58.ஆதி திராவிட விமானப் பணிப்பெண்கள்

இந்தியாவில் ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப் பட்டிருந்த ஆதி திராவிட , பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்கு இந்திய அரசும், தமிழக அரசும் பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. இதற்காக தமிழகத்தில் ஒரு அமைச்சகமே செயல்பட்டு வருகிறது. அதன் மூலம் தமிழகம் முழுதும் இருந்து
100 மாணவிகள் தேர்ந்தெடுக்கப் பட்டு அவர்களுக்கு விமானப் பணிப்பெண் பயிற்சி அளிக்கப் படுகிறது. அவர்களை தமிழக முதல்வர் கலைஞரின் ஆலோசனைப்படி ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் சென்று பார்வையிட்டு கலந்துறையாடினார்.