63.எது உண்மையின் ஒரு விளக்கம்

இந்த மாதத்தின் ஆரம்பத்தில் எது உண்மை என்ற தலைப்பில் சில இடுகைகளை இட்டிருந்தேன். அதன் தொடர்ச்சியான விளக்கம் தான் இது. அந்த இடுகைகளை வாசிக்காதவர்கள் முதலில் அதை சிறிது ஆழமாக கவனித்து விட்டு வரவும். இதில் தரப்பட்ட கேள்விகளை உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். பதிலையும் யோசியுங்கள்
அதோ இவைதாம்
எது உண்மை பாகம் 2
எது உண்மை பாகம் 3
எது உண்மை பாகம் 4

ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாத விஷயங்களை ஒரே ஒரு புகைப் படத்தின் மூலம் விளக்கி விட முடியும்.

இது இல்லாமல் புகைப்படத்தால் விளக்க இயலாத சில கேள்விகளும் என்னிடம் உள்ளன.
1. நீங்கள் நல்ல பசியோடு இருக்கும் போது நெய்ச் சோறும், கோழி குருமாவும் கிடைக்கிறது. ( சைவப்பிரியர்கள் ஒரு நல்ல சாப்பாடு என்று வையுங்கள்). அதில் முதல் கவளம் வைக்கும் போது யாராவது கையைத் தட்டி விட்டு சாப்பாடு கிடையாது என்று சொன்னால் உங்களது நிலை எப்படி இருக்கும்?
2. நல்ல பாலைவனத்தில் கடும் வெயிலில் நீங்கள் தாகத்தில் இருக்கும் போது ஒருவர் குளிர்ந்த சுவையான நீர் கொடுக்க மற்றொருவர் அதை தடுத்தால் உங்களது நிலை எப்படி இருக்கும்?
3.நல்ல சம்பளத்தில் மனதுக்குப் பிடித்த வேலையில் இருக்கிறீர்கள். திடீரென்று உங்களை வேலையை விட்டு தூக்கினால் உங்களுக்கு எப்படி இருக்கும்.

இப்படி இழப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் நல்ல சாப்பாடு கிடைத்த உடனோ, தண்ணீர் கிடைத்த உடனோ, அதை விட நல்ல வேலை கிடைத்த உடனோ நாம் அதை மறந்து விடலாம். ஆனால் நன்றாகப் படிக்கக் கூடிய ஒரு மாண்வனுக்கோ, மாண்விக்கோ கல்வி மறுக்கப் படுமானால் அதன் நிலை என்ன தெரியுமா? பல இரவுகள் தூக்கமின்றி கண்ணீருடன் இருந்தவர்களை என்க்குத் தெரியும். கல்வி என்பது 95 விகிதம் பேருக்கு வித்தியாசமானது. ஒருவனின் கல்வி தொடராமல் இடை வெளி விழுந்தால் மீண்டும் அவனால் அடுத்தடுத்த வருடங்களில் அதே பழைய வேகத்துடன் செல்ல இயலாது. ஆனால் கசப்பான உண்மை என்னவென்றால் வறுமையின் காரணமாக இடைநிறுத்தப்படும் கல்வி 99 சதவீதம் மீண்டும் தொடர வாய்ப்பே இல்லை என்பது தான்.
சரி இந்த பதிவின் நோக்கத்திற்கு வருவோம். இவ்வாறு கல்வி இடை நிறுத்தம் இந்தியா போன்ற நாடுகளில் மிகவும் அதிகமாக இருக்கிறது. அரசாங்கங்களும் ஆரம்ப கல்வி வரையாவது கட்டாயம் படிக்க வைக்க வேண்டும் என பல திட்டங்களைத் தீட்டி செயல் படுத்தி வருகிறது. வருங்கால சமுதாயம் முன்னேற்றப் பாதையில் செல்ல கல்வி மிக மிக அவசியம். கல்வி இடை நிறுத்தத்தை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்பதே இந்த பதிவின் குறிக்கோள்.
நான் யாரையும் இந்த உலகைத் திருத்த வாருங்கள் என்றோ, இந்தியாவைத் திருத்த வாருங்கள் என்றோ அழைக்கவில்லை. இதைப் படிக்கக் கூடியவர்கள் நிச்சயமாக நல்ல வேலையிலோ, வசதியானவர்களாகவே இருக்கக் கூடும். உங்களுக்குத் தான் இந்த அறைகூவல். நீங்கள் இந்தியாவில் உங்களுக்கு நன்கு தெரிந்த ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அது உங்களது சொந்த ஊரிலோ, நீங்கள் தற்போது இருக்கும் இடத்திலோ இருக்கட்டும். அதில் எவ்வளவு மாணவ மாணவிகள் தங்களது கல்வியை இடை நிறுத்தப் போகிறார்கள் என்று பாருங்கள். குறிப்பாக அரசுப் பள்ளிகளில் நன்றாகப் படித்துவிட்டு அடுத்த வகுப்பிற்கு நோட்டுப் புத்தகங்கள் வாங்க வழியின்றி படிப்பை நிறுத்துபவர்கள் யார் என்று கவனியுங்கள். உங்களால் அது இயலாதென்றால் உங்களது நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ விசாரியுங்கள். 500 ரூபாய் இருந்தால் பத்தாம் வகுப்பிற்க்கு புத்தகங்களை வாங்கி விடலாம். 1000 ரூபாய் இருந்தால் பதினொன்றாம் வகுப்பிற்க்கோ, பனிரெண்டாம் வகுப்பிற்க்கோ புத்தகங்களை வாங்கி விடலாம்.
அப்படிபட்டவர்களுக்கு நீங்கள் உங்களுடைய பணத்தில் இருந்து உதவுங்கள்.
5000 ரூபாய் இருந்தால் ஒரு I.T.I லோ 10000 ரூபாய் இருந்தால் ஒரு பாலிடெக்னிக்க்கிலோ சேரலாம். அவர்களுக்கும் உதவுங்கள். காய்ச்சல் என்று மருத்துவரிடம் சென்றால் 1000, 2000 செலவழிக்கத் தயாராக இருக்கிறோம். 5000 ரூபாயில் செல்பேசி வாங்குகிறோம். 10000 ரூபாயில் சுற்றுலா செல்கிறோம். ஏன் மற்றவர்களின் வாழ்க்கையின் ஈடேற்றத்திற்காக கொஞ்சம் செலவு செய்யக் கூடாது?. அதிகம் தேவை இல்லை. உங்களது மாத வருவாயில் 2 அல்லது 3 சதமோ நல்ல மனதிருந்தால் 5 சதமோ ஒதுக்குங்கள். ஒவ்வோரு வருடமும் பள்ளி திற்க்கும் காலங்களில் அதை திட்டமிட்டு தகுதியான மாணவ மாணவிகளுக்கு உதவிங்கள். அதில் தான் உண்மையான இன்பம் கிடைக்கும். அதை ருசித்துப் பாருங்கள். நாங்கள் எங்களது வருவாயில் 10 சதவீதம் இது போன்ற நல்ல காரியங்களுக்கு ஒதுக்குகிறோம்.

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை
என்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண் டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

6 comments:

said...

ம். நல்ல பதிவு.

நாங்கள் எங்கள் அலுவலகத்தில் PPWS என்ற கமிட்டி ஒன்றை நடத்தி வருகிறோம் அதன்மூலம் இது போன்ற உதவிகளை பல ஆண்டுகளாக செய்து வருகிறோம்.

தனி மரம் தோப்பாகாது அது போல நிறைய பேரை இது போல உதவி செய்ய ஊக்குவிப்பதும் முக்கியம்.

said...

//தனி மரம் தோப்பாகாது அது போல நிறைய பேரை இது போல உதவி செய்ய ஊக்குவிப்பதும் முக்கியம்.//
நல்ல விஷயம் தான். ஆனால் ஒவ்வோரு தனி மனிதனுக்கும் அந்த எண்ணம் வர வேண்டும். சுனாமிக்கு ஒரு நாள் சம்பளம் பிடிக்கப் பட்டபோது எத்தனை பேர் என் பணம் ஏன் கொடுக்க வேண்டும் என்று கேட்டர்கள் தெரியுமா?

said...

தங்கள் பெயருக்கேற்ற பதிவு.

நல்ல விஷயம். இதற்குமேல் என்ன சொல்வதென்று தெரியவில்லை. இது செய்வதற்குரிய விஷயமாயிற்றே.

வாழ்த்துக்கள்.

said...

நன்றி ரத்னேஷ் அவர்களே! ஒவ்வொருவரும் செயலில் கொண்டு வந்தால் எல்லாம் சுபமே?

said...

@வித்யாக்கா
//
ஒவ்வோரு தனி மனிதனுக்கும் அந்த எண்ணம் வர வேண்டும்.
//
சிலபேருக்கு தானா வரும்

சிலபேருக்கு வரவைக்க வேண்டியிருக்கும். நாலு தடவை போய் கேட்கும்போது திட்டிகிட்டாவது குடுப்பான்.

அன்னை தெரசா orpanageக்கு நிதி உதவி திரட்டும் போது ஒரு கடைக்காரன் அவர்மேல உமிழ்ந்தானாம் அதற்க்கு அவர் சரி நீங்கள் எனக்கு கொடுத்தது பரவாயில்லை இந்த அனாதை பிள்ளைகளுக்கு எதாவது கொடுங்கள் என கேட்க அவன் வெட்கி உதவி செய்தான்.

said...

//சிலபேருக்கு வரவைக்க வேண்டியிருக்கும். நாலு தடவை போய் கேட்கும்போது திட்டிகிட்டாவது குடுப்பான்.//
ஆம் சிலரிடம் அப்படியும் பிடுங்க வேண்டியும் வருகிறது.