74. இந்த வீணைக்கு தெரியாது - ஒரு கொசுவர்த்தி

அக்கா மைபிரண்ட் புண்ணியத்தில் சமீபத்தில் ஒரு பாடல் கேட்க முடிந்தது. நல்ல அழகான பாடல். ஏதோ பூர்வ ஜென்மத்தில் கேட்டது போல் இருந்தது. இரயில் சிநேகம் என்ற தொலைக்காட்சி தொடரில் இடம் பெற்ற பாடலாம். இதைப் பற்றி கேட்டவுடன் அனைவரும் மலரும் நினைவுகளுக்கு சென்று விட்டனர். சரி நமது இணைய சகோதர சகோதரிகளுக்கும் கொஞ்சம் கொசுவர்த்தி சுத்த வைப்போம் என்று இங்கு கொண்டு வந்து விட்டேன்.

இந்த வீணைக்கு தெரியாது
இதை செய்தவன் யார் என்று
என் சொந்த பிள்ளையும் அறியாது
இதை தந்தவன் யார் என்று?
எனக்குள் அழுது ரசிக்கின்றேன்,
இரண்டையும் மடியில் சுமக்கின்றேன்

மலையில் வழுக்கி விழுந்த நதிக்கு
அடைக்கலம் தந்தது கடல் தானே!
தரையில் வழுக்கி விழுந்த கொடிக்கு
அடைக்கலம் தந்தது கிளை தானே!
எங்கோ அழுத கண்ணீர் துடைக்க
எங்கோ ஒரு விரல் இருக்கிறது!
காகம் குருவிகள் தாகம் தீர
கங்கை இன்னும் நடக்கிறது.

சொந்தம் பந்தம் என்பது எல்லாம்
சொல்லி தெரிந்த முறை தானே!
சொர்க்கம் நரகம் என்பது எல்லாம்
சூழ்நிலை கொடுத்த நிறம் தானே !
உள்ளம் என்பது சரியாக இருந்தால்
உலகம் முழுதும் இனிக்கிறது
உதிர போகும் பூவும் கூட
உயிர் வாழ்ந்திட தான் துடிக்கிறது !

( Wait Some Seconds to load)

MP3 ஆக இதை பதிவிறக்கி கேட்டுக் கொள்ளுங்கள்
இதோ லிங்க்
http://rapidshare.com/files/63587673/InthaVeenai-RayilSnehamSerial.mp3

16 comments:

said...

அந்த MP3 கொஞ்சம் மெயில்ல தட்டிவுடுங்களேன்

said...

///மங்களூர் சிவா said...
//
இந்த வீணைக்கு தெரியாது
இதை செய்தவன் யார் என்று
//
செஞ்ச ஆசாரிக்குதான் தெரியும் வீணைக்கு எப்படி தெரியும்.

எக்கா நீங்க எப்பவும் மாதிரி சூப்பர் சூப்பரா களவாண்டு போடுங்க///
இனி தொடருவோம்

said...

பாடலின் ராகம் சஹானா.

said...

அப்போ எல்லாம் வேறு டிவிகள் கிடையாது. ஒரே டிவிதான். இந்தத் தொடர்வருகிற வரையிலும் காத்திருப்பது பிடித்தமான விஷயம். கதை, மனித உறவுகள் சித்தரிக்கப்பட்டிருந்த விதம் அருமை. பாடலுக்கு நன்றி வித்யா.

நீங்கதான் ஆங்கிலத்தில் பெயர் உச்சரிப்பு பற்றி எழுதி கலக்கிய வித்யா களவாணியா:-)

said...

///ஜீவா (Jeeva Venkataraman) said...
பாடலின் ராகம் சஹானா.///

குழந்தைக்கும் சஹானா என்று பெயர் வைப்பார்கள்.

said...

அம்மணி, என் போஸ்ட்டுக்கு வேட்டு வச்சிட்டீங்களே.. இதைப்பத்தி நான் ஒரு போஸ்ட் போடணும்ன்னு வச்சிருந்தேன்.. வரிகளோட.. நீங்க முந்திக்கிட்டீங்க... :-))

said...

அது சரி... எப்போதிலிருந்து இந்த குழந்தை உங்களுக்கு அக்கா ஆனேன்? இது சரியில்லையே... ;-)

said...

//பாடலின் ராகம் சஹானா.//
நன்றி ஜீவா சார், இதன் பாடலாசிரியர் யார் என்று தெரியுமா?

said...

///.:: மை ஃபிரண்ட் ::. said...
அது சரி... எப்போதிலிருந்து இந்த குழந்தை உங்களுக்கு அக்கா ஆனேன்? இது சரியில்லையே... ;-)///
இந்த பாட்டை நான் கேட்டதே இல்லை. இதை அங்கே சுலபமாக கண்டுபிடித்தீர்கள் என்றால்.. 'என்னக்கா' சரிதானே? :))

said...

அருமையான தொடர். நானும் பார்த்திருக்கிறேன். அருமையான பாடலும்கூட. இதில் ஆண் பாடிய பாடல் இருக்கிறதா? இருந்தால், அந்த லிங்கையும் கொடுங்களேன். அந்த பாடல், இதை விடவும் நன்றாக இருந்ததாய் நினைவு.

said...

இரயில் சிநேகம் தொடரில் வந்த இன்னொரு பாடலும் அருமையாக இருக்கும்,
"முதலும் இல்லாதது முடிவும் இல்லாதது ரயில் சிநேகம்" என்ற பாடல்,

இதுவும் கிடைக்குதான்னு பாருங்க கலைவாணிக்கா & மை பிரண்ட் அக்கா

said...

//நிலா said...
"முதலும் இல்லாதது முடிவும் இல்லாதது ரயில் சிநேகம்" என்ற பாடல்,

இதுவும் கிடைக்குதான்னு பாருங்கள்//
பாரும்மா நிலாக்குட்டி! உனக்கு தெரியாம அப்பா உன் பெயரில பின்னூட்டம் போடுராரு. உன் ப்ளாக் கடவுச்சொல்லையும் திருடிட்டாங்க போல இருக்கு!
இரண்டு பாடலும் வீடியோவுடன் வருகிறது.

said...

//இரண்டு பாடலும் வீடியோவுடன் வருகிறது.//

யக்கா, எப்போ பார்த்தாலும் நீங்க எனக்கு போட்டியாவே செயல்படுறீங்களே... ஏன்? :-P

said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
யக்கா, எப்போ பார்த்தாலும் நீங்க எனக்கு போட்டியாவே செயல்படுறீங்களே... ஏன்? //
என்னக்கா இது கொடுமை. உங்களுக்கு நான் போட்டியா? சரி விடுஙக என்னோட அடுத்த வாரப் பதிவு
"மலேசிய PJ நகரம் - ஒரு பார்வை"
கோட்ட தாருல் இஹ்ஸான், தமான் மெகாஹ், SS2, SS3 பகுதிகள், சீ பார்க், Jaya S.M, SS4 விநாயகர் கோயில் படங்களுடன். இதுக்கு போட்டிக்கு வராதீங்க.

said...

இரயில் சிநேகம் எனும் அருமையான தொலைகாட்சி தொடரில் வந்த இரண்டு பாடல்களையும் எழுதியது கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தான்.
இரயில் சிநேகம் இரயில் சிநேகம்
முதலும் இல்லாதது முடிவும் இல்லாதது
விதையும் இல்லாமல் நிலமும் இல்லாமல்
மரமாய் உண்டாவது
இரயில் சிநேகம் இரயில் சிநேகம்

வாழ்க்கை இங்கு கொஞ்ச நேரம்
வந்ததிங்கு கொஞ்ச தூரம்
தேவையில்லை ஆரவாரம்
நேற்று மீண்டும் வருவதில்லை
நாளை ஒன்றும் புரியவைல்லை
இன்று ஒன்று மட்டுமே
உங்கள் கையில் உள்ளது
வாழ்க்கை வந்து உங்களை
வாழ்ந்து பார்க்க சொன்னது

முடிவும் இல்லாதது ..
என்று வரும் அந்த பாடல் (தவறிருக்கலாம், நினைவில் இருந்ததை எழுதியுள்ளேன்)

நீங்கள் கொடுத்த இணைப்பில் தரவிறக்கம் செய்வது எப்படி என்று விளங்க வில்லை. உதவ முடியுமா?

நாகூர் இஸ்மாயில்

said...

//நீங்கள் கொடுத்த இணைப்பில் தரவிறக்கம் செய்வது எப்படி என்று விளங்க வில்லை. உதவ முடியுமா?
நாகூர் இஸ்மாயில்//
சுலபம் தான் பாய். இயலாவிட்டால் மின்னஞ்சல் முகவரி தாருங்கள். அனுப்புகின்றேன்.