65.முறிந்த கனவுகள் - கவிதை? உண்மை ?

உயரே உயரே செல்லக் கூடிய எதுவும்

கீழே வந்தே தீரும்

இது நியூட்டனின் விதி

உயரே உயரே பறக்கும் கழுகும், வானூர்தியும் கூட

இரை தேடி கீழே வரும்

உயரே உயரே பறந்தாலும் வீட்டுக்குருவி

ருந்தாகாது என்பார்கள் பெரியவர்கள்

இராக்கெட் கூட விடுபடு திசைவேகம் அதிகமானால் தான்

பூமியின் எல்லையை விட்டு வெளியே செல்லுமாம்.

ஏனிந்த வறட்டுத்தனமான பீடிகை!
::::::::::::::::::::::::::*********** :::::::::::::::::::::::::
வானத்தை நோக்கி குறுக்காக பிரயாணித்த

இந்த ஜடப்பொருள் நேராகக்

கீழே விழுந்து விட்டது.

இந்த சிட்டுக்குருவியின் சிறகுகளும் உடைந்து விட்டன

உடைக்கப்படவில்லை என்பது உண்மையான ஆறுதல்

ஃபீனிக்ஸ் பறவைக்கு வானமே எல்லை

எத்தனை முறை சிறகுகள் எரிந்தாலும் அது முயற்ச்சிக்குமாம்

நான் ஃபீனிக்ஸ் பறவை அல்ல

சிறகுகள் எரிய ஆனால் எரிந்தது எனது சிறகுகல்ல ஆன்மா.

ஆன்மா இன்றேல் மனிதனில்லை

சிறகுகள் எரிந்தால் மீண்டும் முளைக்கும் ஆன்மா எரிந்தால்?

ஆனால் இந்த ஆன்மா எரிக்கப்படவில்லை,

எரித்துக் கொண்டேன் என்பது தான் நிதர்சனமான உண்மை
:::::::::::::::::: ************ :::::::::::::::::::::::::::::::::::

கடவுளே! ஈசலைப் போல் ஏன் என்னைப் படைத்தாய்?

படபடத்து சீக்கிரம் மரிக்கச் செய்யவா?

ஒரு சோலையில் குயில் போல கூவ வேண்டிய

இநத கட்டில்லாத காட்டுக்குயில்

பாலையில் வதங்கி விட்டது.


:::::::::: ************ ::::::::::::::::::::::

பேசுவதற்கு வாயில்லை
எழுதுவதற்கு வார்த்தை இல்லை.

ஆகவே பிரிந்து செல்கிறேன்

இது போய் வருகிறேன் என்பதற்கு அல்ல

போகிறேன் என்பதற்கு

அணையப் போகும் விளக்கு பிரகாசமாக எரியுமாம்

இந்த விளக்கு எரியும் முன்பே அணைகிறது

8 comments:

said...

//
உயரே உயரே செல்லக் கூடிய எதுவும்

கீழே வந்தே தீரும்

இது நியூட்டனின் விதி
//
நல்ல டைம்ல சொன்னிங்க போங்க
சென்செக்ஸ் இன்னைக்கு 1750 பாயிண்ட் கீழ வந்ததுதான் நினைப்பு வருது.

said...

கலைவாணிக்கா என்ன இது? வெறும் கவிதை மாதிரி தெரிலயே?என்ன ஆச்சு?

said...

யக்கோவ்..இந்த உள்குத்து கவிதை எனக்கு புரியல..!

said...

அய்யகோ..உங்களையும்..இந்த நோய் பீடித்து விட்டதே...வெகு விரைவில் ஐய்யனார், சுகுனா திவாகர் வரிசையில் சேர என் வாழ்த்துக்கள்

said...

///நிலா said...

கலைவாணிக்கா என்ன இது? வெறும் கவிதை மாதிரி தெரிலயே?என்ன ஆச்சு?
கோபிநாத் said...
யக்கோவ்..இந்த உள்குத்து கவிதை எனக்கு புரியல..!///
இது ஒரு ஆரம்பத்தின் முடிவு

said...

///நிலா said...

கலைவாணிக்கா என்ன இது? வெறும் கவிதை மாதிரி தெரிலயே?என்ன ஆச்சு?
கோபிநாத் said...
யக்கோவ்..இந்த உள்குத்து கவிதை எனக்கு புரியல..!///
இது ஒரு ஆரம்பத்தின் முடிவு
//
நான் போட்ட கமெண்ட்டுக்கு பதில் கிடையாதா???
அவ்வ்வ்வ்வ்வ்

said...

வந்தவர்களுக்கும், ஆதரவளித்தவர்களுக்கும் நன்றிகள்.

said...

pl don use this combo.. pretty diificult to read ...