கடந்த பதிவுக்கு சில இடங்களில் இருந்து பயமுறுத்துவதாக கடிதங்கள் வந்ததை எடுத்து சிறு விளக்கம். அங்கே இடப்பட்ட படங்கள் பயமுறுத்த அல்ல. அதன் தீவிரத்தை உணர்த்த மட்டும் தான்.
மேலும் சிகரெட் பிடிப்பவர், மது அருந்துபவர் அவர் விருப்பப்படியே தனது உடலைக் கெடுத்துக் கொள்கிறார். ஆனால் இந்த விஷயம் கிட்டத்தட்ட Passive Smoking மாதிரி.(Passive Smoking = புகை பிடிக்காத ஒருவர் புகையின் பாதிப்பை அடைவது). ஆகவே தான் இந்த பதிவுக்கு முக்கியத்துவம். அதே போல் Fபில்டர்( இனி வடிகட்டி என்று மட்டும் வரும்) பற்றியும் சிறு அறிமுகம் செய்வது நன்று என்று நினைக்கிறேன்.
வடிகட்டிகள் பொதுவாக சில வகைகளில் அடங்கி விடும். அவற்றையும் அதன் செயல் திறனையும் வரிசையாகப் பார்ப்போம்.
1. அலுமினிய வலையால் ஆனது - 40 முதம் 60 சதம்
2. தேங்காய் நார் போன்றது - 50 முதல் 60 சதம்
3. ஸ்பாஞ்ச் மாதிரியானது - 70 முதல் 85 சதம்
4. பேக் வடிகட்டி ( Back Filter) - 90 முதல் 95 சதம்
இவை அனைத்தும் பெரிய இயந்திரங்களில் பயன்படுத்தப்படுவை. இதில் கடைசியில் உள்ளது மட்டும் திரும்ப சுத்தம் செய்து பயன்படுத்த இயலாதது. மற்றவைகளை சுத்தப்படுத்த முடியும்.
இது தவிர Window, Split A/C களில் வரக்கூடிய ப்ளாஸ்டிக்கால் ஆன வடிகட்டிகள் 70 முதல் 80 சதம் மட்டுமே வடிகட்டும்.தொழில் நுட்ப ரீதியில் இதை மறுப்பவர்கள் மறுக்கலாம். ஆதாரங்களுக்கு வழி காட்டப்படும்.
இனி கட்டுரைக்குள் நுழைவோம்.இதில் பயமுறுத்தும் படங்கள் தரப்போவதில்லை. ஆனாலும் உபயோகமான சில படங்கள் தருகிறேன். Window, Split A/C நாம் கவனிக்க வேண்டியது அறைக்குள் இருக்கும் இண்டோர் எனப்படும் பகுதியே. இதில் வடிகட்டி, Evaporator எனப்படும் Cooling Coil, Blower, ஆகியவை இருக்கும். பொதுவாக வடிகட்டியை எல்லோரும் சுத்தம் செய்கின்றனர். ஆனால் மற்ற பகுதிகளைக் கவனிப்பது இல்லை. Cooling Coil என்பது எப்போதும் ஈரப்பதத்துடன் இருப்பது.எனவே வடிகட்டியைத் தாண்டிச் செல்லக்கூடிய சிறு சிறு தூசுகள் ஈரத்துடன் சேர்ந்து அழுக்காக Cooling Coil, Blower ஆகியவற்றில் தேங்கி விடுகின்றது.
அடுத்த தடவை உங்கள் குளிர் சாதனப் பெட்டி சுத்தப்படுத்தப்படும் போது Cooling Coil, Blower எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.அதே போல அழுக்கு தண்ணீர் தேங்குமிடம், செல்லும் வழி எப்படி இருக்கிறது என்று கவனியுங்கள். இந்த அழுக்குகள் சேரும் போது தான் A/C யில் இருந்து தண்ணீர் கொட்டும்.( வளைகுடாவில் இருப்பவர்களுக்கு இந்த அனுபவம் அதிகமாக இருக்கும்). அப்படி வந்தால் உங்கள் A/C கவனிக்கப் பட வேண்டியது.
Window A/C எனும் போது அதை அப்படியே இறக்கி சுத்தம் செய்ய முடியும். ஆனால் Split A/C எனில் யாரும் அதிகம் சுத்தம் செய்வதில்லை. கீழே அதை சுத்தம் செய்ய வேண்டிய முறை.
சுத்தம் செய்வதற்கு முன்னும், பின்னும்
இனி குறிப்புகள்
அ. சன்னல் வகை கு.சா.பெட்டிகள் ( Window A/C)மற்றும் பிரிக்கப்பட்டவகை கு.சா.பெட்டிகள் ( Split A/C)
1.வடிகட்டியை 15 நாட்கள் முதல் ஒரு மாதத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்யுங்கள். ( பயன்பாட்டைப் பொறுத்து)
2.வடிகட்டியை மீண்டும் பொருத்தும் போது இடைவெளி இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்
3.Cooling Coil, Blower போன்றவற்றை வெயில் காலம் ஆரம்பமாவதற்கு முன் சுத்தம் செய்து வையுங்கள்
4.கு.சா.பெட்டி பயன்பாட்டில் இருக்கும் போது சன்னல்களைத் திறந்து வைக்காதீர்கள்.
5.A/C யின் கழிவு நீர் தேங்குமிடம், செல்லும் வழியை சுத்தமாக வையுங்கள்
6.கு.சா.பெட்டி பயன்பாட்டில் இருக்கும் போது அறையை சுத்தம் செய்யாதீர்கள்
இதுவரை சுகாதார, தொழில்நுட்பரீதியாக இதைப் பார்த்த நாம் நாளை வணிக ரீதியாகப் பார்ப்போம்.
பின் குறிப்புகள் :
1.இந்த இரு பதிவுகளும் உண்மையில் சுகாதாரத்தின் மீதும், சுற்றுப்புறத்தூய்மையின் மீதும் அக்கறை இருப்பவர்களுக்கு எழுதப்பட்டது. நீங்கள் இருக்கும் இடத்தில் இதை கண்காணிக்க உங்களுக்கு அதிகாரம் இல்லையென்றால் அதற்காக என்ன செய்வது?. விட்டுவிடுங்கள்.
2. இது முன் குறிப்பாக இருக்க வேண்டியது. முதலில் உள்ள படத்தில் இருப்பவர் பெயர் ஹெர்பி. இவரும் இவரது கூட்டாளிகளும் தான் Duct களில், அழுக்குகளில் குடி இருந்து நமக்கு தொல்லை கொடுப்பவர்கள். ஆனா ரொம்ப நல்லவங்க. (படம் பெரிதாக்கப்பட்டுள்ளது)
3.தொழில்நுட்ப ரீதியான தகவல்களை இந்த மரமண்டைக்கும் புரியும் வகையில் விளக்கிய தங்க மச்சானுக்கு நன்றிகள். ( ஆனால் பதிவை படித்து முடித்து விட்டு "ஆகா! எங்களுக்கு நாங்களே சூனியம் வச்சிருக்கமா?" என்று அவரை மாதிரி A/C தொழிலில் இருப்பவர்களுக்கு ஆதரவாக சொன்னதை யாரிடமும் சொல்ல மாட்டேன்)
78. எச்சரிக்கை - குளிரூட்டப்பட்ட அறையில் இருப்பவரா நீங்கள் ? - பாகம் 1
79. எச்சரிக்கை - குளிரூட்டப்பட்ட A/C அறையில் இருப்பவரா நீங்கள் ? - பாகம் 2
Labels: குளிர்சாதனம்
Subscribe to:
Post Comments (Atom)

8 comments:
அருமையாக இருக்கு உங்கள் விளக்கமும் படமும்.
எக்கா மிக உருப்படியான பதிவு. வீட்டுக்கு ஏசி போடலாமான்னு ஒரு யோசனை இருந்தது. கேன்சல் பன்னியாச்சி.
நன்றி
உபயோகமான பதிவு.
//மங்களூர் சிவா said...எக்கா மிக உருப்படியான பதிவு. வீட்டுக்கு ஏசி போடலாமான்னு ஒரு யோசனை இருந்தது. கேன்சல் பன்னியாச்சி. //
என்ன சிவா! உலகத்திலேயே ரிஸ்க்கான பங்குத் தொழில் பத்தி தெரிஞ்சு வைச்சிருக்கிற நீங்க இதுக்கு பயப்படலாமா? பஸ் விபத்தாகுதுனா பஸ்ல போகாம இருக்க முடியுமா?. முன்னெச்சரிக்கை நடவடிக்கையோட இருந்தால் போதும் தானே!
குசும்பன், சிவா, நட்டு அனைவருக்கும் நன்றி.
//
வித்யா கலைவாணி said...
பஸ் விபத்தாகுதுனா பஸ்ல போகாம இருக்க முடியுமா?. முன்னெச்சரிக்கை நடவடிக்கையோட இருந்தால் போதும் தானே!
//
இதுக்கு முன்ன பதிவுல ஜமாலன் கமெண்ட் போட்டாரே மாதம் ஒருதடவை பில்டர் க்ளீன் பன்னிகிட்டிருக்கேன் அதை வாரம் ஒருதடவைன்னு மாத்திடாதீங்கன்னு.
அந்த பயம்தான் மத்தபடி வேற ஒன்னும் இல்லை.
நன்றி வித்யா.. இங்க கத்தாரிலும் பல A/C களில் தண்ணீர் வடிவதை பார்த்திருக்கிறேன்.எனது வீட்டு A/C அடிக்கடி சுத்தம் செய்ய பணியாளோடு கொடுப்பதோடு சரி..அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்ததில்லை..
இனி சுத்தமாக உள்ளதா என்றும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்...
நல்ல பயனுள்ள பதிவு..
//ரசிகன் said...
நன்றி வித்யா.. இங்க கத்தாரிலும் பல A/C களில் தண்ணீர் வடிவதை பார்த்திருக்கிறேன்.எனது வீட்டு A/C அடிக்கடி சுத்தம் செய்ய பணியாளோடு கொடுப்பதோடு சரி..அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்ததில்லை..
இனி சுத்தமாக உள்ளதா என்றும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்...
நல்ல பயனுள்ள பதிவு..//
நன்றி ரசிகன். கழிவு நீர் கண்டிப்பாக வெளியேற்றப்பட வேண்டும். ஆனால் அதற்காக அமைக்கப்பட்ட பாதையில் செல்லாமல் நிறைந்து வடிவது தான் பிரச்சினையான விஷயம்.
Post a Comment