துபாயில் உள்ள ஒரு நட்சத்திர உணவகத்தில் நடைபெற்ற ஏலத்தில் ஒரு சட்டை இந்திய ரூபாயில் சுமார் 16 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. அமீரக திர்ஹம் 16 மில்லியன்).இந்த சட்டை ஷேக் ராஷித் பின் முகமத் அல் மக்தூம் என்ற வீரருக்கு உரியது. ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஷேக் அஹமத் பின் ஹஸார் அல் மக்தூம் என்ற துப்பாக்கி சுடும் வீரரும் இதில் கலந்து கொண்டார். (இவர் தங்கம் வென்ற போட்டியில் தான் இந்திய வீரர் R.V.S. ரத்தோர் வெள்ளிப் பதக்கம் பெற்றது நினைவிருக்கலாம்) இதில் பல விளையாட்டு வீரர்களின் ஆடைகள் ஏலம் விடப்பட்டன. இந்திய கிரிக்கெட் வீரர் டெண்டுல்கரும் இதில் தனது மனைவியுடம் கலந்து கொண்டார்.
சட்டையுடன் ஷேக் ராஷித்
டெண்டுல்கர் தனது மனைவியுடன்
நன்றி : கல்ப் நியூஸ்
டிஸ்கி : 16 கோடி இருந்தால் என்னவெல்லாம் செய்யலாம், எத்தனை நலிந்தவர்களுக்கு உதவும் முடியும் என்று யோசித்தேன். மயக்கம் :(((
77. ஒரு சட்டையின் விலை ரூ 16 கோடி மட்டுமே
Subscribe to:
Post Comments (Atom)

5 comments:
//16 கோடி இருந்தால் என்னவெல்லாம் செய்யலாம், எத்தனை நலிந்தவர்களுக்கு உதவும் முடியும் என்று யோசித்தேன். மயக்கம் :(((//
ஏலம் எடுத்த நானே சும்மா இருக்கேன் நீங்க ஏனக்கா மயக்கம் போட்டீங்க....
அவ்வ்வ்வ்வ்வ்
//16 கோடி இருந்தால் என்னவெல்லாம் செய்யலாம், எத்தனை நலிந்தவர்களுக்கு உதவும் முடியும் என்று யோசித்தேன். மயக்கம் //
அது சரி. அவரு கிட்ட இருக்கு, அவரு செலவு செய்யறாரு. விட்டுத் தள்ளுங்க.
நலிந்தவர்களுக்கு நல்லது செய்ய, 16 கோடி இருக்கணும்னு இல்ல, 16 லட்சமோ, 16 ஆயிரமோ, 16 ரூபாயும் கூட போதுமானது.
செஞ்சிருக்கமா? ;)
துரியோதனனுக்கும். சர்வேயனுக்கும் நன்றிகள்.
//SurveySan said...
செஞ்சிருக்கமா? ;)//
எங்களுடைய வருமானத்தில் 10 சதவீதம் செலவு செய்கிறோம். இது பெருமைக்கல்ல. மற்றவர்களுக்கு ஆர்வமூட்ட.
சந்தனம் மிஞ்சினால்....நினைவுக்கு வந்து தொலைந்தது.
//எங்களுடைய வருமானத்தில் 10 சதவீதம் செலவு செய்கிறோம். இது பெருமைக்கல்ல. மற்றவர்களுக்கு ஆர்வமூட்ட.//
in that case, hats off :)
good to know.
Post a Comment