61.அசத்தலான பதிவர் உலக கிரிக்கெட் போட்டி பாகம் 1
"மோதி பார்த்துடலாம் வாங்க- எங்க அண்ணாச்சிங்ககிட்டயேவா???""
Twenty20 உலகக் கோப்பைக்கு பிறகு இந்தியா அணி ஆஸ்திரேலியாவிடம் அடிமேல் அடி வாங்குகிறது. இதை அடுத்து அனைத்து வலையுலக தமிழ் மண நண்பர்கள் சார்பாக இதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என ஆலோசனை நடந்தது. பலசுற்று பேச்சு வார்த்தைக்கும், பல ப்ளேட் பஜ்ஜி, சொஜ்ஜி, அமீரக நண்பர்களின் பிரியாணி ஏப்பங்களுக்கும் பிறகு இறுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அதாவது நாமே ICL, IPL, BPL... போல இரு அணி அமைத்து ஒரு ஆறுக்கு ஆறு ஆட்டம் ஆடுவது என்றும், இதற்கு சகோதரி வித்யா கலைவாணியின் கீழ்கண்ட LOGO வை பயன்படுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இதை அடுத்து நடைபெற்ற பத்திரிக்கை நிருபர்கள் கூட்டத்தில் இரு அணி வீரர்களையும் பத்திரிக்கைத் தொடர்பாளர் 'ஜி' அறிவித்தார்.
அணி விபரம் பின்வருமாறு
வெள்ளை அணி
1. அபி அப்பா( அணித்தலைவர்)
2.ஜொள்ளு பாண்டி
3. தேவ் ( விக்கெட் கீப்பர்)
4.கோபி
4.மின்னுது மின்னல்
6.நாமக்கல் சிபி
சிவப்பு அணி
1. கைப்புள்ள ( அணித்தலைவர்)
2. லக்கிலுக்
3.இளா ( விக்கெட் கீப்பர்)
4. ரவி
5. மங்களூர் சிவா
6. செல்லா
நடுவர்களாக நமது மதிப்பிற்குரிய இரண்டு வலைஞர்கள்(?) செயல்படுவார்கள்.
மேலும் இதுபற்றி 'ஜி' கூறும் போது Va.Vaa. Sangam, மற்றும் Pa.Paa.Sangam இரண்டும் இதற்கு முழு ஆதரவளிக்கிறது என்றும், அச்சங்கங்களின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் இதில் கலந்து கொல்(?)வார்கள் என்றும் தெரிவித்தார். மேலும் பிரதான விருந்தினர்களாக அபி பாப்பாவும், டைகரும் கலந்து கொள்கின்றனர்.
blogspot ல் முதன் முறையாக இதன் நேர்முக, மறைமுக வர்ணனை நமது http://kalavani.blogspot.com/ல் வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
61."மோதி பார்த்துடலாம் வாங்க- எங்க அண்ணாச்சிங்ககிட்டயேவா???""
Labels: கிரிக்கெட் தொடர்
Subscribe to:
Post Comments (Atom)

22 comments:
அது சரி! நான் கிரிக்கெட் வெளையாடினது உலகத்துக்கே தெரிஞ்சுடுச்சா! நெம்ப சந்தோஷம்!! வாங்கம்மா வாங்க வந்து அண்னாத்த புகழை பரப்புங்க நல்லா இருங்கடே!!!
எங்க டீம் கொஞ்சம் பலமான டீம் போல இருக்கு
பாப்போம்
நடுவர் வந்துட்டேன். :-)))
ஹாக்கி டீம்ல ஆள் குறையுதே?????
அடப்பாவி.. இது ஹாக்கி இல்லைய்யா? எப்போ க்ரிக்கெட்ன்னு மாத்துனீங்க? :-P
அபி அப்பா said...
முதல் போணி பண்ணிய அபி அப்பாவுக்கு நன்றிகள்
//மங்களூர் சிவா said...
எங்க டீம் கொஞ்சம் பலமான டீம் போல இருக்கு//
நீங்கள் விளையாடுறதைப் பொறுத்து தான் இருக்கு சார்
.:: மை ஃபிரண்ட் ::. said...
நடுவர் வந்துட்டேன். :-)))
நடுவருக்கு கருப்பு கோட் தொப்பி போட்டு குருவும், சிஷ்யரும் ரெடி. மூணாவது நடுவருக்கு பொக்கை வாயோட ஒரு ஆள் ரெடி. நாலாவது நடுவருக்கு எங்க ஆட்டத்தில வேலையே இல்லையே
என்னை பொக்கை வாயின்னு சொன்ன கலைவாணிக்காவை வண்மையாக கண்டிக்கிறேன். எனக்கு இப்போ 8 பல்லு இருக்கு.
:))
ஆறுக்கு ஆறு ஆட்டம் நடைபெற்றே ஆக வேண்டும் என்பதற்காக இன்று ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இந்தியாவிற்கு எங்களது வி.க.வி.கு சார்பாக நன்றி... நன்றி...நன்றி...
இந்திய நேரம் மாலை 5 ஞாயிறு
அக்கா ஆனா எனக்கு ஒரு சந்தேகம்
வெள்ளை டீம் அடிச்சு ஆடுமா இல்லை இம்சை அரசன் வடிவேலு கணக்கா ஒரு குத்தாட்டம்(கும்மியாட்டம்) போட்டு எஸ்ஸாகிடுவாங்களா????
ஆயில்யன் said...//வடிவேலு கணக்கா ஒரு குத்தாட்டம்(கும்மியாட்டம்) போட்டு எஸ்ஸாகிடுவாங்களா????//
ஆயில்யன் சார், ரமழான் கொண்டாடியாச்சா? இந்தியா ஆஸி மாதிரி இல்லாம லகான் மாதிரி சீரியஸான் ஆட்டம். நாளைக்கு வாங்க பாக்கலாம்.
அது சரி .மாட்ச் பிக்ஸிங் கவுன்டர் எங்க இருக்குது?...
pin குறிப்பு : எதுவா இருந்தாலும் அகிம்சை முறையில் பேசி தித்துக்கலாம்.
ஆட்டமெல்லாம் சரி பரிசு பணம் எவ்ளோனு சொல்லவே இல்லயே :(
அனுசுயா said...
ஆட்டமெல்லாம் சரி பரிசு பணம் எவ்ளோனு சொல்லவே இல்லயே :(
கவலைப் படாதீங்க. ப.பா.சங்கத்துக்கு செலவே கிடையாது. போதுமா
என்னம்மா நாலாவது அம்பயருக்காவது டிரை பன்னலாம்னு பார்த்தேன். போச்சா? இந்த பந்த பொறுக்கிப் பொடறாப்பல டெண்டலகர் பிளேஷ் (பெளன்டிரிக்கி அருகே) கொடுங்களேன். கொட்டாவி விட்டுக் கொண்டே பந்த பத்திரமா கோட்டைத்தாண்டி போகுதான்னு பாத்துக்கவேன்ல.
ஏதேச்சாம் அப்பால போட்டி முடிஞ்சோன போட்டுக் கொடுத்தா சரி. இல்லாட்டா இம்சை அரசன்ல பேட்டோட கப்ஸி விளம்பரத்துக்கு பொயிடுவேன்.கப்ஸி இஸ் மை சீக்ரெட்டாப் எனெர்ஜி.
//6.நாமக்கல் சிபி
சிவப்பு அணி
1. கைப்புள்ள ( அணித்தலைவர்)//
தல'யையும், தள'யையும் அணி மாற்றி பிரித்தாளும் சூழ்ச்சி செய்யும் கலைவாணி'க்காவே வன்மையாக கண்டிக்கிறேன்..... :))
\\
[Photo]
இதை அடுத்து நடைபெற்ற பத்திரிக்கை நிருபர்கள் கூட்டத்தில் இரு அணி வீரர்களையும் பத்திரிக்கைத் தொடர்பாளர் 'ஜி' அறிவித்தார்.
அணி விபரம் பின்வருமாறு
வெள்ளை அணி
1. அபி அப்பா( அணித்தலைவர்)
2.ஜொள்ளு பாண்டி
3. தேவ் ( விக்கெட் கீப்பர்)
4.கோபி
4.மின்னுது மின்னல்
6.நாமக்கல் சிபி\\
தீம் சாங்
மேலே ஏரி வரோம் இனி ஒதிங்கி நில்லு....கீழா இறங்க சொன்ன எகிரும் பந்து...;))))
\\மங்களூர் சிவா said...
எங்க டீம் கொஞ்சம் பலமான டீம் போல இருக்கு
பாப்போம்\\
ஆமா எங்ககிட்ட அடிவாங்குறதுல...
\\சகோதரி வித்யா கலைவாணியின் கீழ்கண்ட LOGO வை பயன்படுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.\\
யக்காவின் புதிய முயற்சிக்கு எங்கள் அணியின் சார்ப்பாக வாழ்த்துக்களை சொல்லிகொள்ல கடமை பட்டுயிருக்கிறேன். ;))
வந்தவர்களுக்கும் வாழ்த்தியவர்களுக்கும் நன்றிகள்.
Post a Comment