62.அசத்தலான பதிவர் உலக கிரிக்கெட் போட்டி பாகம் 2
வர்ணனையாளர் : வணக்கம். நேயர்கள் அனைவருக்கும் வித்யா கலைவாணியின் விளையாட்டுக் குழுமம் இந்த நேர்முக மறைமுக வர்ணனைக்கு அன்புடன் வரவேற்கிறது. தமிழகத்தின் தலை சிறந்த கிரிக்கெட் வர்ணணையாளர் மதிப்பிற்குரிய ஜனாப் சாத்தான் குளம் அப்துல் ஜப்பார் அவர்கள் போல் அளிக்க இயலாவிட்டாலும் கூட எங்களால் முடிந்த அளவு உங்களுக்கு தொகுத்து அளிக்கிறோம். இந்தியாவிற்கே வழிகாட்ட வேண்டும் என்ற நோக்கில் தமிழ் மண பதிவாளர்கள் சார்பாக இப்போட்டி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இரு அணி வீரர்களும் பல தேசங்களில் இருந்தும் வந்துள்ளனர்.
குறிப்பாக ரவி அவர்கள் கொரியாவில் இருந்து வரும் போது ப்ளைட் உள்ளேயே ப்ராக்டீஸ் ஆரம்பித்ததாக கொரியன் ஏர்லைன்ஸ் செய்திக் குறிப்பு ஒன்று DNA வை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அமீரகத்தைச் சேர்ந்த பதிவர்கள் பிராக்டீசுக்கு சார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தை தேர்ந்தெடுத்து, ஆனாலும் அது வசதி குறைவாக இருக்கும் என்பதால் Sheik Zayed ரோட்டிலேயே ப்ராக்டீஸ்செய்ததாக Gulf News, Khaleej Times ல் செய்திகள் வந்துள்ளன.
சரி நேயர்களே. முதலில் மைதானத்தைப் பார்வையிடுவோம். மைதானம் வரும் வழி எங்கும் வ.வா.சங்கத்தின் சார்பில் வரவேற்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. பல இடங்களில் வளைவுகளும் வைக்கப்பட்டுள்ளன். மைதானம் முழுவதும் கட்டுக்கடங்காத கூட்டமாக உள்ளது. மக்களின் மீது உள்ள நம்பிக்கையின் காரணமாக மைதானத்திற்கும் பார்வையாளர் அரங்குக்கும் இடையே வேலி ஏதும் போடப்படவில்லை. எல்லைக் கோட்டுக்கு அருகில் தமிழ் ப்ளாக்குகளில் எழுதுபவர்கள் தங்களது விளம்பரப்பலகைகளை வைத்துள்ளனர். சில பலகைகளில் ஒளிப்படங்களும் ஓடுகின்றன.
நமது சிறப்பு செய்தியாளர்X மைதானத்தில் உள்ளார். அவரை இப்போது காண்போம்.
வர்ணனையாளர் : ஹலோ! இப்ப எங்க இருக்கீங்க
செய்தியாளர்X: இங்க பாருங்க. கொஞ்சம் பொறுக்கனும். மைக், கேமராலாம் இன்னும் ரெடி ஆகலை. எப்பவுமே உங்களுக்கு அவசரம் தானா? பெண் புத்தி பின் புத்தி தான?
வர் : இதெல்லாம் முதலயே ரெடி பண்ணி வைக்காம உங்களுக்கு வேற என்ன வேலை. காலைலயே வாங்கிக் கட்டனுமாக்கும். சரி நேயர்களே மைக் சரியாகும் வரை நாம் சிறிது விளம்பரங்களைப் பார்ப்போம்.
டிங் டிங் டிங்
சன் வொர்த் எமர்ஜென்ஸி லைட்டுகள் நீடித்த உழைப்பிற்கும் , பாதுகாப்பிற்கும் சன் வொர்த் எமர்ஜென்ஸி லைட்டுகள். கொரிய த்யாரிப்பில் யார் மண்டையையும் உடைக்கும் திறன் கொண்டது சன் வொர்த் எமர்ஜென்ஸி லைட்டுகள்
டிங் டிங் டிங்
வர்ணனையாளர் : இப்ப நம்ம செய்தியாளரின் மைக் சரியாகி விட்டது.அவரிடம் செல்வோம்.
செய்தியாளர்X : இங்க பாருங்க இங்கே கட்டுக்கடங்காத கூட்டமாக உள்ளது
வர்: அதெல்லாம் நாங்க சொல்லியாச்சு வேற ஏதாவது சொல்லு
செ X: இங்க பாருங்க இதுக்கு தான் பெண்களெல்லாம் வர்ணணைக்கு வரக் கூடாதுன்னு சொன்னேன். என்ன எப்ப சொல்லனும்னு எங்களுக்கு தெரியும். இரு அணி வீரர்களும் இப்ப களத்தில நிக்கிறாங்க. நேத்து இரவு முழுவதும் நெட் ப்ராக்டீஸ் அதாவது கும்மி அடிச்சனால எல்லாம் தூக்கக் கலக்கத்துல இருக்காங்க. வெயிலும் கொஞ்சமா 49'C தான் இருக்கு. வறண்ட வானிலை தான். ஆனாலும் சென்னை வானிலை ஆய்வு மையம் மழை வந்தாலும் வரலாம். லேசாகவோ, கனமாகவோ, இடியுடனோ, இடி இல்லாமலொ, மழையோ மழை இல்லாமலோ இருக்கும் எனவும், மீனவர்கள் மீன் பிடிக்க போகலாம், போகக்கூடாது என்வும் கூறி உள்ளது. ஆனால் இப்போதைக்கு பெண்கள் பகுதியில இருந்து மட்டும் கொஞ்சம் ஜில்லுன்னு காத்து வருது.
பெண்களுக்கு என்று பிரத்யேகமாக இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து ஜெஸிலா அவர்கள் எங்களுக்கு எங்கு வேண்டுமானாலும் உட்காரும் உரிமை வேண்டும் எனக் கூறி வெளி நடப்பு செய்ததாக மைதானத்தில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
வர்: ஆமா இதுல கூட பெண்களுக்கு உரிமை இல்லையா? அவங்க செஞ்சது சரி தான். சரி பார்வையாளர்கள் எப்படி பீல் பண்றாங்க
செX: இங்க பாருங்க! பார்வையாளர்கள் கிடக்காங்க. பாவையர்களப் பத்தி பேசுற நேரத்தில நீங்க வேற விவஸ்தை இல்லாம.
நேத்து இரவு முழுவதும் ப.பா.சங்கம் சார்பாக இரகசிய ஆலோசனை நடந்தது. எப்படியாவது இதை தடுத்து நிறுத்தனும்னு. ஆனா இறுதியா அதே நேரம் உறுதியாக கண்மணி டீச்சர் எப்படியும் இது உருப்படப் போறதில்லை, அதனால நம்ம சங்கத்து காச வீணாக்க வேணாமுனு சொல்லிட்டாங்க.. ஆனாலும் எல்லாரும் வேடிக்கை பாக்க வந்திருக்காங்க. கண்மணி டீச்சர் தலைமையில் கவிதாயினி காயத்ரி, அனு, .;;மை பிரண்ட்::.., இம்சை அரசி மற்றும் காயத்ரியின் புதிய சிஷ்யை வித்யா கலைவாணி (?) எல்லோரும் வந்திருக்காங்க. ஆனா G3 மட்டும் அப்ப இருந்தே கூல்டிரிங்ஸ் இருக்குற இடத்தையே நோட்டம் விடுறாங்க. இந்த பிட்சுல டாஸ் வின் பண்ணுறவங்க முதல பேட் செய்வாங்கனு எதிர்பாக்கலாம். ஓவர் டூ கமெண்ட்ரி பாக்ஸ்
வர்: நன்றி ! நேயர்களே ! பெண்களுக்கு அவர்களுக்கான உரிமைகள் வழங்கப்பட்டே தீர வேண்டும். இது போல பெண்களுக்கு ஒரு கிரிக்கெட் ஆட்டம் நடத்த யோசிக்கப்பட்டது. ஆனால் இந்திய பெண்கள் அணி ஆண்கள் அணி போல் இல்லாமல் சிறப்பாக செயல்படுவதால் அது கைவிடப்பட்டுள்ளது.
( பலத்த கரவொலி). ஹலோ படிச்சா போதுமா நீங்களும் கை தட்டுங்க
கைப்புள்ள : அபி அப்பா நீங்க டாஸ் போடுறீங்களா? நான் போடவா?
அபி அப்பா : என்ன கைப்புள்ள ! இப்படி சொல்லிட்டீங்க! நீங்க யாரு எப்படிப்பட்ட ஆளு! உங்க தகுதி என்ன? உங்க அந்தஸ்து என்ன? இந்த கூட்டமே உங்களுக்காகத்தான் வந்திருக்கு! அதுமில்லாம……………..
கைப்புள்ள : அபி அப்பா இதோட நிப்பாட்டுங்க. இப்படி சொல்லி சொல்லி தான் என் உடம்ப புண்ணா….க்கி வச்சிருக்கீங்க. குடுங்க காயினை. நானே போடுறேன்.
கைப்புள்ள காயினை மேலே தூக்கிப் போடுறாரு
மேலே
மேலே
மேலே
மேலே
மேலே போயி
கீழே
கீழே
கீழே
கீழே வருது
அப்ப கருப்பு கோட் போட்ட இரண்டு அம்பயர்கள் நிக்கிறாங்க. அதில ஒருத்தர் கையில காயின் இருக்கு
டிஸ்கி : இண்டர்போலின் தகவலின் படி இந்த கதையின் "திருட்டு பதிவு" வலையுலகத்தில் உலாவுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அவைகள் அனைத்தும் மேம்படுத்தப் படாதவைகள். எனவே அசல் பிரதிக்கு இங்கு மட்டும் வரவும். வித்யா கலைவாணி

19 comments:
இன்னும் டாஸ் போட்டே முடியலையா,
சரியா போச்சு போங்க
இருக்கிற ஃபார்ம் க்கு ஓப்பனரா இறங்கினா சும்மா ஒரு 400 - 500 அடிச்சிட்டு திரும்பலாம்னு பாத்தா இன்னும் டாஸ் போட்டே முடியலியே
நான் இல்லாம டாஸ் போட்டா டாஸ் போட்ட கை இருக்கும், கால் இருக்கும், மூக்கு இருக்கும் முழி இருக்கும் எல்லாம் இருக்கும் ஆனா போட்ட காசு இருக்காது!!!!
(அஜித் ஸ்டெயில் படிக்கவும்)
"டிஸ்கி : இண்டர்போலின் தகவலின் படி இந்த கதையின் "திருட்டு பதிவு" வலையுலகத்தில் உலாவுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அவைகள் அனைத்தும் மேம்படுத்தப் படாதவைகள். எனவே அசல் பிரதிக்கு இங்கு மட்டும் வரவும். வித்யா கலைவாணி////
அப்படியே தமிழ்நாட்டு போலீஸ் புத்தி இது தானா வந்து சரண்டர் ஆனவனை நாங்கதான் வலைவீசி காஷ்மீர் பார்டரில் பிடிச்சோம் என்று உதார் விடுவாங்க அது போல் இண்டர்போல், விண்டர் கோல் என்று உதார் விட்டுக்கிட்டு:))))))
ஆஹா பதிவ பத்தி ஒன்னும் சொல்லாம கும்மியா? அடா அடா சூப்பர்!!!
யோவ் மின்னல்
இது நீதான்னு எப்படி கண்டுபிடிச்சேன் பாத்த இல்ல..சரி சரி ரகசியமாவே இருக்கட்டும் இந்த பின்னூட்டத்த வெளியிட வேணாம் :)
நல்ல வேளை பேர மாத்திட்டீங்க. இல்லைன்னா காயின காணோம்ன உடனே உங்களத்தான் சந்தேகப்பட்டிருப்பாங்க
//இன்னும் டாஸ் போட்டு முடியலையாஆஆஆ//
திங்க வாங்கி வைச்ச ஐட்டங்கள பக்கத்து பிளாட்ல இருக்கறவங்களுக்கு தானம் கொடுக்கவேண்டியதுதானா?
சரி டாஸ் போட்டுட்டு கூப்புடுங்க அதுக்குள்ள என் Girl Friendடோட கொஞ்சம் ஊர் சுத்திட்டு வற்றேன்.
http://mangalore-siva.blogspot.com/2007/10/update.html
அய்ஸ்! நானும் தான் கண்டுபிடிச்சுட்டேன்!!
நல்ல கதையாதான் இருக்கு, ஷேக் சையது ரோட்டிலே பயிற்ச்சியா குட் குட்!! பல்தியா வந்துட போறான் ஃபைன் போட!!
அவ்வ்வ்வ்.. அவ்வ்வ்வ்...
//யோவ் மின்னல்
இது நீதான்னு எப்படி கண்டுபிடிச்சேன் பாத்த இல்ல..சரி சரி ரகசியமாவே இருக்கட்டும் இந்த பின்னூட்டத்த வெளியிட வேணாம் :)//
//அய்ஸ்! நானும் தான் கண்டுபிடிச்சுட்டேன்!!//
அபி அப்பா எங்ககிட்ட காமெடி கீமெடி பண்ணலையே வித்யா வித்யாவா மின்னல்லா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
சீனா said
டாஸ் போட்ட காயினையே கானோமாம். இந்த லச்சணத்துலே மோதிப்பாக்குறாங்களாம்.
மோதட்டும் - பாக்கலாம்
இது பாகிஸ்தான்லே உள்ள ஜனாதிபதியா ?
வருகைக்கு நன்றி
காச சுட்ட அம்பயர் நானில்லை..
வாங்களேன் என் வீட்டுக்கு..நான் நாய்களிடம் த்னியா மாட்டின வீரக் கதையெல்லாம் சொல்லியிருக்கேன்.உங்க கருத்த சொல்லுங்களேன்..
\\கண்மணி said...
//யோவ் மின்னல்
இது நீதான்னு எப்படி கண்டுபிடிச்சேன் பாத்த இல்ல..சரி சரி ரகசியமாவே இருக்கட்டும் இந்த பின்னூட்டத்த வெளியிட வேணாம் :)//
//அய்ஸ்! நானும் தான் கண்டுபிடிச்சுட்டேன்!!//
அபி அப்பா எங்ககிட்ட காமெடி கீமெடி பண்ணலையே வித்யா வித்யாவா மின்னல்லா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்\\
இது என்ன சைடு கதை ???
\\செ X: இங்க பாருங்க இதுக்கு தான் பெண்களெல்லாம் வர்ணணைக்கு வரக் கூடாதுன்னு சொன்னேன்\\
இந்த செய்தியாளரை எங்கயே பார்த்த மாதிரி இருக்கே..! ;)
சீக்கிரம் ஆட்டத்தை ஆரம்பிங்கப்பா...;))))
வருகை புரிந்த சிவா, குசும்பன், அய்யனார், நிலா, ஆயில்யன், அபி அப்பா, பூக்குட்டி, கண்மணி டீச்சர், ரசிகன், கோபி அனைவருக்கும் நன்றிகள்.
Post a Comment