அபி அப்பா ஒரு உண்மைத் தமிழர் யார் என்றெல்லாம் கேட்டு ஒரு பதிவைப் போட்டிருந்தார். அதைத் தொடர்ந்து பல பதிவுகளை தமிழ்மணத்தில் பார்க்கமுடிந்தது. ஆனால் உண்மையில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யார்? ( கவனிக்கவும் தமிழ்நாடு மட்டும்) என்பதைக் கண்டுபிடிக்கும் சோதனை தான் இது. இது 7 கட்டமான சோதனை
சோதனை : 1
முதலில் இதைக் சொடுக்கவும் நான் தமிழனா?
சோதனை : 2
உங்கள் கணிணியில் எழுத்துரு சரியாக இல்லையென்றால் பதிவிறக்கவும் செய்யவும்.
சோதனை : 3
முதலில் உள்ள Drop Down List ல் உங்கள் மாவட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
சோதனை : 4
அடுத்த உள்ள கட்டத்தில் உங்கள் தொகுதியை தேர்ந்தெடுக்கவும்
எடுத்துக்காட்டாக உங்கள் தொகுதி நாகை மாவட்டம் மயிலாடுதுறை எனில் இப்படி இருக்கும்.
சோதனை : 5
தேர்ந்தெடுத்தது சரி எனில் சமர்ப்பிக்கபொத்தானை அழுத்தவும்
சோதனை : 6
இப்போது வரும் முழு வார்டுகளுக்கான பகுதியில் உங்கள் வார்டை சொடுக்கவும். வார்டு தெரியாதவர்கள் தெருப் பெயர் மூலம் அதைக் காணலாம்
( வார்டு, தெரு தெரியாதவர்கள் இத்துடன் உங்கள் ஆட்டத்தை நிறுத்திக் கொள்ளலாம்)
சோதனை : 7
சிறிது நேரத்தில் உருவாகும் PDF பைலில் உங்கள் பெயர் இருந்தால் நீங்கள் தமிழ்நாட்டைத் சேர்ந்தவர்கள். இல்லையென்றால் உடனடியாக தமிழ்நாட்டவராக ஆக வேண்டிய முயற்சிகளை மேற்க்கொள்ளுங்கள். கீழே இருப்பது போல்.,
டிஸ்கி : இந்த பதிவுக்கும், தகவல்களுக்கும் அபி அப்பாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனாலும் புலன் விசாரணை நடத்தியதில் அவர் உண்மையில் தமிழ்நாட்டவர் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

9 comments:
கலக்கிட்டீங்க போங்க, அதிரடி பதிவுதான்!
எங்கயோ போயிட்டீங்க கலைவானிக்கா
தூள் கிளப்புங்க
உள்ள புகுந்து விசாரணை நடத்தியதிலும் அவர்
மாயவரத்து உண்மைத்தமிழர்தான்
நிரூபணமாகியிருக்கு!
பொது ஜன சேவைக்கு நன்றி
may I come inside
APDINA NAAN TAMILAN ILLIYAAAAAA?
INGA MANGALORELA 4 BUS ERIYUM. TWO WHEELAR, 4 WHEELAR ONNUM OTTA MUDIYAADHU. ROADLA SODA BOTTLE PARAKKUM.
7 PER THEE KULIPPAANGA ILLAINAALUM KOLUTHTHUVOM.
ORU KALAVARAME NADAKKUM.
YECHARIKKIREN.
//ORU KALAVARAME NADAKKUM.//
நீங்கள் தமிழன்னு சொன்னாதான் அதெல்லாம். அதானால தமிழன் இல்லைனு சொல்லிராதீங்க
அட அட கலக்குறிங்க...;))
ஜீவா, நிலா, ஆயில்யன், சீனா ஐயா, சிவா, கோபி அனைவருக்கும் நன்றிகள்.
Post a Comment