ரமழான் வாழ்த்துக்களும் அதற்கு சம்மந்தமில்லாத சந்தேகங்களும்!!!
இது ரமழான் மாதம் முடியக் கூடிய தருணம். நாளையோ, நாளை மறுநாளோ முஸ்லிம்களுக்கு திருநாளாக இருக்கலாம். இந்த நல்ல நேரத்தில் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் உள்ளங்கனிந்த பெருநாள் நல்வாழ்த்துக்கள். ஈத் முபாரக்.
எங்களது ஊரில் முஸ்லிம்களும் கணிசமாக வாழ்கின்றனர். எனக்குத் தெரிந்து 6 பள்ளிவாசல்கள் உள்ளன. என்க்கு முஸ்லிம் தோழிகளும் அதிகம். நோன்பு, ஹஜ் பெருநாட்களில் யார் வீட்டில் சென்று சாப்பிடுவது என்று எனது தோழிகளுடன் மந்திராலோசனை நடக்கும். இறுதியில் வழக்கம் போல நல்ல சாப்பாடு கிடைக்கும் இடத்தில் நுழைந்து விடுவோம்.
அதற்காக மற்றவர்களுடைய மனச புண் படுத்தக் கூடாது இல்லையா? அதனால எல்லாத்தையும் பார்சல் கட்டிருவோம். ஒரே ஜாலி தான். அதுவும் நோன்பு பெருநாள் அன்று முஸ்லிம்கள் எங்க வீட்டு வழியாத்தான் தொழும் திடலுக்கு போவார்கள். வீட்டு வாசலில் நின்று வேடிக்கை பார்ப்போம். சிறு வயதில் வீட்டு வாசலில் தண்ணீர் வைத்து எல்லோருக்கும் கொடுப்போம்.
இப்போது என்னுடைய இந்த பதிவின் நோக்கத்திற்கு வருவோம். அப்போது ஆண்கள் அனைவரும் தொழுகைக்கு செல்வார்கள். பெண்கள் வீட்டில் இருப்பார்கள். எனது தோழிகளுடம் கேட்டால் நாங்கள் பள்ளிக்கோ, பெருநாள் தொழும் இடத்திற்கோ செல்லக் கூடாது என்பார்கள்.
நான் துபாய் வந்த பிறகு அங்கு பெண்கள் தொழுகைக்கு பள்ளிக்கு செல்கின்றனர். எனது பக்கத்து fப்ளாட்டில் இருந்த சூடான் பெண் தினமும் இரவுத் தொழுகைக்கு பள்ளிக்கு செல்வார். அதே போல் பெருநாள் தொழும் இடத்தில் பெண்களுக்கு தனி இடம் உண்டு. சவுதியிலும் இதே நிலைதான். இந்தியாவில் மட்டும் மாற்றம்.
இது குறித்து எனது அடுத்த fப்ளாட் பலஸ்தீனப் பெண்ணிடம் கேட்டேன். நன்றாக ஆங்கிலம் பேசக் கூடிய அவர் " இது எங்கள் நபி வழி. எனவே இதைப் பின்பற்ற வேண்டும்" என்று கூறினார். மேலும் ஹதீஸ் எனச் சொல்லப் படும் நபி மொழியையும் அரபியில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கூறினார். ஆனாலும் அதை சரியாக தமிழில் மொழி பெயர்க்க முடியாத்தால் கீழே உள்ளதை எனது கணவரின் தமிழ் நண்பர் மூலம் பெற்றேன்.
உம்மு அதிய்யா (ரலி) கூறினார்கள் பெருநாளில் (தொழும் திடலுக்கு) நாங்கள் புறப்பட வேண்டும் என்றும் கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும், மாத விடாய் ஏற்ப்பட்டுள்ள பெண்களையும், புறப்படச் செய்ய வேண்டும் எனவும், நாங்கள் கட்டளையிடப்பட்டோம். பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆ செய்வார்கள். புஹாரி 971
மாதவிடாய் ஏற்ப்பட்டுள்ள பெண்கள் கூட தொழும் இடத்திற்கு வர வேண்டும் என்று தெளிவாக உள்ள போது இந்தியாவில் பெண்களின் இந்த உரிமையை ஏன் தடுக்கின்றனர்?. இது ஒரு குற்றச் சாட்டு அல்ல. எனது சந்தேகம். இஸ்லாமிய சகோதரர்கள் யாராவது பதில் சொல்லலாமே?
59.ரமழான் வாழ்த்துக்களும் அதற்கு சம்மந்தமில்லாத சந்தேகங்களும்!!!
Subscribe to:
Post Comments (Atom)

24 comments:
ஏண் அன்பான ரலான் வாழ்த்துக்கள், என் எல்லா இஸ்லாமிய நண்பர்களுக்கும் எங்கள் அமீரக நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்!
வித்யா! உங்கள் சந்தேகம் சரி தான் நானே சரியான விளக்கம் சொல்லமுடியும், ஆனால் என்னைவிட இன்னும் சிறந்த இது பற்றி தெரிந்த நம் நண்பர்கள் இதற்க்க்கு பதில் சொல்லுவார்கள் என நம்புகிறேன்!!
இது நீங்கள் கேட்ட கேள்வீக்கான பதில் அல்ல.
ரம்ஜான் நோம்பின் போது முஸ்லிம் மதத்தினரல்லாத மற்றவர்கள் சாப்பிட ஹோட்டலெல்லாம் இருக்குமா??
familyயாக இருப்பவர்களுக்கு பிரச்சனை இருக்காது என நினைக்கிறேன்.
இங்கு சில 'பாய்' கடைகள் ரம்ஜான் நோன்பின்போது சாயந்திரம்தான் திறப்பார்கள்.
//ரம்ஜான் நோம்பின் போது முஸ்லிம் மதத்தினரல்லாத மற்றவர்கள் சாப்பிட ஹோட்டலெல்லாம் இருக்குமா??//
பார்சல் வாங்கி வீட்டிற்கு சென்று சாப்பிடலாம், எனக்கு அந்த அனுபவம் இருக்குறது.
அனைத்து இசுலாமியச் சகோதர சகோதரிகளுக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துகள்
ஆண்கள் அனைவரும் தொழுகைக்கு செல்வார்கள். பெண்கள் வீட்டில் இருப்பார்கள். எனது தோழிகளுடம் கேட்டால் நாங்கள் பள்ளிக்கோ, பெருநாள் தொழும் இடத்திற்கோ செல்லக் கூடாது என்பார்கள்
//
எல்லா ஊரிலேயும் பெருநாள் தொழுகைக்கு பெண்களுக்கு தனி இடவசதி உண்டு எங்கள் ஊரில் ( நாகை மாவட்டம் )கிழே ஆண்கள் மேலே பெண்கள் தொழுவார்கள்.
உங்கள் ஊர் எதுனு தெரிஞ்சிக்கலாமா..?
//உங்கள் ஊர் எதுனு தெரிஞ்சிக்கலாமா..?//
தேனி மாவட்டம் பெரியகுளம். இன்று வரை பெண்களுக்கு அனுமதி கிடையாது.
http://en.wikipedia.org/wiki/Periyakulam
சிறு குறிப்பு : பெருநாள் தொழுகை மைதானத்தில் தொழுவது சிறப்பு ஆனால் எங்கள் ஊரில் மழை பெய்வதாலும் வசதியான திடல் இல்லாதல் பள்ளியில் தொழுகை நடத்துவோம்.
முன்பு சின்ன பள்ளியாக இருந்த போது ஒரு பள்ளியில் ஆண்கள் ஒரு பள்ளியில் பெண்கள் தொழுவார்கள்
வாழ்த்துக்கு நன்றி !!
தேனி மாவட்டம் பெரியகுளம். இன்று வரை பெண்களுக்கு அனுமதி கிடையாது.
///
வசதி குறைவா இல்லை வேற எதாவது பிரச்சனையா என்று விசாரித்து 4 நாள்களில் சொல்கிறேன்
இப்ப ரமலான் பிஸி ஒகே !!
அபி அப்பாவுக்கு நன்றி
சிவாவுக்கு நன்றி
சீனாவுக்கு நன்றி
//விசாரித்து 4 நாள்களில் சொல்கிறேன்//
விசாரியுங்கள்.
மின்னுது மின்னலுக்கு நன்றி
இலங்கையிலும், நானறிந்தவரை பெண்கள் தொழுகைக்கு பள்ளிவாசல் போவது கிடையாது.
வாழ்த்துக்களுக்கு நன்றி... எங்கள் ஊரிலும் பெண்கள் தொழுகைக்குத் தனியாக இட வசதி உண்டு. பெருநாள் தொழுகைக்கு மட்டுமல்ல, ரமழான் நோன்பு தொழுகைக்கும்தான்... எனக்குத் தெரிந்து தமிழகத்தில பல இடங்களில் பெண்கள் தொழுவதற்காகத் தனியாக இடவசதி செய்துத் தருவார்கள்.
மின்னலு சொன்னதுபோல் இடவசதி பற்றாக்குறையாகக் கூட இருக்கலாம் :))
உங்கள் பதிவின் மூலம் அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் என் ரம்ஜான் வாழ்த்துக்கள் ;))
சென்னையில் பெரியமேடு பள்ளிவாசலில் பெண்கள் மாடியில் தொழுகை செய்யலாம்.
அனைவருக்கும் இனிய பண்டிகை நாள் வாழ்த்து(க்)கள்
சகோதரி,
எனதூரை அடுத்துள்ள காரைக்கால், நாகப்பட்டினம், திட்டச்சேரி, நாகூர், ஆழியுர், வேளாங்கண்ணி, பொறையார், தரங்கம்பாடி, சங்கரன்பந்தல், ஆயப்பாடி, சாத்தனூர்,நீடுர், வடகரை போன்ற ஊர்களில் பெருநாளன்று பெண்கள் தொழக் கண்டிருக்கிறேன்.
கடற்கரை ஓரங்களில் உள்ள ஊர்களில் முஸ்லிம் பெண்கள் தொழுகைக்கு வருவார்கள். ஆனால் மற்ற ஊர்களில் கிடையாது. சில ஊர்களில் கண்டிப்பாக அனுமதி கிடையாது.
அல்லாவின் அடிமைக்கு,
திட்ட்டச்சேரி, சங்கரன்பந்தல், ஆயப்பாடி, சாத்தனூர்,நீடுர், வடகரை போன்ற ஊர்கள் கடலோரத்தில் அமைந்தவை அல்ல என்பது உண்மை.
பெண்களை பெருநாள் தொழுகைக்கு அனுமதிக்க மறுக்கும் - ஜமாத்கள் இன்னும் இருந்தால் வெட்கக்கேடு.
அப்படிப்பட்ட ஊர்களின் பெயர்கள் 'அனானி' அல்லாவின் அடிமைக்கு தெரிந்திருந்தால் வாசகர்களுக்கு தெரிவிக்கலாமே!
இஸ்லாமில் பள்ளியில் பெண்கள் தொழ தடையில்லை. முகமது நபியும் தடைவிதித்தில்லை. பள்ளி என்பது ஒரு வசிதிக்கானதுதானே தவிர, இஸ்லாமியர்கள் தொழும் இடம் எல்லாம் பள்ளிதான். பாரதி கூறியதுபோல திசைநோக்கி தொழுபவர்கள், தொழும் இடம் எல்லாம் பள்ளிகள்தானே. முதலில் இஸ்லாம் என்பது சவுதியில் உள்ளவர்கள கூறவதுபோல ஒருபடித்தானதோ அல்லது ஒருமையானதோ அல்ல. அது பரவிய நாட்டின் பண்பாட்டோடு ஒருவகை சமரசமாகவே இயங்கிவருகிறது. அது அப்படித்தான் இயங்கவும் முடியும். இந்திய இஸ்லாம் தெளகீது எனும் ஓரிறைக்கொள்கையை பின்பற்றுவதில்லை. மாறாக, மதகஃப் எனப்படும் 4-வகை குர்ரானை விளக்கிய தத்துவப் பள்ளிகளை பின்பற்றும் 4-வகை நடைமுறைகள் உள்ளது. அந்நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டே இவை தீர்மானமாகின்றன. பெண்கள் பள்ளிக்கு செல்வதற்கு தடையில்லை. ஆணால், பெண்கள் இமாமாக அதாவது தலைமை குருவாக நின்று தொழகையை முன்னெடுத்து வழி நடத்த முடியாது. அப்படி தொழவதற்க இஸலாமியத்தின் முக்கிய பெண்ணும் நபியின் மனைவியுமான ஆயிஷா நாயகத்திற்கே அனுமதி வழங்கமறுத்துவிட்டார்முகமது நபி. இதனை இஸ்லாமிய பெண்ணியவாதிகள் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஆமினா வதூத் என்கிற இஸ்லாமிய பெண்ணிவாதி வெளிப்படையாக அறைகூவல் விடுத்து அமேரிக்காவில் முன்நின்று தொழுகை நடத்தினர் கடுமையான உலக உலமாக்களின் எதிர்ப்புக்கிடையே. பொதுவாக, மாதவிடாய் வந்த பெண்கள் தொழ அனுமதி இல்லை. உங்களது குறிப்பு பற்றி எனக்கு தெரியவில்லை.
பெண்கள் முகத்தை மூடிக்கொள்ளுங்கள் என்று முகமது நபி கூறியதில்லை. முகத்தை மூடாதீர்கள் என்றுதான கூறினார்கள். அவரது மனைவிமார்கள் மட்டுமே முகத்தை மூடிக்கொள்ள அனமதி உண்டு. அதுவும் அவர்களை பிற பெண்களிடமிருந்து வித்தியாசப்படுத்தவே. ஆணால் சவுதியில் பிற மதப் பெண்கள்கூட முகத்தை மூடும்படி முத்தவாக்கள் கட்டாயப்படுத்துகிறார்கள். அதிலும் குறிப்பாய் நீங்கள் இருக்கும் ரியாத்தில் அதிகம். பத்தாவில் நீங்கள் பார்த்திருக்கக்கூடும் முத்தவா முகம்மூடாத பெண்களை முகம் மூடச் சொல்வதை.
இஸ்லாம்தான் பெண்கள் விவாகரத்து செய்துகொள்ளவும், மறுமணம் செய்தகொள்ளவும் அனுமதி வழுங்கியதுடன் அதை நபிகள் நடைமுறையில் செய்தும் காட்டி உள்ளார். பெண்களுக்கு சொத்துரிமை தந்துள்ளது இஸ்லாம். பெண்களுக்கு பரிசப்பணம் தந்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது கட்டாய மதச்சட்டமாகும். இத்தனை இருந்தும் மெற்கத்திய மீடியாக்கள் வழியாக இஸ்லாம் பெண்களை ஒடுக்குவதாக தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்படுகிறது. இதன்பொருள் இஸ்லாம் உயர்ந்த மதம் என்று நான் கூறவரவில்லை. ஒவ்வொரு மதமும் இப்படி சில முற்போக்கான அம்சங்களைக் கொண்டிருக்கும். அது வரலாற்றின் விதி. எனவே, இஸ்லாம் குறித்து நீங்கள் பார்ப்பதும் உண்மை அது இல்லை என்று பிறர் சொல்வதும் உண்மை. இவற்றை உள்ளடக்கிய ஒரு கட்டுரை என்னால் புதியவிசை என்கிற பத்திரிக்கையில் ஏழுதப்பட்டுள்ளது. அது கீற்று இணையதளத்தில் உள்ளது. வாய்ப்பிருந்தால் பாருங்கள். இவ்விவாதம் தேவையற்றதெனில் விட்டுத்தள்ளுங்கள். இணைப்பிற்கான சுட்டி கீழே...
http://www.keetru.com/visai/jul07/jamalan.php
//பொதுவாக, மாதவிடாய் வந்த பெண்கள் தொழ அனுமதி இல்லை//
மாதவிடாய் வந்த பெண்கள் பெருநாள் தொழும் இடத்திற்கு வர வேண்டும் என்றும் ஆனால் தொழக்கூடாது என்றும் தான் /அடுத்த fப்ளாட் பலஸ்தீனப் பெண்ணிடம் கேட்டேன்./ கூறினார்.
மாயாவி, ஜி, கோபிநாத், துளசி கோபால் அம்மா, பிறைநதிபுறத்தான், ஜமாலன் அனைவருக்கும் உங்களுடைய கருத்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி
என்னுடைய நெருங்கிய இசுலாமியத் தோழர் கூறியது : இந்தியாவில் சில வசதிக் குறைவுகள் காரணமாக, பெண்கள், சில இடங்களில் உள்ள பள்ளிகளில் தொழ அனுமதிக்கப்படுவதில்லை. பெரும்பாலான இடங்களில் பள்ளிகளில் பெண்களுக்கு தனியாகத் தொழ வசதி உண்டு.
வித்யாகலைவாணி,
இங்கே பலரும் அவர்களின் இஸ்லாமிய நண்பர்கள் சொன்னர்கள் என்றோ அல்லது அயல் நாட்டில் இருந்து கொண்டே அப்படி எல்லாம் இல்லை பெண்களும் தொழ அனுமதி அளிக்கிறார்கள் என்றோ சொல்கிறார்கள்.தினசரி பெண்கல் தொழ எல்லாம் அனுமதி இல்லை, ரம்ஜான் போன்ற நாட்களிலும் இல்லை. எங்காவது அரசியல் நிர்பந்தத்தில் நடந்தால் உண்டு.
உண்மையில் பெண்களுக்கு பள்ளிவாசலில் தொழ அனுமதி இல்லை, ஒரு சில பள்ளிவாசலில் தருகிறார்கள் எனில் அது அங்குள்ள ஜமாத்திற்கு போட்டியாக ஏற்படுத்தப்பட்டதாக இருக்கும்.(தவ்கீத் ஜமாத் போன்றோர்,அவர்களும் கூட என்றோ ஒரு நாள் பேப்பரில் பெயர் வர செய்கிறார்கள் தினசரி அனுமதி இல்லை என நினைக்கிறேன்)
மண்ணடி அங்கப்ப நாயக்கன் தெருவில் உள்ள பெரியப்பள்ளியில் பெண்களுக்கு அனுமதி இல்லை, கடந்த வாரம் தான் அங்கு போய் இருந்தேன், ஒரு இஸ்லாமிய நண்பரைப்பார்க்க அவர் தொழுகையில் இருந்து வரும் வரைக்காத்திருந்தேன் வெளியில் , பின்னர் அவரையும் கேட்டதிற்கு பெண்கள் வீட்டிலேயே தொழுவார்கள் என தான் சொன்னார்.
இது தான் தமிழகத்தில் பொதுவான நிலை.
தமிழகத்தில் நாளைதான் ரம்ஜான், நாளை அனைத்து தமிழ் தொலைக்காட்சிகளையும் பாருங்கள் பொது தொழுகையில் எங்கேனும் பெண்கள் இருக்கிறார்களா என, உங்கள் முடிவுக்கே விடுகிறேன்.
இந்த வருடம் தான் முதல் முறையாக பலத்த எதிர்ப்புகளிடையே காயிதே மில்லத்தின் பேத்தி பாத்திமா பெண்களுக்காக எனவே ஒரு தனி இப்தார் விருந்து நடத்தினார், அதில் கனிமொழியும் கலந்துக்கொண்டார்.
அதிலும் அதிமுக சார்பாக நடந்த இப்தார் விருந்தில் அவர்கள் கட்சியை சேர்ந்த பதர் சயிதை கூட மேடையில் இருக்க கூடாது என்று சொல்லித்தான் தள்ளிவைத்தார்கள்! எனவே அவர் தனியே ஒரு இப்தார் நடத்தினார்.
இப்பொழுது தான் பெண்களுக்கும் உரிமை வேண்டும் என குரல் ஒலிக்க துவங்குகிறது.
நாளை பெரிய மேட்டிற்கோ அல்லது மண்ணடிக்கோ சென்று என்ன நடக்கிறது எனப்பார்த்து வருகிறேன்.
இது போன்ற ஒரு பின்னூட்டம் தான் நான் முன்னரும் போட்டேன்!
தமிழகத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்கு வந்து தொழ தவ்ஹீது இயக்கங்கள் பெரும்பங்கு ஆற்றியிருக்கின்றன. தவ்ஹீது இயக்கம் 1980களில் தமிழகத்தில் வேரூண்ட ஆரம்பித்தது, இன்று மிகப்பெரிய விருட்சமாக வளர்ந்து, தவ்ஹீது இயக்கங்கள் இல்லாத முஸ்லிம் ஊர்களோ - இடங்களோ இல்லை என்பதுதான் உண்மை.
தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத் மட்டும் (TNTJ) - தவ்ஹீது கொள்கை அடிப்படையில் இயங்கவில்லை.
தமிழகத்தில் இன்று முஸ்லிம்களின் அரசியல் குரலாக ஒலிக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகமும் (TMMK) தவ்ஹீத் கொள்கை அடிப்படையில் இயங்குவதுதான். த.மு.மு.க வினர் தங்களது மனைவி மக்களோடுதான் பெருநாள் தொழுகைக்கு செல்கின்றனர்.
போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட தவ்ஹீது அடிப்படையிலான இயக்கங்கள்தான் தமிழக முஸ்லிம்களிடையே பிரபலமாக இருக்கிறது.
இருக்கின்ற செல்வாக்கை இழந்துவிடுவோமென்று, தவ்ஹீது ஜமாத்களுக்கு போட்டியாக - மத்ஹபு அடிப்படையில் அமைந்த ஜமாத்களும் பெண்களை தொழ அனுமதிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
அதனால் தமிழகத்தில் பெண்கள் தொழ அனுமதியில்லை என்று பொத்தாம் பொதுவாக கூறுவது ஏற்புடையதாக இல்லை.
நண்பர் வவ்வால் ஒரு நீண்ட பின்னோட்டம் இட்டுள்ளார். இந்தியா என்பது மண்ணடி மட்டுமில்லை. ஆணால், இந்திய பள்ளிகளில் பெண்கள் தொழ அனுமதியில்லை. அல்லது பெரும்பாலான பள்ளிகளில் (98 சதமானம்) அனுமதி இல்லை. இதன்பொருள் இந்தியாவில் பின்பற்றப்படும் இஸ்லாமில் ஹனபி மற்றும் ஷாஃபி மதகஃப்கள்தான் அதிகம். அவை அனுமதிப்பதிப்பதில்லை. முகமது நபியோ குரானோ அதை தடை செய்யவில்லை. இஸ்லாம் முற்போக்கான மதம் என்று கூறவரவில்லை. உண்மையில் இஸ்லாம் மதம் என்கிற நிலைதாண்டி ஒரு அரசியல் அடையாளத்துடன் பேசப்படுகிறது. இஸ்லாம் குறித்த கருததாக்கங்கள் மேற்கத்திய மீடியாக்கள் வழி உருவாக்கப்பட்டதே. அதைதான் வவ்வாலும் பின்பற்றுகிறார். இஸ்லாம் குறித்த தவறான பதிவுறத்தல்களின் அரசியல் பிண்ணனி குறித்து எட்வர்ட் சைத் Covering Islam என்று ஒருநாள் எழுதியுள்ளார். அது இது குறித்து மேலதிக விளக்கங்களைத் தரும்.
பொதுவாக பள்ளிக்கு பெண்களை அனுமதிப்பதால் பெண் குலத்திற்கு அது எந்தவித முன்னேற்றத்தையும் தரப்போவதில்லைஈ இன்னம் அவர்களை மத அடிமைகளாக ஆக்கத்தானன் செய்யும். என்றாலும் அது உரிமை என்ற அடிப்படையில் அனுமதிக்க வேண்டும் என்பதே எனது நிலைபாடு. அதேசமயம் இஸ்லாம் பெண்களை ஒடுக்குகிறது என்கிற வாசகத்தின் அடிப்படை ஆன்மீகம் இல்லை அரசியல் என்பதுவே இன்றைய நிலை என்பதால் இத்தகைய சொல்லாடல்கள் கவனமான ஆய்விற்கு உரியவை என்பதற்கே இப்பின்னோட்டம்.
அன்புடன்
ஜமாலன்.
இங்கு வருகை தந்த அனைவருக்கும் மிக்க நன்றி. இந்த பதிவின் நோக்கம் யாரையும் குறை கூறுவதற்காக அல்ல. மற்ற மதங்களின் கோட்பாடடுகளையும், நடைமுறைகளையும் ஆராய வேண்டும் , அதன் மூலம் நல்லுறவை வளர்க்க வேண்டும் என்பது தான். எந்த மதமாய் இருந்தாலும் நாம் தமிழர்கள். தமிழரின் கோட்பாடு யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பது தான். அதனால் தான் மதத் துவேஷங்கள் இங்கு கிடையாது. சில அரசியல்வாதிகள் ஓட்டுக்காக செய்பவை இங்கு அடங்காது அது அனைத்து மதத்திற்கும் பொறுந்தும்.நான் அனைவரும் ஒற்றுமையாக இருந்து தமிழகத்தை பாதுகாப்போம். தமிழை வளர்ப்போம்.
குறிப்பு : இத்துடன் இந்த பதிவிற்கான பின்னூட்டங்கள் நிறைவடைகின்றன. மீண்டும் அனைவருக்கும் நன்றி.
Post a Comment