா : நானும் லக்கியும் பொறோம். நான் போயி கிண்டி கிழங்கு எடுத்துடுறேன்
செல்லா : நான் வேணா போகவா? நான் தைரியமான ஆளு, யாருக்கும் பயப்பட மாட்டேன்
லக்கி : என்னன்னே இருக்குற ஒரே துருப்புச் சீட்டு நீங்க தான். நீங்க நாலாவதா இறங்குங்க.
கைப்புள்ள : சரி சரி இளாவும் லக்கியும் இறங்குங்க. அபி பாப்பா சொன்னது உண்மையா இருக்குமோனு எனக்கு தோணுது. எதுக்கும் வழில வெளியே போயி பாத்துட்டு வர்றேன்.
லக்கி: தல தனியா போகாதீங்க சிவாவையும் கூட்டிட்டுப் போங்க.
கைப்புள்ள : எதுக்கு அடி வாங்கித்தராவா. எங்க சங்கத்து ஆளுங்க இருக்கு
ரவி : இராஜதந்திரங்களைக் கரைத்துக் குடித்திருக்கிறீர்கள் தல
சிவா : ( மனசுக்குள்) போடி போ! அவங்களும் அடி தான் வாங்கிதரப் போறாங்க.
( ///சங்கத்துச் சாணக்கியன் said
ஏம்மா கலைவாணி உன் கதையில் எத்தனை பேருமா இராஜதந்திரங்களைக் கரைத்துக் குடிச்சிருக்காங்க. போதுமா போதும்.//
வித்யா கலைவாணி said
சரிங்க சார். இனி யாரும் இல்லை.கி.மு 290 ஆகஸ்ட 15 ல கோரக்பூர்ல நடத்தின மேட்சுக்கு வந்ததுக்கு நன்றி. அங்க சந்திரகுப்தரை கேட்டதாச் சொல்லுங்க)
Now Over to White Team's Dressing Room.
இது வெள்ளை அணியின் டிரஸ்ஸிங் ரூம்.
மீண்டும் "இது இரகசிய கேமரா மூலம் பதிவு செய்யப் படுகிறது" என்ற ஸ்லைடுடன் படக்காட்சி வருகிறது.
அபி அப்பா : ம்ம்ம் அபி பாப்பாவுக்கு பரதநாட்டியம்லாம் கத்துக் குடுக்க ஏற்பாடு செஞ்சனே? இப்படி செஞ்சுருச்சே?
சிபி : பரதநாட்டியம் அபி பாப்பா கத்துக்கிச்சா? கத்துக்குடுத்துச்சா?
ஜொள்ளு பாண்டி : ஆமா இப்ப இதுவா முக்கியம். ஆளே இல்லாத இந்த ரூம்ல என்ன பேச்சு
தேவ் : என்ன ஜொள்ளு? என்ன சொல்ற? நாங்கள்லாம் யாரு
ஜொள்ளு பாண்டி : அது வேற இது வேற வாங்க மைதானத்துக்கு போலாம்
மின்னுது மின்னல் : சரி சரி எனக்கு நேரமாகுது. சீக்கிரமா சொல்லுங்க
அபி அப்பா : 70 ஓட்டம் தான் டார்கெட். நம்ம சுலபமா ஜெயிச்சுடலாம்.
தேவ் : அபி பாப்பா வேற சொதப்பிடுச்சே
அபி அப்பா : அது பிரச்சினையில்லை. கண்மணி டீச்சர் கிட்டப் பேசி நான் ச்சுப்புரமணிய பயன்படுத்தலாமானு பாக்குறேன்.
சிபி : வேணாம்ப்பா. பாவம் ச்சுப்பு! அந்த லட்டையே இன்னும் கக்க முடியாம கஷ்டப்படுதாம்
தேவ் : சரி போனதெல்லாம் போகட்டும். நாம நல்லா பெளலிங் போட்டு ஜெயிச்சுக் காட்டுவோம். சரி வாங்க எல்லோரும் மைதானத்துக்குள் போவோம்.
டிஸ்கி 2 : பழைய பாகங்கள் உங்கள் பார்வைக்கு
பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4
அடுத்த பாகத்தில் முடியும்

4 comments:
//
அபி அப்பா : அது பிரச்சினையில்லை. கண்மணி டீச்சர் கிட்டப் பேசி நான் ச்சுப்புரமணிய பயன்படுத்தலாமானு பாக்குறேன்.
சிபி : வேணாம்ப்பா. பாவம் ச்சுப்பு! அந்த லட்டையே இன்னும் கக்க முடியாம கஷ்டப்படுதாம்
//
you have gone thro all blogs!!
good.
//
இது இரகசிய கேமரா மூலம் பதிவு செய்யப் படுகிறது"
//
Is it cricket or Tennis ????
why secret camera in dressing room?
Avvvvvvvvvv
சிவப்பு அணி பாவம் - 69 ரன் எங்கனே எடுக்கறது
துட்டு வாங்க மூணாவது அம்பையர் ரெடி. துட்டு கொடுக்க எந்த டீம் ரெடியா இருக்கிங்க?
சூப்பர் சூப்பர்!! நல்லாத்தான் இருக்கு! ஆனா நான் தான் இதிலே எல்லாம் கலந்துக்க முடியாம ஆணியில இருக்கேன்!! வந்த கால்க்கு கூட பதில் சொல்ல முடியலை, எட்டி பார்த்துட்டு ஓடரேன்!!!வந்து மேட்சை பார்க்கிறேன்!!!
Post a Comment