67."மோதி பார்த்துடலாம் வாங்க- எங்க அண்ணாச்சிங்ககிட்டயேவா???"" பாகம் 4

67.அசத்தலான பதிவர் உலக கிரிக்கெட் போட்டி பாகம் 4

இப்ப டாப் ஆங்கில்ல மைதானத்த காட்டப்படுக்கிறது. சிவப்பு அணியின் வீரர்கள் மைதானத்துக்குள்ள நுழைகிறார்கள் . பெளலிங்க போடுற End ல மைதானத்து பவுண்ட்ரி எல்லைய ஒட்டி அபி பாப்பாவும் டைகரும் நிற்கிறார்கள் . ஜொள்ளு பாண்டி டிரஸ்ஸிங் ரூம்ல இருந்து கிளம்பி ஆண்கள் பெண்கள் என்று பிரிச்சு இருக்குற இடத்தில போய் நின்னு வழக்கம் போல பெண்கள் பகுதிய பாத்துக்கிட்டு நிக்கிறாரு. இதை எல்லாம் அபி அப்பா ஒரு மர்ம புன்னகையோட பாத்து சிரிக்கிறார்.
சிவப்பு அணியின் வீரர்கள் கைய கால ஆட்டி பிராக்டீஸ் பண்ண செல்லா மட்டும் கராத்தே எல்லாம் காட்டுகிறார்.
சிவப்பு அணியின் வீரர்கள் எல்லாம் ஒண்ணா வட்டமா தோள் மேல கையப் போட்டு குனிஞ்சு பேசுகிறார்கள் . கேமரா வட்டத்துக்கு நடுவில கீழே இருக்கு.
கைப்புள்ள : கட்டதுரை இந்த மேட்ச் பாக்க வரலை. அதனால எனக்கு எந்த பயமும் இல்லை. நாம இன்னைக்கு ஜெயிச்சுக் காட்டனும்.
லக்கி : அதெல்லாம் டவுசர கிழிச்சிடலாம்
செல்லா : என் கம்ப்யூட்டர்ல எல்லாம் ரெடி பண்ணியாச்சு. அவங்களை ஈஸியா மடக்கிடலாம்.
மங்களூர் சிவா: நானும் எல்லாக் கணக்கும் பாத்து வச்சுட்டேன். எப்ப யார் பால் போடனும், யார் எங்க நிக்கனும், எவ்வளவு ரன் ரேட் வேனும் எல்லாம் ரெடி
ரவி : அபி பாப்பா நாயோட நிக்கிது. எனக்கு பயமா இருக்கு. ஏதாவது ஆஸ்பத்திரி பக்கத்துல இருக்கா?
கைப்புள்ள : பயப்படாதீங்க ரவி. நாங்கள் எல்லாம் இருக்கம்ல
ரவி : அதுதான் பயத்தை அதிகமாக்குது.
செல்லா : யாரும் பயப்பட வேண்டாம். என்னை மீறி ஒன்னும் நடக்காது. டன்
எல்லோரும் கோரசா : டன்
இப்ப கேமரா மீண்டும் டாப் ஆங்கில்ல வருது. அபி அப்பாவும் கோபியும் டிரஸ்ஸிங் ரூம்ல இருந்து வருகிறார்கள். இதை பாத்த உடனே மங்களூர் சிவா வேக வேகமா பெண்கள் பக்கம் போயி யாரையோ தேடுகிறார். வித்யா கலைவாணியப் பாத்ததும் அவர் முகம் பெளர்ணமி நிலவு மாறி ஆகுது வித்யாவைக் கூப்பிட்டு
மங்களூர் சிவா : கலைவாணிக்கா, உங்களத்தான் நாங்க நம்பி இருக்கோம். எப்படியாவது எங்களை ஜெயிக்க வைக்கனும்
வித்யா : என்னங்க சிவா! இப்படி சொல்லிட்டிங்க! உங்களுக்கு என்ன செய்யனும்னு சொல்லுங்க, நான் காத்துக்கிட்ருக்கேன்.
மங்களூர் சிவா : ஒன்னுமில்லைக்கா..........
வித்யா : அப்ப போங்க
மங்களூர் சிவா : அக்கா ஒங்க கடி தாங்க முடியலக்கா
வித்யா : நான் எப்பங்க உங்களக் கடிச்சேன்
மங்களூர் சிவா : அக்கா என்னை சோதிக்காதீங்க கோபிகிட்ட ஏதாவது பீலிங்கா பேசி அவரை அழுக வைச்சுடுங்க. உங்களோட அடுத்த பதிவுக்கு சங்கம் சார்பா 1000 பின்னூட்டம் போடறோம்.
வித்யா : (கம்மிய குரலில்) உங்ககிட்ட இருந்து இப்படி ஒரு விசயத்தை நான் எதிர்பாக்கலை. நீங்க எனக்கு அண்ணன் மாதிரினா, கோபி எனக்கு தம்பி மாதிரி நான் யாருக்கும் துரோகம் செய்ய முடியாது.
மங்களூர் சிவா சோகமான முகத்துடன் மைதானத்துக்குள் செல்கிறார். இதற்கிடையே அபி அப்பா மைதானத்துக்குள் செல்லாமல் நேராக Bowler end boundary line அருகில் நிற்கும் அபி பாப்பா & டைகர் பக்கம் போகிறார். டைகரைத் தடவிக் கொடுத்துக் கொண்டே அபி பாப்பாவிடம் ரவியைப் பார்த்து கையைக் காட்டி ஏதோ சொல்கிறார். ஏற்கனவே கிலியில் இருக்கும் ரவி இதைப் பார்த்ததும் மெர்ஸலாகி விடுகிறார். அபி அப்பா இப்போது முக மலர்ச்சியுடன் மைதானத்திற்குள் வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைகிறார்.
பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று சத்தமாக உச்ச ஸ்தாயியில் கோரசாக ஒரே மாதிரி சொல்கிறார்கள்.
எங்கே நீங்களும் சொல்லுங்க

அபி அப்பா
அபி அப்பா
அபி அப்பா
அபி அப்பா
அபி அப்பா

அபி அப்பாவும் கோபியும் பிட்சை நோக்கி நடக்க இப்ப நாம மீண்டும் கமெண்ட்ரி பாக்ஸுக்கு போகிறோம்.
வர்ணனையாளர் : அன்பான நேயர்களே! அகில உலகமும் ஆவலுடன் எதிர்பார்த்த ஒரு அருமையான ஆட்டத்தை நீங்கள் இப்போது காணப் போகிறீர்கள். சற்றுமுன் நீங்க கேட்ட அபி அப்பா, அபி அப்பா குரலே உங்களுக்கு இதை புரிய வைத்திருக்கும் என நம்புகிறேன். வீரர்கள் அனைவரும் தத்தமது இடத்தில் இருக்கின்றனர். உலக் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக வீரர்கள் பேசிக் கொள்வது வரை உங்களுக்கு இங்கு ஒலிபரப்பப்பட இருக்கிறது. இப்ப பீல்டிங்க பாக்கப் போறோம்.
கீப்பர் அவரோட இடத்திலும், செல்லா சில்லி பாயிண்டிலும், கைப்புள்ள பைன் லெக்கிலும், லக்கி லுக் டீப் பாயிண்டிலும், மங்களூர் சிவா லாங் ஆனிலும் உள்ளனர். செல்லா சில்லி பாயிண்டில் நிற்பது ஆறுக்கு ஆறு உலகிற்கே ஓர் ஆச்சர்யம். அபி அப்பாவை இது பயமுறுத்த உதவும். என்ன கைப்புள்ளயோட இராஜ தந்திரம். முதல் ஓவரைப் போட ரவி ஆயத்தமாகிறார். ரவி நடுவரிடம் வந்து சொல்கிறார். "விக்கெட்டுக்கு வலது புறமிருந்து வலது கை பந்து வீச்சு" அதை அண்ணாச்சி உரத்த குரலில் வழி மொழிகிறார்.
ஆ இது என்ன ஆச்சர்யம். எப்போதும் சொயிப் அக்தர் போல எல்லைக் கோட்டில் இருந்து ஓடி வந்து பவுலிங் செய்யக் கூடிய ரவி எல்லைக் கோட்டில் இருந்து 40 அடி தூரத்தில் நிற்கின்றார். ஏதாவது பெட்டி வாங்கிட்டாரா என்று தெரியவில்லை.
ரவி அப்படிப்பட்டவர் இல்லையே. இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது. ரவி வேற அபி பாப்பாவையும் டைகரையும் அடிக்கடி திரும்பி பார்க்கிறாரே?
அபி பாப்பா ரவியை கையை காட்டி அழைக்கிறதே. கேமராவை அங்கு குளோசப்பில் கொண்டு செல்வோம். ரவி பதுங்கி பதுங்கி வருகிறாரே. அபி பாப்பாவுக்கு 4 அடி தூரத்தில் இப்போது ரவி நிற்கிறார். அபி பாப்பா ரவியை விடுவதாக இல்லை. டைகரை கொஞ்சம் தள்ளி நிற்கச் சொல்கிறது. டைகர் ரவியை முறைத்துப் பார்த்துக் கொண்டு தள்ளி நிற்கிறது.
ரவி : அபி பாப்பா நல்ல பிள்ளையில்ல நீ. டைகரைக் கூப்பிட்டுட்டு போயிடுமா
அ.பா: போறதா, எங்கப்பா விளையாடுறத நான் பாக்கனும் மாமா
ரவி : அப்ப நீ இரு, டைகரை அனுப்பிடுமா
அ.பா : உங்களுக்கு டைகரைப் பிடிக்குமேனு தான் கூப்பிட்டு வந்தேன். நீங்க கூட சொன்னீங்களே! எங்க வீட்டுக்கு வந்தப்ப.
ரவி : நானா சொன்னேன். ஆகா துட்டு குடுத்து எனக்கு நானே சூனியம் வச்சிருக்கேனே! அபி பாப்பா இப்ப நான் என்ன செய்யனும்.
அ.பா : ஒன்னும் இல்லை. எங்க அப்பாவுக்கு ஸ்டெம்புக்கு நேரா பந்தப் போடக் கூடாது. போட்டா அவ்வளவுதான்
ரவி : நான் ஏம்மா போடறேன். அந்த மாதிரி தப்ப நான் செய்ய மாட்டேன்மா செல்லம்.
அ.பா : அது
இப்ப அபி பாப்பா அந்த இடத்தை விட்டு கிளம்பி லெக் ஸைட் பவுண்டரி வழியாவே பைன் லெக்குக்கு வருது.
ரவி இப்போது எல்லைக் கோட்டிற்கு அருகிலேயே நிற்கிறார். அங்கிருந்து ஓடி வருவார். வலது கை ஆட்டக்காரர் அபி அப்பா முதல் பந்தை எதிர் கொள்ள தயாராக இருக்கிறார். 'பார்' போற்றும் ஆறுக்கு 6 ன் முதல் பந்தை போட ரவி ஓடி வருகிறார். அவர் ஸ்டெம்புக்கு வருவதற்க்குள் நாம் ஒரு குட்டி தூக்கம் கூட போடலாம். பரவாயில்லை.
ஆட்டத்தின் முதல் பந்து அபி அப்பாவிற்கு ஆப் சைடில் விலகிச் செல்ல அபி அப்பா மட்டையால் ஓங்கி அடிக்கிறார். செல்லா 0.08 வினாடியில் குனிந்து கொள்ள பந்து லாங் ஆப் திசையில் செல்கிறது. 4 ஓட்டங்கள். முதல் பந்தில் 4 ஓட்டங்கள்., வெள்ளை அணிக்கு நல்ல துவக்கம். அபி பாப்பாவும் டைகரும் சந்தோசத்தில் குதிக்கின்றனர். செல்லா கடும் கோபத்துடன் கைப்புள்ளையைப் பார்க்க அவர் அமைதி அமைதி என்பது போல கையைக் காட்டுகிறார்.
4/0 0.1 over
இரண்டாவது பந்து ரவி டு அபி அப்பா . இது மிகவும் ஆப் சைடில் வீசப்பட்டதால் சில்லி பாயிண்டில் அபி அப்பாவைப் பார்த்துக் கொண்டு நின்ற செல்லாவின் மீது பட்டு அங்கேயே விழுகிறது. அண்ணாச்சி வைட் எனச் சொல்லி கையை விரிக்கிறார். செல்லா அதே இடத்தில் உட்காருகிறார். கைப்பிள்ளை அங்கு ஓடி வந்து சமாதானப் படுத்திகிறார். இந்த நேரத்தில் அபி அப்பா பேட்டால் பிட்சை சரி செய்வது போல அவர்கள் பக்கத்தில் சென்று சொல்கிறார்
நீங்க யாரு எப்படிப்பட்ட ஆளு! உங்க தகுதி என்ன? உங்க அந்தஸ்து.......
கைப்புள்ள அபி அப்பாவை கொல வெறியோடு பாக்கிறார். கிட்டத்தட்ட சிமன்ஸூம், ஸ்ரீசாந்தும் மோதுவது போல இருக்கிறது. ஆனாலும் கைப்புள்ள அமைதியாகி செல்லாவை லாங்க ஆப் போகச் சொல்கிறார். ஆரம்பமே அமர்க்களமாக உள்ளது.
5/0 0.1 over
இது மீண்டும் இரண்டாவது பந்து ரவி டு அ.அ
வேகமாக அடிக்க முற்ப்பட்ட அ.அப்பாவின் பேட் விளிம்பில் பட்ட பந்து இரண்டாம் விலகல் ( அதாங்க செகண்ட் சிலிப்) வழியே செல்ல இளா ஓடி வந்து எடுக்கிறார். மானாவாரி நிலத்தில் டிராக்டரைப் போட்டு உழுதது போல அந்த ஏரியாவே புழுதி கிளம்புது. கோபி அங்கிருந்து 'வாணாம்ணா' என்று உரத்த குரலில் கத்துகிறார். அ.அப்பாவும் கிரீஸூக்கு திரும்புகிறார். புழுதி அடங்கியதும் பார்த்தால் இளா இப்போது தான் புழுதிக்குள் பந்தைத் தேடி எடுக்கிறார்.
5/0 0.2 over
மூணாவது பந்து ரவி டு அ.அ
ஆப் சைடில் பவுன்ஸாகி வந்த பந்தை அ.அ விட்டு விடுகிறார்.
5/0 0.3 over
நான்காவது பந்து ரவி டு அ.அ
கிட்டத்தட்ட ஆப் ஸ்டிக்குக்கு வந்த பந்து அ.அ அதை Straight drive செய்ய முற்ப்பட கால் காப்பில் படுகிறது. இளா 'How is that' என்று கத்த . 'வேணா' என்று குரலும் வருகிறது. இந்தக் குரல் ரவி. ரவி அபி பாப்பாவை பரிதாபமாகப் பார்க்க அ.பா பெருந்தன்மையாக பரவாயில்லை எனத் தலையை ஆட்டுகிறது.
5/0 0.4 over
ரவியின் பந்து வீச்சு நன்றாக உள்ளது. Great Come Back. Now Pressure builds on Abi Appa.
ஐந்தாவது பந்து ரவி டு அ.அ
லெக் சைடில் வந்த பந்தை அ.அ ஸ்வீப் செய்ய 4 ஓட்டங்கள்
9/0 0.5 over
ஆறாவது பந்து ரவி டு அ.அ
இதுவும் சிறிது ஆப் சைடில் வந்த பந்து அ.அ அதை செல்லாவிற்கு நேராக அடிக்க ஒரு ரன் கிடைக்கிறது.
10/0 - 1 over

12 comments:

said...

அருமையான நேரடி ஒளிபரப்பு வர்ணணை. கற்பனைக் குதிரை தறி கெட்டு ஓடுகிறது. ஒரு ஓவரில் 10 ரன்கள். பலே பலே

said...

:) Welcome back kalaivaanikkaa :)

said...

வாங்க வாங்க!!!!

said...

சில தினங்கள் காணாமல் மனம் பதறிப் போய் விட்டேன். என்ன செய்வது ?
மறு வரவுக்கு நல்வரவு. வாழ்த்துகள்

said...

cheena(சீனா) சார் சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்டேய்

Anonymous said...

ஆரம்பமே அசத்தலா இருக்கு.

Anonymous said...

நிலா said...
அபி அப்பா said...
cheena (சீனா) said.
அனைவருக்கும் நன்றிகள்

Anonymous said...

அருமையா இருக்கு உங்க கற்பனை :-)

அப்படியே நமக்கு ஒரு ஓவர் போட கொடுக்கிறது :-)

said...

//
மங்களூர் சிவா வேக வேகமா பெண்கள் பக்கம் போயி யாரையோ தேடுகிறார்.
//
என்ன இது ஜொள்ளுபாண்டி அப்புறம் என்னைய என்ன நினைப்பார்??
அவ்வ்வ்வ்

said...

//
நிலா said...
:) Welcome back kalaivaanikkaa :)
//
ரிப்பீட்டேய்

said...

ஆஹா..வாங்க வாங்க...;))

\\மங்களூர் சிவா : அக்கா என்னை சோதிக்காதீங்க கோபிகிட்ட ஏதாவது பீலிங்கா பேசி அவரை அழுக வைச்சுடுங்க. உங்களோட அடுத்த பதிவுக்கு சங்கம் சார்பா 1000 பின்னூட்டம் போடறோம்.\\

அடப்பாவிகளா எப்படி எல்லாம் யோசிக்கிறிங்க...அவ்வ்வ்வ்வ் ;((

said...

\\நீங்க எனக்கு அண்ணன் மாதிரினா, கோபி எனக்கு தம்பி மாதிரி நான் யாருக்கும் துரோகம் செய்ய முடியாது.\\

அய்யோ எனக்கு மயக்கம் வர மாதிரி இருக்கு...யாராவது என்ன பிடிங்கப்பா..! ;)))