இது தமிழ்நாட்டில் A/C வைத்திருப்பவர்களுக்கான சிறப்பு கவன ஈர்ப்பு.நீங்கள் தமிழ்நாட்டில் 1.5 டன் அளவு ( நிறுத்தல் எடை அல்ல இது) A/C வைத்துள்ளீர்கள் என்று எடுத்துக் கொள்வோம். ஒரு 1.5 டன் கு.சா.பெட்டி சுமாராக 9 ஆம்பியர் கரண்ட் எடுக்கும்.(220 V இருக்கும் போது).அதாவது ஒரு மணி நேரம் A/C பயன்பாட்டில் இருந்தால்
Watts = current x Voltage
W = I x V
1980W = 9 x 220 = 1.98 யூனிட்
கிட்டத்தட்ட 2 யூனிட்கள் மின்சாரம் செலவாகும். ஒரு நாளில் உங்கள் கு.சா.பெட்டி சுமார் 10 மணி நேரம் பயன்பாட்டில் இருந்தால் அதில் கம்பரசர் பயன்பாட்டில் இருப்பது 5 மணி நேரம் என்று எடுத்துக் கொள்வோம். அப்படியானால் ஒரு நாளைக்கு 10 யூனிட் மின்சாரம். இரு மாதங்களுக்கு 600 யூனிட்கள் மின்சாரம். அதாவது 600 x 2.20 = 1320 ரூபாய்கள். உங்கள் அறையில் தேவையான வெப்பநிலை அளவு 22'C (71.6'F) எனவும், வெளியே 36'C ( 96.8'F) என்றும் வைப்போம். அறையில் கு.சா.பெட்டி செயல்படத்துவங்கிய பிறகு 36'C லிருந்து 22'C வர சுமார் 30 நிமிடங்கள் எடுக்கிறது எனக்கொள்வோம். கு.சா.பெட்டி தரக்கூடிய காற்றின் அளவு 600 CFM எனக்கொள்வோம்.
இனி நமது கணக்குக்கு வருவோம். உங்களுடைய கு.சா.பெட்டியின் வடிகட்டி சரியாக சுத்தம் செய்யாமல் இருந்தால் வெளியேற்றக்கூடிய காற்றின் அளவு 500 CFM ஆகக் குறைந்தால் 36'C லிருந்து 22'C வர, காற்றின் அளவு குறைந்ததால் 40 நிமிடம் ஆகிவிடும். ( இது ஒரு மாதிரி கணக்குக்கு) அப்படியானால் செயல்பாட்டில் உள்ள 10 மணி நேரத்தில் கம்பரசர் செயல்படும் நேரம் 5 மணி நேரத்தில் இருந்து சுமாராக 6.30 மணி நேரமாக மாறி விடுகிறது. அதாவது தினசரி 13 யூனிட்கள். அப்படியானால் இரு மாதத்திற்கு சுமார் 780 யூனிட்கள். 780 x 3.05 = 2379 ரூபாய்கள். இதற்கு மேல் இங்கு விளக்குவதற்கு ஏதும் இல்லையென்று நினைக்கின்றேன். மீதியை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள்.
இங்கே பொருத்தமான படம் ஏதும் இல்லாததால் இது.
நாங்களும் சூடான இடுகைல வருவோம்ல
தமிழ்நாடு மின் வாரிய மின் கட்டணப்பட்டியல்
0 to 50 யூனிட் ----- 0.75
51-100 யூனிட் ----- 0.85
101-200 யூனிட் ---- 1.50
201-600 யூனிட் ----- 2.20
601 & மேல் யூனிட் --3.05
CFM
CFM என்பது ஒரு நிமிடத்தில் உங்களுடைய கு.சா.பெட்டியின் காற்றாடி இழுத்து குளிரூட்டி மீண்டும் அறைக்குள் அனுப்பும் காற்றின் கன அடி அளவு.( Cubic Feet per Minute)
பின்குறிப்பு :
அடுத்த பதிவாக A/C யில் பயன்படும் CFC எனப்படும் வாயுவால் இந்த புவிக்கு ஏற்படும் பாதிப்புகளைப் (Global Warming, Climate change) பற்றி அறிவியல் துணையுடன், வேதிவினைகளுடன் போடலாம் என்று நினைத்தேன். ஆனால் தொடர்ச்சியாக ஒரே மாதிரி வேண்டாமென்று விட்டு விட்டேன். நாளைக்கு ஒரு கவுஜ.
80. உங்கள் A/C யின் மின் கட்டணம் - ஒரு ஷாக் ரிப்போர்ட்
Labels: குளிர்சாதனம்
Subscribe to:
Post Comments (Atom)

6 comments:
//
தமிழ்நாடு மின் வாரிய மின் கட்டணப்பட்டியல்
0 to 50 யூனிட் ----- 0.75
51-100 யூனிட் ----- 0.85
101-200 யூனிட் ---- 1.50
201-600 யூனிட் ----- 2.20
601 & மேல் யூனிட் --3.05
//
தமிழ்நாட்டில இருக்கும் மக்களே நீங்க எல்லாம் குடுத்து வெச்சவங்க .
கர்னாடகாவில மின் கட்டணம்
ரூ. 80 மீட்டர் சார்ஜஸ் பிக்ஸ்ட் இது எதுக்குன்னே தெரியாது ஆனா மாசா மாசம் கட்டணும்.
0-30 யூனிட்ஸ் - 1.85
30 - 70 - 2.90
70 -க்குமேல் - 4.50
ஏ ஏ ராமா குப்பா சுப்பா வேலாயி ராமாயி எல்லாரும் ஓடி ஒளியுங்க, கலைவாணிக்கா கவுஜ எழுத போராங்கலாமா
//மங்களூர் சிவா said...
தமிழ்நாட்டில இருக்கும் மக்களே நீங்க எல்லாம் குடுத்து வெச்சவங்க .//
தென் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மின்கட்டணம் குறைவாம்.
//மங்களூர் சிவா said...
தமிழ்நாட்டில இருக்கும் மக்களே நீங்க எல்லாம் குடுத்து வெச்சவங்க .//
தென் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மின்கட்டணம் குறைவாம்.///
irukkun thaayee. factories and companies are billed at Rs.4.96 per unit. cross subsidy borne by small SSI units like ours runs (our power bill in our unit is some Rs.80,000 per month, about 1/3rd of our monthly turnover, eating into our gross revenue, etc)into tens of thousands per month while those who own a/cs enjoy subsidised power tariff. this is called socialism. and TNEB is undergoing huge losses (Rs.3000 crore and counting).
nalla kululunu irrunga...
நான் கொடுத்த மின்கட்டணப் பட்டியல் வீட்டிற்கு மட்டுமே. தொழில் நிறுவனங்களுக்கு இங்கே பார்க்கவும்.
http://www.tneb.in/template_3.php?tempno=3&cid=0&subcid=54
//நிலா said... ஏ ஏ ராமா குப்பா சுப்பா வேலாயி ராமாயி எல்லாரும் ஓடி ஒளியுங்க, கலைவாணிக்கா கவுஜ எழுத போராங்கலாமா//
நிலா நீயுமா? அக்கா கவிதை போட்டா சும்மா அதிரும்ல!
Post a Comment