64.அசத்தலான பதிவர் உலக கிரிக்கெட் போட்டி பாகம் 3
கீழே வந்த காயினை வானத்திலேயே பிடிச்சது வேற யாரு நம்ம அண்ணாச்சி தான். அவரோட நிக்கிற நடுவர் யார்னு தெரியலையா? இப்பத் தெரிஞ்சிடும்
அண்ணாச்சி : ஏலே ???????? நடுவங்கனு எதுக்கு இருக்கமா? உங்க இஷ்டத்துக்கு செய்தீகளோ!
நடுவர்2 : இவங்க எப்பவுமே இப்படிதான் அண்ணாச்சி . ஆளே இல்லாத கடையில தான் டீ ஆத்துவாங்க.
கைப்புள்ளையை நோக்கி “கைப்புள்ள! நாங்க தான் இதுக்கெல்லாம் வரனும்”. அபிஅப்பாவைப் பாத்து “அபி அப்பா! உங்க இஷ்டத்துக்கு எல்லாம் எதுவும் செய்யக்கூடாது”
திரும்ப அண்ணாச்சியைப் பார்த்து “ இந்த விஷயத்தை இப்படியே விடக் கூடாது....”
அண்ணாச்சி : ஏம்ல இப்ப நீ நிப்பாட்ட போறியா இல்லயா?
கைப்புள்ளையைபாத்து அண்ணாச்சி : நீங்க டாஸ் போடுறீங்களா? அபி அப்பா போடட்டுமா?
அபி அப்பா : என்ன இப்படி சொல்லிட்டீங்க! அவர் யாரு எப்படிப்பட்ட ஆளு! அவர்...
கைப்புள்ள : அபி அப்ப்ப்ப்ப்ப்பா போதும்! போதும்! நானே போடுறேன் காயினை மேலே போடுகிறார்
அபி அப்பா : ஹெட் இல்ல இல்ல டெய்ல் இல்ல இல்ல ஹெட் இல்ல டெய்ல் (காயின் ஹெட்டில் கிடக்கிறது)
அபி அப்பா : இல்ல ஹெட் ஐ நான் செயிச்சுட்டேன்
கைப்புள்ள : என்னது இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு . இது அழுகுணி ஆட்டம். நான் வரமாட்டேன்
அபி அப்பா : என்ன இப்படி சொல்லிட்டீங்க! நீங்க யாரு எப்படிப்பட்ட ஆளு! உங்க...
கைப்புள்ள : இல்ல…. இல்ல……… நீங்கதான் வின் பண்ணீங்க
அபி அப்பா டீவியைப் பாத்து அபி அப்பா : எங்க டீம் பேட்டிங்ல ஸ்ட்ராங் . அதனால நாங்க பேட் பண்ணப் போறம்.
கைப்புள்ள டீவியைப் பாத்து கைப்புள்ள: எங்க டீம்ல பெளலிங் தான் ஸ்ட்ராங். எங்க டீம்ல ரவி, லக்கி எல்லாம் இருக்காங்க. நாங்க தான ஜெயிப்போம்.
செய்தியாளர்X : Abi Appa Won the Toss. and decided to bat first. Now over to commentary box.
வர்ணனையாளர் : இப்ப இரண்டு டீமும் வழக்கப்படி பதிவர் மீட்டிங் போற மாதிரி லேட்டா தான் வருவாங்க. அதனால இப்ப நாம கிரெளண்டல என்ன நட்க்குதுனு பாப்போம். "இது இரகசிய கேமரா மூலம் பதிவு செய்யப் படுகிறது" என்ற ஸ்லைடுடன் படக்காட்சி வருகிறது. அங்கே G3 அழுது கொண்டே கண்மணி டீச்சரிடம் வருகிறார்.
G3 : "டீச்சர்..அங்க கூல்டிரிங்ஸ், ஸ்நாக்ஸ் எல்லாம் இருக்கு. ஆனா அதோட இன்சார்ஜ் கோபி ஒன்னும் தரமாட்டேங்குறாரு..ங்ங்ங்"
வித்: "இதுக்கு ஏங்க்கா அழுகிறீங்க! என்கிட்ட சொல்ல வேண்டியது தான . எங்க இருந்தாலும் அதை எடுக்குறதுல நான் PHD, MHD, OHD எல்லாம் வாங்கிருக்கேன்ல. இப்ப இருங்க வர்றேன்". அங்க போய் கோபி கிட்ட ஏதோ சொல்றா. உடனே கோபி முகமெல்லாம் ஒரு மாதிரி ஆகி தேம்பி தேம்பி புலம்புறாரு. அந்த கேப்ல கூல்டிரிங்ஸ், ஸ்நாக்ஸ் எடுத்துட்டு வித்யா கலைவாணி திரும்புறா. அதை ஓடிப் போய் G3 வாங்குறாங்க. காயத்ரிக்கு சந்தோசம் தாங்க முடியலை.
வித்யா வந்ததும் காயத்ரி அவருக்கு நெட்டி(?) முறிக்கிறார். கண்மணி டீச்சர்: (வித்யாவைப் பாத்து) "என்னடி சொன்ன" வித்யா : என்ன கோபி! பதிவே போடலனு எல்லோரும் உங்கள கலாய்க்குறாங்களே! ஏன் இப்படினு கேட்டேன். உடனே புலம்ப ஆரம்புச்சுட்டாரு. அந்த கேப்பில எல்லாத்தையும் களவாண்டுட்டு வந்திட்டேன். இது எங்க குலத்தொழிலாக்கும்”அப்டினு சொல்லி முடிய "குலக்கல்விக்கு ஆதரவளிக்கும் கயவர்கள் ஒழிக! அவர்களை ஒழிக்காமல் விட மாட்டோம்" என்று ஒரு குரல் வருகிறது. கேமரா மீண்டும் commentary box க்கு போகுது. அங்கே
வர்ணனையாளர் : மக்கள் அனைவரும் சந்தோசமா இருக்காங்க. இப்ப நாம வெள்ளை அணியின் டிரஸ்ஸிங் ரூம் போறோம். Over to White Team's Dressing Room. மீண்டும் "இது இரகசிய கேமரா மூலம் பதிவு செய்யப் படுகிறது" என்ற ஸ்லைடுடன் படக்காட்சி வருகிறது. அங்கே அபி அப்பா கோபமாக இருக்கிறார்.
அபி அப்பா : (சத்தமாக) எவன் இதுக்கு சிக்ஸ்6 னு பேர் வச்சது. எனக்கு 8 தான் ராசியான நம்பரு. நாம 8 பேரோட ஆடுனாதான் ஜெயிப்போம்.
கோபி : நாம வேணா இரண்டு பேர் அவுட் ஆகிட்டு வந்து திரும்பப் போயி விளையாடுவோமே? அப்ப 8 கணக்கு சரியாகிடும்.
நாமக்கல் சிபி : அங்க தான் மங்களூர் சிவா இருக்காரே? இன்னைக்கு சென்செக்ஸ் 17349.324687 ல முடிஞ்சுச்சு இன்னைக்கு டாலர் மதிப்பு 40.3546855. இது நேத்த விட 0.000024577665 அதிகம்னு பதிவு போடுரவரு. 6 விக்கெட்ட கணக்கு பண்ண மாட்டாரா? (அபி அப்பாகிட்ட போயி) கவலைபடாதீங்க நாம எல்லாரும் ஆளுக்கு 8 ரன் எடுப்போம். 48 ரன் வரும் எக்ஸ்ட்ரா ஒரு 8 வரும். ஆக 56 ரன் நமக்கு போதும் தானே?
அபி அப்பா : நீங்க சொல்றதும் சரிதான். அபி பாப்பாவும் டைகரும் அவங்க ஸ்பாட்டுக்கு போயிட்டாங்க . சரி ஓபனிங் நான் தான் போவேன். ஏன்னா நாந்தான் நிறைய பதிவு போடுறேன். சாட் பண்ணுறேன். அதனால என்க்குத் தான் சான்ஸ்.
தேவ் : நானும் தான் புதுசா பதிவு போட்டிருக்கேன் .. அதுக்கு டெம்ப்ளேட் ரெடி பண்ணினேன்.. சுமார் 720 லைன் கோடு எழுதினேன... எழுதண கோடு தவிர கண்ட இடத்துல்ல களவாண்டு சுமார் 400 லைன் காப்பி பேஸ்ட் பண்ணினேன.. 300 விட்ஜிட் வைத்தேன்... 200 லிங்க் கொடுத்தேன்... 100 இடத்துல்ல டேக் பண்ணினேன்.. 10 திரட்டியிலே சேர்த்தேன்... 5 சங்கத்துல்ல சேர்த்தேன்.. கும்மி அடித்தேன்.. கும்மி பதிவர்தெய்வங்கள், மொக்க பதிவர் உபதெய்வங்கள், ஜல்லி பதிவர் குட்டி தெய்வங்கள்ன்னு பின்னூட்டம் வாங்கினேன்...
நாமக்கல் சிபி : ஆமா இப்படி பண்ணீங்கண்ணா 6 ஓவர்ல 6 ரன் கூட எடுக்க முடியாது. நீங்க நாலாவதா போங்க
கோபி : அப்ப அபி அப்பாவோட யாரு இறங்குறது.
அபி அப்பா : ஜொள்ளு பாண்டிய இறக்குவமா?
நாமக்கல் சிபி : ஜொள்ளு பாண்டி வேணாம். இப்ப தான் மகளிர் பக்கம் பாத்து கொஞ்சமா ஜொள்ளு விட ஆரம்பிச்சு இருக்காரு. கடைசியா அனுப்பினாதான் ஜொள்ளு பூரா பிட்ச்ல வடிஞ்சு அவுங்க பேட் பண்ணும் போது நல்லா வழுக்கி விழுவாங்க
கோபி : இராஜ தந்திரங்களை கரைத்துக் குடித்திருக்கிறீர்கள் சிபி! சரி நானே போறேன். அடுத்து காட்சி மாறுகிறது. Over to Red Team's Dressing Room.இது சிவப்பு அணியின் டிரஸ்ஸிங் ரூம். மீண்டும் "இது இரகசிய கேமரா மூலம் பதிவு செய்யப் படுகிறது" என்ற ஸ்லைடுடன் படக்காட்சி வருகிறது. இளா கோபமா சுவத்தைப் பாத்துக்கிட்டு நிக்கிறாரு. கைப்புள்ள கையை பிசைஞ்சுக்கிட்டு நிக்கிறாரு அப்பதான் செல்லா உள்ள வர்ராரு.
செல்லா : (கோபமாக) என்ன ? என்ன நடக்குது இங்க?
லக்கி : ஒன்னும் இல்லைன்னே! நம்ம இளா விக்கெட் கீப்பிங் பண்றப்ப மண் வெட்டி, கடப்பாறை எல்லாம் எடுத்துட்டு போனுமாமாம். நான் இல்லை, அப்படி போனா டவுசர் கிழிஞ்சுடும்னு சொன்னேன். அதுக்கு கோவிச்சுக்கிட்டாரு
செல்லா : ( இளாவிடம் அமைதியாக) என்னங்க இளா இது, நானே பனியன், சட்டை எல்லாம் போட்டுட்டு வந்திருக்கேன். நீங்க இப்படி அடம் புடிக்கலாமா? செல்லா அமைதியா பேசறத பாக்கிற இளா அமைதியாகி கீப்பிங் பேடக் கட்றாரு.
டிஸ்கி : இதைப் படித்து சிரித்தவர்கள், சிரிக்காதவர்கள், காமெடி, மொக்கை, என்றவர்கள், எரிச்சல் அடைந்தவர்கள் அனைவரும் தயவு செய்து கீழே உள்ள இடுகையை படித்து விட்டுச் செல்லவும்.

3 comments:
அப்ப இதெல்லாம் வேஸ்ட்டா
//அப்ப இதெல்லாம் வேஸ்ட்டா//
எல்லாம் நன்மைக்கே!
\\வித்யா வந்ததும் காயத்ரி அவருக்கு நெட்டி(?) முறிக்கிறார்.\\
இது வேறயா !!! ;(
Post a Comment