57. கலைவாணி களவானியான கதை பாகம் 2

கலைவாணி களவானியான கதை பாகம் 2
சும்மா பொழுது போகலைனு நம்ம சோக கதையை சொன்னா எல்லாரும் ரொம்ப ஆர்வமா இருக்காங்க. சரி இன்னைக்கு இதை முடிச்சிடுவோம். எதில விட்டேன். ஆங்...கணிணி முன்னாடி உட்காந்தப்ப. என்னடா இது இப்படி தப்பு நடந்திடுச்சே என்ன செய்யலாம்னு யோசிச்சேன். சரி நாம தான் நீதி கேட்டு மதுரையை எரிச்ச கண்ணகி பரம்பரையாச்சே. இதுக்கு கண்டிப்பா நீதி கேட்கனும்னு முடிவு பண்ணினேன்.
சரி நம்ம கிட்ட தான் இண்டர்நெட் இருக்கேனு அமீரக இந்திய தூதரக வலைக்கு போய் பெரு.....சா ஒரு குற்ற பத்திரிக்கை தாக்கல் பண்ணியாச்சு. சரி பதில் சொல்லுவாங்கனு பாத்தா ரொம்ப சீக்கிரமா ஒரு வாரம் கழிச்சு இதெல்லாம் எங்களுக்கு சாதாரணம். பெரிய விஷயம் இல்லைனு பதில் வருது.
சரினு மீண்டும் என்னோட ஆள்கிட்ட கெஞ்சி கூத்தாடி திரும்ப ஒரு நாள் விடுப்பு எடுத்து அங்க போயாச்சு. அங்க ஒரு இந்தி பேசுற ஒரு ஆள்கிட்ட விவரத்தை நான் தான் சொன்னேன். ( தங்க மச்சான் இந்தி பேசுறதுல ????????? மாதிரி ஒரு சீறும் சிறுத்தை). நம்ம பொளந்து கட்டிருவமில்லை.
'ஓ நீதானா அது' என்பது போல ஒரு கொலை வெறியோட பாத்தார் என்னய. என்க்கு ஒன்னும் புரியல. சரி உட்காருங்கன்னாரு. உட்காந்தோம், உட்காந்தோம், உட்காந்துகிட்டே இருந்தோம். அங்க இருந்த ஒரு மலையாளி சேட்டன் எங்களையே பரிதாபமா (?) வேற பாத்துக்கிட்டே இருந்தாரு. அந்த இந்தி பேசறவர் அதோட நகல் வேனும், இதோட நகல் வேனும்னு ஜவ்வா இழுத்து அடிச்சாரு. கடைசியா பாத்தா கையெழுத்து போடரவரு வரலை நாளைக்கு வாங்கனு சொல்லிட்டாரு.
இங்கே என்னோட கணவருக்கு இரத்தம் 100 'C ல கொதிக்குது. நாளைக்கும் லீவு போடனும்னு. சரி தலையெழுத்துனு மறுநாள் போய் எல்லாம் சரியா இருக்கானு பாத்து வாங்கியாச்சு.
அப்பாடானு திரும்பி போறப்ப அந்த மலையாளி சேட்டன் வந்து உடைந்த தமிழ்ல சொன்னாரு. " உங்களுக்கு நேத்தே ஈஸியா முடிஞ்சிருக்கும். ஆனா நீங்க ஒரு மெயில் அனுப்பினிங்க பாருங்க. அதுதான் வினையே"னு.
என் கணவர் அப்ப என்ன பாத்தாரு பாருங்க. அடுத்த ஒரு மாசமும் கணிணிய தொட விடலையே!
டிஸ்கி 1 : கஷ்டப்பட்டு இரண்டு பதிவு போட்ருக்கேன். நீங்களும் கொஞ்சம் திட்டிட்டு போங்க.
டிஸ்கி 2 : ( தங்க மச்சான் இந்தி பேசுறதுல ????????? மாதிரி ஒரு சீறும் சிறுத்தை) இதுல ????????? யாருனு நீங்க தான் சொல்லனும். இது உங்கள் சாய்ஸ்

21 comments:

said...

சரி தலைப்பு சொல்லிட்டீங்க பதிவ போடுங்க சீக்கிரம்:-))

said...

அவ்ளோதான் முடிஞ்சிடுச்சா? இல்ல மூணாவது பார்ட்டும் வருமா?

said...

"கஷ்டப்பட்டு இரண்டு பதிவு போட்ருக்கேன்."

அப்ப சைடில் இருக்கும் மீதி பதிவு எல்லாம் யாரு போட்டது!!!

said...

வாங்க வித்யா கலைவாணி
வரவு நல்வரவாகட்டும்
இதென்ன கலை வாணிய களவாணினு கொலை பண்றீங்க.
பிலக் டிஸ்கிரிப்ஷனும் மாத்திடலம்னு என் அபிப்பிரயம்
மத்தது உங்க இஷ்டம்

said...

சப்புன்னு முடிஞ்சிடிச்சு. ம் ஓகே.

said...

அது என்ன திட்டு வாங்கனும்ன்னு இத்தனை ஆசை உங்களுக்கு
அதெல்லாம் அந்த அந்த நேரத்துல
தானா கிடைக்கும்.. இப்ப இந்த கஷ்டப்பட்டு எழுதின பதிவு ரெண்டுத்துக்கும் திட்டறதுக்கு என்ன காரணம் இருக்கு..
ஜாலியா எழுதி இருக்கீங்க படிச்சுட்டு
கிண்டல் அடிக்கத்தான் நாங்கள்ளாம் இருக்கமே.. பாருங்க குசும்பன் அடிக்கற கமெண்டை. :))

said...

அபி அப்பா, நிலா, குசும்பன், கண்மணி,சிவா, முத்துலக்ஷ்மி அனைவருக்கும் நன்றி

said...

///நிலா said...
அவ்ளோதான் முடிஞ்சிடுச்சா? இல்ல மூணாவது பார்ட்டும் வருமா?//
இரண்டுக்கே கஷ்டம் இதில மூணாவது வேறயா?

said...

suspense ?????????

said...

கலக்கலா இருக்கு!

தொடந்து எழுதுங்க!

வாழ்த்துக்கள்!

said...

களவானி அக்காவுக்கு ச்சச்ச...கலைவாணி அக்காவுக்கு வணக்கம் :))

\\என் கணவர் அப்ப என்ன பாத்தாரு பாருங்க. அடுத்த ஒரு மாசமும் கணிணிய தொட விடலையே!\\

அய்யயோ அப்போ ஒரு மாசம் முடிஞ்சிடுச்சா..அவ்வ்வ்வ்வ்வ்வ் :(

said...

\\வித்யா கலைவாணி said...
அபி அப்பா, நிலா, குசும்பன், கண்மணி,சிவா, முத்துலக்ஷ்மி அனைவருக்கும் நன்றி\\

எல்லாத்துக்கும் தனி தனியாக நன்றி சொல்லானும்....அபி அப்பா இவுங்களுக்கு கிளாஸ் எடுங்க :)

said...

\\டிஸ்கி 2 : ( தங்க மச்சான் இந்தி பேசுறதுல ????????? மாதிரி ஒரு சீறும் சிறுத்தை) இதுல ????????? யாருனு நீங்க தான் சொல்லனும். இது உங்கள் சாய்ஸ்\\

ஏக் காமே ஏக் கிஸான் ரக தாத்தா...சரிதானே :))

said...

ஒரு களவாணிய கலைவாணியா மாத்துறதில சிரமம் இருக்கும்தான்....
சாதிச்சிட்டீங்களே.....சந்தோஷம்

said...

கலைவாணி, நவராத்திரில எங்களையெலாம் கண்டுக்கோங்க:))
(பதிவு நிறைய போடுங்கனு சொல்றேன்.)
நல்லா இருந்ததுப்பப.

@கோபி,
அது ஏக் காவ் மேஇன் ஏக் கிசான் ரகு தாத்தா:)))))

said...

சில ஆண்டுகளுக்கு முன் வந்த மின்னஞ்சல் ஒன்றில் கலைவாணியை எப்படி எல்லாம் கொடுமை செய்தார்கள் ( பெயரை தவறாக அழைத்து) என்று இருந்தது...மிகவும் ரசித்தது..

அதை எழுதியது நீங்களா ?

said...

முரளி கண்ணன்
நன்றி
நாமக்கல் சிபி
நன்றி
கோபிநாத்

\\வித்யா கலைவாணி said...
அபி அப்பா, நிலா, குசும்பன், கண்மணி,சிவா, முத்துலக்ஷ்மி அனைவருக்கும் நன்றி\\

//எல்லாத்துக்கும் தனி தனியாக நன்றி சொல்லானும்....//
நன்றி ; சொல்லியாச்சு

siva gnanamji(#18100882083107547329)
நன்றி
வல்லிசிம்ஹன்
நன்றி

said...

// கோபிநாத் said...
அய்யயோ அப்போ ஒரு மாசம் முடிஞ்சிடுச்சா..அவ்வ்வ்வ்வ்வ்வ் :(//
இது நடந்தது துபாயில இப்ப நான் இருக்குறது ரியாத்
அய்யோ! அய்யோ!

said...

//ஏக் காமே ஏக் கிஸான் ரக தாத்தா...சரிதானே :))//
\\அப்பாவி சொன்ன
"கிஸான்னா விவசாயி தான"\\ மட்டுறுத்தலுக்கு உட்பட்டு நீக்கப் பட்டுள்ளது.

said...

//@கோபி,
அது ஏக் காவ் மேஇன் ஏக் கிசான் ரகு தாதா:)))))//
சரி
एक गाॅव मे एक ऴिसान रहता था
நன்றி

said...

//செந்தழல் ரவி said...

சில ஆண்டுகளுக்கு முன் வந்த மின்னஞ்சல் ஒன்றில் கலைவாணியை எப்படி எல்லாம் கொடுமை செய்தார்கள் ( பெயரை தவறாக அழைத்து) என்று இருந்தது...மிகவும் ரசித்தது..

அதை எழுதியது நீங்களா ?//
அது நான் இல்லை. வலைக்கு வந்தே கொஞ்ச நாள் தான் ஆகுது
நன்றி