50.மனிதனின் மறுபக்கம் - குரூரம்

மனிதர்கள் பல விதம். சிலர் இரக்க குணம் உள்ளவர்களாக இருப்பர். சிலர் கொடூரமானவர்களாக்இருப்பர். ஆனாலும் எப்படிப்பட்ட மனிதனாக இருந்தாலும் சிறு பிள்ளைகளிடம் அனைவரும் இரக்க சுபாவத்திலேயே பழகுபவர்களே அதிகம். இதில் சிலர் விதிவிலக்காக இருக்கலாம்.
அப்படிப்பட்ட சில கொடூரத்திற்கு சில நேரங்களில் மத
வெறியோ ஜாதி வெறியோ கூட காரணமாக இருக்கலாம்.சில ஆண்டுகளுக்கு முன் ஒரு தலித் சிறுமி பொது பானையில் தண்ணீர் குடித்ததற்காக கண்
குருடாக்கப் பட்டது கூட இப்படிப்பட்ட ஒரு மனிதாபிமானமற்ற செயலே.
இதன் தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்கு முன்னால் தேனி மாவட்டம் பாலார்பட்டியைச் சேர்ந்த சிறுவன் தினேஷ். பொதுவாக கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆற்றங்கறையிலோ தோப்புகளிலோ தான் மலம் கழிப்பது வழக்கம். இந்த சிறுவன் நண்பர்களுடன் மலம் கழிக்க வீட்டிற்கு அருகில் இருந்த தோப்பிற்கு சென்றுள்ளனர்.
அவர்கள் மலம் கழிப்பதைப் பார்த்த அத்தோப்பின் உரிமையாளர் அவர்கள்களை பிடித்து இதயத்தில் சிறிது கூட ஈவு இரக்கம் இன்றி அவர்கள்
கழித்த மலத்தை அவர்களை வெறும் கையால் அள்ளுமாறு கட்டாயப் படுத்தியுள்ளார். இதனால் மனம் உடைந்த சிறுவன் தற்கொலைக்கு முயற்சி செய்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளான். மனிதர்களில் இன்னும் மாற வேண்டியது அதிகம் உள்ளது.



2 comments:

said...

எனக்கு தெரிஞ்சி கிராமத்திலே...நம்ம வயல் இருக்கப்போ வெளி இடத்துக்கு ஏண்டா போறீங்க அப்படின்னு தான் கடிஞ்சிக்குவாங்க...ஏன்னா அது ஒரு இயற்கை உரம்...

கொடுமை..கொடுமை..

said...

ஆமாம் TBCD சார். ரொம்ப மனசு கஷ்டமா இருந்தது.