திரும்பிப்பார்த்த போது கொஞ்சம் பயமாகக் கூட இருந்தது. அதை விட கொஞ்சம் கோபமாகவும், வெட்கமாகவும் இருந்தது. ஏதோ ஒரு கனவு போல் இருந்தது. மறந்துவிட்ட வேகத்தில், சூழ்நிலையில் எழுதியவைகளாக இருக்கின்றன.
எல்லாரும் எழுதும் போது நாமும் எழுதுவோம் என்று ஆரம்பித்தது தான். முதலில் எங்கிருந்தாவது களவாடித் தான் போட ஆரம்பித்தேன். அதற்குப் பிறகு பின்னூட்டங்களுக்கு பதில் சொல்ல வேண்டி வந்தது. அதுவே பின்னர் பதிவாக மாற ஆரம்பித்தது. ஆனாலும் 98 பதிவுகளில் 50 பதிவுகளுக்கு மேல் திரும்பிப் படிக்கவே வெட்கமாக இருக்கிறது. அவைகளை அழித்து விடக்கூட எண்ணினேன். ஆனால் அடுத்தடுத்த பதிவுகளுக்கு வரிசை எண் இட்டுவிட்டதாலும், சரித்திரத்தில் இடம்பெற்ற (?) பதிவுகளாகி விட்டதாலும் அப்படியே விட்டு விட்டேன்.
சரி மீதி பதிவுகளில் ஏதாவது தேறுமா என்று பார்த்தால் அதில் கூட சந்தேகம் தான். ஆனாலும் தமிழ்மணத்தில் நுழைந்த 3 மாதமும் மகிழ்ச்சியாக கழிந்தது.
சரி, விஷயத்துக்கு வருகிறேன். இன்று திரும்பி சவுதியில் இருந்து இந்தியாவுக்கு செல்ல வேண்டிய நாள். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் இந்த தருணம் கொஞ்சம் அடிமனதில் சோகததையும் தருகிறது. சில குடும்ப சூழல்களினால் திரும்பி வரும் வாய்ப்பு குறைவாக இருப்பதாலும், ஊரில் இணைய இணைப்பு குழப்பமான சூழலிலும் இருப்பதாலும் நண்பர்களைப் பிரியும் அந்த பள்ளி இறுதி நாள் அனுபவத்துடன் இதை எழுதுகிறேன்.
எனக்கு பின்னூட்டங்கள் இட்டவர்களுக்கும், என்னுடைய இணைய நண்பர்களுக்கும், என் பதிவை அவர்களுடைய கட்டுரைகளுக்கு இடையே சுட்டி கொடுத்தவர்களுக்கும், என்னிடம் ஆரோக்கியமாக சண்டையிட்டவர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முக்கியமாக எனக்கு பாசத்துடன் தங்களுக்கிடையே அரவணைத்து, ஆதரவளித்த எங்களுடைய பாசக்கார குடும்பத்தின் அனைவருக்கும் என்னுடைய நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன். சில நேரங்களில் சர்ச்சையான சில விமர்சனப் பதிவுகளை இட்டதற்கும், அதனால் யாராவது மனம் புண்பட்டிருந்தால் அவர்களிடம் எனது மன்னிப்பை வேண்டுகிறேன்.
நான் எழுதியவற்றில் தொடுப்பு கொடுக்க ஏதும் பதிப்பு தகுதியாக இல்லாதது போல் எனக்கு தோன்றினாலும் இந்த ஒரு பதிவுக்கு மட்டும் தொடுப்பு தருகிறேன்.
விடைபெறுவது
சகோதரி வித்யா கலைவாணி.
98. விடை பெறுகிறேன்...! இது கடைசிப் பதிவு!!.
Subscribe to:
Post Comments (Atom)

45 comments:
அதென்ன வித்யா, 'கடைசிப்பதிவு'ன்னு சொல்லிட்டீங்க?
கவலைப்படாமல் சந்தோஷமா ஊருக்குப் போயிட்டு வாங்க.
வீட்டில் அனைவருக்கும் எங்கள் அன்பைச் சொல்லுங்க.
அதெல்லாம் இணையமும் கிடைச்சிரும், நீங்களும் திரும்ப வரத்தான் போறிங்க.
டேக் கேர்.
மாற்றம் என்ற ஒன்று தான் இந்த உலகில் மாற்றமே இல்லாதது ......மறுபடியும் எழுதுவதும் எழுதாமல் போவதும் உங்கள் கையில் தான் இருக்கின்றதே தவிர வேறு யாரிடமும் இல்லை .......நீங்கள் முயன்றால் முடியும் .எந்த சூழ்நிலையிலும் !
உடனடி இணைய இணைப்புக்கு என்னுடைய பதிவு ஒன்றை பாருங்க
என்னங்க வித்யா , இதுக்கெல்லாம் இப்படி ஒரே அடியா சொல்றிங்க , இணையம் எல்லாம் உங்க ஊரிலும் கிடைக்கும், இப்போ மாறி இருக்கும், நம்பிக்கை வையுங்க!
பிரிவோம், சந்திப்போம் தான் எப்போதும் ... போய்ட்டு வாங்க!
சென்று வாருங்கள்
சிஸ்டர் சென்று வாருங்கள்...!
// இன்று திரும்பி சவுதியில் இருந்து இந்தியாவுக்கு செல்ல வேண்டிய நாள். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் இந்த தருணம் கொஞ்சம் அடிமனதில் சோகததையும் தருகிறது. சில குடும்ப சூழல்களினால் திரும்பி வரும் வாய்ப்பு குறைவாக இருப்பதாலும்//
இரு கண்களிலும் நீர் எமக்கு !
சூழ்நிலை புரிகிறது!
ஆனாலும் வாய்ப்புகள் உண்டு உங்களுக்கு,
எங்கிருந்தாலும் வலையுலகில் வலம் வர.....!!!
சகோதரி கலைவாணி, ஊருக்கு போய் இணையம் கிடைத்து தொடர்ந்து எழுதவும், பல நல்ல பதிவுகளை வெளியிட்டு, நல்ல பாடல்களை பகிர்ந்து, ஆரோக்கியமான உரையாடல்கள் (நன்றி: சுகுணா திவாகர்) நடத்திய நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்பது எனது ஆவல் - பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள் - நாகூர் இஸ்மாயில்
Collapse comments
துளசி கோபால் said...
அதென்ன வித்யா, 'கடைசிப்பதிவு'ன்னு சொல்லிட்டீங்க?
கவலைப்படாமல் சந்தோஷமா ஊருக்குப் போயிட்டு வாங்க.
வீட்டில் அனைவருக்கும் எங்கள் அன்பைச் சொல்லுங்க.
அதெல்லாம் இணையமும் கிடைச்சிரும், நீங்களும் திரும்ப வரத்தான் போறிங்க.
டேக் கேர்.
ரிப்பிட்டெய்ய்ய்ய்....
வசந்தம் ரவி said...
உடனடி இணைய இணைப்புக்கு என்னுடைய பதிவு ஒன்றை பாருங்க
ரிப்பிட்டெய்ய்ய்ய்....
ஆயில்யன் said...
இரு கண்களிலும் நீர் எமக்கு !
சூழ்நிலை புரிகிறது!
ஆனாலும் வாய்ப்புகள் உண்டு உங்களுக்கு,
எங்கிருந்தாலும் வலையுலகில் வலம் வர.....!!!
ரிப்பிட்டெய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்....
nagoreismail said...
சகோதரி கலைவாணி, ஊருக்கு போய் இணையம் கிடைத்து தொடர்ந்து எழுதவும், பல நல்ல பதிவுகளை வெளியிட்டு, நல்ல பாடல்களை பகிர்ந்து, ஆரோக்கியமான உரையாடல்கள் (நன்றி: சுகுணா திவாகர்) நடத்திய நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்பது எனது ஆவல் - பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள் - நாகூர் இஸ்மாயில்
ரிப்பிட்டெய்ய்ய்ய்ய்....
நீங்க கண்டிப்பாக திரும்ப வலைபதிய வருவீர்கள்....காத்திருக்கிறோம்.
இதுகெல்லாம் கவலை படலாமா? அங்கே இணைய இணைப்பு கண்டிப்பாக கிடைக்கும். போய் வாருங்கள்!! வாழ்த்துக்கள்!!
இம்சை ரிப்பீட் சொன்ன எல்லாத்துக்கும் ஒரு ரிப்பீட்டேய்
வெல்கம் டு இந்தியா
வாங்க சிஸ்டர் வாங்க
//
விடை பெறுகிறேன்...! இது கடைசிப் பதிவு!!."
//
என்ன தலைப்பு இது சின்னபுள்ள தனமா!!!
ஊருக்கு போனப்பிறகு வரப்போகும் நூறாவது பதிவுக்கு
என் முன்கூட்டிய வாழ்த்துக்கள் அக்கா!or(தங்கச்சி!)
மீண்டும் மகிழ்வு வேளையில் திரும்புவீர்கள்.
வாழ்த்துக்கள் சகோதரி...
மீண்டும் சந்திப்போம்......
சச்சின் மாதிரி 98ல ஆட்டைய நிறுத்தினா எப்படி?எழுத்து மனசுல ஒட்டிகிட்டா ஏதாவது வழி பிறக்கும்.இந்தியா போங்க!
என்ன சகோதரி, மீண்டும் வருவேன்னு நம்பிக்கையுடன் விடைபெறலாமே. இந்த இணைய நண்பர்கள் எப்போதும் உங்களுடன் இருப்பார்கள்.
முயற்சி திருவினையாக்கும்.
வரப்போகும் 100வது பதிவுக்கு வாழ்த்துகள்...ரியாத்தில் இல்லாமல் போனாலும் ஊரில் சந்திப்போம்..
வாழ்த்துகள்..
எல்லாரும் சொன்னதுக்கு ஒரு..
ரிப்பீட்டேய்ய்ய்ய்!
யக்கோவ....மீண்டும் சந்திப்போம் ;))
(விரைவில்)
all the best thirumbi vanga niraya eluhdunga
யக்கா.. இப்படி பாதியாட்டத்துல விட்டுட்டுப்போறது நல்லால்ல..
செஞ்சுரி அடிக்க இன்னும் ரெண்டே பதிவுதான் பேலண்ஸ்.. வந்து அடிங்க..
கூட விளையாடி 100 கொண்டாடுறதுக்கு நாங்கெல்லாரும் இருக்கோம்க்கா.
இணைய த்டர்புக்கா பஞ்சம்.. அங்கேல்லாம் வீதிக்கு வீது சைபர் கேஃபே இருக்காதா?
எல்லோரும் சொன்னதையே நானும் ரிப்பீட்டுறேன்.இணையம் கிடைக்காது என்று யார் சொன்னது? மேலும் இதுக்குப்போயி அலட்டிக்கலாமா..வித்யா!!
இந்தியா இப்போ மெய்யாலுமே ஒளிருதுங்க. எந்த ஒரு மூலைக்கும் இன்டெர்நெட் கொடுக்குற அளவுக்கு B.S.N.L வளர்ந்துடுச்சு. நீங்க இங்க வந்தும் தாராளமா இணையத்தில் எழுதலாம். பயணம் சிறக்கட்டும் :)
இந்தியா திரும்புவதற்கு வாழ்த்துக்கள், என்றாலும் இணையம் கிடைப்பது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை. கொஞ்சம் தாமதம் ஆனாலும் இணைய இணைப்புக் கிடைத்து, நீங்கள் மீண்டும் இணையத்தில் எழுத வர என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுவும் கடந்து போகும், மீண்டு வர நல்வாழ்த்துக்கள்.
வித்யா,
நல்ல எழுத்துக்கோர்வையுடன் வரும் பதிவுகளில் உங்களுடையதும் ஒன்று. இந்தியா போனாலும் தொடர்ந்து எழுதுங்கள். இந்த பதிவு ஏமாற்றமளிக்கிறது.
வித்யா - கேணத்தனமா எழுதாதே - பெரிய குளத்தில் கட்டாயம் இணையத் தொடர்பு கிடைக்கும். தொடர்ந்து எழுது. மீண்டும் சந்திப்போம் - வாழ்த்துகள்.
இன்று சென்னை செல்கிறேன். சனிக்கிழமை மதுரை வருகிறேன்.
கடைசிப் பதிவு என்றெல்லாம் எதிர் மறை சொற்களை பயன் படுத்தாதே !! தவிர்க்க முயற்சி செய்
அட இதுக்கெல்லாம் போய் கலங்கிகிட்டு சந்தோஷமா புறப்பட்டு வாங்க.
Oh, kalavaani sister...
this is my first entry... so impressive. dont worry. Reliance mobile would give you better service. Get one Reliance mobile with Data Card and get connected online. You will have good speed and the cost is reasonable too.
Day Time (7am to 10pm): 50ps/min
Night (10pm to 7am): 25ps/min
pls take it and get connected ALL THE BEST.
//delphine said...
ஜனவரி மாதம் நாம்ப இரண்டு பேரும் திரும்பி வந்து பதிவு போடுவோம்! எல்லாம் நல்லபடியாக நடக்கும்.
//
டாக்டர் நீங்களும் லீவுல போறீங்களா?
அப்பன்னா முன்கூட்டிய
கிறிஸ்துமஸ்
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
இந்த மாசம் லீவுக்கு போறவங்க டிசம்பர் மாத ஸ்பெஷல் பர்த்டேக்கள மிஸ் பண்றீங்களேன்னுத்தான் எனக்கு ஃபீலிங்!
ஒருத்தரு சூப்பர் ஸ்டார்
இன்னொருத்தரு
சொல்லமாட்டேனே...!
அமீரகத்தில இருக்காருன்னு மட்டும் சொல்ல மாட்டேனே!
ஹலோ ஆண்ட்டி என்ன வெளையாடறிங்களா? யாரக் கேட்டு இது கடைசி பதிவுன்னு முடிவு பன்னிங்க? அப்டி எல்லாம் உங்கள நிம்மதியா விட முடியாது. தேனில இணைய இணைப்பு ஒரு பிரச்சனையே இல்லை. இப்போ BSNL சிறு கிராமங்களுக்கு கூட வீட்டில் ஏற்கனவே இருக்கும் தொலைபேசி மூலமே இணைய இணைப்பு தறாங்க. ஸோ எங்க கிட இருந்து எஸ்கேப் ஆகலாம்னு கனவு எதும் காண வேண்டாம். அப்பு இல்லாம குட்டீஸ் கார்னரா? நோ..நோ... என்னாதிது சின்னப் புள்ளத் தனமா இல்ல கீது? :P
WELCOME TO INDIA
சாரி .. பெரியகுளத்துக்கு பதில் தேனினு தவறா எழுதிட்டேன். நம்ம தலைவர் ஆரூண் கிட்ட சொல்லி உங்களுக்கு இணைய இணைப்பு வழங்க வேண்டியது என்னோட பொறுப்பு.. சரியா? :P
பல சுட்டிகளை சுட்டி, ஏதோ ஒன்றின் மூலமாக உங்களுடைய வலைப்பூவை இன்று தான் பார்தேன். ஆனால் நான் படித்த முதல் பதிவே உங்களுடைய கடைசி பதிவாக இருப்பதுதான் சற்று வருத்தமாக இருக்கிறது. தலைப்பையாவது சற்று மாற்றி இருக்கலாம். இன்றைய உலகில் கடைசி என்ற வார்த்தைகே இடம் கிடையாது. மீண்டும் சந்திப்போம்.
கலைவாணிக்கா ஊருக்கு வந்துட்டு கொஞ்ச நாளைக்கு நெட் பத்தில்லாம் கவலைப்படாம சொந்தம் பந்தம் எல்லாரோடயும் சந்தோஷமா இருங்க. அதான் முக்கியம். அப்புறமா எப்போ ப்ரீ ஆகறீங்களோ அப்போ ப்ராட்பேண்டே கிடைக்கும் கலக்கலாம்
ஹலோ.. என்னா சொல்லறிங்க.. இப்பிடியெல்லாம் ஃபீல் பண்ண வைக்கப்டாது..
உங்க சொந்த பிரச்சனைகள் தீர்ந்து மறுபடி புது உற்ச்சாகத்தோடு திரும்பி வர வாழ்த்துக்கள்...
நண்பர்கள் காத்துக்கிட்டிருப்போம்...நோ ஒர்ரிஸ்..ஓகே..
namma oorukku pakkathu ooru neenga... kattayam vanga...
Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Teclado e Mouse, I hope you enjoy. The address is http://mouse-e-teclado.blogspot.com. A hug.
Post a Comment