56. கலைவாணி களவானியான கதை - 1

கலைவாணியான நான் எப்படி களவானியாக மாறினேன் என்பது தான் இந்த பதிவு. சில நாட்களாக ப்ளாக்கரில் உலவி, தமிழ் மணத்தைத் தெரிந்து, யாருக்கு பின்னூட்டம் போடலாம், போடக் கூடாது என்றெல்லாம் முடிவு செய்தேன். சரி தெண்டமா தானே இருக்கோம் நாமும் ஏதாவது கிறுக்கலாம்னு முடிவு செஞ்சேன். சரி என்ன தலைப்பு வைக்கலாம்னு யோசிச்சப்ப தான் வந்த தலைப்பு களவானி.
ஓவர் பில்டப் குடுத்தாச்சுன்னு நினைக்கிறேன். விஷயத்திற்கு வருவோம். அப்ப நான் துபாய் துபாய் னு ஒரு ஊர்ல இருந்தேன். ( இரண்டு துபாய் இல்லீங்க, ஒரு flow வுக்கு தான்). அப்ப என்னோட கடவுச்சீட்டு ( வாழ்க தமிழ்) காலாவதியாகி போச்சு. விடுமுறையும் நெருங்கி வந்துச்சு. நமக்கு வேண்டிய இருத்தர் சொன்னார் 'நீங்க ஊருல போய் புதுப்பிச்சா விசாவோடு இருக்கிறதால உங்க சொத்தையே பிடுங்கிடுவாங்க. அதனால இங்கயே புதுப்பிச்சா நல்லது'னு.
உடனே என்னோட வயச கணக்கு பார்க்கிறவங்க அப்படியே நிப்பாட்டுங்க. என்னோட கடவுச்சீட்டு நான் சின்ன பிள்ளையா இருந்தப்ப எடுத்தது. (Minor Paooport). அப்பாடா தப்பிச்சாச்சு. சரினு என்னோட கணவரை நச்சரிச்சு அலுவலகத்துக்கு விடுப்பு போடச் சொல்லி துபாய்ல இருக்குற இந்திய தூதரகத்துக்கு போயி புதுப்பிச்சும் வந்தாச்சு.
இதிலென்ன விசேஷம்னு கேக்கிறீங்களா? இனிமே தான இருக்கு மேட்டரே!. ஒரு வாரம் கழிச்சு எதோ ஞானோதயம் வந்து கடவுசீட்டை எடுத்துப் பார்த்தா KALAIVANI என்பதற்குப் பதிலா KALAVANI னு இருக்கு. என்னடா இது நம்ம ஊர் ரேஷன் கார்டுலயும், வாக்காளர் அடையாள அட்டையிலயும் மாத்தர மாதிரி நம்மல களவாணி ஆக்கிட்டாங்களேனு என்னோட கணவர்ட்ட சொன்னேன்.
உடனே ஒரே திட்டு முதல்லயே பாக்கலையானு. சரினு எப்படியோ சமாளிச்சாச்சு. 'ஊருக்கு போக 25 நாள் இருக்கே. இப்ப எனக்கு Project Work அதிகமா இருக்கு. பத்து நாள் கழியட்டும்' னு சொல்லிட்டாரு.
என்னடா இதுனு கணிணி முன்னாடி உட்கார்ந்தப்ப தான் திரும்ப அப்படி யோசிக்கவே கூடாதுனு நான் முடிவு எடுத்த அந்த யோசனை வந்துச்சு.
என்னனு கேட்கிறீங்களா? தட்டச்ச முடியல நாளக்கி சொல்றனே

22 comments:

said...

சத்தியமா நான் நெனச்சேன் இப்படித்தான் ஏதாவது ஆகியிருக்கும் ஏன்னா என் அண்ணி ஒருத்தவங்க கலாவதின்னு பேர், நான் அவங்களை காலாவதின்னு கிண்டல் பண்னுவேன்!(அவங்க கருப்பா இருப்பாங்க என்பதும் கூட ஒரு காரணம்)

said...

ஓ துபாயா! அதான் ஷேக் ஸையத் ரோட்டிலே 120 போகமுடியாதுன்னு சொன்னீங்கலா, ம்...

said...

சீக்கிரமா சொல்லுங்க, இந்த விஷயத்துல நான் ரொம்ப ஆர்வமா இருக்கேன்.

said...

கலைவாணியாவே இருங்க. சுவரஸ்யமான இடத்தில நிறுத்திட்டீங்களே:)))

said...

அட அங்கேயுமா?
நம்மூர் ரேசன் கார்டுல, அழகம்மாள்ங்கற என் மனைவி பெயரை
அழுக்கம்மாள் போட்டு மானத்தை வாங்கிட்டாங்க. இந்த டென்ஷன்ல அவங்க ஒரு வாரம் எங்கிட்ட பேசவே இல்லை. ஒழுங்கா எழுதி கொடுத்துமே இந்த நிலமை.அப்புறம் போராடி சரிபண்ணி வாங்கினேன். எல்லா பக்கமும் இப்படித்தான் இருப்பாய்ங்களோ...

said...

களவானி sorry கலைவாணி, வாழ்த்துக்கள்.

said...

/என்னனு கேட்கிறீங்களா? தட்டச்ச முடியல நாளக்கி சொல்றனே/

ஹிம் சொல்லுங்க சொல்லுங்க.... ;)

said...
This comment has been removed by a blog administrator.
said...

சகோதரர் ராம் மன்னிக்கவும். இதை தீர விசாரித்து விட்டு உங்களுக்கு பதில் சொல்கிறேன்.
மீண்டும் மன்னிக்கவும

said...

ப்பூ.. இதுதான் களவாணியான கதையா..? பரவாயில்லை.. சுவாரஸ்யமாகத்தான் உள்ளது.. மீதியையும் சொல்லி முடியுங்கள். எக்காரணம் கொண்டும் களவாணியை மாற்றிக் கொள்ளாதீர்கள்..

said...

ம்.. சீக்கிரம் சொல்லுங்க

வெயிட்டிங்

said...

கலைவாணி கலவாணி ஆனது தூதரகம் செய்த தவறினால். களவாணி ஆனது ஏன் ??

said...

அபி அப்பா, நிலா குட்டிம்மா, வல்லி சிம்ஹன், ராதா செந்தில், ராம் அனைவருக்கும் என் நன்றிகள்.
சகோதரர் ராமின் கணிப்பு சரியே. எனக்கு தக்க சமயத்தில் உதவிய நம்பிக்கைக்குரிய பதிவருக்கும் எனது நன்றி.
//நல்ல வேலை ஏமாறலை//
Thank God

said...

//கலைவாணி கலவாணி ஆனது தூதரகம் செய்த தவறினால். களவாணி ஆனது ஏன் ??//
ஆங்கிலத்தில் kalavani என்று இருந்தால் தமிழில் களவானி என்று தான் வாசிக்க முடியும்.
'L' என்பது ல,ள இரண்டுக்கும் தானே.
இந்தியில் தான் 'ல' ஒன்று மட்டும் உள்ளது. நம்மிடம் இருப்பது மூன்று.

said...

சில வருடங்களுக்கு முன் இணையத்தில் வலம் வந்த இடுகை. (பீட்டருக்கு மன்னிக்கவும்)
===================================
Kalai.....Kolai.....Kizhai.....Best Comedy of the year (Read or Regret)
The following is an excerpt from a blog
(written by an Indian in America)

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Wednesday,
September 28, 2005



En
per padum paadu!!!

My
full name is Kalaivani, but I call myself Kalai. This is not for scene, ...like
how Madhavan does in Anbe Sivam (Anbarasu --> Ars).it has a looooong and
pathetic history...

I started hearing different versions of my name after coming to this country, and
the painful fact is all the possible permutations and combinations of vowels in
my name give meaningful words in tamil!!!

When I first joined the university, my professor wrote to me..

Dear KALAvani (meaning: thief; context: kalavani
paya..)

...
... ...

Sari
adhuvachum typo nu free ya vittudalam..

Then after a year, I joined a company for internship.those people called me before I
joined, to inform me about some test which I had to take..

"Hello is this Ms. Kizhavaani?" (meaning: old; context : kizha
bolt..etc.)

"No..this is
KALAIvaani"

"Ohh..am sorry KALAvaani"
(Marupadiyum...)

Then I decided.periya pera irukkinala thane ivlo confusion?!! So, I started calling
myself 'Kalai'... but the story continued..

I joined my full-time position in another company recently. On my first day, we
had a meeting..

"Let's all welcome our new associate.Ms.
Kulai" (meaning: bunch; context: kulai
kulaiyai vazhaipazham kaaithadhu)

CLAP!
CLAP! CLAP! CLAP! Followed by smiles.

(Dei.ennangada... ellarum serndhu comedy
panreengala???)

Anniku arambichadhu...

Once my boss and I were talking about a project... after finishing the meeting...

"Ok, Kali. Nice to have you here!" (meaning: last
yuga; context: kali muthi pochu.)

"That's KALAI" (Enakku idhu
thevaya?!)

"Ohh kAALi?" (meaning: goddess; context:
badrakaali..)

"Hee hee .very close" (Podaannnggg...!!)

So, I stopped correcting my name after that..!

One fine morning, I was working.

"Hey kiLai (meaning: branch; context: marakiLai)
.howz it going?"

"Yea good" (Sollitu
thirumbitten. Nammaluku edhuku indha per thiruthura business
nu...)

"Is that how you say your name?"

(Aaahaa arambichutanya...!!!)

"Uhhh. It's KALAI"

"Kolaai?" (meaning:pump; context: kozhai adi sandai.)


(Venaaammm...)

"Kolai?" (meaning: murder; context: kolai panniduven..)


(Venaam!)

"kaLai?" (meaning: weed; context: kaLai pudinguradhu.)


(Valikkudhu...
azhudhuduven...)

"May be I'll get your name with practice. Haha."

(Idhellam remba over da dei... Tamil la paatha rende rendu ezhuthu thaan da!!!)


Ennada, Chandramukhi la thalaivar 'durga' perai nakkaladikkira maathiri... namma per ayiduche nu nenaikkum
podhu... my friend came up with a brilliant idea!

Adhavadhu... to compare my name with a word.so I started using this word 'kaleidoscope'; which has the same
pronunciation as 'kalai'!

So, I started telling everyone. 'Kalai as in kaleidoscope'!. Ippo kooda romba ellam
ozhunga solradhulla. They are saying 'kalaai' (kalaaikiradhu)..

"Hey Kalaai!!"

"Yea?"

"Just trying to say your name. Ha ha ha"

"Ohhh..how sweet!" (thooo thEri..)

Yedho vaandhi edukkira effect la per irundhalum... my life was in peace... until few
days back...

My net connection was down, so I called up the customer service (En
kiragam. Madras call center ku
pochu!)

Enakku andha vishayame theriyala. So I
started in complete American accent...

"Your name ma'am?"

"Kalaai"


"What? Can you repeat ma'am?"

" Kalaai as in
kaleidoscope"

"I didn't get that ma'am. Can I have your number? I can check the records"


(Sigh!... and gave the
number)

"Ohh, Kalaivani, right?" (in a sarcastic tone.)

(Ada paavi makka... nee nammooora??!!! All American accents stopped. Back to Indian
accent.)

I could clearly see what he was thinking... per paatha 'urs pammingly' nu podra
category maathiri irukku... scene podradhu mattum princess Diana range kaa...


Anna... naan sathyama andha maathiri
illeeenganna!!!
===================================

said...

உங்களை கலாய்ச்சது நான் இல்லைன்னு சொன்னா நம்புவீங்களா ?

ஹி ஹி :)))))

said...

நான் கூட நீங்க களவானியா மாறுனதுக்கு காரணம் அட்டென்ஷனோமேனியாவாயிருக்கும் (எப்பா எம்புட்டு பெரிய வார்த்தை...அதுக்காக..என்ன பெரிய வார்த்தை எல்லாம் சொல்லுறீங்க அப்படின்னு சொல்லிடப்பிடாது...) என்று நினைத்தேன்...

said...

தூதரகத்துல போய் ரப்பர் ஸ்டாம்பை ஆட்டையைப் போட்டுட்டீங்களா? நினைத்தாலே இனிக்கும்ல ரஜினி பண்ற மாதிரி? அதுனாலயோ என்னமோ? :))

said...

அபி அப்பா, நிலா குட்டிம்மா, வல்லி சிம்ஹன், ராதா செந்தில், ராம்,உண்மைத் தமிழன், சிவா, சீனா, கீதா, ரவி(கொரியா), எங்க ஏரியா TBCD, பொன்வண்டு அனைவருக்கும் நன்றிகள்.

said...

/செந்தழல் ரவி said...

உங்களை கலாய்ச்சது நான் இல்லைன்னு சொன்னா நம்புவீங்களா ?

ஹி ஹி :)))))//

அடபாவி ரெட்பயர், ஒங்க வேலைதானா அது???

பாவம் சிஸ்டர்.... :)

said...

ஓ.. அப்படியா சேதி?? ;-)

said...

enakku muscatil 350 0mr sambalathil oru velai kidaithirukku. 350 omr oru single bachalarukku poduma