78. எச்சரிக்கை - குளிரூட்டப்பட்ட அறையில் இருப்பவரா நீங்கள் ? - பாகம் 1

சமீபத்தில் பார்த்த சில புகைப்படங்கள் என்னை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.எதை நாம் சுத்தமானது என்று நினைக்கிறோமே அதுவே நம்மை பாதிக்கும் எனும் போது மிகவும் கவலையடையச் செய்தது.முதலில் இந்த படங்களைப் பாருங்கள்.

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

இந்த படங்கள் அனைத்தும் Duct உள்ளே எடுக்கப் பட்டவை. Duct என்பது Centralized Air Condition இயந்திரத்தின் காற்று வரும் வழி. மேலும் விளக்குவதாக இருந்தால் நாம் இருக்கக் கூடிய இடத்தை, அலுவலகத்தை குளிரூட்ட பல வகையான இயந்திரங்கள் உள்ளன். Centralized Air Condition என்பது Chiller என்ற இயந்திரத்தை ஒரு இடத்தில் வைத்து அதன் மூலம் நீரை 5'C க்குள் குளிரூட்டுகின்றனர்.அந்த குளிர்ந்த நீரை AHU எனப்படும் இயந்திரத்தில் செலுத்தி காற்றை 10'C வரை குளிரூட்டுகின்றனர். அந்த காற்றை Duct கள் மூலம் நமக்கு தேவையான இடங்களுக்கு எடுத்து வருகின்றனர்.
அவ்வாறு எடுத்து வரப்படும் காற்று வரும் வழி தான் மேலே உள்ள படங்கள். எல்லா இடங்களிலும் இது போன்று இருப்பதில்லை. ஆனால் சரியாக பரமாரிக்கப்படாத, பழைய குளிர்சாதனப் பெட்டிகளில் தான் இது போன்று இருக்க வாய்ப்பு அதிகம்.
நாம் சுவாசிக்கக் கூடிய காற்று இப்படிபட்ட அசுத்தங்கள் வழியாக வரும் போது ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்சினைகள் இருப்பவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். சில மருத்துவமனைகளிலேயே இது போல் இருப்பது வேதனையான விஷயம்.
தீர்வுகள் :
1. நீங்கள் வசிக்கும் அல்லது வேலை செய்யும் இடத்தில் உள்ள A/C களின் fபில்டர்கள் குறைந்த பட்சம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சுத்தப்படுத்தப் படுகிறதா எனக் கண்காணியுங்கள்.
2. fபில்டர்கள் சரியான முறையில் சுத்தப்படுத்தப்படுகிறதா எனக் கண்காணியுங்கள்.
3. A/C பழையதாக இருந்தால் Duct உள்ளே எப்படி இருக்கிறது என்று கவனித்து அதை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யுங்கள்.
4. Cooling Coil மற்றும் Blower எந்த நிலையில் உள்ளது எனப்பார்த்து நடவடிக்கை எடுங்கள்.
5. Condensate கழிவு செல்லக் கூடிய Drain Pan மற்றும் Drain Tray எப்பொழுதும் சுத்தமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
டிஸ்கி : எங்களிடம் Duct இல்லாத Window, Split Type A/C தான் உள்ளது. அதனால் பயம் இல்லை என்பவர்களுக்கு நாளைய அதிர்ச்சி பதிவு.

18 comments:

said...

பரவாயில்லை டக்ட் படம் மட்டும் போட்டுட்டு ப்பில்டர் பத்தி எழுதாம விட்டுட்டீங்களோன்னு நெனைச்சேன்.

அடிக்கடி பில்டர் க்ளீன் பன்னனும். மத்தபடி நீங்க பயமுறுத்தற அளவு ஒன்னும் இல்லை.

:-))

said...

//
டிஸ்கி : எங்களிடம் Duct இல்லாத Window, Split Type A/C தான் உள்ளது. அதனால் பயம் இல்லை என்பவர்களுக்கு நாளைய அதிர்ச்சி பதிவு.
//
இது வேறயா?

சீக்கிரம் போடுங்க

said...

பயன் உள்ள பதிவு, படங்கள் பயமுறுத்துகிறது!

said...

ஏன்யா கண்ட கருமாந்திரத்த காமிச்சி எழவு எடுக்க்றிங்க. சிகரெட் பிடிக்கிறவன் தொண்டைய விடவா ??
-- இஞ்சி தின்ற குரங்கு

said...

//1. நீங்கள் வசிக்கும் அல்லது வேலை செய்யும் இடத்தில் உள்ள A/C களின் fபில்டர்கள் குறைந்த பட்சம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சுத்தப்படுத்தப் படுகிறதா எனக் கண்காணியுங்கள்.
//

இதுக்குதான் நாங்க பரிட்சைக்கு கண் முளிச்சு (??) படிச்சோமா அக்கா? :-P

said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க வித்யா... கண்டிப்பா அடுத்த பாகம் படிக்கிறேன்..விண்டோ ஏசியின் அபாயத்தையும் சொல்லிடுங்க...

said...

தகவலுக்கு நன்றி ;)

\\1. நீங்கள் வசிக்கும் அல்லது வேலை செய்யும் இடத்தில் உள்ள A/C களின் fபில்டர்கள் குறைந்த பட்சம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சுத்தப்படுத்தப் படுகிறதா எனக் கண்காணியுங்கள்.\\\

சம்பளத்தை பத்தி கவனிக்கவே நேரம் சரியாக இருக்கு...இதுல எங்க போயி இதெல்லாம் பார்க்குறது..

\\டிஸ்கி : எங்களிடம் Duct இல்லாத Window, Split Type A/C தான் உள்ளது. அதனால் பயம் இல்லை என்பவர்களுக்கு நாளைய அதிர்ச்சி பதிவு.\\

ம்...சொல்லுங்க ;(

said...

//டிஸ்கி : எங்களிடம் Duct இல்லாத Window, Split Type A/C தான் உள்ளது. அதனால் பயம் இல்லை என்பவர்களுக்கு நாளைய அதிர்ச்சி பதிவு.//

ஓ.. இதுதான் டிஸ்கியா. பி.கு. என்று பிகு பண்ணாமல் போட்டா போச்சு. ஆகட்டும்.

அப்புறம் சன்னல் வகைகள் பற்றி.. நம்மகிட்ட 2 இருக்கு.. மாதாமாதம் பில்டர் கழுவுற என் வேளைய வாராவாரம் என்று ஆக்கிடாதீங்கோ...

said...

மேடம், நிறைய எழுதுகிறீர்கள். ஆர்வமாகத் தருகிறீர்கள். நன்றாக இருக்கின்றன.

//Positive Smoking மாதிரி.
Positive Smoking = புகை பிடிக்காத ஒருவர் புகை பிடிப்பவரின் அருகில் இருக்கும் ஒரே காரணத்திற்காக புகையின் பாதிப்பை அடைவது//

மேடம், நீங்க சொல்ல நினைத்தது PASSIVE SMOKING குறித்து என்று நினைக்கிறேன்.

ஓட்டல்களின் கிச்சன்களைப் (சில வீடுகளிலும்) புகைப்படம் எடுத்தீர்கள் என்றால் இதை விட பயங்கரமான பதிவுகள் போடலாமே.

said...

///ஏன்யா கண்ட கருமாந்திரத்த காமிச்சி எழவு எடுக்க்றிங்க. சிகரெட் பிடிக்கிறவன் தொண்டைய விடவா ??
-- இஞ்சி தின்ற குரங்கு///
இஞ்சி தின்ற குரங்கு! இப்படிபட்ட பின்னூட்டங்களுக்கு அனுமதி இல்லை. ஆனாலும் பதில் சொல்ல வேண்டிய கடமை உள்ளதால் மட்டும் அனுமதி.
சிகரெட் பிடிப்பவர், மது அருந்துபவர் அவர் விருப்படியே தனது உடலைக் கெடுத்துக் கொள்கிறார். ஆனால் இந்த விஷயம் கிட்டத்தட்ட Passive Smoking மாதிரி.
Passive Smoking = புகை பிடிக்காத ஒருவர் புகை பிடிப்பவரின் அருகில் இருக்கும் ஒரே காரணத்திற்காக புகையின் பாதிப்பை அடைவது.

said...

//RATHNESH said...
மேடம், நிறைய எழுதுகிறீர்கள். ஆர்வமாகத் தருகிறீர்கள். நன்றாக இருக்கின்றன.
மேடம், நீங்க சொல்ல நினைத்தது PASSIVE SMOKING குறித்து என்று நினைக்கிறேன்.//
மிக்க நன்றி ரத்னேஷ். தவறைத் திருத்தி விட்டேன். ஆங்கிலப் புலமை அவ்வளவாக இல்லை அதனால் தான்.

said...

என்னை பொருத்தவரை விஞ்ஞான உலகத்தின் அனைத்து கண்டுபிடிப்புக்களுமே ஏதேனும் ஒரு side effect இல்லாமல் இல்லை. அது மருந்தாகினும் சரி அல்லது வேறு எந்த ஒருகண்டுபிடிப்பும் சரி. "For every action there is an EQUAL and OPPOSITE reaction". இந்த குறைகள் களையப்பட்டாலும் கண்டிப்பாக வேறு ஏதேனும், அடுத்த நிலை, குறைபாடுகள் கட்டாயம் வந்தே தீரும். இப்பொழுதே ஏ.சி., குளிர்சாதனப் பெட்டி போன்றவற்றிலிருந்து வெளிப்படும் சூடு புவி வெப்பத்திற்கு தன்னால் ஆன உதவியை செய்துகொண்டு தான் இருக்கின்றன.

பதிவுக்கு சம்பந்தம் இல்லாமல் பின்னூட்டம் தான். ஆனால் இயற்கை அழிக்கப்படுகின்றதே என்கிற ஆதங்கம் தான்...வேறு என்ன?

said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
இதுக்குதான் நாங்க பரிட்சைக்கு கண் முளிச்சு (??) படிச்சோமா அக்கா? :-P//
அக்கா, உங்க நல்லதுக்கு தான் சொல்றேன். பில்டர் கிளின் பண்ணியாச்சானு கேட்க எவ்வளவு நேரமாகும்?

said...

//சீனு said...

என்னை பொருத்தவரை விஞ்ஞான உலகத்தின் அனைத்து கண்டுபிடிப்புக்களுமே ஏதேனும் ஒரு side effect இல்லாமல் இல்லை. அது மருந்தாகினும் சரி அல்லது வேறு எந்த ஒருகண்டுபிடிப்பும் சரி. "For every action there is an EQUAL and OPPOSITE reaction". இந்த குறைகள் களையப்பட்டாலும் கண்டிப்பாக வேறு ஏதேனும், அடுத்த நிலை, குறைபாடுகள் கட்டாயம் வந்தே தீரும். இப்பொழுதே ஏ.சி., குளிர்சாதனப் பெட்டி போன்றவற்றிலிருந்து வெளிப்படும் சூடு புவி வெப்பத்திற்கு தன்னால் ஆன உதவியை செய்துகொண்டு தான் இருக்கின்றன.//
நன்றி சீனு சார். ஏசிகளில் உபயோகமாகும் CFC எனப்படும் வாயு ஓசோன் படலத்தை ஓட்டை விழ வைக்கிறது. அதைப் பற்றியும் ஒரு பதிவு போடலாம்.

said...

கலைவாணிக்கா பில்ட்டர் க்ளீன் பண்றது ஜுஜூபி மேட்டர்,நானே கூட கழட்டி க்ளீன் பண்ணலாம், ஆனால் யாரும் செய்வதில்லை,சர்வீஸ் செண்டரைதான் கூப்புடுராங்க, உங்க அடுத்த போஸ்ட்டுக்கு வெய்ட்டிங்

said...

இப்போவாவது ஒத்துக்கிறீங்களா மேடம், பதிவைப் படிச்சுப் பார்த்திட்டுத் தான் பின்னூட்டம் எழுதறோம்னு?

said...

// RATHNESH said...

இப்போவாவது ஒத்துக்கிறீங்களா மேடம், பதிவைப் படிச்சுப் பார்த்திட்டுத் தான் பின்னூட்டம் எழுதறோம்னு?//
நம்புகிறோம்!
நம்புகிறோம்!

said...

சிவா, குசும்பன்,மை பிரண்ட்,மு.லெட்சுமி,கோபி,ஜமாலன்,ரத்னேஷ், சீனு அனைவருக்கும் நன்றிகள்.