மரத்தடியில் கிடைத்த முத்து

நேற்று மரத்தடியில் இருந்த போது ஒரு அழகான கதையில் சில அழகான கவிதைகள் கிடைத்தன. அதை இங்கே தருகிறேன்.

===
"கால் நடந்து வரும்
அஜந்தா குகை ஓவியமோ
நீதான்
தேன் கொண்டு தரும்
கண்ணதாசன் காவியமோ

சித்தன்னவாசல் சிற்பமோ
நீதான்
முத்திரை பதிக்கும்
சித்திரை மழையோ

கம்பனாய் இருந்தால்
பாடியிருப்பேன் உன்னை
வர்மனாய்(ரவி) இருந்தால்
வரைந்திருப்பேன்,
நானாய் இருப்பதால்
வாடியிருக்கிறேன்

என் இதயமிருந்தமிடமின்று
வெற்றாய்,
பறந்து விட்டது உன்னிடம்
சிட்டாய்.

வைத்துக்கொள்ளடி பெண்ணே
உன்னை மட்டுமே நினைத்து,
உன் பெயரைச் சொல்லித் துடித்து
உனக்காகவே இருக்கும் அதை
நான் வைத்து
என்ன செய்வது,
நீயே வைத்துக்கொள்! "

===

===
தேவதைகள்
வானிலிருந்து
வருவதுண்டோ

உண்டென்றால்
அது நீயென்றால்,
தேவதையே உந்தன்
சிறகெங்கே?

இறக்கையில்லா
தேவதையாயினும்
இரக்கமுமாயில்லை

வரமளிக்குமாமே தேவதைகள்
வரம்வேண்டாம், ஒருமுறை
திரும்பித்தான் பாரேன்

உன் கண்பார்வைக்காக
காத்திருக்கும்
அகலிகன் நான்

அய்யோ, இதென்ன
என் கால்கள்
தரையில் பரவ
மறுக்கிறதே,
நான் பறக்கத் தொடங்கிவிட்டேனோ?
நான் தேவதையின் தேவனாகிவிட்டேனோ?

===

===
"பார்த்தும் பார்க்காதது போல்
நடிக்கிறாய் தோழி,
நான் இருந்தும் இல்லாமல்
ஆய்விட்டேன் போடீ."

===

===
பூக்களே,
சென்று என் காதலை
அவளிடம் சொல்லுங்கள்.

ஒரு பைத்தியக்காரன்,
உனக்காக
உனக்காக மட்டும்
உயிர் வாழ்கிறான்
என்று சொல்லுங்கள்.

பிறகு கூட
காதலிக்கலாம், முதலில்
பேச சொல்லுங்கள்,
இறந்து கொண்டிருக்கிறேன்
நான்
ஒரு வார்த்தை பேசி
உயிர்ப்பிக்கச் சொல்லுங்கள்.

===

நன்றி - மரத்தடி - குந்தவை வந்தியதேவன்

0 comments: