பிளஸ் 2 வரை பாடநூல்கள் இணைய தளத்தில்

பிளஸ் 2 வரை பாடநூல்கள் இணைய தளத்தில்

ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான பாடநூல்கள் அனைத்தையும் தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் தனது இணைய தளத்தில் நேற்று வெளியிட்டது.

பள்ளிப் பாடநூல்களை நியாயமான விலையில் ஒரே மாதிரியாக, உரிய நேரத்தில் மாணவர்களுக்கு வழங்க, கடந்த 1970ம் ஆண்டு தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் நிறுவப்பட்டது.
இதன்மூலம் ஆங்கிலம், தமிழ் மற்றும் சிறுபான்மை மொழி வழிகளில் 502 தலைப்புகளில் பாட நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சுயநிதி பள்ளிகளில் ஒன்று முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக பாடநூல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டில் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில், தமிழை முதல் மொழியாக எடுத்து படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் பாட நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர வெளிச்சந்தையிலும் பாடநூல்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் மாணவர்களின் முன்னேற்றம், ஆசிரியர் நலன் கருதி 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான பாட நூல்களை இணைய தளத்தில் வெளியிட அரசு திட்டமிட்டது. இதற்காக ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டு Ôநிக்Õ நிறுவனத்துடன் இணைந்து பணிகள் நடந்தன. இதையடுத்து 322 தலைப்புகளில் பாடப் பகுதிகள் இணைய தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.

இதில் பொதுப் பாடநூல் தலைப்பு 162 (தமிழ் வழிப் பாடநூல் தலைப்புகள் 90, ஆங்கில வழி பாடநூல் தலைப்புகள் 72) உள்ளன. சிறுபான்மை பாடநூல் தலைப்புகள் 160 உள்ளன.
வகுப்பு வாரியாக பார்த்தால், 1 முதல் 5ம் வகுப்பு வரை 95 தலைப்புகளும், 6 முதல் 8ம் வகுப்பு வரை 73 தலைப்புகளும், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை 154 தலைப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பாடங்களை, விருப்பம்போல் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும். இந்த இணைய தளம் குறித்து அறிய விரும்புவோர் http://www.textbooksonline.tn.nic.in/ என்ற முகவரியில் பார்க்கலாம்.

0 comments: