காந்தியின் முறிந்த காதல்

2 அக்டோபர் 2007 அன்று சென்னையில் நடைபெற்ற காந்தி ஜெயந்தி
விழாவில் கலைஞர் முன்னிலையில் கவிஞர் வைரமுத்து
படித்த கவிதை
காந்தியின் காதல்
கல்லுக்குள் ஈரம் கசிந்தது போல

காந்திக்கும் ஒரு காதல் இருந்தது

அப்படியா

ஐம்பது வயது காந்தியை சுழற்றி
அடித்த சுனாமி அது
கூட்டுப்புழு வண்ணத்துப் பூச்சியானால் தேடல்

வண்ணத்துப் பூச்சி வெளவாலானால் காதல்

வண்ணத்துப் பூச்சியாய் நுழைந்து வெளவாலாய் வசித்தாள்
காந்தியின் காதலி
காந்தியின் காதலியா?
யார் அவள்?
அந்த தங்க மகள் ஒரு வங்க மகள்
ஒரு மகாகவியின் தங்கை மகள்

கவிதை வடியும் வதனம்

கடலை சுட வைக்கும் வதனம்

ஆகாயத்தை முத்தமிடத் துடிக்கும் அதரம்

அவள் கண்களில் துடித்தது
காந்தியின் ஆவி
அந்த சந்திரமுகி பேர் சரளா தேவி
நேசம் நீடித்ததா?
செரிக்க முடியாத புரோட்டின் தானே விஷம்

காந்தியால் செரிக்க முடியவில்லை

அவளது புரோட்டின் புன்னகையை

முதன் முதலாய் அகிம்சை தோற்றது

அவள் இராணுவக் கண்களில்

காதலைப் பற்றி காந்தியின் கூற்று

"வழுக்கி விழுந்தேன்

நல்ல வேளை எழுந்து விட்டேன்"

இந்த காந்தியின் காதல் இராஜாஜி அறிவார்

தேவதாஸ் காந்தி அறிவார்

மகாதேவ தேசாய் அறிவார்

இப்பொழுது நீங்கள் அறிவீர்கள்.


------- வைரமுத்து