சவுதி அரேபியத் தீபகற்பத்தில் பொதுவாக முஸ்லிம் பெண்கள் தொழில் துறையில் ஈடுபடுவது இல்லை. ஆனாலும் தற்போது அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பல தொழில்களில் பங்கெடுத்து வருகின்றனர். சுமாராக 1500 க்கும் மேற்ப்பட்ட நிறுவனங்களை பெண்களே நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழில் முதலீடுகளில் பெண்கள் பங்கு 21 சதவீதமாகவும் உள்ளதாம். இந்நிலையில் பெண்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் ஜித்தா மாநகரில் பெண்களுக்கான தொழில் முகமையை ஆதிலா பின்த் அப்துல்லாஹ் தொடங்கி வைத்தார். இவர் சவுதி நாட்டின் மன்னர் அப்துல்லாஹ்வின் மகள். இவர் பல தொழில்களை திறம்பட நடத்தி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலே படத்தில் இருப்பவர்கள் அனைவரும் தங்களது தந்தையின் பெயரை மேலும் புகழ் பெறச் செய்பவர்கள்.
1. ஆதிலா பின்த் அப்துல்லாஹ் சவுதி நாட்டின் மன்னர் அப்துல்லாஹ்வின் மகள்
2.மரினா மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதிரின் மகள்
3. நூரி மலேசியாவின் தற்போதைய பிரதமர் அப்துல்லா பதவியின் மகள்
இவர்களைப் போல துபாய் அரசில் பல துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் லுப்னா அல் காஸிமியும் குறிப்பிடத்தக்கவர்.
பெண்கள் அனைத்து துறைகளிலும் மேம்பட வாழ்த்துவோம்...
75.தொழில் துறையில் சவுதி அரேபியப் பெண்கள்
Subscribe to:
Post Comments (Atom)

4 comments:
//
பெண்கள் அனைத்து துறைகளிலும் மேம்பட வாழ்த்துவோம்...
//
வாழ்த்துக்கள்
ரொம்பவும் மகிழ்ச்சி.. அந்த பெண்களுக்கும் இனி தொடரப்போகும் பெண்களுக்கும் உண்மையான வாழ்த்துக்கள். :)
சவூதி அரச குடும்பப் பெண்கள் தொழில் துறைத் தொடர்புகள் பற்றிய பத்திரங்கள் ,கடிதத் தொடர்புகள்
பார்த்துள்ளேன்.
மன்னர் குடும்பபென்பதால் இந்தச் சலுகையோ என நினைத்தேன்.
உங்கள் பதிவு தெளிவு தந்தது.
சிவா, முத்துலெட்சுமி, யோகன் அனைவருக்கும் நன்றி
Post a Comment