பெண்கள் இல்லாத விளம்பரங்கள்தான் அழகு

என்னதான் ஆணாதிக்க சமூகமென்று சொல்லப்பட்டாலும் ஆண்களின் நிலை மிகப் பரிதாபமாகத்தான் இருக்கிறதென்பதை உணர்ந்து கொள்ள இந்தப் பதிவு உதவியது

பெண்கள் போகப் பொருளா? என்றொரு பதிவை ஜெஸிலா இட்டிருந்தார். விளம்பரங்களில் மட்டுமா பெண்கள் போகப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறார்கள். திரைப்படங்களில் என்ன வாழுதாம்? அதற்காகத் திரைப்படங்களைப் பார்ப்பதை இந்தப் பெண்ணியவாதிகள் எல்லாம் புறக்கணித்தா விடுகிறார்கள்? தாவணி புடவை என்று பண்பாடு பயாஸ்கோப் காட்டிய அடுத்த நிமிடமே மார்க்கச்சையும், மறைதுணியுமாக நீச்சலடிக்கும் பெண்ணைத்தானே திரைப்படங்கள் முன்னிறுத்துகின்றன. இதைத்தானே தேடிக் காசு கொடுத்தும் பார்த்துத் தொலைக்கிறோம்? ஸ்நேகா புடவை, குஷ்பு கம்மல் என்று அலைவதைப் பெண்கள் நிறுத்தும் காலம் வரும்போது இந்தப் பெண்களைப் பகடைகளாக உபயோகித்துச் செய்யப்படும் விளம்பரங்கள், திரைப்படங்கள் எல்லாமே தாமாகவே நின்று விடும்.

இப்படித்தான் இந்த விளம்பரம் எடுக்கப்படவேண்டுமென்பதை ஆண்கள்தான் தீர்மானிக்கிறார்கள் என்றாலும் மிக அழகான விளம்பரங்கள் கண்களில் படுவதேயில்லையா பெண்களுக்கு? ஒரு குட்டிப்பையன் தனது உண்டியலை எடுத்துக்கொண்டு தனது வங்கிக்குச் செல்லும் ஒரு கவிதை, முதியவ்ர்கள் கும்மாளமாக கிரிக்கெட் ஆடும் விளம்பரம், மழையில் குதூகலித்துத் தந்தையிடம் மழைச்சத்தம் கேட்கச் சொல்லும் சிறுவன் என்று கவிதையாக விரியும் விளம்பரங்களும் ஆண்கள் தயாரிப்பதுதான். அழகான அந்த விளம்பரங்களில் மருந்துக்குக் கூட ஒரு பெண்ணின் அவசியமும் ஏற்படவில்லை.அழகென்றால் பெண்கள்தான் என்று ஆண்கள் நினைக்காததே காரணம் என்று எடுத்து வேறு சொல்ல வேண்டுமா? :-) ஆனால் நகைக்கடை விளம்பரம் என்றால் ஆண் ஏன் இல்லை என்று கேள்வி கேட்பது போல அபத்தம் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை.

பொருள் மயக்கம் நிறைந்த இவ்வுலகில் ஆணோ, பெண்ணோ எதைப்பற்றியும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. காசு கிடைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமென்ற தாராளமயக் கொள்கை அமுலில் இருக்கும்போது பொது ஜன ஊடகங்களில் ஆணியமாவது பெண்ணீயமாவது?? போய் வேலையைப் பாருங்கப்பா.

நன்றி ; http://asifmeeran.blogspot.com/

0 comments: