72. ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற தயாரா?

இந்தியாவில் உள்ள வாக்காளர்கள் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கியே தீருவது என்று தேர்தல் ஆணையம் ஒற்றைக் காலில் நிற்கிறது. அதுவும் தமிழக தேர்தல் ஆணையம் மிகவும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு 100 சதவீத வாக்காளார்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கி முடிக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. எனவே புகைப்படம் எடுக்க இயலாத வாக்காளர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கொடுத்தால் கூட போதும் என்று அறிவித்துள்ளது.
ஆனாலும் 10 முதல் 15 சதம் வரை இப்பணி இன்னும் நிறைவடையாமல் இருக்கிறது. என்வே அந்த 10 முதல் 15 சதம் வாக்காளர்களை நீக்கி விட்டு 100 சதவீதம் பேருக்கு வழங்கியதாக காட்ட வேண்டிய நிலை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நமது இந்திய ஜனநாயக நாட்டில் நமக்கு இருக்கும் ஒரு முக்கிய கடமை ஓட்டளிப்பது. அந்த உரிமையுடன் கூடிய கடமையை நிறைவேற்ற நமது பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பது அவசியம். என்வே உடனடியாக உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என சரி பாருங்கள். இல்லையெனில் உடனடியாக பட்டியலில் இடம் பெற வேண்டிய ஏற்பாடுகளை செய்யுங்கள்.
உங்கள் பெயரை பட்டியலில் பார்க்க
http://er2005.tn.nic.in/acwise_pdf.asp
இதை விளக்கமாக அறிய இங்கே வரவும்.

4 comments:

said...

Font பிரச்னை வருது - அந்த சைட்லே - அப்புறமா பாக்குறேன். மதுரைக்கு வந்து விண்ணப்பிச்சாசு. இன்னமும் வரலே - விசாரிக்கணும்

said...

//cheena (சீனா) said...
Font பிரச்னை வருது //
Restart Your Computer after install font. May be it can solve your problem.

said...

idhukkaaga naan 2000 rs selavu panni oorukku poganumaa??

said...

மங்களூர் சிவா said...
idhukkaaga naan 2000 rs selavu panni oorukku poganumaa??
//வாக்காளர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கொடுத்தால் கூட போதும்//
உங்கள் வீட்டுக்கு இதை அனுப்பி சம்பந்தப்பட்டவர்களிடம் அளிக்கலாமே!