இது ஒரு அறிமுகப் படலம். அமீரகத்தில் உள்ள ஷார்ஜா நகரத்தின் படங்கள் சில.பாலைவனத்தினை சோலை வனமாகியவர்களுக்கு நன்றிகள். என்னை பொறுத்து வரை துபாயை விட ஷார்ஜா அழகு. ஊரின் அமைப்பும் அருமையாக இருக்கும்.
அழகான கடற்கரை. அந்த கல்பாலத்தின் வழியே நடப்பதே ஆனந்தம்
அழகான செயற்கைக் கால்வாயில் உருவாக்கப்பட்ட பூங்கா
குளம் போல உள்ள கடல் நீரைச் சுற்றி நடைபாதையுடன் கூடிய பசுமை.
அரேபிய கலாச்சாரத்துடன் கூடிய தங்க நகைக்கடைகள்(GoldSouq )
பிரசித்திபெற்ற ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம் ( இதில் எங்கள் கோபி இருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு 30 திர்ஹம் தொ(ல்)லைபேசி அட்டை இலவசம்
உள் வீதிகள், பூங்காக்கள்,விளையாட்டு மைதானங்களுடன் உள்ள பசுமையான அரபுகள் வசிக்குமிடம். ( Tala, Daraari, Khezzamia, Al Qasimi Hospital Area)
நன்றி : கூகுள் எர்த் ( கொடுமைடா சாமி :)))))))
73. ஷார்ஜா - அழகுப் பதுமை
Labels: வளைகுடா பகுதி
Subscribe to:
Post Comments (Atom)

16 comments:
கூகிள் எர்த் படங்களா?
அருமையாக இருக்கு.
மேப்ல எங்க உங்க வீட்டை காணோம். நான் ஒத்துக்க மாட்டேன் இது ஷார்ஜான்னு
//மங்களூர் சிவா said...
மேப்ல எங்க உங்க வீட்டை காணோம். நான் ஒத்துக்க மாட்டேன் //
அடுத்த சுற்று எங்க ஊரான பெரியகுளம் தான். முழு சுற்று அடுத்த மாதம் ஊர் சென்று திரும்பும் போது. நன்றி.
அரேபியர் கலாசாரத்தின் தலைநகரம் என்ற பெயர்பெற்ற ஷார்ஜா நகரம் அழகுதான் என்றாலும்...துபாயோடு ஒப்பிட்டுப் பார்ப்பதெல்லாம் உங்களுக்கே ரொம்ப அதிகமாத்தெரியலை. அதுசரி. ஏழைக்கேத்த எள்ளுருண்டை போல. நல்லா இருங்க!
சாத்தான்குளத்தான்
\பாலைவனத்தினை சோலை வனமாகியவர்களுக்கு நன்றிகள்\\
நானும் சொல்லிக்கிறேன் நன்றி ;)
\\( இதில் எங்கள் கோபி இருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு 30 திர்ஹம் தொ(ல்)லைபேசி அட்டை இலவசம்\\
எனக்கு வேறும் 30 திர்ஹம் தானா? :)
பசுமை நிறைந்த இடமா ஹ்ம்.. சொல்லித்தான் உத்து பார்த்தேன் ஆங்காங்கே கொஞ்சம் புல் தெரியுது..
பாவம் அப்ப முன்னாடி எத்தனை கஷ்ட்ம்...
கோபி அதுக்காக கோடிஎல்லாம் குடுக்கமுடியுமா? என்னா? பாவம் வித்யா...
// முத்துலெட்சுமி said...
பசுமை நிறைந்த இடமா ஹ்ம்.. சொல்லித்தான் உத்து பார்த்தேன் ஆங்காங்கே கொஞ்சம் புல் தெரியுது.. //
அங்குள்ளவர்களுக்கு அது தான் பசுமை. அவர்கள் எங்கள் ஊருக்கு வந்தால் அவ்வளவுதான்:)))).
///ஆசிப் மீரான் said...
துபாயோடு ஒப்பிட்டுப் பார்ப்பதெல்லாம் உங்களுக்கே ரொம்ப அதிகமாத்தெரியலை. ///
வருகைக்கு மிக்க நன்றி. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு தானே!
ஆண்டி.. எனக்கு எல்லாமே மாடர்ன் ஆர்ட் மாதிரி தெரியுது.உங்களை ரசிக்க வைத்த என் காதலி கூகிள் எர்த்கு ஒரு நன்றி கூட இல்லயா?
:((((
//எனக்கு வேறும் 30 திர்ஹம் தானா? :)// அதானே கோபி மாமாவுக்கு வெரும் 30 தி.. தானா? இதெல்லாம் நல்லா இல்ல ஆமா..
:))
தோழர் பொடியனுக்கு,
உங்க காதலிக்கு நன்றி சொல்ல்லியாச்சு. ஆனா எங்க ஊர் மற்றும் அருகில் உள்ள கொடைக்கானல், கும்பக்கரை அருவி, சோத்துப்பாறை அணை, பெரியார் அணை எதுவும் சரியில்லை. கொஞ்சம் உதவி செய்ங்களேன் உங்க காதலிகிட்ட சொல்லி.
வடுவூர் குமார், சிவா, அண்ணாச்சி, கோபி, முத்துலட்சுமி அக்கா,பொடியன் அனைவருக்கும் நன்றிகள்
என்ன தோழர்னு சொல்லி என் வயச ஜாஸ்தி ஆக்கிட்டிங்க இல்ல? அதனால சொல்ல மாட்டேன் போங்க.
:((((((((((((((
பாப்பா படம் காட்டுவதை விட்டு நல்ல பதிவா போடும்மா கண்ணு
//கண்மணி said...
பாப்பா படம் காட்டுவதை விட்டு நல்ல பதிவா போடும்மா கண்ணு//
ஐய்! ஜாலி! டீச்சரே இனி படம் வரையத் தேவையில்லைனு சொல்லிட்டாங்க. அப்ப நாளைக்கு பாட்டு பாட வேண்டியதுதான்.
மூணாவது படத்துல அந்த அடிபம்புக்கு பக்கத்துல ஒரு சந்து போகுதுபாருங்க அதுலயே போனிங்கன்னா சோத்தாங்கை பக்கம் நாலாவது சந்துல ஒரு கொழந்த உக்காந்திருக்குதுல்ல அதுக்கு பின்னாடி தட்டி சந்துல உக்காந்திருக்கான் பாருங்க அவந்தான் கோபி அதான் அவன் வீடு.
தம்பி said...
மூணாவது படத்துல அந்த அடிபம்புக்கு பக்கத்துல ஒரு சந்து போகுதுபாருங்க அதுலயே போனிங்கன்னா சோத்தாங்கை பக்கம் நாலாவது சந்துல ஒரு கொழந்த உக்காந்திருக்குதுல்ல அதுக்கு பின்னாடி தட்டி சந்துல உக்காந்திருக்கான் பாருங்க அவந்தான் கோபி அதான் அவன் வீடு.
Address : Vivekanandar Street
Near Sharjah Busstand
Sharjah.
Post a Comment